கொக்கா மக்கா- 19/102010

Tuesday, October 19, 2010
நான் வலைத்தளம் ஆரம்பிக்கும்போது 10 follower கிடைத்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால்  26 followers வந்து விட்டார்கள். என்னை பின்தொடர்பவர்களுக்கு நன்றியோ நன்றிங்க. என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினியையே மிஞ்சி விட்டேன் எப்படின்னு கேட்க்குரிங்களா அவருக்குன்னு ஒரு ப்ளாக்கே  இல்ல ஆனால் எனக்கு ஒரு ப்ளாக்கும் 26 follower களும் இருக்கிறார்கள் ஹிஹிஹீ.......................
**********************************************************************************
இப்போது கணினி பயன் படுத்தும் காதலர்கள் சுலபம்மாக மாட்டிக்கொள்கிறார்கள் எப்படின்னு கேட்க்குர்ரிங்களா அதாங்க நம்ம facebook கூகுள் தளம் வழியாங்க. உதாணத்திற்கு ஒருவனுடைய e-mail id  abc@gmail.com னு வெச்சிக்கோங்க அத அப்படியே கூகுள் தளத்துள்ள போய் தேடுனா அவர் எந்தெந்த தளத்தில் தன்னுடைய e-mail அக்கவுன்ட் பயன்படுத்தி இருக்கிறார் யார் யாருடன் தொடர்பு வைத்து இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம்.
***********************************************************************************
சில நாட்களாகவே பதிவுலகத்தில்  சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அந்த சண்டை நல்ல பொழுது போக்காக உள்ளது. அது இன்னும் develop ஆனால் படிப்பவர்களுக்கு நல்ல  டைம் பாசாக இருக்கும். இதில் ஹைலைட்   என்னனா  கேபிள் சங்கரையும்  இழுத்ததுதான். அவர்பாட்டுக்கு தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கிறார் அவரை ஏன் நோன்டுகிரார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ  கும்மியடிக்க சான்ஸ்  கிடைச்சா சரி.
*************************************************************************************
உளவு டாட் காம் என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த தளத்துக்குள் நுழைய முயற்சி செய்தால் firefox நண்பர் மிரட்டுகிறார் போகவேண்டாம் என்று. பாவம் அந்த தளத்தின் ஓனர் ஒவ்வொரு தளம்மாக சென்று பின்னூட்டம் போட்டு follower ஆகி விசிட்டர்களை கொஞ்சம் கொஞ்சம்மாக வரவழைத்துகொண்டு  இருந்தார் அவர் தளத்துக்கு போய் இப்படி ஆகிடுச்சே. அதேப்போல் "என்னது நானு யாரா?" இவரும் மற்றவர்கள் தளத்தில் பின்னூட்டம் போட்டு பிரபலம் ஆகிக்கொண்டு இருந்தார் இவரையும் சில நாட்க்கல்லாக காணவில்லை. ஒரு சிலர் பின்னூட்டம் வரவில்லையே என்று இவர் வாரவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கப்பா இருக்க...............
***********************************************************************************
காமன் வேல்த்தில் ஊழல் என்றவுடன் நம் பதிவுலக நண்பர்கள் ஆ வூ என்று பதிவு போட்டு ஓட்டு வாங்கி கொண்டு இருந்தார்கள் இப்போது முடிந்தவுடன் அதற்க்கு சப்போர்ட்டாக  பதிவு போட்டு ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். கடைசில நீங்களும் அரசியல்வாதி  ஆகிட்டிங்களே.
**************************************************************************************
எந்திரன் படத்திற்காக சன் நியூஸ் தொலைக்காட்ச்சியில் நியூஸ்கு  பதில் எந்திரன் பற்றியே போட்டுக்கொண்டு இருந்தார்கள். இதில் என்ன வருத்தம் என்றால் குற்றம், நிஜம் போன்ற நிகழ்ச்சியில் வர வேண்டியவர்கள் நியூஸ்சில் வந்துவிட்டார்கள். அதுதாங்க படத்துக்காக மொட்டைப்போட்டவர்கள் பால்குடம் தூக்கியவர்கள் பாலாபிஷேகம் பண்ணியவர்கள். சன் நிறுவனம், அவர்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக மக்களை கோமாளியாக்க நினைக்கிறார்களோ?
****************************************************************************************

2 comments:

மனசாட்சியே நண்பன் said... | October 20, 2010 at 7:40 AM

கலக்குங்கோ

Eeva said... | October 20, 2010 at 7:47 AM

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!