கொக்கா மக்கா- 21/10/2010

Thursday, October 21, 2010
அப்பாடா ஒரு வழியா மதுரைல  அ.தி.மு.க  ஆர்ப்பாட்டம் முடிஞ்சிடுச்சி. ஆர்ப்பாட்டத்த டீவில பார்க்கலாம்னு உட்க்கார்ந்தா அடிக்கடி இருட்டடிப்பு இருட்டடிப்புனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும்  என் நண்பர்கிட்ட அப்படினா என்னனு கேட்டேன் அதுக்கு அவர்  "இருட்டுல வெச்சி அடிக்கிறதுனு"  சொன்னாரு.  பாவம் யார இருட்டுல வெச்சி அடிச்சாங்களோ ?
*******************************************************************************************************************
நேத்து நான் பஸ்சுல  போயிட்டு இருக்கும்போது ரெண்டு ஸ்கூல் பசங்க சண்டப்போட்டுக்கிட்டு இருந்தானுங்க. அதுல ஒருத்தன் இன்னொருத்தன பார்த்து அசிங்கசிங்கமா திட்டிக்கிட்டு இருந்தான். இன்னொருத்தன் அவன் திட்டுனத எல்லாம்  சைலண்டா கேட்டுட்டு  கடைசியா ஒரு வார்த்த சொன்னான் பாருங்க  "இப்ப பாரேன் உங்க அப்பா டவுசர் கிழிய போகுது".

எப்புடியெல்லாம் திட்டுரானுங்க பாருங்க?.
 *******************************************************************************************************************
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல இருந்து ட்ரைன்ல போறவுங்க கண்டிப்பா இந்த நபர பார்த்து இருப்பிங்க. வயது 23  முதல் 28  இருக்கும்.

ஒரு டப்பால வேர்கடலைய வெச்சிகிட்டு மூஞ்சிக்கு நேரா காட்டிட்டு சிரிச்சிட்டு  போவாரு. நானும் அவர ரொம்ப நாளா வாட்ச்பன்னி  இருக்கேன். என்னடா இவர் ட்ரைன்ல இருக்குரவுங்கள எல்லாம் வேருப்பேத்துராரோனு. சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது அவர் ஊமைனு. அவர பாவம்னு சொல்லுறதா இல்ல பாராட்டுரதானு தெரியல. ட்ரைன்ல விக்கிரவனுக்கு மூலதனமே வாய்தான்.
 *******************************************************************************************************************
நானும் எந்திரன் படத்த பார்க்க கூடாதுன்னு தான் இருந்தேன் ஆனால் கிளிமாஞ்சரோ,கிளிமாஞ்சரோனு  சன் டிவி காரன்  உசுப்பேத்தியே பார்க்க வெச்சிட்டான்.எனக்கும் எங்க அண்ணனுக்கும் 8  வருடங்களுக்கு அப்புறம் இதுதான் முதல் படம் தியேட்டரில் போய் பார்ப்பது. ரெண்டு பேரும்  ஞாயிற்று  கிழமை போய் பார்த்தோம். . இன்டர்வெல்லில் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்னு வெளிய  வந்தா ஒரு சின்ன டப்பால ஐஸ்க்ரீம வெச்சி 40  ரூபாய்னு சொல்லுறானுங்க, 5 ரூபாய் பாப் கார்ன்ன  30  ரூபாய்னு சொல்லுறானுங்க சரி  என்ன பண்ணுறதுன்னு  ரெண்டு பெரும் அங்கேயே நிண்டு வேடிக்க பார்த்துட்டு படம் முடிஞ்சி வெளிய வந்து ஒரு ஐஸ்க்ரீம் கடைல  FAMILY  பேக் ஐஸ்க்ரீம் வாங்கி ஆளுக்கு பாதி சாப்பிட்டோம். 

தியேட்டர் காரனுங்க எப்படிலாம் கல்லா கட்டுறானுங்க பாருங்க.
 *******************************************************************************************************************
 நயன்தாரா கண்ட மேனிக்கு ஊர் மேஞ்சிக்கிட்டு இருக்கா இத கண்டிக்க ஒருத்தர் கூட இல்லாமல் போனதுதான் பெரிய கொடுமை. இந்த மேட்டர் பத்தி பத்திரிகை காரவுங்க நடிகர் நடிகைகள் கிட்ட போய் இதபத்தி கேட்டா அடுத்தவுங்க பர்சனல் விசயத்துல்ல தலையிட விரும்பலன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுதுங்க(எது பர்சனல் அடுத்தவ புருசன்கூட ஊர்மேயிறதா?).  சரி இதுங்கள விட்டு தள்ளுங்க இப்ப நியூஸ் என்னனா போத்திஸ் கம்பெனி காரன் நயன்தாராவ விளம்பரத்துல போட்டதுதான் இவளுக்கு என்ன தகுதி இருக்குனு போடுரானுங்கனு தெரியல. எவள காட்டுனாலும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் துணிய வாங்கிடுவோம்னு நினச்சிட்டானுங்க போல. 
 *******************************************************************************************************************

HTML கோடிங்:

EXAMPLE        

பல   வலைத்தளங்களில்  இது போன்று பார்த்து இருப்பிங்க எழுத்து ப்ளின்க் ஆவதை அதற்க்கான கோடிங் கீழே உள்ளது பார்க்கவும்.

<BLINK>EXAMPLE<BLINK>

EXAMPLE  என்று இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பிய எழுத்துக்களை சேர்த்து உங்கள் வலைத்தளத்தில் பதிவிடவும்.

 *******************************************************************************************************************
 
4 comments:

Anonymous said... | October 22, 2010 at 9:56 AM

ITHA PADIYUNGA......http://nkshajamydeen.blogspot.com/

Anonymous said... | October 22, 2010 at 9:56 AM

http://nkshajamydeen.blogspot.com/2010/10/blog-post.html

சே.குமார் said... | October 24, 2010 at 12:17 AM

nalla irukku.

INDIA 2121 said... | November 2, 2010 at 5:00 PM

நிறைய தகவல்கள்