கொக்கா மக்கா 27/10/2010

Wednesday, October 27, 2010
உளவு திரட்டி  "என்னது நானு யாரா?"  உறவுக்காரரை  ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த பதிவராக  தேர்ந்தெடுத்து உள்ளனர். உளவு நிறுவனத்தை உண்மையில் பாராட்டவேண்டிய ஒரு விஷயம் மற்ற பதிவர்கள் போல் இல்லாமல் நல்லதை மட்டுமே பதிவாக சொல்லிக்கொண்டு இருக்கிறார் உறவுக்காரர். உளவு நிறுவனத்துக்கு எனது நன்றிகள். உறவுக்காரனுக்கு எனது வாழ்த்துக்கள்.
*********************************************************************************************************
சுனாமி சுனாமின்னு பீதிய கெளப்பிட்டு இருக்கானுங்க என்னைக்கு வந்து சுருட்டிட்டு போக போகுதுன்னு தெரியல. முன்பெல்லாம் தூக்கம் வரலன்னா அலை அடிக்கிற சத்தத்தையும், போட் போகுற சத்தையும் கேட்டுக்கிட்டு  இருப்பேன் தூக்கம் தானா வரும் ஆனால் இப்ப அந்த சத்தம் கேட்டா தூக்கம் போய்டுது.
*********************************************************************************************************
 எங்க உறவுக்கார பையன் ஒருத்தன்  14  வயசு  இருக்கும் ஆனால் இன்னும் தூக்கத்துல உச்சா போற பழக்கத்த விடமாட்டிங்கிர்றான் நான் அவனிடம் உனக்கு வேட்க்காமா இல்லையாடானு  கேட்டேன்  "நான் என்ன பண்ண தூங்கும்போது கனவுல போற மாதிரி இருக்கு முழிச்சி பார்த்தா மானம் போய்டுதுனு " சொல்லுறான் . எனக்கும்  அவன் சொல்லுர்ரதுள்ள லாஜிக் இருக்குற மாதிரித்தான் இருக்கு கனவுல கண்ட்ரோல் பண்ண முடியாதுல.
 *********************************************************************************************************
 ஒரு  சந்தோஷம்மான விஷயம்:  கூகிளில் முன்பெல்லாம் தமிழில் ஏதாவது தேடவேண்டும் என்று ஆசைப்பட்டால் வீட்டில் யாரும் இல்லாதபோதுதான் தேட முடியும். நம்மாளுங்க அந்த அளவுக்கு தேடிவேச்சி இருந்தானுங்க. A என்று அழுத்தினால் போதும் முதலில் வரும் வார்த்தை அத்தை சுகம், அதுக்கு அடுத்து பார்த்தால் அக்கா, அண்ணி. இதுக்கூட பரவாயில்ல s,k போன்ற எழுத்துக்களை அழுத்தினால் அவ்வளவுதான் இப்படியும் தேடி இருப்பார்களா என்று தலை சுத்தும்.    தமிழ் கூகிளில் இப்படி தமிழர்கள்  மானத்தை வாங்குகிறார்களே  என்று நினைப்பேன் . இப்ப சந்தோஷமமான விஷயம் என்னனா ஏதோ ஒரு புண்ணியவான் அதுப்போன்ற எழுத்துக்களை அழித்து விட்டார். கூகிளில் வேலை செய்யும் அந்த புண்ணியவானுக்கு நன்றிங்கோ.......
 *********************************************************************************************************
 சென்னையில் வசிப்பவர்களுக்கு மெரீனா பீச் என்றவுடன் நினைவுக்கு வருவது சுண்டலும் மிளகாய் பஜ்ஜியும் தான். ஆனால் இது கொஞ்சம் கசப்பான சம்பவம், போன வாரம் நான் மெரினா பீச் சென்றபோது பார்த்த ஒரு கொடுமையான விஷயம். மூன்று பெண்கள் சுண்டல் சாப்பிடும்போது அதில் ஒருத்தி மட்டும் சுண்டலை சரியாக சாப்பிடாமல்  சம்சா போன்றவற்றை அப்படியே வைத்து விட்டு போய்விட்டால் நான் அந்த கடைக்காரர் அதனை எங்கே கொட்டுகிறார் என்று பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் அவர் திடிரென அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடான சுண்டலை ஊற்றி புதிதாக வந்த இன்னொருவருக்கு கொடுத்து விட்டார். 
 *********************************************************************************************************
இப்பலாம்  காலேஜ் பசங்க   என்னதான் பக்காவா ட்ரெஸ் பண்ணி இருந்தாலும் ஜட்டி வெளிய தெரியிற  மாதிரித்தான் போடுறானுங்க. என்னனு விசாரிச்சி பார்த்தா ஜாக்கி னு ஒரு கம்பனியோட ஜட்டி  200 ரூபாய்க்கு மேலயாம்  .  அந்த ஜட்டி போட்டா மத்தவங்களுக்கு நான் ஜாக்கி  ஜட்டி தான்  போட்டு இருக்குரன்னு தெரியனும்னு தான் இப்படி போடுறானுங்களாம் நம்ம காலேஜ் பசங்க . இதுல்ல கொடுமை என்னனா  இப்ப இதுக்குனே  ஜட்டி தெரியிற மாதிரி லோ ஹிப்னு  பேன்ட் மாடல்லாம்   வந்திருக்காம். ஜாக்கி கம்பனிக்காரனுங்க பாவாடை தயாரிக்காம இருக்குற வரைக்கும் நல்லதுதான போங்க......
*********************************************************************************************************
 சீதா-மாயா தகராறு
கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் சீதா, கவர்ச்சி நடிகை மாயா இருவரும் சாலிகிராமம் புஷ்பா கார்டனில் அருகருகே உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.  

 மாயா: சீதா வீட்டுக்கு தினமும் நிறைய கார்கள் வந்து போகின்றன. இதனால் என் வீட்டில் கார் நிறுத்த முடியவில்லை. இரவு நேரங்களில்  சீதா வீடு என நினைத்து சில பேர் என் வீட்டுக்கும் வந்து விடு கிறார்கள். அவுங்க என்ன வேணும்னா பண்ணட்டும் அதப்பத்தி எனக்கு கவலை  இல்ல.................

இது  கம்ப்ளைன்ட் மாதிரி தெரியல  விளம்பரம் மாதிரில்ல இருக்கு
 ********************************************************************************************
இந்த வார சாதனை:

1)களக்காடு அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்.

2)திருவொற்றியூரில்  தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்: மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டினார்

********************************************************************************************************* 

 சுரேஷ் ரைனா
இந்தியா  :  இந்த  பூனையும் பால்குடிக்குமா?
இலங்கை: குடம்  குடமா குடிச்சிது.
********************************************************************************************************
நான் யார்?:     
                                                                                                          களு: மிசா 
******************************************************************************************************** 

4 comments:

asiya omar said... | October 27, 2010 at 9:13 PM

நிறைய தகவல்.

கக்கு - மாணிக்கம் said... | October 28, 2010 at 12:44 AM

படித்து ரசிக்கும் படியான நிறைய செய்திகள் -கதம்பம்.
நான் யார் - பாவம் ,அது இந்திராகாந்தியின் படம் அண்ணாத்தே!!

INDIA 2121 said... | November 2, 2010 at 4:58 PM

சூப்பர் குசும்பு

Vinoth said... | November 22, 2010 at 6:06 PM

mana ppennu atthai payan ethum illaya...

enna than irunthalum thampiya poi akkavuku thali katta vaichathu nalla illa...