பங்குசந்தையில் பணம் புடுங்கலாம் வாங்க

Monday, October 4, 2010
                                                              http://2.bp.blogspot.com/_TsrRVaujnbI/SIyGgcX-sAI/AAAAAAAAADQ/ZLVdTWoJavo/s400/080710093818_Money-Lead-250x250.jpg

" பங்குசந்தை " இந்த வார்த்தைய கேட்டாலே சும்மா அதிரும் இதில் பணத்தை இழந்தவர்களுக்கு. ஆனால் பலருக்கு அப்படின்னா  என்ன அதப்பத்தி தெரிஞ்சிக்கணும்னு நினைப்பாங்க.  இதபத்தி தெரிஞ்சிக்காம இருக்கிறது நல்லதுதான். தப்பித்தவறி இதுல்ல போனா   நீங்க தினம் தினம் அழ வேண்டியதுதான்.  பங்குசந்தை இதன் உண்மையான் அர்த்தம் என்னனு கேட்டிங்கன உங்க கிட்ட  இருக்குற பணத்த எல்லாம் எப்படி புடுங்கிட்டு  அனுப்புர்ரதுனுத்தான். நாங்களும் எத்தனையோ விழிப்புணர்வுகளை நடத்தினாலும் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்பது போல் ஆகிவிடுகிறது.

                                  பங்குசந்தையில் பலர் பணத்தை இழந்திருப்பார்களே  தவிர லாபம் ஈட்டியவர்கள் உங்களை ஏமாற்றியவனே. அவன் வேறு யாரும் இல்ல புரோக்கர்(பங்கு தரகர்) இவனுங்க உங்கள உசுப்பெத்திகிட்டே இருப்பானுங்க இத வாங்கு அத வாங்குன்னு நஷ்ட்டம் ஆனதுக்கு அப்புறம் காணாமல் போய்டுவ்வானுங்க . உண்மைய சொல்லனும்ன்னா பங்குசந்தையில்   இருப்பவர்கள் எல்லாம் பெரியகைகள் தான் அவர்களுடைய வேலை திடிரென பங்குசந்தையை உயர்த்துவது இல்லை இறுக்குவது இதில் நஷ்ட்டம் அடைந்தவர்  யார் என்று பார்த்தல் சிறு முதலீட்டார்கள் தான். எப்பவாவுது லாபம் பார்த்தால் அது லக்குலத்தான் அதையும் எப்பவாவுது புடுங்கி  பின்னாடி திரிய சொருகி பத்தவெச்சி அனுப்ச்சிடுவ்வனுங்க.

                      சமீப காலம்மாக தமிழ்நாட்டில் சில அல்லக்கைகள் பங்குசந்தை பற்றி வகுப்பு எடுக்கிறோம் என்று சொல்லி கிளம்பிட்டானுங்க. இதில் உண்மை என்னனு பார்த்திங்கனா அவனுங்களே பங்குசந்தையில் பணத்த விட்டு இருப்பானுங்க. உங்களுக்கு வகுப்பு எடுக்கும் அவன் அதப்பத்தி நல்லா தெரிஞ்சி  இருந்தா ஏன் அவனே அதில் பணத்த சம்பாதிக்கலாமே அம்பானி மகன்களுக்கு போட்டியா வரலாமே. அதுல்லயும் மக்கள் டிவில இப்ப நிறைய அல்லக்கைகள் வர ஆரம்பிச்சிட்டானுங்க ஆனால் இவனுங்க உண்மையான வேலை என்னனா ஜோசியம் சொல்லுறதுதான்.   மேலப்போகும்னு சொல்லுவ்வானுங்க மறைமுகம்மா கீலப்போகும்ன்னும் சொல்லுவ்வானுங்க. இதுல ஏதாவது ஒன்னு நடந்தாலும் நாங்கதான் சொன்னோம்ல அப்படின்னு பீத்திக்குவ்வனுங்க.

                                          உங்ககிட்ட ஒருத்தன் வந்து பங்குசந்தைய பத்தி வகுப்பு எடுக்குர்ரன் இல்ல  சேர்த்து விடுறேன் அப்படின்னு சொன்னா நீங்க இத சொல்லுங்க " உங்களுக்குதான் பங்குசந்தையபத்தி நல்லா தெரியும்ல்ல நான் ஒரு பத்தாயிரம் ரூபாய் தர்றேன் அத இருபது ஆயிரம்ரூபாயா  மாத்திக்காட்டுங்க உங்களுக்கு கமிஷன் இருண்டு ஆயிரம் ரூபாய் நஷ்ட்டம் ஆனா அது உங்க பொறுப்பு" இப்படி சொல்லிப்பாருங்க பொத்திகிட்டு போயடுவ்வானுங்க.

4 comments:

தனி காட்டு ராஜா said... | October 13, 2010 at 1:07 PM

SUPER.............

Jayadeva said... | October 20, 2010 at 11:07 PM

இந்தப் பங்கு சந்தை வியாபாரத்தைப் பத்தி எனக்கு சில சந்தேகங்கள். கணினி முன் உட்காந்துகிட்டு நாள் பூராவும் ஷேர் கான் வலைத்தளத்தில் குதிரை மேல் பணம் கட்டுபவனைப் போல பார்த்துக் கொண்டிருக்கும் சூரப் புலிகளிடமும் கேட்டு விட்டேன் விடை தான் கிடைக்கவில்லை. கேள்வி இதுதான்: நீங்கள் ஒரு கம்பனியின் பங்கை வாங்குகிறீர்கள், அதன் மதிப்பு பத்து ரூபாய். கொஞ்ச நாளைக்கப்புறம் அந்த பங்கு மூவாயிரம், நாலாயிரம் ரூபாய் என்றெல்லாம் போகிறது. எதை வைத்து இந்த விலை நிர்ணயம் செய்யப் படுகிறது? அந்த பங்கிலிருந்து முதலீட்டர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? வருடத்துக்கு பத்து சத்தத்திலிருந்து ஐம்பது சதம் வரை டிவிடென்ட், அப்புறம் சில சமயம் சில பங்குகள் கிடைக்கலாம். அட, நூறு சதவிகிதம் டிவிடென்ட், ஒரு பங்கிற்கு ஒரு பங்கு கூடுதலாகக் கொடுத்தாலும், பத்து +பத்து = இருபது ரூபாய்தானே வருகிறது, வருஷத்துக்கு இருபது ரூபாய் கொடுக்கும் ஒன்றை எதற்கு நாலாயிரம் ஐந்தாயிரம் என்றெல்லாம் கொடுத்து வாங்க வேண்டும்? இன்னொரு இளிச்சவாயன் வாங்கத் தயாராக இருக்கிறான் என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் தெரியவில்லை. நிறுவனத்தின் செயல்பாடு, லாபம், சொத்து மதிப்பு இவையெல்லாம் வைத்துதான் பங்குகள் விலை மதிப்பிடப் படுகின்றன என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அப்படியென்றால் கூட உனக்கு அதிலிருத்து வருடத்திற்கு இருபது ரூபாய்க்கு மேல் அடாவடியாக வைத்துக் கொண்டாலும் கிடைக்காதே?

Jayadeva said... | October 20, 2010 at 11:08 PM

மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு பங்கு சந்தை குறியீட்டு எண் இருபத்தியோராயிரத்திலிருந்து வெறும் எட்டாயிரத்துக்கு வீழ்ந்தன. அப்போது இரண்டாயிரம், மூவாயிரம் என விற்ற பங்குகள் விலை வெறும் இருநூறு, முன்னூறுக்கு வீழ்ச்சியடைந்தன. எந்த நிறுவனமும் முன்வந்து எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகம் எனவே பங்குகளை ஐந்நூறுக்கு வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லவில்லை. [உண்மையில் மதிப்பு அதிகம் என்றால் சல்லிசாகக் கிடைக்கிறது என்று திரும்பப் பெற்றிருப்பார்களே?] ஆக பங்கு சந்தை என்பது இன்னொரு குதிரை ரேசு தான். குதிரைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது முதலில் வரும் என்று நீயாக பணம் கட்டுவது போல, நிறுவனங்களின் பங்குகளை இவர்களாக ஏற்றி விடுகிறார்கள். அந்த விலைக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த உண்மையோ, மதிப்போ இல்லை.

INDIA 2121 said... | November 2, 2010 at 5:18 PM

அனுபவம் பேசி உள்ளது என்று நினைக்கிறேன்