பிச்சை எடுக்கும் டிராபிக் போலிஸ்கள்

Friday, October 15, 2010
http://cdn.wn.com/ph/img/70/d1/5f6ad4f61521976635dd829f1276-grande.jpg 

நமது நாட்டில் ஏதேனும் அரசு நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி நடந்தால் அரசு முதலில் காலி செய்வது பிச்சைக்காரர்களைத்தான்,  நாட்டின் கவுரவம் குறைந்து  விடக்கூடாது என்றாம். ஆனால் அரசு உடையை போட்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் இந்த டிராபிக் போலீஸ்கள் தொல்லை அதிகரித்துக்கொண்டே  போகிறது. இவர்கள் பார்ப்பதற்கு டிப் டாப்பாக உடை அணிந்து  இருந்தாலும் லாரி டிரைவர்களிடமும், வாகன ஒட்டிகளிடமும் பிச்சை எடுப்பதை பார்க்கும்போது செருப்பை கலட்டி இரண்டு  லெப்ட், ரைட் கொடுக்கலாம் போல இருக்கும்.

கண்டைனர் வண்டி ஒட்டுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்  இவர்களுக்கு எவ்வளவு பிச்சை போட்டார்கள் என்று புட்டு புட்டு வைப்பார்கள். ஏன் என்றால் இவர்கள் அதிகம் பிச்சை எடுப்பது இவர்களிடம் தான். அது ஏன் இன்று எனக்கு புரியவில்லை இவர்கள் கையை நீட்டியவுடன் கிளீனர் உடனே பணத்தை கொடுத்து விடுகிறார். இவர்களுக்குள் அப்படி என்ன ஒப்பந்தமோ பிச்சை கொடுப்பதிலும் வாங்குவதிலும். இவர்களுக்கு பணம் தேவை என்றால் உடனே ஒரு மர நிழல் இருக்கும் இடமாய் பார்த்து நின்று விடுகிறார்கள் இவர்களிடம் மாட்டுவது ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களும் சின்ன யானை ஒட்டுனர்களும்தான். அரசாங்க சம்பளம் வாங்கும் இவர்கள் குடும்பத்துக்காக இரவும் பகலும்மாக கண் விழித்து ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி பிச்சை எடுப்பது கேவலம்மான ஒன்று என்று  ஏன் தெரிவது  இல்லை.


இவர்கள் பிச்சை எடுப்பதிலும் ஒரு தர்மம் இருக்கிறது, இரண்டு சக்கர வாகனத்தில் பின்புறம் பெண்கள் உட்க்கார்ந்து இருந்தால் வண்டியை  மடக்குவது கிடையாது. எங்கள் பக்கத்து வீட்டுக்கார் இவர்களுக்கு பயந்தே தூரம் பயணம் செய்யவேண்டும் என்றால் மனைவியையும் அழைத்துக்கொண்டுதான் போவார். சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி  இணையத்தள  நிருபர் ஒருவர் பயணம் செய்யும்போது ஒரு போலீஸ்காரர்  தண்ணீர் பாட்டில் சரக்கு கொண்டு வந்த ஒரு வாகனத்தை மடக்கி ஒரு தண்ணீர் பாட்டிலை மிரட்டி வாங்கியதாக கேள்வி பட்டேன்.  இது இன்று நேற்று அல்ல பலநாட்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டும் இல்லை இவர்கள் பந்தா காட்டுவதற்காக பல டிரைவர்களை நடுரோட்டில் அறைகிறார்கள். போன வாரம் கூட ஒரு  அரசு பிச்சைக்காரர்(டிராபிக் போலீஸ்) வாகன எல்லைகோட்டை மீறி வந்து வாகனத்தை  நிறுத்தி விட்டார் என்று ஓடி வந்து அவர் தலையில் குட்டு வைத்தார், ஆனால் அந்த இடத்தில் பலர் எல்லைக்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தி இருந்தனர் இவர்களுக்கு பந்தா காட்டவும் மற்றவர்களை மிரட்டவும் கூலிக்கு வேலை செய்யும் வண்டி ஓட்டுனர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அந்த டிரைவர் அவமானத்தில் தலைகுனிந்து இருப்பதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது அவருக்கு பக்கத்தில் ஒருசிறுவன் உட்க்கார்ந்து இருந்தான் அது அவருடைய மகனாக இருந்தால் அவர் எப்படி அந்த அவமானத்தை தாங்கிக்கொல்வார். படித்தவர்கலையோ இல்லை சொந்த வாகனம் வைத்து இருப்பவர்களையோ கைவைத்து பேச மாட்டார்கள் அடித்தால் ரூல்ஸ் பேசுவார்கள் என்ற பயமோ?.சென்னை மாநகராட்சி தெருவில் சுற்றும் பிச்சைக்காரர்களை மீட்டு மறு வாழ்வு அளித்துவருகிறார்கள். அதனை இவர்களுக்கு செய்தால் நாட்டின் கவுரவம் காப்பாற்றப்படும்.


5 comments:

உமாபதி said... | October 16, 2010 at 9:49 AM

இந்த மாதிரி அரசு பிட்சைகரர்களை சென்னை மாநகராட்சி மீட்டு மறுவாழ்வு அளிக்காத?

ரஹீம் கஸாலி said... | October 16, 2010 at 2:50 PM

சீரியசான பதிவு. உங்களின் முந்தைய பதிவுகளை படித்துவிட்டு நீங்க காமடியான ஆளென்று நினைத்தேன், நான் சீரியசான ஆளும் கூட என்று நிருபித்துவிட்டீர்கள் .

INDIA 2121 said... | October 30, 2010 at 3:06 PM

சிந்திக்க வைக்கும் பதிவு!
அருமை!

எஸ்.முத்துவேல் said... | November 14, 2010 at 6:57 PM

மிக சரியான பதிவு...!

பிச்சைக்கார்களுக்கு

இதே வேலை ப்பா ! ! !

kanna said... | January 6, 2011 at 7:04 PM

Superrrr...