ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி

Thursday, October 28, 2010
" ஒரே நாளில்  கோடிஸ்வரன் ஆவது எப்படி" இந்த தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு வடிவேல் பார்த்திபன் காமடி தான் நினைவுக்கு வரும் ஆம் அப்படிபட்ட ஒரு பிஸ்னஸ் தான் இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டு வருகிறது கீழே கொடுத்துள்ளேன் படித்து உஷார் ஆகிக்கொல்லுங்கள்


******************************************************************************
 ISO கம்பெனிக்கு     ஆட்கள் தேவை
                                9999978897
                       கல்வி தகுதி : 8TH TO  DIPLOMA /ANY DEGREE

                               PART TIME JOB -  4000
                               FULL TIME JOB - 8000
                      மாதம் 50000  ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
                                                  படியில் பயணம் பரலோக பயணம்.

*****************************************************************************************************************************

நீங்கள் பயணம் செய்யும்போது பேருந்திலோ அல்லது ரயிலிலோ அடிக்கடி கண்ணில் தென்படும் சுவரொட்டி இது. நீங்கள் அவர்களுடைய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினால் இனிமையாக ஒருவர் பேசி உங்களை  அவர்கள் அலுவலகத்துக்கோ, அல்லது ஒரு திருமண மண்டபத்திர்க்கோ  முகவரியை கொடுத்து ஒரு குறுப்பிட்ட நாளில் வரச்சொல்லுவ்வான் . 

சிம்ரனுக்கு ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய்........
                நீங்கள் அந்த கூட்டத்திற்கு போனால் உங்களை போன்று பே..பே  என்று முழித்துக்கொண்டு பலர் அமர்ந்து இருப்பதை  பார்க்கலாம் . சிறிது நேரம் கழித்து V . I .P போல்  ஒரு மூன்று நான்கு பேர் வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டு உங்களை கோடிஸ்வரர் ஆக்குவது எப்படி என்று சில ஐடியா கொடுக்க ஆரம்பிப்பார்கள்.  நீங்கள் என்ன வேலை செய்யப்போகிறீர்கள் என்று சொல்லாமல் தனது பேச்சை தொடருவான்  ஒரு கோடிஸ்வரன்(டுபாகூர் கோடிஸ்வரன் ) .

                          "நீங்க ஒரு சோப்பு 15 ரூபாய் கொடுத்து வாங்குறிங்க அதோட உண்மையான விலை என்னனு தெரியும்மா ரூ.3.50 காசு தான். ஆனால் நீங்க 15 ரூபாய் கொடுத்து வாங்குறிங்க மீதி பணம் யார் யாருக்கு போதுன்னு தெரியும்மா? அத விளம்பரம் செய்ய டீ.வி காரனுக்கு அப்புறம் அதுல்ல நடிக்கிற நடிகைக்கு, AGENT , கடைக்காரன் என எல்லாருக்கும்  போகும். இதுல்ல ஒருநாளைக்கு சிம்ரனுக்கு சோப்பு விளம்பரத்துள்ள நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளம் வேற. சரி அத விடுங்க நீங்க ஒரு மிக்சி வாங்குரிங்கனு வைங்க அது நல்லா  இருக்குனு பக்கத்து வீட்டுல்ல போய் சொன்னா அவுங்களும் அதே கம்பனி மிக்சிய வாங்குவாங்க இதுனால உங்களுக்கு என்ன லாபம் அந்த கம்பனிக்கு தான் லாபம். "   இதுதான் அந்த டிப் டாப் நபர் உங்களை பார்த்து சொல்லுவான். நீங்களும் இந்த விஷயம் இத்தன நாளா நமக்கு தெரியாம போச்சேன்னு ஆழ்ந்து அந்த ஆள் சொல்லுறத கவனிக்க ஆரம்பிச்சிடுவிங்க. இங்க தான் உங்களுக்கு இருக்கு திருப்பதி லட்டு.  

                                  " நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னும் இல்ல 1500 ரூபாய் கொடுத்து எங்க கிட்ட சேருங்க, அதுக்கு அப்புறம் நீங்க ஒரு ரெண்டு பேர் சேர்த்து விடனும், அப்படியே உங்க கிட்ட சேர்ரவுங்க ரெண்டு பேர். இப்படியே ரெண்டு நாலாகும் நாலு எட்டாகும், எட்டு பதினாறு ஆகும். இந்த மாதிரி போய்கிட்டே இருந்தா உங்களுக்கு குறஞ்சது வாரம் 10000 முதல் 50000 வரைக்கும் சம்பாதிக்கலாம். நான் போன வாரம் மட்டும் 50000 ரூபாய் வாங்கினேன்" இப்படி சொல்லி ஒரு 50000 ரூபாய் செக் உங்ககிட்ட காட்டுவான் அந்த டிப் டாப் பரதேசி. நீங்களும் அத  நம்பி அவனுங்க கேட்க்குற தொகைய கட்டிட வேண்டியதுதான்.

                    இதுபோன்ற நிறுவனங்களில் நீங்கள் சேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு வேலை ஒன்று அவர்கள் கொடுக்கும் பொருட்களை நம் உறவினர்களிடம் விற்க வேண்டும் அல்லது நமது உறவினர்களை அவர்களிடம் சேர்த்து விட வேண்டும்(1500  முதல் 32000  கொடுத்து). இதில் எது நடந்தாலும் உங்கள் உறவினர் உங்கள் முகத்தில் காரி துப்புவ்வது உறுதி.

ஒரு சோப்பு 36 ++  ரூபாய் !

அந்த நிறுவனத்தில் நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ சேர்ந்தாள் அவர்கள் கொடுக்கப்போகும் பொருட்கள்.

* 1500 ரூபாய் மதிப்புள்ள  CD  PLAYER  3000 ரூபாய்க்கு கொடுப்பான்.
                    அல்லது 
*  4 ஷர்ட் 5000 ரூபாய்க்கு கொடுப்பான்.
                      அல்லது 
* 8 கிராம் தங்கம் 32000 ரூபாய் .


                                       இத விட கொடுமை என்னனா இப்ப தமிழ் நாட்டுள்ள படு ஜோர்ரா போய்க்கிட்டு இருக்குற ஒரு கம்பனி கொடுக்குற பொருட்களோட விலைய பார்த்தா அசந்துடுவ்விங்க. 
 
                                        ஒரு சோப்பு 36 ரூபாய், பல்லு  தேய்க்கிற பேஸ்ட் 120  ரூபாய் இப்படி பல பொருட்கள் உள்ளது இதுல்ல என்ன ஒரு கொடுமணா இவனுங்க விக்கிற பல பொருட்கள் 1000 ரூபாய்க்கு மேலதான். 1000 ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பொருளுக்கு இவன் கொடுக்குற கமிஷன் மட்டுமே 200 முதல் 300 ரூபாய்(விக்கிர உங்களுக்கே இவ்வளவு கமிஷன் தொகைனா அப்ப  அவன் எவ்வளவு கொள்ளை அடிப்பானு பாருங்க). நீங்களும்  உங்க சொந்தக்காரன் கைல  கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி, அவன் உங்கள ஏமாத்துன மாதிரியே நீங்களும் ஏமாத்த வேண்டியதுதான். 

                                      ஒன்றை மட்டும்  புரிந்துக்கொள்ளுங்கள் இதுப்போன்ற நிறுவனங்கள் உங்களுக்கு குறைந்த விலைக்கு பொருட்களை கொடுக்கப்போவதும் இல்லை அவர்கள் கொடுக்கும் பொருட்கள் நமது நாட்டில் கிடைக்கும் பொருட்களை விட தரமான பொருளும் இல்லை. நாம் அவர்களிடம் செலுத்தும் பணம் அனைத்தும் வெளிநாட்டில் இருக்கும் முதலாளிகளுக்குதான் சென்றடைகிறது. அவர்கள் அயல்நாட்டில் இருந்து ரூம் போட்டு யோசித்து நம் பணத்தை சுரண்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது நாமும் இந்திய நிறுவனங்களும் தான். நம் கையாலாகத இந்திய அரசு இதனை தட்டிக்கேட்க்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய கொடுமை.   

                                         இதுபோன்ற நிறுவனங்களின் பலமே நமது பேராசை தான். இவர்கள் உங்களின் அந்த மீட்டிங்கில் பலரை அறிமுகம் செய்து வைப்பார்கள். அவர்கள் அறிமுகம் செய்யும்போது இவர் போன மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தார் என்று கூறுவார்கள். அதை  கேட்டவுடனே ஏன் நாமும் மாதம் ஒருலட்ச்சம் சம்பாதிக்ககூடாது என்று இதில் இனைந்து விடுவோம்.  ஆனால் இன்னும் ஒருசிலர்  ஒருபடி மேலே போய் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்துவிட்டு தெருத்தெருவாக இவர்களுடைய பொருட்களை விற்க  ஆரம்பித்து விட்டார்கள்.                                          இந்த ஏமாற்றும் தொழில் பல வருடம் நமது மாநிலத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. SKYWAYS என்ற நிறுவனம்  பத்து வருடங்களுக்கு முன்பே   மாட்டி பல தொலைக்கட்சிகளில்  காட்டப்பட்டது. ஆனால் அதே நிறுவனம்  G&H  என்ற பெயரில் கொள்ளை  அடிக்க ஆரம்பிச்சிட்டனுங்க. இவர்களிடம் ஏமாறுவது நம்மிடம் விழிப்புணர்வு இல்லாததே  சில வருடங்களுக்கு முன்பு கோல்ட் க்விஸ்ட்   என்ற நிறுவனம் பலரை ஏமாற்றியதாக தொலைக்கட்ச்சியில் பார்த்து இருப்போம்( தங்க காசு மோசடி). அதன் விபரம் இதோ 32000 ரூபாய்க்கு 8 GRM தங்கம் இப்படி சொன்னால் நீங்கள் செருவிங்கள ? ஆனால் பல ஆயிரம் பேர் இதில் சேர்ந்து கமிஷனர் அலுவலகத்தில்  கியுவில் புகார் அளித்தனர் எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று.   

        இனியும் நீங்க இந்த மாதிரி கம்பெனி  கிட்ட சேர்ந்தா. உங்கள் பணம் கொவிந்தா கோவிந்தா........  


      நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மற்றவரிடம் சென்றடைய உதவும்(நல்ல பதிவாக இருந்தால்)

20 comments:

தனி காட்டு ராஜா said... | October 28, 2010 at 11:38 AM

//* 8 கிராம் தங்கம் 32000 ரூபாய் .//

இப்படி தான் நான் Gold Quest என்ற கம்பெனி -யில் ஏம்மாந்தேன்...........

suttipaiyan said... | October 28, 2010 at 1:36 PM

அருமையான பதிவு

Dhosai said... | October 28, 2010 at 3:27 PM

ennayum indha madhiri meeting ku vara sonnanga. but naan pogala. bcz i knw abt that little.
thanks good information

Jayadeva said... | October 28, 2010 at 3:45 PM

மிக அருமையான பதிவு. நான் இதுவரைக்கும் நான்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் பயலகளிடம் ஏமாந்துள்ளேன். அவர்களுடைய பொருட்கள் சில சற்று தரமுள்ளதாக இருக்கலாம், ஆனால் அதற்க்கான விலை அதை விட பல மடங்கு [அக்கிரமத்துக்கு] அதிகம். ஐம்பது கிராம் பற்பசை முப்பது ரூபாய்க்குக் கிடைக்கும், இவர்கள் அதை இருநூறு ரூபாய் என்பார்கள். கார் வாஷ் செய்ய இரண்டு ரூபாய் ஷாம்பூவும், முப்பது ரூபாய் பணமும் கொடுத்தால் போதும், இவர்கள் ஐநூறு ரூபாய்க்கு கார் வாஷ் என்று ஏதோ கருமாந்திரத்தை நம் தலையில் கட்டி விட்டுவார்கள். நம்முடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்களே நம்மை மூளைச் சலவை செய்து இதில் கோத்துவிட்டுவிடுகிறார்கள். அதுவும் அவர்கள் கிட்டத் தட்ட பைத்தியம் போல கண்ணில் படுபவர்கள் எல்லோரிடமும் கண்ணா பின்னவென்று சதா இந்த வியாபாரத்தைப் பற்றியே பேசுகிறார்கள். இது நாள் வரை நாம் வாழ்ந்தது வாழ்க்கையே இல்லைஎன்றும், இந்தப் பொருட்களைப் பயன் படுத்தினால் தான் நாம் மனிதர்களாகவே ஆவோம் என்பது போலவும் பேசுகின்றனர்.

Jayadeva said... | October 28, 2010 at 3:47 PM

நான் பார்க்க ஒல்லியாக இருப்பதால், எனக்கு ஏதோ உடல் நலக் கோளாறு என்றும், இவர்கள் அகச் சிவப்பு அலைகளை உமிழும் பொருளைக் கொண்ட ஆடைகளைக் கொடுப்பதாகவும் கூறி ஐந்தாயிரம் செலவு செய்து அதில் உறுப்பினரானேன். அந்த உடைகளை பூத்துக் கொண்டு தண்ணீர் எக்கச் சக்கமாகக் குடிக்க வேண்டுமாம். அதனை போட்டுக் கொண்டால் உடல் ஆனா சூடு தாங்க முடியாது அதை தூக்கி எரிந்து விட்டேன். அதைப் பயன் படுத்துபவர்களிடம் கேட்டால் விரைவில் அவை கிழிந்து போவதாகச் சொன்னார்கள். அப்புறம், உடல் எடையை அதிகரிப்பதற்கு ஏதோ ஊட்டச் சத்து, விட்டமின்கள் கொண்ட பவுடரைக் கொண்டு வந்து வெறும் ஐந்தாயிரம் தான் ஆகும் அதிலேயே நீ குண்டனாகி விடுவாய் என்றார்கள். ஆனால் அதற்க்கு அடுத்த மூன்றே மாதத்தில் பதினாறு ஆயிரம் செலவு செய்தேன். அதில் சுவையோ, அல்லது உண்ட பின் தெம்போ இல்லை. வெறும் மண்ணு போல இருந்தது. சாப்பிடும் போது அதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து சாப்பிடச் சொன்னார்கள். அந்தத் தண்ணீரின் எடைதான் அரைக் கிலோ எனக்கு அதிகரித்ததே தவிர வேறு ஒரு பிரயோஜமும் இல்லை. இத்தனைக்கும் என்னோடு பணிபுரியும் தமிழ்க் காரனே என்னை ஏமாற்றினான்.

Jayadeva said... | October 28, 2010 at 4:00 PM

நான் ஏமாந்த கம்பனிகள்: Cony Bio, Mega Bio [இவர்கள் Infrared Emitting துணி வியாபாரம், சுத்த வேஸ்டு], Amway [சோப்பு சீப்பு கண்ணாடி விற்கும் பொறம்போக்குகள்-இதைப் போலவே
இரண்டு கம்பனிகள் ], இப்போ நடக்கும் கூத்து நுணா பழத்திலிருந்து பழ ரசம் தயாரிக்கப் பட்டு விற்கிறார்கள் அப்புறம் இதற்க்கு கலாமின் படம் வேறு, அவர் இதைப் பார்ப்பது போல. இவர்கள் சொல்வதெல்லாம், இவர்களுடைய பொருகள் உலகத்திலுள்ள எல்லா வியாதியையும் சரி செய்யக் கூடியவை, மருத்துவர்களாலேயே கைவிடைப்பட்ட கேஸ்களை கூட குறைந்த செலவிலேயே காப்பாற்றக் கூடியவை, சர்க்கரை வியாது, மாரடைப்பு போன்ற தீர்க்க முடியாத வியாதிகளையும் ஆபரேஷன் மருந்துகள் எதுவுமே இல்லாமல் தீர்க்கக் கூடியவை, ஒரு பாட்டில் சோப்பு வாங்கினால் ஒரு தலை முறைக்கே உபயோகப் படுத்தலாம் என்று வண்டி வண்டியாகப் புழுகி, இவற்றை வாங்குவதன் மூலம், உன் நோயும் குணமாகும், பணக்காரனாகவும் ஆகி விடலாம், மேலும் நீ சேர்த்து விடுபவர்களும் பணக்காரகளாகி விடுவார்கள் என்று நம்மை மாட்டி விட்டு விடுவார்கள். உண்மையில் அவர்கள் கொடுக்கும் பொருட்கள் நம் கைக்கு வரும் வரை தெரியாது அவை குப்பை என்று. அடுத்த முறை யாராவது இந்த மாதிரி மல்டி லெவல் மார்கெடிங் என வந்தால் செருப்பைக் கலட்டி அடித்து விரட்டுங்கள் தப்பே இல்லை.

சர்பத் said... | October 28, 2010 at 9:54 PM

யாரு செஞ்ச புண்ணியமோ "Gold Quest"க்கு நான் மீட்டிங் போன அடுத்த நாளே இழுத்து மூடிட்டாங்க...நம்ம ராசி அப்படி :)

Jayadeva said... | October 28, 2010 at 10:01 PM

MODICARE, HERBALIFE, CONY BIO, MEGA BIO, DIVINE NONI இத்தனை பேத்துகிட்ட நான் ஏமாந்திருக்கிறேன் [பெருமைப் பட்டுக்கிற விஷயமா இது!]

- ரமேஷ் said... | October 28, 2010 at 11:15 PM

pathivar anne romba .. yemanthuttenga pola ..

INDIA 2121 said... | October 29, 2010 at 5:35 PM

அருமையான தகவல்.
இந்த பதிவை பார்த்தாவது நம்ம ஆளுங்க திருந்தினா சரி.

வால்பையன் said... | November 1, 2010 at 2:28 AM

இதை பற்றி நான் கூட ஒரு கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்!

Rajesh V Ravanappan said... | November 2, 2010 at 11:17 PM

இப்போ புதுசா மக்களின் உழைப்பை சுரண்ட சில கம்பனிகள் விரிக்கும் வலையின் பெயர் "Reseller Concept". சில ஆன்லைன் கம்பனிகளும் (DATA ENTRY ) , BULK செல்போன் கம்பனிகளும் விரிக்கத் தொடங்கியுள்ளனர் .. உஷாரைய்யா உஷாரு... DEPOSIT கட்டினா உங்க பணம் ஓகயாதான்

Prasad said... | November 10, 2010 at 6:27 PM

Good blog my dear friend :) especially the guys who r involved in amway are really irritating. I had a friend long time back, he was a manager @satyam. He some how got pulled in to the Amway, i think through his wife. Our friends group used to go to their house in the weekends. After this guy has this trade, all the time he is speaking about the paste, brush, soap etc etc... We got really irritated and stop going to his home, infact we stopped attending his calls too :)

Karthi S said... | November 13, 2010 at 9:22 AM

machi nanum ungala mathiri neraya peruku solli parthutrn. but paya pullaiga ethuvum nammala namba mattenrathu.....
namma enna thaan sonnalum antha komalika meeting la solrathu thaan namburanga......
avan avan patta thaan puthi varum.......

yeskha said... | November 23, 2010 at 1:10 AM

அய்யா சாமி இதுக்கெல்லாம் யாரும் விதிவிலக்கே இல்லை... நான் ஜி7 மொபைலுக்கு இந்த மாதிரி பணம் கட்டி மொபைல் வாங்கிக் கொண்டு ஏமாந்திருக்கிறேன்.

bandhu said... | November 23, 2010 at 1:34 AM

நாங்கள் அமெரிக்காவில் வசிக்கிறோம். இங்கேயும் ஆம்வே தொல்லை தான். அதுவும் நம் மக்கள் தான் அந்த ஆம்வே மெம்பர் ஆகி மற்றவர் கழுத்தை அறுப்பது. எனக்கு தெரிந்த வரை மற்ற நாட்டவர்கள் அதிகம் இந்த தொல்லை கொடுப்பதில்லை. உலகமெங்கும் இதில் இந்தியர்கள் தான் இளிச்சவாயர்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் போல.

Sairam said... | December 28, 2010 at 9:03 PM

ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுகிறவன் இருப்பான் ஜாக்கிரதை

udhaya said... | January 3, 2011 at 8:57 PM

nan BRIGHT SUN enra companiyil sernthu dvd player vangi yemanthen

Karthiganandam said... | June 18, 2012 at 11:40 AM

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்

raj said... | October 22, 2013 at 1:18 AM

Arumai