கொக்கா மக்கா 22/11/2010

Monday, November 22, 2010
பதிவர்கள் உதவியால் ஒரு சிறுவனுக்கு செவி கேட்க்காமை சரி செய்யப்பட்டது என்று   கேபிள் ஷங்கர்  வலைத்தளத்தில் படிக்கும்போது சந்தோஷம்மாக  இருந்தது, இது நமக்கு தெரிந்த ஒருவர் மட்டும்தான். பதிவர் சந்திப்பை இன்னும் பலப்படுத்தி நம்மால் முடிந்த வரை நிதி திரட்டினால்(நமக்குள்) இன்னும் பலர் பயனடைவார்கள்.   எத்தனை நாட்களுக்குதான் அரசை குறை கூறி பதிவுகள் போட போகிறோம்? நாம் திரட்டும் சிறு நிதியை கொண்டு  அரசு செய்யாத சிறு பிரச்சனைகளையும்  நாம் சரி  செய்யலாம்.அரசு பள்ளிகளுக்கு ப்ளாக்  போர்டு பெயிண்ட் அடிப்பது, குப்பை தொட்டி இல்லாத இடங்களில் குப்பை தொட்டி வைப்பது என பல சிறு ப்ரட்ச்ச்சனைக்கு நாமே தீர்வு கண்டால் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.  படித்த நாமே இன்னும் எத்தனை நாட்களுக்கு வெட்டிப்பேச்சை பேசி ஓட்டுபோடுவது, ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யலாமே?
 _________________________________________________

பதிவர்கள் தங்களுக்குள் ஏதேனும் மனக்குறை இருந்தால் மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பிரட்ச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள் தயவு செய்து அதற்காக ஒரு பதிவு போட வேண்டாம், இதனால் இவருக்கு ஒரு ஆதரவாளர் அவருக்கு  ஒரு ஆதரவாளர் என நமக்குள் பிரிவினைதான் வரும்( இன்ட்லியில் ஓட்டு குறையும், தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழும் தேவையா?). பத்திரிக்கையாளர்கள் கூட எழுதமுடியாமல் பயப்படும் விஷயத்தை நாம் தைரியம்மாக எழுத ஒரு சந்தர்ப்பம்(வலைப்பதிவு)  கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 _________________________________________________

ஆங்கில மருந்துகள்  பக்கவிளைவுகளை  ஏற்ப்படுத்தும் என பலர் பக்கம்பக்கமாக வசனம் பேசினாலும் மீண்டும் மாட்டிக்கொள்வது அதே ஆங்கில மருந்தில்தான் காரணம் இயற்க்கை மருந்து(சித்தமருந்து) எங்கு கிடைக்கும் என்று தெரியாததே அல்லது மருந்து கடைகளில் சென்று கேட்க்க கூச்சம். அப்படிப்பட்டவர்கள் சென்னை பாரிமுனை(parrys ) க்கு வந்து போகும் வாய்ப்பு கிடைத்தால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள "குறளகம்" என்னும் இடத்துக்கு மறக்காமல் வந்து போகவும் இது  அரசு "கோ ஆப் டேக்ஸ்" பின்புறம் உள்ளது, இதுவும் அரசு நடத்தும் விற்பனை நிலையம் தான். இங்கு பல இயற்க்கை மருந்துகள், ஆன்மிக பொருட்கள், இயற்க்கை உணவுகள், வீட்டு அலங்கார பொருட்கள் அரசு நிர்ணயித்து விலைக்கு கிடைக்கும்(பேரம் பேச தேவை இல்லை).
பி.கு: இங்கு வருபவர்களுக்கு எந்த பொருளை கண்டாலும் வாங்க ஆசை வரும் அதனால் தேவைக்கு அதிகமாக பணம் எடுத்து வர வேண்டாம் . குறிப்பாக  பெண்களை உடன் அழைத்து வருபவர்கள்.
 _________________________________________________

அரசியல் தலைவர்கள்  பெண்கள் ஓட்டை கவருவதற்காக தகுதியே இல்லாத பெண்களை முக்கிய பதவிகளில் அமரவைக்கின்றனர்(உதாரணம்: தலையாட்டி பொம்மை  பிரதிபா பாட்டில், அதுவும் அப்துல் கலாம் இடத்தில்). எப்படியோ போகட்டும் இதனால் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இதே அரசியல் பேருந்தில் இருப்பது ஆண்களை மட்டம்தட்டுவது போல் உள்ளது. பெண்களுக்கு தனி இருக்கை  என்று இருப்பது நல்லதுதான்(எங்கள் வீட்டு பெண்களும் ஆண்களின் உரசல் படாமல் செல்ல) அதற்காக ஆண்கள் பேருந்தில் அமரவே முடியாத நிலை தேவைதான என தோன்றுகிறது. பெண்கள் தங்களுடைய இருக்கை காலியாகி விட்டால் நேராக ஆண்கள் இருக்கும் பக்கத்தில் தான் வந்து உட்க்காருகின்றனர்(அந்த சீட் கடைசி பேருந்து நிலையும் வரும் வரை  பெண்கள் இருக்கை தான்). இனி வரும் காலங்களில் இரண்டே ஜாதி தான் போல தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி.
தாழ்ந்த ஜாதி- ஆண்.
உயர்ந்த ஜாதி- பெண்.
 _________________________________________________

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்ப லச்சியமே எங்கள் வீட்டுக்கு டிவி வாங்குவது தான். பல நாட்கள் பணத்தை சேமித்து   பழைய டிவியை ஒருவரிடம் இருந்து வாங்கினோம் அன்றிலிருந்து பலநாட்களுக்கு என் கனவில் டிவி தான் வந்து போனது இந்த சந்தோஷம் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை இடி பகவான் ஒரு இடியை போட்டு வீட்டில் இருந்த அனைத்து மின்சார பொருட்களையும் நாசம் செய்து விட்டு போனார்(அப்போதிருந்த சூழ்நிலைக்கு அது எங்களுக்கு பேரிழப்பு). ஆனால் விடாமுயர்ச்சியால் மீண்டும் சாதித்தோம் மூன்றே ஆண்டுகளில்  இன்னொரு second hand டிவி வாங்கினோம், அன்றில் இருந்து இன்று( LCD எல்லாம் வாங்கியாச்சி)  வரை ஒரு சிறு மழை பேய்தால்கூட எங்கள் வீட்டில் எல்லோரும் செய்யும் முதல் காரியம் கேபிள் ஒயரை  டிவி யில் இருந்து பிடுங்குவது தான். ஆனால் இன்னும் மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு வரவில்லை தொடர்ந்து வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது டிவி. நீங்களாவது உங்களுக்கு தெரிஞ்சவுங்க கிட்ட சொல்லுங்க.
 _________________________________________________

 சில தனியார் தொலைக்காட்ச்சிகள் இப்போது கேள்வி பதில் போட்டி நடத்துவது போல் நமக்கு தெரிந்த கேள்வியையே கேட்டு தொலைப்பேசியில் பதில் சொல்லுங்கள் என்று போட்டி நடத்துகின்றனர்( சூர்யா, ஜோதிக முகத்தை காட்டி இவர்கள் யார்னு கேட்க்குதுங்க). இந்த நிகழ்ச்சியில் இவர்கள் கொடுக்கும் பரிசு தொகை வெறும் 10000 , 15000 ரூபாய்தான் எதற்க்காக சொல்கிறேன் என்றால் இவர்கள் தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்துக்கு பிடிக்கும் சார்ஜ் பத்து ரூபாய், கால் வேய்ட்டிங்கில் இருந்தால் கூட. கணக்கு போட்டு பாருங்கள் எவ்வளவு பெரிய கொள்ளை என்று.
 _________________________________________________

ஜோக்: 

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி: எருமைனாயக்கம் பட்டினு ஒரு ஊர் இருந்துச்சே அது தெரியமா உனக்கு?
அஜித்: தெரியாது.........
நீதிபதி: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சி போ............


ஜீவன்: அவள தூக்குரண்டா.... உனக்கு வலிக்கும்டா.... நீ அழுவடா.......
சூர்யா: அவள தூக்குனா உனக்குதான் வலிக்கும். ஏனா அவ ரொம்ப வேயட்டுடா.........

 _________________________________________________

நான் ரசித்த புகைப்படம்:


http://news.nationalgeographic.com/news/2006/10/photogalleries/child-labor/images/primary/raid-crying-boy-big.jpg
(இந்த சிறுவன் ஏதோ சொல்கிறான், முகத்தை பார்த்து தெரிந்துக்  கொள்ளுங்கள் )

 _________________________________________________


                                                                                       -கூகுள்
 _________________________________________________

நான் ரசித்தது:(மவுஸ் கர்சரை அந்த பெண் முகத்தில் வைத்து கொஞ்சம் ஆட்டிப்பாருங்கள்).


 _________________________________________________

 நகைச்சுவை புகைப்படம்:

http://www.indiaonrent.com/forwards/f/funny-animated-wallpapers/res/64kr_2.gif

 _________________________________________________

22 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said... | November 22, 2010 at 6:36 PM

நல்ல தகவல் தகுப்பு, ஆமா அந்தப் பையன் ஏதோ வேதனைல அழுவவது மாதிரி தெரியுதே?

கே.ஆர்.பி.செந்தில் said... | November 22, 2010 at 6:42 PM

அந்தபெண்ணின் அசைவு மிகவும் ரசிக்கவைத்தது ...

venkat said... | November 22, 2010 at 6:45 PM

//இன்னும் எத்தனை நாட்களுக்கு வெட்டிப்பேச்சை பேசி ஓட்டுபோடுவது, ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யலாமே? \\

கண்டிப்பாக

ராஜகோபால் said... | November 22, 2010 at 6:51 PM

கவுண்டமணி: உன் பேரு என்ன?
Dr.விஜய்: சுறா.
கவுண்டமணி: அந்தா உங்கப்பன் கடல்ல நண்டுவருத்து திம்பான் நீயும் கூட சேந்து தின்னு.

இரவு வானம் said... | November 22, 2010 at 7:08 PM

நல்லா இருக்குங்க, அந்த பொண்ணு சூப்பர்.

நா.மணிவண்ணன் said... | November 22, 2010 at 7:22 PM

அந்த பொண்ணு என்னை பார்த்து தலைஆட்டுதுங்க

karthikkumar said... | November 22, 2010 at 7:51 PM

அந்த சிறுவன் புகைப்படம் வேதனைதானே.

karthikkumar said... | November 22, 2010 at 7:53 PM

மத்த விஷயங்கள் நன்று

ஜீ... said... | November 22, 2010 at 10:25 PM

//பத்திரிக்கையாளர்கள் கூட எழுதமுடியாமல் பயப்படும் விஷயத்தை நாம் தைரியம்மாக எழுத ஒரு சந்தர்ப்பம்(வலைப்பதிவு) கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//
U r right! :)

ஜீ... said... | November 22, 2010 at 10:29 PM

Nice Girl!! :)))

ஹரிஸ் said... | November 22, 2010 at 10:41 PM

நல்லா இருக்கு..அந்த பஸ்ல சீட் மேட்டர் நானும் யோசிச்சி வருத்தப்பட்டுருக்கேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said... | November 22, 2010 at 11:34 PM

Nice Post

ஆமினா said... | November 23, 2010 at 12:03 AM

தேவையான பதிவு! நல்லா இருந்துச்சு.

பேருந்துகளில் பெண்களுக்கு தனி இருக்கையா? சந்தோஷம்.....

மாட்டுதாவணியில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். பஸ்ஸும் வந்தது. வண்டி குறிப்பிட்ட இடத்தில் நிற்கும் முன்பே ஆண்கள் கூட்டம் சன்னல் வழியாக துண்டு போட்டு இடம்பிடிக்கவும், ஓடிக்கொண்டிருக்கும் பேருந்திலேயே ஏறி இடம் பிடிப்பதுமாக இருந்து கடைசியில் என்னை போன்ற பலபேர் 2 மணி நேரம் கால்கடுக்க நின்றுகொண்டே பயணம். இதுல எங்கேயும் நம்மல எழுப்பிவிட்டுடுவாங்கலோன்னு தூங்குற மாதிரி வேற நடிச்சாங்க. கரேக்ட்டா அவங்க ஊர் வரும்போது மட்டும் முழிப்பு வருமாம். முன்ன மாறி பெண்களுக்கு உக்கார இஅடம் கொடுப்போம் என்பதெல்லாம் இல்லங்க :(

ம.தி.சுதா said... | November 23, 2010 at 12:43 AM

அருமையான பதிவு வாழ்த்துக்கள்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

philosophy prabhakaran said... | November 23, 2010 at 4:31 AM

// நான் ரசித்தது:(மவுஸ் கர்சரை அந்த பெண் முகத்தில் வைத்து கொஞ்சம் ஆட்டிப்பாருங்கள்). //
இங்கே எந்தப் புகைப்படமும் இல்லை நண்பரே... ஏதோ கோளாறு போல... பார்த்து சரி செய்யவும்...

// நகைச்சுவை புகைப்படம்: //
அது டாகுடர் விஜய் தானே...

விக்கி உலகம் said... | November 23, 2010 at 7:04 AM

உங்க பதிவு அருமை.

பத்திரிகையாளர்கள் எழுத முடியாத விஷயங்களை நாம் தைரியமாக எழுதுவதற்கு காரணம் நமக்கு எந்த நிர்பந்தங்களும் இல்லை.

அந்த பெண் சீனா அல்லது வியட்நாமிய பெண் என்று நினைக்கிறேன்.

நன்றி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said... | November 23, 2010 at 7:37 AM

நல்ல பயனுள்ள பதிவுங்க.......நானும் ஆமோதிக்கிறேன்.

கர்சரை சுத்தினா கூடவே அந்தப் பொண்ணும் சுத்தறாளே !

வழிப்போக்கன் - யோகேஷ் said... | November 23, 2010 at 8:24 AM

//
பி.கு: இங்கு வருபவர்களுக்கு எந்த பொருளை கண்டாலும் வாங்க ஆசை வரும் அதனால் தேவைக்கு அதிகமாக பணம் எடுத்து வர வேண்டாம்
//
அடி கொஞ்சம் பலமோ???

சுந்தரா said... | November 23, 2010 at 10:10 AM

பயனுள்ள தகவல் தொகுப்பு.

படங்களும் அருமை. அந்தப்பெண் படம் சூப்பர்ங்க.

நாகராஜசோழன் MA said... | November 23, 2010 at 10:55 AM

//தாழ்ந்த ஜாதி- ஆண்.
உயர்ந்த ஜாதி- பெண்.//

இனி வரும் காலங்களில் இதுவே நிஜம்.

பாரத்... பாரதி... said... | November 23, 2010 at 7:52 PM

//நான் ரசித்தது//
அருமை.

பாரத்... பாரதி... said... | November 23, 2010 at 7:52 PM

//இன்னும் எத்தனை நாட்களுக்கு வெட்டிப்பேச்சை பேசி ஓட்டுபோடுவது, ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யலாமே? \\
nice