கொக்கா மக்கா 5/11/2010

Friday, November 5, 2010


http://2.bp.blogspot.com/_orZtZMfkcDI/SR_hEh7K-HI/AAAAAAAABtM/I3Qzh0__dXI/s400/funny-kids-in-swimming-pool.jpg

                                                               நாகரீக வளர்ச்சி என்று பெண்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்ற ஆடைகளை பெண்கள் அணிவது  வேண்டுமானால் நாகரீக வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ப்ரா, ஜட்டி போன்றவற்றை  மட்டும் போட்டுக்கொண்டு  தொலைகாட்சி நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்ப்பதை எதில் எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.  இவள்களை பார்த்துதான் ஓடுகாலிகள் அதிகரிக்கின்றன. 

*****************************************************************************************************************
கொலை கொள்ளை கடத்தல் போன்றவை அதிகரிக்க சினிமாதான் இப்போது பெரும் உதவியாக இருக்கிறது. ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் கொலை செய்யும் விதம், அஞ்சாதே படத்தில் போலீசில் இருந்து தப்பிக்க சிம்கார்டை பேருந்தில் அனுப்புவது, அயன் படத்தில் கடத்துவது என இப்போது மொள்ளமாரிகளுக்கு டிப்ஸ் எடுத்து கொடுப்பதே சினிமாதான்.  கடத்தல்காரர்கள்  பெண்களை கடத்தினால் பணம் மட்டும்தான் பறிப்பார்கள்.  ஆனால் அஞ்சாதே படத்தில் பெண்களை கற்பழித்தால் தான் போலீசில் சொல்ல மாட்டார்கள் என்ற டிப்ஸ் கொடுத்தார்கள். அயன் படத்தில் போலிஸ் ரைட் என்றவுடன் மிளகாய் தூளை தூவுவது என புதிது புதிதாக டிப்ஸ் கொடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள். என்னைகேட்டால் சமுதாயம் சீரழிய முதல் காரணமே சினிமாதான் என்று சொல்வேன்.

உதாரணம்: சிந்து சமவெளி - நாயே நீ நடக்குறத தான் சொல்லுற நான் இல்லன்னு சொல்லல ஆனால் 100 ல ஒன்னு நடந்தா அத 100 க்கு 50 னு  உருவாக்கிடுற. நீ சிந்து சமவெளி எடுத்து இப்ப சந்துல சிந்து பாய வெச்சிட்ட.


             நல்ல வேலை  அந்தகாலத்தில் சினிமா இல்லை அதனால் ராவணன் சீதையை கடத்தியதோடு விட்டான். அதே ராவணன் இப்போதிருந்திருந்தால் சீதையை கடத்தி ரேப் செய்து உடலை  புதைத்து கைவிரலை ராமன் வீட்டு வாசலில் தொங்க விட்டிருப்பான்.
*****************************************************************************************************************
தமிழ் வலைப்பதிவுகள்  வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்றால் சந்தேகமே.  பல பிரபல் எழுத்தாளர்கள் 18+ என்ற ஒன்றை போடுகிறார்கள் எதற்க்காக? அப்படியென்றால் 18+ போடாத பதிவுகள் எல்லாம் குழந்தைகளுக்கா?. கூகுள், youtube போன்றவற்றில் பல 18+ இருக்கும்போது நான் போடும் ஒரு பதிவால் என்ன ஆக போதுனு நீங்க கேட்கலாம்.  அவன் பணத்துக்காக போடுறான் நமக்கு என்ன பணமா காசா,  வெறும் ஹிட்ஸ், follower இதற்க்காக  நீங்கள் போடும் ஆபாச பதிவுகளை எல்லாம்    ஞயாயப்படுத்தினால் முடிவு சரியானதாக இருக்காது.

நல்லவற்றையே சொல்லுவோம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம். 
                         
**************************************************************************************************************** நேற்று நான் ATM ல பணம் எடுக்கும்போது எனக்கு பின் நின்ற ஒருவர் தம்பி எனக்கு ATM ல பணம் எடுக்க தெரியாது கொஞ்சம் எடுத்து கொடுங்கனு சொன்னாரு . நான் கார்டை செலுத்தி நம்பரை போட சொல்லும்போது அவர் ATM கார்ட் வைக்கும் அட்டையில் எழுதி வைத்திருந்ததை என்னிடம் காட்டினார்.  வங்கியில்    இன்செண்டிவ்க்காக வேலைசெய்யும் பன்னாடைகள் எப்படியாவது இது free அது free என்று அக்கவுன்ட் ஒப்பன் செய்யத்தான் நினைக்கிதுங்களே தவிர ATM கார்ட் எப்படி பயன்படுத்தணும் பின் நம்பரை எப்படி பாதுகாக்கணும்னு சொல்லித்தறது இல்ல .
*****************************************************************************************************************
 போலிஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் பதவி ஏற்கும்போது நான் இதை செய்வேன் அதை செய்வேன்  என்று பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள்  கையாலாகாதவர்கள் என்பதற்கு சில சான்றுகள் இதோ

1)  குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிறைதண்டனை, லைசன்ஸ் கேன்சல் என்று பீத்திக்கொள்ளும் போலிஸ் சுப்பன்கள் டாஸ்மாக்கில் இருந்து வாகனத்தில் செல்பவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா?. டாஸ்மாக் பாரில்  இருந்து  வாகனத்தில் செல்பவன் எல்லாம் குடித்துவிட்டுத்தான் செல்கிறான், டாஸ்மாக் வாசலில் நின்று பிடிக்க வேண்டியது தானே?

2) தீபாவளிக்கு பேருந்து நிறுவனங்கள்  எல்லாம் தன் இஷ்டத்துக்கு  300  ரூபாய் டிக்கெட்டை 700 , 1000 ரூபாய்க்கு  விற்கும்போது போலீசார் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை  கடைசி நேரத்தில் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து நிறுவனங்களில் ரைட் . இதனால் என்ன பிரயோஜனம்.  டிக்கெட் எல்லாத்தையும் வித்து முடிச்சதுக்கு அப்புறம் மக்களை ஏமாற்ற இந்த நடவடிக்கை. போலீசாருக்கு கணினி பயன் படுத்த தெரியாதோ? பல ஆன்லைன்  பஸ் டிக்கெட் புக்கிங் தளங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் என்று டிக்கெட் விற்றது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ? இவர்களுக்கு போட்டி, குட்டி இது இரண்டுதான் முக்கியம் என்று நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

தீபாவளிக்கு முன்பு(3.11.2010):


அதே பேருந்து(6.11.2010):
****************************************************************************************************************
பேருந்து நடத்துனர்கள் சமீப காலமாக சீட்டுக்கடியில் சூடா ஏதோ இருப்பது போல் கடுகடுவென தான் வேலை செய்கின்றனர் பயணிகள் ஏறும்போதே அவர்களை பயமுறுத்துவது போல் வழில நிக்காத உள்ள போனு கொரங்கு மூஞ்ச வெச்சிக்கிட்டு பயமுறுத்துவது டிக்கெட் எடுத்தியான்னு அதட்டி கெடக்குறது. இது  ஏன் என்று விசாரித்த போதுதான் தெரிந்தாது இப்போது பேருந்து டிக்கெட்டுகளில் அதிகமானவை 2.50,3.50 ,4.00, ரூபாயாம் பயணிகள் பணம் கொடுத்து  டிக்கெட் வாங்கியப்பின் எங்கே மீதி சில்லறையை கேட்டுவிடுவார்களோ என்று தான் இப்படி நடந்து கொள்கின்றனர். அதிலும் ஒருசிலர் சில்லறை இல்லனா பேருந்தில் ஏறாதே என்பது போல் பயமுறுத்துவதால் பயணிகள் மீதி சில்லறை கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்ல என்று டிக்கெட் எடுக்கின்றனர். அதிகமாக இவர்கள் 50 பைசாதான் தருவதில்லை யாம்.  இவர்கள் இப்படி சில்லறையில் அடிக்கும் கொள்ளையே ஒரு மாதத்துக்கு  1500 முதல் 2500 வரை இருக்கும் என்பது என் கணிப்பு.
*****************************************************************************************************************
விறு விறு மாண்டி விருமாண்டி
*****************************************************************************************************************
ஜோக்:
அமைச்சர்:   தலைவரே உங்களுக்கு சின்னவீடு இருப்பதால் எதிர்கட்சி தலைவர் கிண்டல் செய்கிறார்.
தலைவர்: ஏன் பெண்களுக்கு புகுந்த வீடு பிறந்த வீடு என இரண்டு வீடு இருக்கும்போது எனக்கு சின்ன வீடு இருக்க கூடாதா?
*****************************************************************************************************************
 தமிழ் திரட்டிகள் ஒவ்வொன்றாக  வந்து கொண்டே இருக்கின்றன இப்போது புதிதாக ta.tamilers.com என்று ஒரு திரட்டி வந்துள்ளது இந்த திரட்டி பார்ப்பதற்கு இன்ட்லி திரட்டி போலவே உள்ளது ஆனால் ஓட்டு பட்டை இல்லை. இன்டலி திரட்டி போலவே இருப்பதால் ஏதாவது உல்குத்து வேலை இருக்குமோ?
*****************************************************************************************************************
களவாணி படம் நேற்று தான் பார்த்தேன் அதில் கதாநாயகன் பள்ளி சிறுவர்களை காதலிப்பது போல் எடுத்துள்ளனர். இது எங்க  போய் விட போகுதுன்னு  தெரியல. குடி, புகை, சினிமா இவற்றை தடை செய்தாலே இந்தியா வல்லராசாக மாறிவிடும்.
*****************************************************************************************************************
சன் நியூஸ்  தொலைக்காட்ச்சியில் இன்று தொடர்ந்து பாண்டிச்சேரியில் மது பாட்டில்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதாக காட்டுகிறார்கள். அவர்கள் மது விர்ப்பனையிலும் இறங்கி இருக்கானுங்களான்னு தெரியல.  
சன்: "  எவன் செத்தா என்ன எனக்கு காசு வந்தா போதும்".
*****************************************************************************************************************

4 comments:

Vathiyar Paiyan said... | November 6, 2010 at 10:15 AM

Me the first....
Nallu pathivu,.......

INDIA 2121 said... | November 6, 2010 at 10:23 AM

நல்ல உபயோகமான பதிவு!
வாழ்த்துக்கள்.

Anonymous said... | November 6, 2010 at 4:27 PM

ATM கார்டு கொடுக்கும்போதே 4 digit நம்பரை மனப்பாடம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் கொடுக்கிறோம் - அனால் நம்மாளுக மறக்காமல் card க்கு பின்னாடி எழுதிதொளைக்கிரங்க !!!

Karthi S said... | November 13, 2010 at 9:29 AM

machi blog ellam nalla thaan poduringa...
neenga ethavatrhu arasiyal katchi aarambikkalme