கொக்கா மக்கா 14/12/2010

Tuesday, December 14, 2010
"டாஸ்மாக்" எங்கள் எதிர்ப்பை மீறி எங்கள் ஊருக்குள் வந்த அழையா விருந்தாளி, நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் முன்பு இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய கிளையை எங்கள் ஊரில் தொடங்கி பணம் பண்ண ஆரம்பித்தனர்.  இறுதியில்  நாங்கள் வெறுத்துப்போய் உள்ளாட்சி தேர்தல் வந்தபோது எந்த ஒரு கட்சிக்கும் ஓட்டு போட முடியாது என்று ஒரு சுயேட்ச்சையை நிற்கவைத்து வெற்றிப்பெற செய்தோம், இன்று எங்கள் ஊரில் டாஸ்மாக் அகற்றப்பட்டுவிட்டது. நாம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்,  கோழைத்தனமாக  அரசுகளை குறைக்கூறியே காலம்  ஓட்டுவதை  நிறுத்தி எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தால் வெற்றி நமக்கே.
 ___________________________________________________
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக மழை வெள்ளம் என்றால் அரசு மக்களுக்கு செய்வது உணவு பொட்டலமும், இலவச  வேட்டி சேலைகளும் தான். ஆனால் சில ஆண்டுகாலமாக மக்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் காரணம் "டாஸ்மாக்".  பல ஏழை பெண்களின்  தாலியை அறுத்து அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசுகள்  இன்று மக்கள் நலப்பணி திட்டம்  அரங்கேற்றி வருகின்றன.  அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய திட்டமே மழைநிவாரனத்துக்காக கொடுக்கப்படும் பணம் எப்படியும் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்துவிடும் என்பதுதான். நமது அரசு அதிகாரிகளின் சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டியதே.
 ___________________________________________________
சில நாட்களுக்கு முன்பு  என்னிடம் என் நண்பர்  கூறினார் "இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே அவமானமாக உள்ளது என்று" இப்படித்தான் பலப்பேர் சொல்லிட்டு ஊர்ள்ள சுத்துறாங்க.  உங்களில் யாருக்காவது அப்படி சொல்லணும் என்று தோன்றினால் உங்களுக்கு சிறிய வேண்டுகோள்  அவமானத்தில் தூக்குபோட்டு சாவுங்க அதுதான் நாட்டுக்கு நல்லது.  நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு வருகிறேன் உங்களில் யாருக்காவது நாட்டுப்பற்று அக்கறை என்று ஏதாவது இருந்தால் வாங்க துணிந்து போராடுவோம் முடியலையா சேலைய கட்டிட்டு வீட்லயே இருங்க ஆட்டோ வருமோனு பயந்துகிட்டு.  ஊழல், கொலை, கொள்ளை,  நாட்ட யாருமே காப்பாத்த மாட்டாங்களா இப்படியே பேசிக்கிட்டு பதிவு போட்டுட்டு இருந்தா ஒன்னும் நடக்காது.  
 ___________________________________________________
முன்பெல்லாம் கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் நாம் MRP  கவனித்துதான் பணத்தை கடைக்காரரிடம் கொடுப்போம் MRP விலையை விட அதிக விலைக்கு விற்றது ஒருகாலம்,  ஆனால் இப்போது அப்படி இல்லை அவர்கள் முன்னேறி விட்டார்கள் பத்துரூபாய் பொருளுக்கு பதினைந்து ரூபாய் என்று போட்டுவிட்டு RS.13.50  சலுகைவிலை என்று  விற்க ஆரம்பித்து விட்டனர்(நிறுவனம் கடைக்காரர்களுக்காக கொடுக்கும் புதிய சேவை). ஆனால் அரசு அப்படி இல்லை ஒரு படி மேலே போய்    டாஸ்மாக் ஊழியர்களுக்கு  புது விதத்தில் ஊதியம் கொடுத்து வருகிறது.   ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் ஊதியத்தைவிட குடிகாரர்களிடம் மீதம் சில்லறை கொடுக்காமல் கொள்ளையடிப்பதே அதிக தொகையாம், இதற்கு ஆசைப்பட்டுதான் பலர் இன்று 2,500 ரூபாய்  சம்பளமாக   இருந்தாலும் பரவாயில்லை என்று டாஸ்மாக் வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர்.
 ___________________________________________________
ஆன்மிகத்தை பற்றிய எனது நீண்டநாள் சந்தேகத்தை ஒரு ஆண்மீகவாதியிடம் கேட்டபோது எனக்கு விளங்க வைக்க அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்:

எனது கையில் இருந்த பேனாவை காட்டி இது யாருடையது என்று கேட்டார்?
 பதில்: என்னுடையது

எனது கைவிரலில் இருந்த மோதிரத்தை காட்டி இது யாருடையது என்று கேட்டார்?
 பதில்: என்னுடையது

எனது கைவிரலை காட்டி இது யாருடையது என்று கேட்டார் ?
பதில்:: என்னுடையது

என் தலைமுடியை காட்டி இது யாருடையது என்று கேட்டார் ?
 பதில்: என்னுடையது

இப்படியே எனது கண்,காது,கால்   என ஒவ்வொன்றாக காட்டி கேட்க்கும்போதெல்லாம் நான் என்னுடையது என்று கூறினேன்.

கடைசியாக அவர் என்னிடம் கேட்ட கேள்வி "எல்லாமே உன்னுடையது என்றால்  நீ யார்?"

நான் பதில் தெரியாமல்  முழித்தபோது  அவர் சொன்னது அதை  அறிவது தான் "ஆன்மிகம்"

 
___________________________________________________
 சில நாட்களுக்கு முன் எங்கள் ஊர் சாலையில் நடந்த சம்பவம் :   ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் பயணம் செய்த போது திடிரென பின்புறம் அமர்ந்திருந்த பெண் கீழே தவறி விழுந்தார். வாகனம் வேகமாக சென்றதால் வண்டி பெண் விழுந்த  இடத்தில் இருந்து ஒரு பத்து மீட்டர் தூரம் சென்றுவிட்டது, அவளது சேலை வாகனத்தில் மாட்டி இருந்ததால் உடலில் சேலையே இல்லை முழவதையும் ரோட்டில் அந்த பெண்ணை உருட்டிவிட்டு  வாகனம் சேலையை  உருவிவிட்டது. நாங்கள் பதறிப்போய் உதவி செய்யலாம் என்று ஓடி அந்த சேலையை வாகனத்தில் இருந்து எடுக்க முயற்சித்த போது தான் தெரிந்தது அந்த பெண் கீழே விழ காரணமே அந்த இரண்டு சக்கர வாகனம்தான்  என்று, வாகனத்தின் பின்புற சக்கரத்தின் நடுவே அந்த பெண்ணின் சேலை மாட்டி இருந்தது. அவர்கள் பார்ப்பதற்கு  புதுமண தம்பதி போல் இருந்தனர் அந்த இடத்தில் பெண்ணின் காயத்தை விட அவமானம்தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது.  வாகனத்தில் பயணம் செய்யம்போது கவனம் தேவை.

 
___________________________________________________
பேருந்தில் இரண்டு  பள்ளிசிறுவர்கள் பேசிக்கொண்டது "டேய் இந்த வருஷமும் நியு யர் ஒன்னாந்தேதி  தாண்டா வருது".
  :)
 
___________________________________________________
 உங்கள் வலைத்தளத்தில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு இலவச SMS அனுப்ப:

கோடிங்:

DASHBOARD->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT

இலவசமாக உங்கள் தொலைப்பேசி என்னை கொடுத்து ஒருமுறை பதிவு செய்தால் போதும், உங்கள் தளத்தில் இருந்தே இலவசமாக SMS அனுப்பலாம். உங்கள் தளத்திற்கு வருபவர்களும் இந்த சேவையை பயன்படுத்தலாம். 
 ___________________________________________________
 கணினியை இசைக்கருவியாக  மாற்றலாம் வாங்க என்ற பதிவில் பலர் பிடித்திருந்தது என்று பின்னூட்டம் போட்டிருந்தனர். ஆனால் அவை இன்டர்நெட் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் உங்களுக்காக இதோ மியூசிக் மென்பொருள் பதிவிறக்கம்  செய்துக்கொள்ளுங்கள். அனைத்து இசைகளும் இதில் இசைக்கலாம்.

 ___________________________________________________
 ___________________________________________________


http://sirkapyaaz.files.wordpress.com/2010/01/meira-kumar-2009-6-3-6-20-27.jpg
இருபத்தி ரெண்டு நாளா ஒரு வேலையும் நடக்கல. இத்தன நாளா  சிரிச்சே காலத்த ஓட்டுன  இந்த பெண்ணுக்கு அல்லக்கை சம்பளம் வேற. என்ன  புடுங்குறதுக்கு  சபாநாயகர் பதவி இருக்குனு எனக்கு தெரியல.  இதுபோன்ற பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளமே வேஸ்ட்.
 ___________________________________________________
தங்கம் விலை ஏன் ஏறாது?
 ___________________________________________________
நகைச்சுவை:
 
 ___________________________________________________
அடுத்த இரண்டு பதிவில்  AMWAY, JESUS CALLS இரண்டு மாபெரும் கொள்ளை கும்பல்களை பற்றி...............

51 comments:

பார்வையாளன் said... | December 14, 2010 at 5:37 PM

வடை எனக்கு

பார்வையாளன் said... | December 14, 2010 at 5:38 PM

சுடுசோறும் எனக்கே

ஜீ... said... | December 14, 2010 at 5:42 PM

//இன்று எங்கள் ஊரில் டாஸ்மாக் அகற்றப்பட்டுவிட்டது. நாம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், கோழைத்தனமாக அரசுகளை குறைக்கூறியே காலம் ஓட்டுவதை நிறுத்தி எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தால் வெற்றி நமக்கே//
Super!! :-)

சென்னை பித்தன் said... | December 14, 2010 at 6:38 PM

மிக முக்கியமான,கருத்தார்ந்த செய்திகளையெல்லாம் எழுதி முடிக்கும்போது,நகைச்சுவைப் படத்துடன் முடித்து,மனதை இலேசாகி விட்டீர்கள்! சிந்திக்க வைத்த பதிவு

Samudra said... | December 14, 2010 at 6:46 PM

nice one!:)

Dhiran said... | December 14, 2010 at 7:12 PM
This comment has been removed by the author.
Dhiran said... | December 14, 2010 at 7:13 PM
This comment has been removed by the author.
தமிழ் உதயம் said... | December 14, 2010 at 7:14 PM

நிறைய விஷயங்கள். நிறைவாக.

Dhiran said... | December 14, 2010 at 7:16 PM

நகைச்சுவை புகைப்படம்:

its India & Pak solders wagah border .. flag hosting ceremony
if I am not wrong u r mocking our Indian solder ………

THOPPITHOPPI said... | December 14, 2010 at 7:34 PM

நகைச்சுவை புகைப்படம்:

its India & Pak solders wagah border .. flag hosting ceremony
if I am not wrong u r mocking our Indian solder ………

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
நான் அந்த படம் நகைச்சுவையா இருக்கேனுதான் பதிவு செய்தேன் மத்தபடி யாரையும் கேலி செய்யல

INDIA 2121 said... | December 14, 2010 at 7:34 PM

superppuuuuuuuuuu

karthikkumar said... | December 14, 2010 at 7:44 PM

எல்லா விசயத்தையும் நல்ல கலவையா எழுதி பின்றீங்களே.

FARHAN said... | December 14, 2010 at 7:59 PM

"எல்லாமே உன்னுடையது என்றால் நீ யார்?"

சூபர்

பேருந்தில் இரண்டு பள்ளிசிறுவர்கள் பேசிக்கொண்டது "டேய் இந்த வருஷமும் நியு யர் ஒன்னாந்தேதி தாண்டா வருது".
:)

ஹி ஹி ஹி ஹி

பலே பாண்டியா said... | December 14, 2010 at 8:16 PM

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு,புளிப்பு,காரம் என அறுசுவையும் கலந்த பரோட்டா
செம சூப்பர்மா!!!!!!!!..
சிலதுதான் செரிக்கவில்லை. என்ன செய்வது நம் நிலைமை அப்படி. ஆனால், மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வரவேண்டும். வரும்!!!!!

நா.மணிவண்ணன் said... | December 14, 2010 at 8:28 PM

அருமையான கருத்துக்கள் ஆனால் கேட்பதற்கும் அதை முழுமையாக செயல் படுத்துவதற்கும் தான் ஆள் இல்லை .இந்த நிலை மாற நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும்

Chitra said... | December 14, 2010 at 8:51 PM

அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய திட்டமே மழைநிவாரனத்துக்காக கொடுக்கப்படும் பணம் எப்படியும் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்துவிடும் என்பதுதான்.


.... வேதனையான உண்மைங்க....

ரிஷபன்Meena said... | December 14, 2010 at 9:06 PM

டாஸ் மார்க் ஸ்பெசல் போலருக்கு. நாம சிறிது முயற்சி பண்ணினால் ஒரளவுக்காவது தீயவைகளை கட்டுக்குள் வைக்கலாம் என.சுயேட்சை வேட்பாளார் பெற்ற வெற்றி மூலம் உனர்த்தியிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் படம் சொல்வதென்ன, ”சூரியனை”ப் பார்த்து நாய் குழைத்து என்ன ஆகப் போவதுன்னா ?

கே.ஆர்.பி.செந்தில் said... | December 14, 2010 at 9:20 PM

மேலே ஸ்பெக்ட்ரம் கீழே சிரிப்பு செம நக்கல்தான் ...

NARASIMHAN said... | December 14, 2010 at 9:36 PM

Hello Friend
Please remove the last picture. Even though he is from Pakistan, he is a soldier.
Sankar

NARASIMHAN said... | December 14, 2010 at 9:40 PM

Apart from last picture, other things are excellent.

Vasagan said... | December 14, 2010 at 10:16 PM

Thank you friend
Sankar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... | December 14, 2010 at 10:43 PM

நல்ல கோவம் நண்பா. SMS கோடிங் எங்க எந்த இடத்துல சேர்க்கணும் தோழா?

பட்டாபட்டி.... said... | December 15, 2010 at 6:28 AM

கலக்கல்

வைகை said... | December 15, 2010 at 6:59 AM

உண்மைதான் சகோதரா! முயன்றால் எல்லாம் சாத்தியமே!! இதையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்
http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_13.html

வெறும்பய said... | December 15, 2010 at 8:19 AM

பல விசயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்...

அந்த நடமாடும் நகைக்கடை கேரளாவில் நடந்த கல்யாணம்..

எஸ் எம் எஸ் சேவைக்கு நன்றி..

இரவு வானம் said... | December 15, 2010 at 1:28 PM

pathivu super sir

தமிழ்மலர் said... | December 15, 2010 at 10:32 PM

உங்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதற்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயம் இல்லாத நாட்டுப்பற்று இருந்து என்ன பயன். ஒரு நாடு என்பது என்ன? ஒரு எல்லைக்குள் இருப்பது தான் நாடா?. இங்கிருக்கும் பஞ்சாபியர்கள் நமது சகோதரர்கள். அதே 10 கி.மீ அப்பால் பாக்கிசுதானில் இருக்கும் பஞ்சாபியர்கள் நமது எதிரிகள் என்றால் இந்தியன் என்பதில் கேவலப்படாமல் என்ன செய்வது?

இந்தியா என்பது என்ன? ஒரு 2 ஆயிரம் அரசியல்வாதிகள் தான் இந்தியா என்றால் எனக்கு எதற்கு இந்த நாட்டுபற்று. ஈழக்கொடூரத்தை விசாரிக்கவே வேண்டாம் என்று ஐ.நா அவையில் சொன்ன மனிதநேயம் இல்லாத இந்த ரத்தவெறி பிடித்த இந்தியாவின் நாட்டுபற்றை என்னவென்று சொல்வது?

உங்கள் வலைபூவில் இருபுறமும் கம்பீரமாக இருக்கும் இதே சுபாசுசந்திரபோசுவை இன்னமும் அரசியல்கைதியாக வைத்திருக்கும் இந்திய நாட்டுபற்றை தூக்கிகுப்பையில் போடுங்கள். போலி இந்தியாவுக்காக உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். அதற்காக சேலை அணியும் பெண்களை கேவலப்படுத்தாதீர்கள்.

சேலையின் வீரமும் பெருமையும் உங்களுக்கு தெரியுமா? இன்னமும் இந்த இந்தியாவில் ஆணாதிக்கபோக்கு இருக்கிறது என்பதற்கு நீங்களே உதாரணம்.

நீங்கள் சொல்வது போல் இதையெல்லாம் திருத்தவாருங்கள் என்பது சரி. உத்தேசமாக ஒரு ஒரு 100 ஆண்டுகளில் இந்தியாவை திருத்திவிடுவீர்களா?

இந்திய அரசியல் சாசனம் யார்கையில் உள்ளது. சோனியா குடும்பம், அத்வானியின் கீழ் ஒரு 500, அப்புறம் இடதுசாரிகள் சார்பில் ஒரு 300, இதரபிற கட்சி தலைமையின் கீழ் ஒரு 1000. இந்த அரசியல்வாதிகள் தான் இந்தியா.

இவர்களை நல்லவர்களாக மாற்றுவது என்பது நடக்காத செயல். அதே நேரத்தில் இவர்களை மாற்றி புதிய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதும் நடக்காத செயல். அப்படியே தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்பது அதைவிட அறிது.

பணம், அதிகாரம், மனிததன்மையற்ற குரூர எண்ணங்கள் இத்தகு குணங்களை பெற்றுவிட்ட இந்திய அரசியல்வாதிகளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

நண்பா நாட்டுபற்றை விட்டுவிட்டு, மனிதநேயத்தை வளர்க்கும் பணியில் ஈடுபடுங்கள் நாங்களும் தோள்கொடுக்கிறோம்.

பின் குறிப்பு : தயவு செய்து கோழைதனத்துக்கு சேலையை உதாரணம் காட்டும் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள்.

அதெல்லாம் போகட்டும் இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?

தமிழ்மலர் said... | December 15, 2010 at 10:42 PM

முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

எதற்காக தீக்குளித்தார். எப்படி சொன்னாலும் தன் உணர்வை மதிக்கமாட்டார்கள். என் உயிரை விட்டாலாவது மதிப்பார்களா என்று தான் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார் முத்துக்குமார்.

இந்தியன் என்பதில் கேவலப்படுபவர்கள் தூக்குபோட்டுக்கொள்ள தயார். அப்போதாவது இந்தியா திருந்துமா? அதனால் இந்திய நாட்டுக்கு நல்லது நடக்குமா?

THOPPITHOPPI said... | December 16, 2010 at 12:08 AM

@தமிழ்மலர்
சேலையை கட்டிக்கொண்டு வீட்டில் இருங்கள் என்றுதான் சொன்னேனே தவிர சேலைகட்டி பெண்கள் போல் வீட்டில் இருங்கள் என்று சொல்லவில்லை. ஒரு ஆணை பார்த்து சேலையை கட்டி வீட்டில் இரு என்று சொன்னால் அது அவனை அவமானப்படுத்துவதர்க்காகவே தவிர சேலையை கட்டும் பெண்களை இழிவு படுத்த அல்ல.

//இந்தியன் என்பதில் கேவலப்படுபவர்கள் தூக்குபோட்டுக்கொள்ள தயார். அப்போதாவது இந்தியா திருந்துமா? அதனால் இந்திய நாட்டுக்கு நல்லது நடக்குமா? //

இந்தியா திருந்துமாவா?
எவனோ ஒரு மொள்ளமாரி செய்யும் தவறுக்காக எதற்கு நம் நாட்டின் பெயரை கேவலப்படுத்த வேண்டும். இந்தியனாக பிறந்தேன் என்று அவமானப்பட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சகோதரன் தவறு செய்தான் என்பதற்காக தாயை கேவலப்படுத்தினால் சரியா?

முத்துக்குமரனையும் நேதாஜியையும் உதாரணம் சொல்லி இருக்கீங்க. நான் ஒரு உதாரணம் சொல்லட்டுமா ? நேதாஜி முத்துக்குமரன் போல் "எப்படி சொன்னாலும் தன் உணர்வை மதிக்கமாட்டார்கள்" என்று தீக்குளித்து இருந்தால்?

"எப்படி சொன்னாலும் தன் உணர்வை மதிக்கமாட்டார்கள்" என்று காந்தி தீக்குளித்து இருந்தால்?

முதலில் நாட்டுப்பற்று இருக்கவேண்டும் அதற்குப்பின்புதான் எல்லாம் . நேதாஜியிடம் இருந்தது நாட்டுப்பற்று, காந்தியிடம் இருந்தது நாட்டுப்பற்று, வ.உ. சிதம்பரனாரிடம் இருந்தது நாட்டுப்பற்று நீங்கள் சொல்வதுபோல் தாய் நாட்டை கேவலப்படித்தி இருந்தால் " 200 ஆண்டுகளாக வெள்ளையினிடம் அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியா ஒழிக" என்றுதான் சொல்லி மாண்டு இருப்பார்கள்.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் விட்டவன் தனது உயிர் பிரியும் நேரத்தில் கூட "பாரத மாதாகி ஜே " என்றுதான் சொல்லி இறந்தானே தவிர முத்துக்குமரனை போல் நாட்டை ஆள்பவர்களை குறை சொல்லி இறக்கவில்லை.

நாட்டின் சுதந்திரத்துக்காக நேதாஜி ஹிட்லரை சந்தித்தப்பின் சொன்ன வார்த்தை " எனது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக நான் யார் காலிலும் விழ தயார்" என்று. இந்த இடத்தில் நான் நேத்தாஜியின் நாட்டுப்பற்றைத்தான் பார்த்தேனே தவிர காலில் விழுவேன் என்று சொன்னாரே இவருடைய கொள்கையை நாம் பின்பற்ற வேண்டாம் என்று நினைக்கவில்லை.

நீங்கள் சொல்லும் சோனியாவும், அத்வானியும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை. இந்தியாவை திருத்துகிறேன் என்று சொல்வதை நிறுத்திவிட்டு இந்தியாவில் கொள்ளையடிக்கும் திருடனை திருத்துகிறேன் என்று சொல்லுங்கள்.


///அதெல்லாம் போகட்டும் இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்ள என்ன இருக்கிறது? ///

ஆயிரம் இருக்கு.

இப்படி அப்துல் கலாம் நினைத்திருந்தால் தனது அறிவை அமெரிக்காவிடம் விற்றிருப்பார்.

//மனிதநேயத்தை வளர்க்கும் பணியில் ஈடுபடுங்கள் நாங்களும் தோள்கொடுக்கிறோம்.//

மனித நேயம் இந்தியாவில் இல்லை என்று யார் சொன்னார்கள் உதாரணம் சொல்ல முடியுமா?

நீங்கள் எதிரி என்று சொல்லும் பாக்கிஸ்தானுக்கு மழை வெள்ளத்தால் பாதிப்பு என்றவுடன் முதலில் உதவியது இந்தியாதான்.

தமிழ்மலர் said... | December 16, 2010 at 1:25 AM

திரு. தொப்பிதொப்பி

அப்துல்கலாமிடம் நாட்டுபற்று இருந்தது மனிதநேயம் இருந்ததா?

நேதாசி தீக்குளிக்கவில்லை. அதனிலும் மேலகாக கடைசிவரை தலைமறைவாகவே இருந்த கொடுமை உங்களுக்கு தெரியுமா?.

இந்தியா மனிதநேயம் மிக்க நாடா?
அப்படியானால் ஒரு ஒரு ஒரு உதாரணம் சொல்லுங்கள் ?

எனக்கு பாக்கிசுதான் எதிரி என யார் சொன்னது? இந்தியாவை சீர்குலைக்க பாக்கிசுதான் திட்டமிடுது, பாக்கிசுதான சீர்குலைக்க இந்தியா திட்டமிடுதுனு இந்தியன்(அரசு) தான் சொல்லிக்கராங்க, அடிச்சுக்கரானுக.

எனக்கு பாக்கிசுதானும் எதிரிகிடையாது, பாக்கிசுதானுக்கு நானும் எதிரி கிடையாது.

திரு தொப்பிதொப்பி நான் வலியுறுத்த விரும்புவது இதுதான்.

மனிதநேயம் இல்லாத நாட்டுபற்று மனதகுலத்திற்கே நாசக்கேடு. அதற்கு அப்துல்கலாமே ஒரு உதாரணம்.

இந்தியன் என்பதில் கேவலப்படுகிறேன் என்பதை சொல்பவர்களுக்கு பின்னால் இருக்கும் வலி உங்களுக்கு தெரியாது. மனதநேயம் இல்லாத ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கிறேன் என்பதில் இப்பவும் கேவலப்படுகிறேன்.

ஒரு போலி சனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதை திருத்த வேண்டும் என்றால் முதலில் நாட்டுப்பற்று அடிப்படையிலான சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, மனிநேயத்தின் அடிப்படையிலான சட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு தற்போதையஇந்தியா என்ற நாட்டிடம் இருந்து மீள மீண்டும் ஒரு சுதந்தி போராட்டமே நடத்தவேண்டியுள்ளது.

இன்றும் அப்பாவி இந்தியர்களுக்கு அம்பேத்கார் எழுதிய சட்டபுத்தகம் மட்டும் தான் தெரியும். அதற்கு பின்னர் எத்தனைஎத்தனை சட்டங்கள்வந்தது. கொள்கைகள் வந்தது. இன்று கூட சீனா, இலங்கையுடன் ஒரு மனிதநேயமற்ற ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை எல்லாம் ஒரு முறை படித்துவிட்டு மீண்டும் யோசித்து சொல்லுங்கள் இந்தியன் என்பதில் பெருமைபடுகிறீர்களா என்று.

NADESAN said... | December 16, 2010 at 12:25 PM

நான் பதில் தெரியாமல் முழித்தபோது அவர் சொன்னது அதை அறிவது தான் "ஆன்மிகம்"

அந்த ஆன்மீகவாதி யார்

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

THOPPITHOPPI said... | December 16, 2010 at 1:09 PM

@ தமிழ்மலர்
விரைவில் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் இங்கு பதில் சொன்னால் உங்களுக்கு மட்டும்தான் புரியும். உங்களைப்போன்ற பலருக்கு எனது பதிவு சென்றடைய வேண்டும்(பதிவாக).

@NADESAN
அவரது பெயர் வெண்மணி( உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்று எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தியானம் செய்ய அமைதியான இடம் வேண்டும் என்று தனது இருப்பிடத்தில் இருந்து வேறெங்கோ சென்றுவிட்டார் )

சே.குமார் said... | December 16, 2010 at 1:29 PM

//இருபத்தி ரெண்டு நாளா ஒரு வேலையும் நடக்கல. இத்தன நாளா சிரிச்சே காலத்த ஓட்டுன இந்த பெண்ணுக்கு அல்லக்கை சம்பளம் வேற. என்ன புடுங்குறதுக்கு சபாநாயகர் பதவி இருக்குனு எனக்கு தெரியல. இதுபோன்ற பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளமே வேஸ்ட்.//

unmaithaan... enna seivathu naattai uzhal aalkirathu.

Gold photo super.... sirikkavum sinthikkavum vaiththathu.

சே.குமார் said... | December 16, 2010 at 1:29 PM

//இருபத்தி ரெண்டு நாளா ஒரு வேலையும் நடக்கல. இத்தன நாளா சிரிச்சே காலத்த ஓட்டுன இந்த பெண்ணுக்கு அல்லக்கை சம்பளம் வேற. என்ன புடுங்குறதுக்கு சபாநாயகர் பதவி இருக்குனு எனக்கு தெரியல. இதுபோன்ற பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளமே வேஸ்ட்.//

unmaithaan... enna seivathu naattai uzhal aalkirathu.

Gold photo super.... sirikkavum sinthikkavum vaiththathu.

kavi said... | December 16, 2010 at 2:51 PM

தமிழ் மலர் உடனான விவாதம் அருமை.
நிறைய விஷயங்கள் பகிர்வு அருமை.

\\குறைக்கூறியே காலம் ஓட்டுவதை நிறுத்தி எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தால் வெற்றி நமக்கே\\

அற்புதம் நண்பரே.
டாஸ்மாக்,
ஊழல், கொலை, கொள்ளை, நாட்ட யாருமே காப்பாத்த மாட்டாங்களா இப்படியே பேசிக்கிட்டு பதிவு போட்டுட்டு இருந்தா ஒன்னும் நடக்காது.

உண்மை உண்மை....

ஆன்மீகம் உணர்ச்சியை தூண்டியது.

என்ன புடுங்குறதுக்கு சபாநாயகர் பதவி இருக்குனு எனக்கு தெரியல.

உங்க வரிகளில் உண்மையான அக்கறை, வலி, வேதனை, இருக்கிறது.

kavi said... | December 16, 2010 at 2:52 PM

சமுதாய அக்கறை இருக்கிறது உங்களிடம். நன்றிகள் பல பல.

விக்கி உலகம் said... | December 16, 2010 at 2:52 PM

பகிர்வுக்கு நன்றி

Speed Master said... | December 16, 2010 at 3:38 PM

Today only i seen your blog spot. and i readed all your post by today wish u all the very bestKeep writing.

ம.தி.சுதா said... | December 16, 2010 at 3:40 PM

அடங் கொக்கமக்கா... அருமைங்கோ.. அதிலும் எஸ்எம்எஸ் விசயம் அருமை......

மதுரை பாண்டி said... | December 16, 2010 at 5:19 PM

நல்ல பகிர்வு!!!

ஆமினா said... | December 16, 2010 at 6:00 PM

//டேய் இந்த வருஷமும் நியு யர் ஒன்னாந்தேதி தாண்டா வருது". :)//:)))))))நல்ல பசங்க. நல்லா யோசிக்கிறாங்க!!!!

சிவகுமாரன் said... | December 16, 2010 at 6:23 PM

ஆன்மிகம் பற்றிய விளக்கம் அருமை. இருபது வருடங்களுக்கு முன்பே எண்கள் தெரிவில் ஒயின் ஷாப் வந்த பொது நாங்கள் சிறுவர்கள் பாராட்டினோம். ஒன்றும்
நடக்கவில்லை. அன்று என்னுடன் போராடிய என் தோழர்கள் இன்று அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள்

சிவகுமாரன் said... | December 16, 2010 at 6:34 PM

மன்னிக்கவும் போராடினோம் என்பது பாராட்டினோம் என்று பதிவாகி விட்டது. எவ்வளவு பெரிய
பிழை.

பாரத்... பாரதி... said... | December 18, 2010 at 2:46 PM

எல்லா சுவையும் இருக்கக்கூடிய கதம்ப பதிவாக அமைந்திருந்தது. சபாநாயகர் பற்றிய வார்த்தைகள் காரம் ஆனால் உண்மை.

கவனமாயிருங்கள் இதுவும் சாதியின் பெயரால் ஆரிய, திராவிட போராக மாறிவிடப்போகிறது.

பாரத்... பாரதி... said... | December 18, 2010 at 2:48 PM

தங்களுடைய பதிவுகளில் எல்லாம் யதார்த்தமும், சமூகம் மீதான உங்களுடைய தெளிவான பார்வையையும் காட்டுகிறது. நன்றிகள்.

பாரத்... பாரதி... said... | December 18, 2010 at 2:51 PM

படங்கள் அருமை.

வலைத்தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்புவதை எங்கள் வலைப்பூவிலும் பயன்படுத்தியுள்ளோம். அதற்கும் நன்றிகள்.

ரிஷபன்Meena said... | December 18, 2010 at 3:24 PM

அன்புள்ள தொப்பி,இங்கே மண்டை மண்டையா எழுதியிருக்கும் பெரியவருக்கு விளக்கம் எல்லாம் சொல்லப் போகாதீர்கள். இந்த வகைப் பின்னூட்டங்களை சின்ன சிரிப்புடன் கடந்து செல்லுங்கள்.

சிவகுமாரன் said... | December 19, 2010 at 2:41 AM

சமூகப் பொறுப்புடன் எழுதியிருக்கும் உங்களுக்கு வரும் விமர்சனங்கள் உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி என நினைத்துக் கொள்ளுங்கள்

தேவன் மாயம் said... | December 19, 2010 at 7:40 AM

கலக்குங்க!

பாரத்... பாரதி... said... | December 19, 2010 at 3:11 PM

அந்த சீன குழந்தையின் காட்சி, ஒலி படம் நல்லாயிருக்குங்க.. அது சரி யாருக்கு உவ்வே.. சொல்லுகிறது?

பலே பாண்டியா said... | December 19, 2010 at 10:44 PM

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன்(கமெண்ட் பாக்ஸ் இல் உள்ளது).நேரம் இருந்தால் எழுதவும்.
http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html