கொக்கா மக்கா 30/12/2010

Thursday, December 30, 2010


நேற்றைய பதிவில் சீமானிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு எதிர்  பின்னூட்டம் போட்ட நண்பர்களுக்கு நன்றிகள். அந்த பதிவில் நான் எந்த ஒரு இடத்திலும் ஈழத்தமிழர்களை கொள்ள இந்தியா ஆயுதம் கொடுத்து உதவிவில்லை என்றோ, இந்தியா போரில் கலந்துகொள்ளவில்லை என்றோ  குறிப்பிடவில்லை ஆனால் பலர் எனக்கு எதிர் பின்னூட்டம், பதிவு போடுகிறேன் என்று நான் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பதிவு செய்துவிட்டேன்  என்பது போல் பதிவு செய்து இருந்தனர். எதற்க்காக இப்படி? ஒருவன் உங்களுக்கு உண்மையை சொன்னால் மனம் ஏற்க்க மறுப்பது ஏன்?.  ஆனால் அதில் ஒரு ஆறுதலான விஷயம் யாருமே சீமானுக்கு ஆதரவாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதுதான், தமிழன் விரைவில் விழித்துக்கொள்வான்  சீமான். நேற்றைய பதிவில் தேசிய உணர்வோடு பின்னூட்டம் செய்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
 ----------------------------------------------------------------------------
 ஈழத்தமிழர் மீது நலன் காட்டுவதாக கூறி பலர் நம்மை ஏமாற்றி விட்டனர். நாம் அப்படி நம்பி வாக்களித்தவர்களில் ஒருவர்தான் திருமாவளவனும் இன்று அவர் எந்த கட்ச்சியுடன் என்ன செய்கிறார்?  யாராவது ஒரு தமிழனாவது அவரை துணிந்து கேள்வி கேட்க்க முடியுமா?  MP ஆவதற்கு முன் ஈழத்தமிழர்களுக்காக  அவர்  பேசிய பேச்சுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது.  நாம் ஒருமுறை தான் ஏமார்ந்துவிட்டோம் இனியும் ஏமாற வேண்டுமா? அப்படி ஏமார்ந்து விடக்கூடாது என்றுதான் நான் சீமான் பற்றிய தகவல்களை திரட்டி கேள்வி கேட்பது போல் உங்களுக்கு உண்மையை பதிவு செய்திருந்தேன், அந்த பதிவில் இருந்த இரண்டு வீடியோக்களையும் தயவு செய்து பாருங்கள்.
 ----------------------------------------------------------------------------
இந்தியா தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என பக்கம் பக்கமாக பின்னூட்டம் செய்திருந்த நண்பர்களே கடந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்? ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்தது இந்தியாவா? தமிழனா?. நாப்பதுக்கு நாப்பது என தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறசெய்தவர்கள் தானே நீங்கள்.  சரி இந்தியா ஈழத்தமிழர்களுக்கு  துரோகம் செய்தது என்றே வைத்துக்கொள்வோம் அடுத்த தேர்தலிலாவது காங்கிரஸ் கூட்டணிக்கு நாப்பதுக்கு நாப்பது என தோல்வியை கொடுத்து இருக்கலாமே? இப்போது உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை  இந்தியாவை குறை கூற?. எப்போது "முள் என் காலில் குத்திவிட்டது"   என்று சொல்லாமல்   "முள் மீது கால் வைத்து விட்டேன்" என்று சொல்லப்போரிங்க?   ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்த முதல் துரோகி தமிழ்நாட்டுத்  தமிழன்தான். உங்களுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்தியாவை குறை கூற.
 ----------------------------------------------------------------------------
அன்று ஈழத்தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கம் அதற்க்கான அங்கிகாரம் கிடைத்தபோது ஈழ நாடு என்ற  தேவை இல்லாத ஒன்றை உருவாக்கி இன்று எலவு நாடாக  மாற்றிவிட்டது.   ஈழத்தில் அமைதியை விட ஈழத்தில் போர் புரிவதே அவர்களது நோக்கமாக இருந்தது. இன்று அவர்களால் எதுவும் முடியவில்லை என்றவுடம் அவர்களது பார்வை தமிழ்நாட்டின் மேல்  உள்ளது, அவர்களுடைய அடுத்தக்குறி  தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பி விட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இன்று தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக மாற்றி வருகின்றனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,  விடுதலை புலிகளும் ஒரு தமிழ் இயக்கம் தானே ஏன் ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொள்ள வேண்டும்?. ராஜீவ் காந்திக்கு உளவுத்துறை எச்சரித்தும் தமிழர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் தானே தமிழகம் வந்தார்? நம்பிக்கை துரோகம் செய்தது யார்? அன்று தமிழனுக்கு ஏற்ப்பட்ட பீடை இன்றும் இந்தியாவிற்கு எதிராகவே உள்ளது. அவர்களுடைய நோக்கமே தமிழக தமிழர்களை ஈழத்தமிழர்கள் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான். ராஜீவ் காந்தியை கொள்ள அவர்களுக்கு வேறு மாநிலமே கிடைக்கவில்லையா? தமிழனுக்கு அவப்பெயர் வர வேண்டும், இந்தியர்கள் தமிழனை துரோகியாக நினைக்கவேண்டும்  என்று அவர்கள் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அரங்கேற்றியதுதான் ராஜீவ் காந்தி கொலை.  ஏன் அவர்கள் பருப்பை டெல்லியில் வேக வைக்க வேண்டியது தானே?
 ----------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் இன்று இந்த நிலைக்கு வர  இந்தியா மட்டும்தான் காரணமா? அவர்கள் இந்த நிலைக்கு வர இந்திய, சீனா, சிங்களன் 25 % காரணம் என்றால் மீதம் உள்ள 75 % விடுதலைப்புலிகள்தான். சிறுவர்களை ராணுவத்தில் சேர்த்தது யார் குற்றம்?, ஈழத்தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார் குற்றம்?.   இலங்கை என்பது ஒரு குறுகிய நாடு, அந்த நாட்டிற்குள் தனி நாடு கேட்டால் ஆள்பவன் சுலபத்தில் கொடுத்து விடுவானா?.  பொருளாதார ரீதியில் ராணுவத்தை பலப்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழிக்க தேவைப்படும், இன்னும் பல இழப்புகள் ஒருநாட்டிர்க்குள் இன்னொரு நாடு உருவாகினால் உண்டாகும் அதையெல்லாம் யோசிக்காமல் தனி நாடு கேட்டு இன்று தனிக்குடித்தனம் கூட நடத்த முடியாத நிலைக்கு கொண்டுவந்ததற்கு யார் காரணம்? ஒற்றுமை என்றால் என்ன என்றே தெரியாத விடுதலைப்புலிகளின் தலைவனுக்கு அவர்கள் இனத்தின் மக்கள் நலனில்  கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் போனதற்கு யாரை துரோகி என்று  சொல்குரீர்கள்? 
 ----------------------------------------------------------------------------
 இன்று தமிழக மீனவர்களை சிங்கள மீனவன் தாக்குவது உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதை ஒரு இந்தியனாக இந்திய  அரசிடம் கேளுங்கள். அந்த பிரட்ச்ச்சனையில் சீனா, பாகிஸ்தான், சிங்களன் என பல முதலைகளின் தலையீடு உள்ளது இதையெல்லாம் புரிந்துக்கொண்டு ஒரு இந்தியனாக செயல்ப்படுங்கள். அதை விட்டுவிட்டு  ஏன் ஏதோ அண்டை நாட்டிடம் கேட்பது போல் இந்தியாவை எதிர்க்குரீர்கள். சோனியாவுக்கு தமிழர்கள் மேல்  எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும் அவருடைய  கணவரை இங்கே வைத்துத்தானே கொன்றார்கள்,  அவருடைய கையில் ஆட்ச்சியை கொடுத்தால் என்ன நடக்கும்?. தவறு நம் மீதுதான்.  நாம் ஒற்றுமையாக இதையெல்லாம் எதிர்கொண்டால் எழிதில் மீண்டுவிடுவோம்.  அதை விட்டுவிட்டு நமது தேசத்தை கூறுபோட நினைப்பவர்களுக்கு தயவு செய்து துணை போக வேண்டாம்
 ----------------------------------------------------------------------------

தமிழக  மீனவர்களை சிங்களன் தாக்கினான் என்றவுடன் ஏன் ஆந்திர, கர்நாடக, கேரளா மீனவர்கள் தமிழக மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை? காரணம் நம்மிடம் இருக்கும் பிளவுதான், இந்தியன் என்ற ஒற்றுமை இல்லாததுதான். ஊருக்கொரு கட்சி, ஊருக்கொரு இனத்தலைவன் இவர்கள் அரசியலில் பிரபலம் ஆகவேண்டும் என்றால் நம்மை பக்கத்து வீட்டுக்காரன் அடிச்சிட்டான், பக்கத்து ஊருக்காரன் அடிச்சிட்டான்னு ஏதாவது ஒரு பிரச்சனைய உண்டாக்கி விட்டுட்டு அவர்கள் நம் பிரட்ச்ச்சனைக்கு குரல் கொடுப்பதுபோல் பிரபலம்  ஆகிவிடுகின்றனர். இப்படியே அவர்களை வளரவிட்டு இன்று நாம் ஒற்றுமையாக இருக்கவே முடியாது என்பதுபோல் உருவாக்கிவிட்டனர்.
 ----------------------------------------------------------------------------
எதற்க்கெடுத்தாலும் சினிமாக்காரனை எதற்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்? அவனுங்க  நமக்கு என்ன செய்யப்போறாங்க? . சினிமாவில் வருவதுபோல் அவர்களுக்கு பஞ்ச டயலாக் மட்டும்தான் பேசத்தெரியும். தமிழகத்திலேயே ஒரு ஊருக்காரன் இன்னொரு ஊருக்காரனுக்கு தண்ணி கொடுக்கிறது இல்லை தீண்டாமை, நாட்டாமைன்னு பிளவு பட்டு இருக்கும்போது ஒரு மாநிலத்திடம் தண்ணீர் கேட்க்க வேண்டும் என்றால் எப்படி கேட்க்க வேண்டும்?. "தண்ணி தரலைனா உதைக்கணும் அவனுங்கள" இப்படித்தான் கேட்கணுமா? ரஜினி ஏதோ ஆவேசத்தில் கேட்டுவிட்டார். இன்று அவருடைய படம் அங்கே ஓட வேண்டும் என்றவுடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் ஆனால் இதனால் பிளவுப்பட்டது தமிழனும், கன்னடனும்தான்.  இப்படித்தான் அவர்கள் பிரபலம் ஆக நம்மை பிளவுப்படுத்தி புகழ் தேட நினைக்கின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாளியாகவும், கோமாளியாகவும் இருக்கப்போரிங்க?
 ----------------------------------------------------------------------------
 நேற்றைய பதிவில் இலங்கை தமிழ் பதிவர் ம.தி.சுதா அவர்களிடம் இருந்து வந்த ஆதரவு பின்னூட்டம், அது ஒன்றே போதும் எனக்கு. தமிழகத்தில் குருட்டுத்தனமாக சிலரை ஆதரிக்கும் முட்டாள்களே இலங்கை தமிழர்களிடம் யார் உண்மையான போராளி என்று கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
 ----------------------------------------------------------------------------
நேற்று எதிர் பின்னூட்டம் போட்ட நண்பர்களே உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்  அதில் எனக்கு துளி அளவும் தமிழ் பற்று தெரியவில்லை நீங்கள் இன்னும் முட்டாளாக இருப்பதுதான் தெரிகிறது.  உங்களது எதிர்ப்பதிவுகளையும், ஓட்டுக்களையும், பின்னூட்டங்களையும்,  மிரட்டல்களையும் கண்டு நான்  அஞ்சமாட்டேன்.   நான் இந்தியனாகவே வாழ்ந்து இந்தியனாகவே சாக விரும்புகிறேன். இந்த பிணம் திண்ணிகளையும் , கொள்ளை  கும்பல்களையும் பார்த்து பயந்து விட மாட்டேன். தொடர்ந்து எனது தேசத்துக்காகவும், என் நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன. என்னால் முடிந்த வரை இந்த நாட்டிற்காக பாடுபடுவேன்.  உயிர் இல்லையென்றால் இந்த உடல் குப்பைதான் அந்த குப்பையை காப்பாற்றிக்கொள்ள இவர்களை பார்த்து நான் அஞ்சப்போவதும் இல்லை, கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதும்  இல்லை.

 - வந்தே மாதரம்51 comments:

மாணவன் said... | December 30, 2010 at 5:32 PM

//ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்த முதல் துரோகி தமிழ்நாட்டுத் தமிழன்தான். உங்களுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்தியாவை குறை கூற//நச்சுன்னு சொல்லிருக்கீங்க...........

sakthistudycentre.blogspot.com said... | December 30, 2010 at 5:33 PM

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?Wish You Happy New இயர்http://sakthistudycentre.blogspot.comஎன்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

INDIA 2121 said... | December 30, 2010 at 5:50 PM

SUPER PATHILKAL

Speed Master said... | December 30, 2010 at 5:53 PM

அருமை

பார்வையாளன் said... | December 30, 2010 at 6:14 PM

உங்கள் கருத்தில் எனக்கு சில உடன்பாடு இல்லை . ஆனால் உங்கள் தார்மீக நெறிகள் மீது என் மரியாதை உயர்ந்துவிட்டது

karthikkumar said... | December 30, 2010 at 6:21 PM

எதிர் பின்னூட்டங்கள் போட வேண்டாமென்று பதிவிலே சொல்லி இருக்கலாமே.. வீணாக மெனக்கெட்டு ஒரு பின்னூட்டம் போட்டேன்.. இப்போ காணோம்...சரி விடுங்க விடுங்க :)

FARHAN said... | December 30, 2010 at 7:21 PM

இலங்கையில் வாழும் நாங்களும் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை எமது கோபம் எல்லாம் விடுதலை புலிகள் மீதே போராட்டம் என்னும் பேரில் செய்த அராஜகத்தை என்ன வென்று சொல்ல ....
விடுதலி புலிகளை ஆதரிப்போர் மீது கேட்கும் கேள்வி இது ......காஸ்மீரில் இருந்து ஒருவன் வந்து பஸ் மீதோ ரயில் மீதோ குண்டு போட்டால் அதுக்கு பேர் தீவிரவாதம் அதுவே புலிகள் செய்தால் போராட்டமா?
தமிழர் பிரதேசத்தில் சிங்களவர் குடியேறுகின்றனர் என்னும் பொது கூக்குரலிடும் நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் இருந்து உடுத்த ஆடைகளுடன் சொந்த மண்ணில் இருந்து விரட்ட பட்ட ஆயிரகணக்கான முஸ்லிங்கள் அகதியாய் திருந்த போது மெளனமாக இருந்தீர்கள் ஏன் ?
அப்பாவிகளை கொன்று குவித்தார்கள் என்று சொல்லும் நீங்கள் காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்ட நூற்றுகணக்கான அப்பாவிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுகொள்ளும் போது ஏன் கேள்விகேக்க வில்லை ?
மக்களுக்காக போராட நாங்கள் தயார் புலிகளின் கொடியிப்ன் கீழ் போராட நாம் தயார் இல்லை

பாரத்... பாரதி... said... | December 30, 2010 at 7:28 PM

//MP ஆவதற்கு முன் ஈழத்தமிழர்களுக்காக அவர் பேசிய பேச்சுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது.//
அவரைப் பொறுத்தவரை ரத்தவெறி ராஜபக்ஷே வை சந்தித்தித்ததை தான் பெருமையாக நினைக்கிறாரோ?
ராஜபக்ஷேவிடம் அடங்கியது தான் ஆர்பாட்டத்தின் அடுத்த கட்டமோ?

பாரத்... பாரதி... said... | December 30, 2010 at 7:30 PM

//ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்த முதல் துரோகி தமிழ்நாட்டுத் தமிழன்தான்.//
உண்மைதான் இது. இதற்க்காக அனைவரும் வெட்கி தலைக்குனிய வேண்டும்.

பாரத்... பாரதி... said... | December 30, 2010 at 7:35 PM

ஈழத்தமிழர்கள் பற்றிய உங்கள் பார்வைக்கு வந்தனங்கள்.

பாரத்... பாரதி... said... | December 30, 2010 at 7:37 PM

//நேற்றைய பதிவில் இலங்கை தமிழ் பதிவர் ம.தி.சுதா அவர்களிடம் இருந்து வந்த ஆதரவு பின்னூட்டம், அது ஒன்றே போதும் எனக்கு.//

karthikkumar said... | December 30, 2010 at 7:40 PM

இன்று தமிழக மீனவர்களை சிங்கள மீனவன் தாக்குவது உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதை ஒரு இந்தியனாக இந்திய அரசிடம் கேளுங்கள்.//

இந்த வரிகளுக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் கருணாநிதி என்ற வார்த்தை வந்துவிட்டது.. தவறாக இருப்பின் மன்னிக்க....

தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது. இதற்க்கு முன் நீங்கள் எழுதிய பதிவுகளின் மூலம்.. வெறுப்பு அல்ல...

பதிவை படித்த வுடன் பின்னூட்டம் போட்டுவிட்டேன். அதனால் நான் முதல் எதிர் பின்னூட்டம் போட்ட ஆளாக தெரிகிறேன்... இதுவும் தவறாக இருப்பின் மன்னிக்க...

நெகட்டிவ் வோட்டு போட்டதை போடுவதை தவறு என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.................... உங்கள் மதிப்புடன்.

THOPPITHOPPI said... | December 30, 2010 at 7:45 PM

@கார்த்திக்குமார்//உங்களுடைய அந்த பின்னூட்டத்தை படித்தால் நிச்சயம் எனது இந்த பதிவின் நோக்கம் திசை மாறிவிடும் அதனால்தான் ஸ்பாம் செய்தேன் மன்னிக்கவும். //

karthikkumar said... | December 30, 2010 at 7:49 PM

@ thoppithioppi//
இந்த பதிவின் நோக்கம் திசை மாறிவிடும்///
இது போன்ற பதிவின் மூலம் ஆரோகியமான விவாதங்கள் மற்றும் புரிதல்கள் மட்டுமே வளர வேண்டும்.. எனக்கு புரிகிறது.. அந்த மேட்டர விட்ருங்க... be cool :)

rajkumer said... | December 30, 2010 at 8:01 PM

உ செ அபௌட் தமிழீழம் நாட் குட்
பெகுசே வி ஆர் தமிழ் நோ குன்றி
தட் வே வி நீட குன்றி ஓகே
தமிழீழம் திஸ் மி குன்றி
அண்ட் ல்ட்டே இஸ் கோட்
நேசத் டைம் டூ ரிக்த் அபௌட் ல்ட்டே ஓர் தமிழீழம்
உ ஆர் பாசே இந்தியன் உ ரிக்த் அபௌட் உ பாக் இந்திய ஓகே
உ உண்டேர்ஷ்டந்து

INDIA 2121 said... | December 30, 2010 at 8:02 PM

THOPPI THOPPI YOU ARE GREAT.
YOUR POINT OF VIEW IS GOOD.
THAMILANUKKU THAMILAN THAAN ETHIRYE THAVIRA VERU YAARUM ILLAI.
SARIYAA SONNINKA.

ஆமினா said... | December 30, 2010 at 8:27 PM

//இலங்கை என்பது ஒரு குறுகிய நாடு, அந்த நாட்டிற்குள் தனி நாடு கேட்டால் ஆள்பவன் சுலபத்தில் கொடுத்து விடுவானா?.//

இருக்குறதுலேயே இது தான் நச்......

தனிகுடித்தனம் போகவே பல வருஷங்கள் புகுந்த வீட்டோட போராடும் போது தனியா நாட்ட தான்னு சொன்னா கொடுப்பாங்களா??

இடையில் வாய்க்கால் வரப்புக்கே சண்ட போடுறாங்க. இதுல இப்படி பண்ணா?

//மக்களுக்காக போராட நாங்கள் தயார் புலிகளின் கொடியிப்ன் கீழ் போராட நாம் தயார் இல்லை //

THOPPITHOPPI said... | December 30, 2010 at 8:28 PM

@ராஜ்குமர்
//உ செ அபௌட் தமிழீழம் நாட் குட்
பெகுசே வி ஆர் தமிழ் நோ குன்றி
தட் வே வி நீட குன்றி ஓகே
தமிழீழம் திஸ் மி குன்றி
அண்ட் ல்ட்டே இஸ் கோட்
நேசத் டைம் டூ ரிக்த் அபௌட் ல்ட்டே ஓர் தமிழீழம்
உ ஆர் பாசே இந்தியன் உ ரிக்த் அபௌட் உ பாக் இந்திய ஓகே
உ உண்டேர்ஷ்டந்து //

தமிழனுக்கு நாடு இல்லையா?


ஓ அதனால்தான் இவ்வளவு கொலையும், அவல நிலையுமா?

கன்னடனும், மலையாளியும் என்ன தனி நாடா கேட்டுக்கொண்டு இருக்கிறான்?

இப்படி ஆளாளுக்கு தனி நாடு வேணும்னா நிலவுக்குத்தான் போகணும். முதல தமிழர உயிரோட இருக்க விடுங்க அதுக்கப்புறம் தனி நாடு கேட்கலாம்.

Arangasamy.K.V said... | December 30, 2010 at 9:12 PM

நீங்கள் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு இதுதான் .

தனியன் said... | December 30, 2010 at 10:56 PM

எப்படியோ போங்க உங்க நோக்கம் நல்ல முறையிலே முடிந்து விட்டது.அடுத்த வாரம் நிச்சயம் நீங்க தமிழ் மனத்தில் முக்கிய இடம் பிடித்து விடூவீங்க. எட்டபனையும் புகழ் வாய்ந்ததாக்கும் நம் சமூகம் வாழ்க

நாங்கள் தமிழர்கள் said... | December 31, 2010 at 12:36 AM

ஐயா... நீங்கள் வந்தேரி கூட்டமா அதனால்தான் இந்தியா இந்தியா என்று கூச்சல் போடுகிண்றிர்கள. முதலில் நாங்கள் தமிழர்கள் அதற்கு பிறகுதான் மற்றது எல்லாம் ............

நாங்கள் தமிழர்கள் said... | December 31, 2010 at 12:55 AM

\\ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொள்ள வேண்டும்?. ராஜீவ் காந்திக்கு உளவுத்துறை எச்சரித்தும் தமிழர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் தானே தமிழகம் வந்தார்? நம்பிக்கை துரோகம் செய்தது யார்? அன்று தமிழனுக்கு ஏற்ப்பட்ட பீடை இன்றும் இந்தியாவிற்கு எதிராகவே உள்ளது\\

http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_05.html
சாமி இந்த சுட்டியை பார்த்து விட்டு இதற்க்கும் ஒரு பதிவு போடவும்

நாங்கள் தமிழர்கள் said... | December 31, 2010 at 1:11 AM

\\இன்று தமிழக மீனவர்களை சிங்கள மீனவன் தாக்குவது உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதை ஒரு இந்தியனாக இந்திய அரசிடம் கேளுங்கள்.//
இதை பற்றி பாரளமன்றத்தில் பல முறை பேசியாகி விட்டது,எங்கள் வந்தேரி தமிழக முதல் அமைச்சரும் பல கடிதம் எழுதிவிட்டார். உங்கள் இந்தியா அரசுதான் கண்டுகொள்ளவில்லை...

சண்முககுமார் said... | December 31, 2010 at 1:33 AM

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்கசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

ரிஷபன்Meena said... | December 31, 2010 at 5:32 AM

புத்தாண்டு வாழ்த்துக்கள்

THOPPITHOPPI said... | December 31, 2010 at 8:17 AM

@நாங்கள் தமிழர்கள்

நீ ஒரு முட்டாள் என்பது எனக்கு போன பதிவிலேயே தெரிந்துவிட்டது. இந்த பதிவுலும் அதை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம்.


@தனியன்

தமிழ்மணத்தில் முக்கிய இடம் பிடித்தால் எனக்கு இலவசமாக சென்னையில் ஒரு பங்களா பரிசு கொடுக்கப்போராங்க. ஓ அதனால்தான் தமிழ்மணத்தில் எனக்கு நெகட்டிவ் ஒட்டு போட்டிங்களோ?

//எட்டபனையும் புகழ் வாய்ந்ததாக்கும் நம் சமூகம் வாழ்க //

ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

நாங்கள் தமிழர்கள் said... | December 31, 2010 at 9:35 AM

//நீ ஒரு முட்டாள் என்பது எனக்கு போன பதிவிலேயே தெரிந்துவிட்டது. இந்த பதிவுலும் அதை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம்.//
இது உனக்குதான் ............... நீ
வந்தேரியா இல்லையா என்பதறுக்கு பதில் கூறு........

Arockia said... | December 31, 2010 at 9:48 AM

THOPPITHOPPI, en ennankalli veliyittamykku Nanri.

THOPPITHOPPI said... | December 31, 2010 at 10:02 AM

@நாங்கள் தமிழர்கள்

நீ உண்மையில் தமிழன் என்றால் "வந்தேறி" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல் பார்ப்போம்? ஏதாவது ஒரு செய்திதாளில் சில வார்த்தைகளை பார்த்து மனப்பாடம் செய்துக்கொள்வது, யாரையாவது தனக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையை பயன்படுத்துவது, அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல்.

நீ என்னிடம் பல கேள்வி கேட்டாயே. நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க்கிறேன்.

"வந்தேரி" இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்?

இரவு வானம் said... | December 31, 2010 at 10:44 AM

நண்பா வருட கடைசியில் செம சூடான விவாதத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு, உங்களின் கருத்துகளில் பெரும்பான்மையான கருத்துகளை நான் ஆதரிக்கிறேன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நாங்கள் தமிழர்கள் said... | December 31, 2010 at 10:48 AM

பிழைப்புக்கு தங்கள் ஊரை,நாட்டை விட்டு வேறு இடத்தில் பிழைபவன்தான் "வந்தேரி"

JS said... | December 31, 2010 at 10:59 AM

//பிழைப்புக்கு தங்கள் ஊரை,நாட்டை விட்டு வேறு இடத்தில் பிழைபவன்தான் "வந்தேரி" //அப்படி பார்த்தால் உலகம் முழுதும் வாழும் தமிழர்களை வந்தேரி எங்கிறீர்களா?

THOPPITHOPPI said... | December 31, 2010 at 11:06 AM

@நாங்கள் தமிழர்கள்

//பிழைப்புக்கு தங்கள் ஊரை,நாட்டை விட்டு வேறு இடத்தில் பிழைபவன்தான் "வந்தேரி" //

சீமானும் பிழைப்புக்காக தன்னுடைய ஊரை விட்டு சென்னைக்கு வந்தவர்தான் அவரிடம் போய் இதே கேள்வியை கேள்.


@JS

விடுங்கள் நண்பரே அவர் ஏதோ எதிர்ப்பின்னூட்டம் போட வேண்டும் என்பதற்காகவே என்ன கேட்க்கிறோம் என்று தெரியாமல் கேட்க்கிறார்.

INDIA 2121 said... | December 31, 2010 at 11:07 AM

Blogger JS said

SUPER SIR

p said... | December 31, 2010 at 11:08 AM

சரியான சாட்டை அடி....

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

-அன்புடன் பல்லவன்.

INDIA 2121 said... | December 31, 2010 at 11:08 AM

THOPPI THOPPI ARUMAIYAANA REPLY

செந்திலான் said... | December 31, 2010 at 12:08 PM

//தேசிய உணர்வோடு பின்னூட்டம் செய்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் //

காவிரி ,முல்லை பெரியாறு,பாலாறு ஆகியவற்றில் எங்கயா போச்சு உங்க வெங்காய தேசியம் ?
வேறு மாநிலங்களுக்கு சென்று பாரு அய்யா தெரியும் உங்க வெங்காய தேசியம் திருட்டு DVD க்கு சப்போர்ட் பண்ற உன்ன குண்டர் சட்டத்துல போட்றப் போறாங்க

செந்திலான் said... | December 31, 2010 at 12:16 PM

இங்கே பார்ஹான் எனும் பெயரில் எழுதும் இசுலாமிய வெறியருக்கு சில கேள்விகள்
மட்டகளப்பில் 2000 தமிழ் மக்கள் கொல்லப் பட காரணமாக இருந்த முசுலிம் காடையர்களைப் பற்றி என்ன சொல்கிறீர் ?
மேலும் கிழக்கு மாநிலத்தில் சிங்களவனுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்தது யார் ?
எப்பொழுது பார்த்தாலும் யாழ்பாணத்தில் இருந்து விரட்டி அடிக்கப் பட்டோம் என்று கூவுகிராயே
அதன் மூள காரணம் என்ன ? உங்களின் சிங்கள ஆதரவு மற்றும் தமிழினத் துரோகம்,காட்டிக் கொடுப்புகள் தானே !
நாம் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் முஸ்லிம் என்ற மத உணர்வை ஊட்டி தமிழ் மக்களை கொல்லத் துணை போகும் முஸ்லிம் காடையர்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?
இந்த முஸ்லிம் வெறியர்களுக்கு மதம் இனம் என்ற வேறுபாடே தெரியாது அவர்களுக்கு எல்லாமே மதம் தான்.

THOPPITHOPPI said... | December 31, 2010 at 12:28 PM

@செந்திலான்

//திருட்டு DVD க்கு சப்போர்ட் பண்ற உன்ன குண்டர் சட்டத்துல போட்றப் போறாங்க //

அய்யய்யோ பயமா இருக்கு.


//இங்கே பார்ஹான் எனும் பெயரில் எழுதும் இசுலாமிய வெறியருக்கு சில கேள்விகள்
மட்டகளப்பில் 2000 தமிழ் மக்கள் கொல்லப் பட காரணமாக இருந்த முசுலிம் காடையர்களைப் பற்றி என்ன சொல்கிறீர் ?//

அவர் பாதிக்கப்பட்டவர், நீங்கள் செய்தித்தாள்களில் மரணத்தை செய்தியாக படித்தவர். தமிழன் உணர்ச்சியை காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஓவர் பில்ட் அப் கொடுக்க வேண்டாம்.

செந்திலான் said... | December 31, 2010 at 12:51 PM

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கண்ணே. கிழக்கு மாநிலத்தில் முசுலிம் காடையர்கள் தமிழர்களை கொலை செய்தார்களா ? இல்லையா ? இதற்கு ஏன் கள்ள மௌனம் ? இதுதானா கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் ஒரு விவகாரத்தை அமுக்குவது ? (kill by the conspiracy of silence?)

p said... | December 31, 2010 at 3:22 PM

முதலில் அந்த எட்டு கேள்விக்கு பதில் வரட்டும், பின் உங்கள் கேள்விக்கு பதில் வரும் செந்திலான் அண்ணே.-பல்லவன். pallavan77@yahoo.co.in

Enathu Ennangal said... | December 31, 2010 at 5:30 PM

// ஒரு ஆறுதலான விஷயம் யாருமே சீமானுக்கு ஆதரவாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதுதான்,//

நான் இன்றைக்கு சீமானுக்கு ஆதரவாக பதிவு போட்டு இருக்கேனே அதை உங்கள் வாசகர்களிடம் சொல்விர்களா.

// இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது என்றே வைத்துக்கொள்வோம் அடுத்த தேர்தலிலாவது காங்கிரஸ் கூட்டணிக்கு நாப்பதுக்கு நாப்பது என தோல்வியை கொடுத்து இருக்கலாமே? //

ஆந்திராவுல ஹரி பிரசாதுன்னு ஒருவர் வாக்குபதிவு இயந்திரத்தை ஹாக் பண்ற விசயத்தை தெளிவுபடிதினார்னு அவரை சிறையில் போட்டது காங்கிரசு. இந்த செய்தியை நீங்கள் படிக்கவில்லையா!

// தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பி விட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இன்று தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக மாற்றி வருகின்றனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, விடுதலை புலிகளும் ஒரு தமிழ் இயக்கம் தானே ஏன் ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொள்ள வேண்டும்?. ராஜீவ் காந்திக்கு உளவுத்துறை எச்சரித்தும் தமிழர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் தானே தமிழகம் வந்தார்? நம்பிக்கை துரோகம் செய்தது யார்? //

1 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொண்டு வந்து இந்தியர்களுக்கு எதிராக தமிழனை திருப்பி விட்டது யார்?
2 ஆரியர் , திராவிடர் என்று இந்தியர்களுக்கு எதிராக தமிழனை திருப்பி விட்டது யார்?

3 ராஜீவ் காந்தியின் நம்பிக்கை துரோகம் பற்றி முன்னால் ராணுவ அமைச்சரின் சுயசரிதையில் பார்க்கவும்.

// இலங்கை என்பது ஒரு குறுகிய நாடு, அந்த நாட்டிற்குள் தனி நாடு கேட்டால் ஆள்பவன் சுலபத்தில் கொடுத்து விடுவானா?. //

பங்களாதேஷ் குறுகிய நாடுதான் அதற்கு ஏன் தனி நாடு கொடுத்தார்கள். முஸ்லீம்க்கு தனி நாடு ஏன் கொடுத்தார்கள். பாகிஸ்தான் கூட குறுகிய நாடுதான். இந்தியாவுல இருந்து பிரிந்ததுதான். பிரபாகரன் என்ற ஒருவர் உருவாக காரணமே சிங்களவர்களின் இன வெறிதான். அதை பற்றிய சரித்திரத்தை கொஞ்சம் தெரிஞ்சிட்டு பேசுங்க.

// ஈழத்தமிழர்கள் இன்று இந்த நிலைக்கு வர இந்தியா மட்டும்தான் காரணமா? //

ராஜீவ் காந்தி தான் காரணம். ராஜீவ் , ஜெயவர்தன ஒப்பந்தத்திற்கு முன்னால் பிரபாகரன் யானையிறவு வரை தன பிடிக்குள் வைத்திருந்தார்.


// இன்று தமிழக மீனவர்களை சிங்கள மீனவன் தாக்குவது உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதை ஒரு இந்தியனாக இந்திய அரசிடம் கேளுங்கள். அந்த பிரட்ச்ச்சனையில் சீனா, பாகிஸ்தான், சிங்களன் என பல முதலைகளின் தலையீடு உள்ளது இதையெல்லாம் புரிந்துக்கொண்டு ஒரு இந்தியனாக செயல்ப்படுங்கள். //


500 தமிழக மீனவர்களை கொல்லும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இந்திய அரசு, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை தாக்கும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன். தமிழன் உயிருக்கு மதிப்பு இல்லை என்றோ அல்லது தமிழனுக்கு மானம் இல்லை என்றா!
சீனா, பாகிஸ்தான், சிங்களன் போன்றவர்கள் கொல்லும் வரை வேடிக்கை பார்க்க சொல்கிறிர்கள். அப்படிதானே!

இப்படிக்கு
எனது எண்ணங்கள்
R .பிரகாஷ்

THOPPITHOPPI said... | December 31, 2010 at 5:51 PM

@Enathu Ennangal

போன பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் அங்கே போய் பார்க்கவும். தயவு செய்து இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம். உங்களைப்போன்றவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பதில் சொல்லவில்லை என்றால் பதில் சொல்லாத கோழையே என்று என்னை அழைத்து விடுவீர்களோ என்றுதான் இவ்வளவு நேரம் பொறுமையாக உங்களுக்கு பதில் சொன்னேன். ஆனால் இனியும் நான் உங்களுக்கு பதில் சொல்ல கணினி முன் அமர்ந்திருந்தால் என் மீது இருக்கும் மரியாதையே போய்விடும் உண்மையான வாசகர்களிடம் இருந்து.

லாஜிக் இல்லாமல் இருக்கும் உங்கள் பின்னூட்டத்தை நான் எப்படி எடுத்துக்கொள்வது.

எப்படியோ உங்களைப்போன்ற முட்டாள்களை கூட்டிக்கொண்டு போய் சீமான் போலீசாரிடம் அடிவாங்க வைக்கப்போவது உறுதி. அப்போதும் இதையேத்தான் கூறப்போகுரீர்கள் "தமிழர்களை தாக்கிய இந்தியா ஒழிக" என்று.

Enathu Ennangal said... | December 31, 2010 at 6:32 PM

// எப்படியோ உங்களைப்போன்ற முட்டாள்களை //

என்னை முட்டாள் என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.

// ஆனால் இனியும் நான் உங்களுக்கு பதில் சொல்ல கணினி முன் அமர்ந்திருந்தால் என் மீது இருக்கும் மரியாதையே போய்விடும் உண்மையான வாசகர்களிடம் இருந்து. //

உங்களுடைய இந்த பதிலை உங்கள் வாசகர்கள் படிக்க மாட்டார்களா. நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் எதுவும் சொல்லவில்லையே! என்னை திட்டுவதில்தான் உங்கள் மரியாதையை இருக்கிறதா !

// லாஜிக் இல்லாமல் இருக்கும் உங்கள் பின்னூட்டத்தை நான் எப்படி எடுத்துக்கொள்வது. //

என்னுடைய பின்னூட்டம் லாஜிக் இல்லாமல் உள்ளதா ! அப்படி என்றால் உங்கள் சீமானை பற்றிய உங்கள் பதிவு லாஜிக்கோடு இருக்கிறதா!

// போன பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் அங்கே போய் பார்க்கவும். தயவு செய்து இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம். உங்களைப்போன்றவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை //

உங்களுக்கு பதில் சொல்லித்தான் என்னுடைய நேரத்தை வீணாக்கி விட்டேன்.

THOPPITHOPPI said... | December 31, 2010 at 7:01 PM

@Enathu Ennangal

-------------------
//நான் உங்களை எந்த இடத்திலும் திட்டவில்லை ஆனால் நீங்கள் என்னை நித்தியானந்தரை ஆதரித்தவன் என்று திட்டுகிறிர்கள்//


*நித்தியானந்தரை ஆதரித்தவர்கள் இன்று வீட்டை விட்டே காலி செய்து ஓடிவிட்டனர் தனது முகத்தை மற்றவர்களிடம் எப்படி காட்டுவது என்று.*

-இதை நான் ஒரு உதாரணத்துக்காக சொன்னது. அதப்போய் இப்படி சீரியஸ்ஸா எடுத்து நான் உங்களை திட்டிவிட்டேன் என்று சொல்லவேண்டாம்.

நேற்று ஒருத்தர் உங்கள மாதிரித்தான் காமடி செஞ்சி என்ன சிரிக்க வெச்சாரு இன்னைக்கு நீங்க. நான் சீரியஸ்ஸா எழுதுன பதிவுல லொள்ளுசபா மாதிரி இப்படி ஆளாளுக்கு காமடி பண்ணா என்ன செய்வது?

நண்பரே போதும் புத்தாண்டுக்கு உங்களை தயார்படுத்தி, கோவிலுக்கு சென்று வரயிருக்கும் ஆண்டு நமக்கும் ஈழத்தமிழருக்கும் இனிதாக அமைய வேண்டிக்கொள்ளுங்கள்.

நாம் ஈழத்தமிழர்களுக்காக போராடுவோம் ஒரு இந்தியனாக. பிரிவினை எப்போதும் வெற்றியை தராது. முடிந்துப்போன ஒன்றை ஏன் மீண்டும் தோண்டி அதில் வன்முறையை உண்டாக்க பார்கிறீர்கள். ஒற்றுமையும் அமைதியும் நம் நாட்டில் நிலைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முயலுங்கள். நம் முன்னோர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக அதையே குறையாக சொல்லி பகையை உண்டாக்க வேண்டாம். நம் முன்னோர்கள் தவறான வரலாறை உண்டாக்கிவிட்டார்கள் என்று கருதினால் நாம் சரியான வரலாறை உருவாக்குவோம். நாளைய சமுதாயம் நம்மை பாராட்டும். கொஞ்சம் கண் மூடி யோசித்துப்பாருங்கள் சீமான் செயல்கள் தமிழ்நாட்டில் அமைதியையா கொடுக்கப்போகிறது?
நமக்கும் இறைவன் யோசிக்கும் திறனை கொடுத்திருக்கிறார் அதை பயன்படுத்தலாமே.


எனது வார்த்தை உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். எனது தேசத்தை குறைக்கூரியதால் வார்த்தை கறாராக வந்து விட்டது. நான் எப்போதும் உங்கள் நண்பன்தான்,


உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... | December 31, 2010 at 11:53 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_120.html

சென்னை பித்தன் said... | January 1, 2011 at 12:03 PM

நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மனசாட்சி said... | January 1, 2011 at 12:03 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

venkat said... | January 1, 2011 at 4:53 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

venkat said... | January 1, 2011 at 5:10 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said... | January 2, 2011 at 7:53 AM

நெகடிவ் ஓட்டு வருதேன்னு கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.