கொக்கா மக்கா 3/12/2010

Friday, December 3, 2010
கடந்த வாரம் சென்னை  பதிவர்களுக்காக இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் தன்னுடைய படத்தை சிறப்புக்காட்சியாக காண்பித்திருந்தார்,  இது பதிவர்களுக்கு கிடைத்த முதல் அங்கிகாரம்  என்றே சொல்லலாம்.   ஆனால் வெற்றி படங்களையே குறை சொல்லும் நமது பதிவுலக ஜாம்பாவான்கள் இந்த படத்தில் உள்ள குறைகளை நாசுக்காக சொல்லி தனது நன்றி உணர்ச்சியை காட்டிவிட்டனர், ஒருசிலர் வெற்றிப்படம் போல் விமர்சனம் செய்திருந்தனர்.   இதுபோன்றவற்றை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லதே, இல்லையென்றால் பதிவர்கள் மேல் இருக்கும் நம்பகத்தன்மையும் மக்களிடம் போய்விடும்.
 _________________________________________________

ஒரு தனியார் செய்தி இணையதளம் வலைப்பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பற்றி செய்தி போடுகிறேன் என்று பதிவர்களை தேவையில்லாமல் இழிவு படுத்தி இருக்கிறார்கள், நம்மை நம்பிதான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் போலும். அவர்கள் ஏதோ சேவைக்காக செய்தி தளம் நடத்துவது போல் நாம் விளம்பரம் செய்வதை  பற்றி கிண்டலாக  எழுதி இருக்கிறார்கள், இனி இதுப்போன்று எழுதுவதை அவர்கள் நிறுத்திக்கொள்வது நல்லதே. இல்லையென்றால் அவர்கள் வண்டவாளத்தை பற்றியும் எங்களால் எழுத முடியும்(PICTURE OF THE DAY, ரஜினிக்கு பூங்கொத்து அனுப்ப, குறைந்த விலையில் டொமைன், ஒரு ரூபாய்க்கு சினிமா டிக்கெட்  இத பத்திலாம் நமக்கு  எழுத தெரியாதுன்னு நெனச்சிட்டாங்க போல,  PICTURE OF THE DAY ல நீ என்ன சாமி படமா போடுற?, மாலைமலர்ள்ள நியூஸ் காப்பி அடிக்காம உன்னால நியூஸ் போட முடியுமா? இதெல்லாம் நாங்க எழுத ஆரம்பிச்சா உன் பொழப்பு நாறிடும் ) . 
 _________________________________________________

தமிழ் வலைப்பதிவர்களுக்கு  ஒரு வேண்டுகோள் என்ற  பதிவில் ஒருசிலர் பின்னூட்டம் போடும்போது பதிவர்களை கேவலம்மாக நினைத்து எழுதி இருந்தனர். இன்னும் ஒருசிலர் ஒரு படி மேலே போய் அதற்காக ஒரு பதிவே போட்டுவிட்டனர் பதிவர்களை நம்பி இவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார் என்று. எனக்கு தெரிந்து  நூறு வலைப்பதிவுகளில் ஒரு பத்து வலைத்தளம்தான் தேவை இல்லாத குப்பை  என்று நினைக்கிறேன் ஆனால் அந்த  பத்து தளத்தை வைத்து மீதம் உள்ள தொண்ணூறு பேரையும்  தவறாக நினைத்து விடக்கூடாது. இன்னொன்று அடுத்தவனை எதற்கு குறை சொல்லணும் உங்களுக்கு சம்மதம் என்றால் ஆதரவாக பின்னூட்டம் போடுங்கள், முடிந்தால் உங்கள் ஆதரவாளர்களையும் திரட்டுங்கள். தமிழன் அமைதியாக இருப்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,   நேதாஜி ஆங்கிலேயனை எதிர்த்து ராணுவம் தொடங்க  அழைத்த போது வந்தவர்களில் ஐம்பது சதவிகிதம்பேர் தமிழர்கள் தான் என்பதை மறந்துட்டீங்க  போல. மூன்று நாடுகளின் ராணுவத்தையும் எதிர்த்து கடைசி வரை போரிட்டவனும்  தமிழன் தான் என்பதை   மறந்து விட வேண்டாம்.  
 _________________________________________________

சில நாட்களாக பதிவுலகில் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற வார்த்தை பிரபலம்மாகிகொண்டு  வருகிறது, எனது தளத்தில் கூட ஒரு பதிவர் அரசியல்வாதிகளை எதிர்த்து பதிவு போட்டால் இந்த ஒரு வார்த்தைக்காக பயப்பட வேண்டி உள்ளது என்று சொல்லி இருந்தார். பயப்பட வேண்டியது தான் அதற்காக எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தா அடிமையாத்தான் இருக்கணும்.  சுதந்திரத்துக்காக போரிட்டவனை தூக்கில் போடும்போதும் கடைசி நேரத்தில் வந்தேமாதரம் என்று சொல்லி இறந்தவர்கள் பலபேர் ஆனால் இப்போ  நம்மை ஆள்பவர்கள் ஒரு சாதாரண கைதுக்கே ஐயையோ கொல்றாங்க என்று அலறுபவர்கள்,  ஒப்பிட்டு பார்த்தால் நம்மை விட அவர்கள்  தான்  கோழை . சவுக்கு என்ன அலறிக்கிட்டா  இருந்தாரு? . வீட்டுக்கு ஆட்டோ வந்தா மீட்டருக்கு மேல பத்துரூபாய் போட்டு அனுப்புங்க.           
 _________________________________________________

எனது கல்லூரி வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத ஒரு நண்பர் இருக்கிறார் அவர் ஒரு சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு நகைச்சுவை செய்து விடுவார். அவர் செய்த சில நகைச்சுவைகள்.

► ஒரு நாள் எங்கள்  கணக்கு ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு கணக்கை முடித்து விட்டு சொன்னார் "இது யூனிவர்சிட்டி ப்ராப்ளம் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு போடுங்க"  என்று  அதற்கு என் நண்பர் கேட்டது  " சார் யூனிவர்சிட்டிக்கு ப்ராப்ளம்னா நாங்க எதுக்கு கஷ்ட்டப்படனும்".

► நாங்க எங்க  போனாலும்  அவன்  செலவு செய்யவே மாட்டான்,  நாங்களும் ஏதாவது சில்லறை இல்லைன்னு ஒரு அஞ்சி ரூபாய்  கேட்டா கூட ஏங்கிட்ட இருபது ரூபாய்  நோட்டா இருக்கு என்று சொல்லி தப்பித்து விடுவான். ஒரு முறை இப்படித்தான் நாங்க நோட்டா இருந்தாலும் பரவாயில்ல தாடா நாங்க சேன்ஜ்  மாத்திக்கிறோம் என்று சொல்லும்போது அவன் தனது பையில் இருந்து இருபது ரூபாய் அன் ரூல்டு நோட்ட எடுத்து காண்பித்தான். டேய் இதுதான் இருபது ரூபாய் நோட்டா என்று நாங்கள் அன்று   சிரித்தது இன்றும் என்னால்  மறக்க முடியாது.

                      நாங்கள்  கல்லூரி முடித்து இரண்டு வருடம் முடியப்போகுது  ஆனால் இன்னும் அவன் சரியான வேலை கிடைக்காமல் வீட்டு வாடகை, கடன், வட்டி என  தவிக்கிறான் போதா குறைக்கு அவனது பிரட்சனைக்கு உதவுவதாக ஒரு MLM  நண்பர் வேறு ஏமாற்றி விட்டார். எங்களை கல்லூரியில் சிரிக்கவைத்தவன் இன்று சிரிக்க முடியாமல் குடும்ப பிரட்சனையில்  இருக்கிறான். அது ஏன் என்று புரியவில்லை   படிக்கும்போது வராத கஷ்ட்டம், ஏமாற்றம்  முடித்தவுடனே அத்தனை சுமையும்  தலையில் விழுகிறது.
 _________________________________________________

இசைப்பிரியா கொடூரமாக  கொலையுண்ட செய்தியை கேட்டு ஒரு தமிழ் வாசகர் வேதனையுடன் எழுதியது:

"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு  மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்."


 _________________________________________________

ராஜபக்சே:
மவுஸ் வெச்சி அந்த நாய தூக்கிபோட்டு விளையாடுங்க
 _________________________________________________


http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1708792&g2_serialNumber=1

இதுக்கெல்லாம்  நீ  ஒரு நாள் எங்களுக்கு பதில் சொல்லுவடா மவனே......
 _________________________________________________


32 comments:

ம.தி.சுதா said... | December 3, 2010 at 7:32 PM

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said... | December 3, 2010 at 7:38 PM

தமிழ் நாட்டில் பதிவர் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் காலம் வெகு சீக்கிரத்தில் வரக் கூடும் என நினைக்கிறேன்... அந்தளவிற்கு அவர்களின் தாக்கம் இருக்கிறது....

கடைசிப் பத்தி பற்றி ஒண்ணுமே சொல்ல முடியல நன்றி சகோதரம்....

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 3, 2010 at 7:44 PM

, PICTURE OF THE DAY ல நீ என்ன சாமி படமா போடுற?, மாலைமலர்ள்ள நியூஸ் காப்பி அடிக்காம உன்னால நியூஸ் போட முடியுமா? இதெல்லாம் நாங்க எழுத ஆரம்பிச்சா உன் பொழப்பு நாறிடும்//

நண்பா கலக்கிட்டீங்க..

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 3, 2010 at 7:46 PM

எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்."
//
உண்மை...அப்படியாவது எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் சுய நல வாதிகளே

ஜீ... said... | December 3, 2010 at 7:51 PM

//எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்//
true! :-(

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 3, 2010 at 7:51 PM

வீட்டுக்கு ஆட்டோ வந்த//செம தூளு

Kalidoss said... | December 3, 2010 at 8:07 PM

பதிவு ரொம்ப நல்லா இருக்குங்க

Chitra said... | December 3, 2010 at 8:17 PM

பல செய்திகள் - கருத்துக்களுடன் - வாசிப்பவர்களை சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள்.

வைகை said... | December 3, 2010 at 8:18 PM

கடைசி பத்தில சிரிக்கவச்சுட்டு ஆனா படத்த பாத்து கண்கலங்க வச்சுட்டிங்க!! தயவு செய்து அந்த ரெண்டாவது படத்த எடுத்துருங்க!! எந்த ஒரு சகோதரனும் தங்கச்சிய பாக்க முடியாத கோலம்! தெருவுல திரியிற வெறிநாய கொன்னா கூட சட்டம் பேசுற சொறி நாய்க இதெல்லாம் பாத்து கண்ண மூடிக்கிவாங்க

சங்கவி said... | December 3, 2010 at 8:18 PM

அருமையமான கலவை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... | December 3, 2010 at 9:02 PM

//ஒரு தனியார் செய்தி இணையதளம் வலைப்பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பற்றி செய்தி போடுகிறேன் என்று பதிவர்களை தேவையில்லாமல் இழிவு படுத்தி இருக்கிறார்கள், நம்மை நம்பிதான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் போலும். //

naanum padichchen. romba mosam paya pullaika

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... | December 3, 2010 at 9:02 PM

super mixing

பார்வையாளன் said... | December 3, 2010 at 9:18 PM

2011 நம்ம கையிலதான்... டோண்ட் வொர்ரி

மாணவன் said... | December 3, 2010 at 9:20 PM

தகவல்கள் அனைத்துமே வீரியமும் வீரமும் கலந்து எழுதியுள்ளீர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ ஞாபபடுத்தீட்டிங்க நண்பா...

அருமை

//இதுக்கெல்லாம் நீ ஒரு நாள் எங்களுக்கு பதில் சொல்லுவடா மவனே......//

தமிழனாக இருந்துகொண்டு நம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்று வெட்கித் தலைகுனிய இந்த ஒரு படமே போதும் நண்பா..

சகோதரியின் படத்தை பார்த்து மனது வலிக்கிறது இதற்கு தீர்வே கிடையாதா? ராஜபக்சே என்ற நரகாசூரனுக்கு எப்பதான் அழிவு

ஆமினா said... | December 3, 2010 at 9:22 PM

//இதுபோன்றவற்றை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லதே, இல்லையென்றால் பதிவர்கள் மேல் இருக்கும் நம்பகத்தன்மையும் மக்களிடம் போய்விடும்.//

நானும் அப்படி தான் நெனச்சேன். என்னதான் அந்த படம் நல்ல படமாகவே இருந்தாலும் அவங்க நன்றிக்காக நல்ல விஷயத்த மட்டும் சொல்றாங்களோன்னு நெனச்சுக்கிட்டேன்.

//தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவில் ஒருசிலர் பின்னூட்டம் போடும்போது பதிவர்களை கேவலம்மாக நினைத்து எழுதி இருந்தனர்//
அவங்களும் நல்லத செய்யமாட்டாங்க. செய்றவங்களையும் குறை சொல்லுவாங்க சகோ

//வீட்டுக்கு ஆட்டோ வந்தா மீட்டருக்கு மேல பத்துரூபாய் போட்டு அனுப்புங்க.//
நல்ல ஐடியாவா இருக்கே... :)


//"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்."//
மனச ரணமாக்கிய வரி..

தமிழ் உதயம் said... | December 3, 2010 at 10:25 PM

கடைசியில் இசைப்பரியாவின் இரண்டு புகைப்படத்தை பார்த்து விட்டு, பதிவு பற்றி மற்ற அம்சம் எழுத முடியவில்லை.

பார்வையாளன் said... | December 3, 2010 at 10:38 PM

இல்லையென்றால் பதிவர்கள் மேல் இருக்கும் நம்பகத்தன்மையும் மக்களிடம் போய்விடும் "

இந்த படத்தை பாராட்ட வேண்டியவர்கள்கூட , நடு நிலையை காட்டுகிறேன் என சொல்லிக்கொண்டு தேவை இல்லாமல் திட்டினார்கள்...
இதுதான் நிலை..

ஹரிஸ் said... | December 3, 2010 at 10:56 PM

அந்த நாய தூக்கிபோட்டு நல்லா விளையாடுனேன்..நன்றி நண்பா..

அன்பரசன் said... | December 3, 2010 at 11:17 PM

//வீட்டுக்கு ஆட்டோ வந்தா மீட்டருக்கு மேல பத்துரூபாய் போட்டு அனுப்புங்க.//

//பயப்பட வேண்டியது தான் அதற்காக எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தா அடிமையாத்தான் இருக்கணும்,//

டாப்பு.

அன்பரசன் said... | December 3, 2010 at 11:18 PM

//எங்களை கல்லூரியில் சிரிக்கவைத்தவன் இன்று சிரிக்க முடியாமல் குடும்ப பிரட்சனையில் இருக்கிறான். அது ஏன் என்று புரியவில்லை படிக்கும்போது வராத கஷ்ட்டம், ஏமாற்றம் முடித்தவுடனே அத்தனை சுமையும் தலையில் விழுகிறது.//

இதேமாதிரி எனக்கு ஒரு நண்பன் இருக்கான்.
பழச ஞாபகப்படுத்திட்டீங்களே!

தமிழ்மலர் said... | December 4, 2010 at 12:01 AM

மலையாள மொழி கைரளி தொலைகாட்சியில் இன்று ஒரு விவாத நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.

பத்திரிக்கையாளர்கள்(அச்சு ஊடகம்), தொலைகாட்சிகள், இணைய எழுத்தாளர்கள் குறித்த விவாதம் அது.

விவாதத்தின் இறுதியில் ஒரு சாதாரன வலைபதிவர் சொன்ன கருத்துக்கு அனைவரும் தலைவணங்கினர்.

சனநாயகத்தை காக்கும் நான்குதூண்களும் இன்று இடிந்துவிட்டன. அதை பொதுமக்கள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை தன்வலைபூவில் எழுதுகின்றனர். இதுதான் உண்மையான விழிப்புணர்வு. இங்கு வியாபாரம் இல்லை, ஆனால் பத்திரிக்கையிலும் தொலைகாட்சியிலும் வியாபாரம் இருக்கிறது. வியாபாரம் நிச்சயமாக நல்லசெய்திகளையோ விழிப்புணர்வையோ தராது.

அந்த வலைபதிவர் எழுந்து நின்று உறுதியாக சொன்ன இந்த கருத்தே விவாதத்தின் தீர்ப்பாகவும் அமைந்தது.

வலைபதிவுக்குள் சக்தி இருக்கு...

FARHAN said... | December 4, 2010 at 12:23 AM

சும்மா வெளுத்து வாங்கி இருக்கும் பதிவு வாழ்த்துக்கள் தொப்பி ....

வழிப்போக்கன் - யோகேஷ் said... | December 4, 2010 at 1:08 AM

கலவயாய் பல விசயங்கள்........... கடைசி பத்தி ............ என்ன சொல்ல........ :

கே.ஆர்.பி.செந்தில் said... | December 4, 2010 at 3:15 AM

உங்கள் கோபத்தில் நானும் இணைகிறேன்...

karthikkumar said... | December 4, 2010 at 9:06 AM

ராஜபக்சே விட்ஜெட் சூப்பர் நான் ரொம்ப நேரம் அதை தூக்கி போட்டேன்

karthikkumar said... | December 4, 2010 at 9:07 AM

எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்//
அப்படியாவது எதாவது நடக்குமா

ஜோதிஜி said... | December 4, 2010 at 12:16 PM

தொப்பி தொப்பி என்பது வேண்டாம். உங்கள் எளிய நடைக்கு கிரீடம் என்று போட்டுக் கொள்ளலாம்.

இரவு வானம் said... | December 4, 2010 at 3:53 PM

ஜோதிஜி அவர்களின் கருத்தினை வழிமொழிகிறேன்

"ராஜா" said... | December 4, 2010 at 3:58 PM

//எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்//

.......

நா.மணிவண்ணன் said... | December 4, 2010 at 4:36 PM

ஹரிஸ் said... 18
December 3, 2010 10:56 PM

அந்த நாய தூக்கிபோட்டு நல்லா விளையாடுனேன்..நன்றி நண்பா..
நானும் தான் நண்பா ரெம்ப நேரம் அதையேதான் விளையாண்டேன்

கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி .வீரமான எழுத்துநடை நண்பரே

மனசாட்சி said... | December 19, 2010 at 4:02 PM

அந்த நாயின் முகத்தையும் அவனைமாதிரி அமைத்து இருந்தால் இன்னும் தூக்கி போட்டு மிதி மிதின்னு..... ஏதோ என்னால முடிந்தது.

நீர் இன்னொரு சவுக்கா? வாழ்த்துக்கள் தோழரே

Indian said... | December 28, 2010 at 7:36 AM

//ராஜபக்சே://?பார்க்க பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மாதிரி இருக்காரே.