கொள்ளை கும்பல் "AMWAY"

Monday, December 27, 2010


http://www.annoncevous.com/adpics/job_opening_for_direct_sale233.jpg
                                                        
"AMWAY "  இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு  அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.  இந்த நிறுவனத்தில்  உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது  தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம்  முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை  சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.


ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம்  ஒன்று "இந்த தொழில்  செய்தால் நீ  செல்வந்தன்  ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக  கொள்ளையடிக்கும்  கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY"  இதுவரை தமிழ்நாட்டில் பல MLM  நிறுவனங்கள்  பலவிதமான வித்தைகளைக்காட்டி  கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY  நிறுவனம் கொஞ்சம்  வித்தியாசமானது,  சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.


ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து  பொருட்களை  இறக்குமதி  செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு  வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும்  அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன.  ஆனால்   நம் இந்தியா  அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு  வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம்.   இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும்   FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG  பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய  இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த  பொருட்களை விற்பனை செய்ய அந்நிய  நிறுவனத்துக்கு   அரசு  அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது  PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.  


பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:  
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள  அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள்  தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE  SECTOR) என்று சொல்வார்கள்.  அந்த DEFENCE  SECTOR  என்று சொல்லப்படும்  செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான்  இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL  செக்டோர்கள்.  இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த  AMWAY நிறுவனமும்.  ஆனால் இது  இந்திய  நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம்.   நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.  இப்படி இருக்கும்போது இந்த AMWAY  நிறுவனம் DIRECT SALE  என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால்  DEFENCE SECTOR என சொல்லப்படும்  இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில்  நமது நாட்டில்  பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்  பாதிப்பு  முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.




இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம்    நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள்,  இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.




ஏமாற்றும் வழிகள்: 
இந்த நிறுவனத்தில்  யாரும்  பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ  அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ  அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு  ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்  ஆம்வே நிறுவனத்தால்  சம்பாதிக்கிறார்  என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது,  இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று  சொல்லிதான்  இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று  ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது  நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை  ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது. 


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம்  எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன  பொருட்களின் விலைகள்.


TOOTHBRUSH(1)                   - 19 ரூபாய்
HAIR OIL(500 ML)                 - 95 ரூபாய்
SHAVING CREAM(70G)          - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE)             -400 ரூபாய்         
FACE WASH                           -229  ரூபாய்
PROTIEN POWDER(1KG)      - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு  நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE))  விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


 நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE.  ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய  நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு  4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்  இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
  
► ஆம்வே  நிறுவனத்தில் ஒருவர்  இணைய வேண்டும் என்றால்  995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே  நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட  3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது  கட்டிய தொகை 995 ரூபாய். 


►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .


►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே  உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


 ►ஒருவன்  ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர்  இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995  ரூபாய்)


                                     100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும்  இதை 100 PV என்று சொல்வார்கள்.


                                   3000  x 100 = 300000 ரூபாய்
                                
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே  நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய்.  நிறுவனத்துக்கு  ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு  கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE)  சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


 இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால்  இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள்  அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர்.  ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது.  அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய்  (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)


இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள்  வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


     லட்ச்சங்களையும்,   கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.  ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்)  கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை  உணரும் வரைதான்.





இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
 தயவு செய்து இந்த பதிவை   உங்கள் நண்பருக்கோ அல்லது  உறவினருக்கோ இந்த  பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள்.  இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

         ----------------------------x---------------------------


நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் .  - வினையூக்கி

93 comments:

தமிழ் உதயம் said... | December 27, 2010 at 5:14 PM

இந்த AMWAY ஆட்கள் புன்னகைத்தாலே நான் ஓடி விடுவேன். ஒருவர் தேடி வந்து நமக்கு நல்லது செய்வதாக இருந்தால், அதில் ஏதோ சூது இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

கக்கு - மாணிக்கம் said... | December 27, 2010 at 5:24 PM

முன்புபோல இல்லை. ஆம்வே என்ற பெயரைக்கேட்டாலே நிறைய பேர்கள் ஓடிவிடுவார்கள். பத்திரிக்கைகளில் இவர்களின் தில்லு முல்லுகள் எல்லாம் வந்துவிட்டன.தங்களில் பதிவும் ஒரு சிறந்த விழிபுனர்வைதரும்.

கக்கு - மாணிக்கம் said... | December 27, 2010 at 5:26 PM

இணைப்பும் கொடுத்துவிட்டேன் என் தளத்தில்.

மாணவன் said... | December 27, 2010 at 5:56 PM

மிகவும் விழிப்புணர்வுடன் யோசிக்க வேண்டிய தகவல்களை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,பகிர்வுக்கு நன்றி நண்பரே

உளறுவாயன் said... | December 27, 2010 at 6:04 PM

மனிதரில் நான்கு வகையினர் உண்டு. 1 தனக்கு இது தெரியும் என்று தெரிந்தவர்கள். 2 தனக்கு இது தெரியும் என்று தெரியாதவர்கள்.contd....

உளறுவாயன் said... | December 27, 2010 at 6:04 PM
This comment has been removed by the author.
DrPKandaswamyPhD said... | December 27, 2010 at 6:06 PM

நல்ல பயனுள்ள பதிவு. ஆனால் நம் மக்கள் மக்களல்ல, மாக்களே. இன்னும் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

உளறுவாயன் said... | December 27, 2010 at 6:06 PM

தனக்கு இது தெரியாது என்று தெரிந்தவர்கள் 4 தனக்கு இது தெரியாது என்று தெரியாதவர்கள். இதில் நீங்கள் எந்த வகையில் என்பதை தெரிந்து உணர்ந்து எழுதினால் பதிவுகளுக்கு மதிப்பு உயரும்....

THOPPITHOPPI said... | December 27, 2010 at 6:25 PM

@உளறுவாயன்

பின்னூட்டத்தில் அதிகமான உளறல்.

பார்வையாளன் said... | December 27, 2010 at 6:26 PM

வெரி குட் . நல்ல சேவை. என் பதிவில் இணைப்பு கொடுத்துவிடுகிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 27, 2010 at 6:27 PM

united states of india

super

கே.ஆர்.பி.செந்தில் said... | December 27, 2010 at 6:36 PM

மல்டிலெவல் மார்கெட்டிங் என்பதே ஏமாற்றுவேலைதான்...

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 27, 2010 at 6:36 PM

ஆம் இவர்கள் நம் நாட்டை விட்டு துரத்த வேண்டிய கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை

தமிழ்மலர் said... | December 27, 2010 at 6:36 PM

பக்கத்துவீட்டில் சமீபத்தில் தான் ஆம்வேயில் சேர்ந்துள்ளார்கள். எங்களுக்கு எதிர்காலமே இதில் தான் உள்ளது என்று நம்புவதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு இதை எப்படி புரியவைப்பது?.

ஆம்வேவை பற்றி சொல்லபோனால் அவர்கள் ஆம்வே தாயாரிப்பை பற்றி நம்மிடம் விளக்குவார்களோ என்று பயமாக இருக்கிறது.

வீட்டுக்கு வீடு பேசும் பேச்சுகளின் விளம்பரம் தான் சக்திவாய்ந்தது. இதை ஆம்வே நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.

குறிப்பாக இவர்களின் தவணை முறை நன்றாக வேலைசெய்கிறது. சோப்பு ஆயில் ரூ.400 என்றால் யாரும் வாங்கமாட்டார்கள். இதே சோப்பாயிலை முதலில் கொடுத்துவிட்டு தவணை முறையில் வசூலிக்கிறார்கள்.

ஒருவித மூளைசலவையில் இருக்கும் இவர்களை எப்படி காப்பாற்றுவது? பெரிய ஊடகங்கள் இதை அம்பலப்படுத்தினால் மட்டுமே விழிப்புணர்வை கொண்டுவர முடியும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ராவணன் said... | December 27, 2010 at 6:39 PM

ஆம்வே என்றால் ஆப்பைத் தனக்குத்தானே சொருகிக்கொள்வது

தமிழ்மலர் said... | December 27, 2010 at 6:43 PM

ஆம்வேவின் நேரடி மருந்துவிற்பனையை உடனடியாக தடை செய்யவேண்டும். இது மிகப்பெரிய ஆபத்து. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பக்கத்துவீட்டுகார்களின்(ஆம்வே) பரிந்துரையில் மருந்து எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்து. இது மருந்துகடைகளில் சுயமாக மருந்து வாங்குவதை விட ஆபத்தானது.

ஆம்வே மருந்து விற்பனை குறித்து கூடுதல் தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அதை உடனடியாக சட்டப்பூர்வமாக தடுக்க முயற்சி எடுக்கலாம்.

THOPPITHOPPI said... | December 27, 2010 at 6:48 PM

@தமிழ்மலர்

இரண்டு மருத்துவர்களிடம் உதவி கேட்டுள்ளேன். எனக்கு சரியான விளக்கம் வந்தவுடன் கண்டிப்பாக அடுத்த பதிவில் மருத்துவம் சார்ந்த தகவல்களுடன் பதிவிடுகிறேன்.

சி. கருணாகரசு said... | December 27, 2010 at 7:24 PM

உங்க இந்த அக்கறை நிறைந்த பதிவுக்கு என் மனனிறைந்த பாராட்டுக்கள்..... இப்படி விபரங்கள் தெரிந்தவர்கள் தெளிவா எழுதினால் தான் மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்....

இதை மற்றவர்களுக்கும் தெரியவைப்பேன்..... மிக்க நன்றி.

வினையூக்கி said... | December 27, 2010 at 7:39 PM

அருமையான பதிவு . நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் .

நா.மணிவண்ணன் said... | December 27, 2010 at 8:35 PM

MLM லில் முதலில் என்ன கூறுவார்கள் என்றால் உங்களுக்கு லட்சம் முக்கியமா ? எங்களுடன் வாருங்கள் . சரியான ஏமாற்று காரர்கள் .எனக்கு இது நிறைய அனுபவம் உள்ளது .ஆனால் எதுலும் இது நாள் வரை சேர்ந்ததில்லை . நல்ல பகிர்வு .நன்றி .

விக்கி உலகம் said... | December 27, 2010 at 8:45 PM

இப்போ இவனுங்க குறி வச்சிருக்கிற marketing technique உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.

வீட்டில் இருக்கும் படித்த house wife - இவர்கள் மூலம் இப்போ ஈசியா பலரை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

நம்ம வீட்டு அறிவாளிகளும் நாம் சொல்வதை எப்போ கேட்டு இருக்கிறார்கள்!!

சந்திரசேகர் said... | December 27, 2010 at 9:16 PM

நல்ல பகிர்வு .நன்றி .

சங்கவி said... | December 27, 2010 at 9:24 PM

Very Good post....

சர்பத் said... | December 27, 2010 at 9:52 PM

தெளிவான பதிவு. இன்னமும் பைனான்ஸ் கம்பனியில் பணம் கட்டி ஏமாறும் மக்கள் தானே நாம் :)

பதிவுலகில் பாபு said... | December 27, 2010 at 9:56 PM

நல்ல விழிப்புணர்வுப் பதிவுங்க..முன்பு நிறைய மக்கள் இந்த ஆம்வேல சேர்ந்து ஏமாந்துட்டாங்க.. ஆனால் இப்போ நிறையப் பேர் உஷார் ஆயிட்டாங்க.. இருந்தாலும் புதுசுபுசுசா அவங்க மக்களை ஏமாற்றிட்டுத்தான் இருக்காங்க..

Ravi kumar Karunanithi said... | December 27, 2010 at 10:06 PM

மல்டிலெவல் மார்கெட்டிங் என்பதே ஏமாற்றுவேலைதான்...

enkittayum vandhaanungale.. but naanga escape aagitomla.

Arun Ambie said... | December 27, 2010 at 11:05 PM

என் வலைப்பதிவிலும் (http://hmsjr.wordpress.com/) உங்கள் இந்தப் பதிவைப் பகிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க பதிவு!

ZIA said... | December 27, 2010 at 11:10 PM

நல்ல தகவல் அடங்கிய பதிவு. விளம்பரம் இல்லாத விற்பனை என்று இப்பொழுது டி.வி விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது.

M.S.R. கோபிநாத் said... | December 27, 2010 at 11:56 PM

http://bhrindavanam.blogspot.com/2010/01/1.html . இதை முடிந்தால் படித்துப் பாருங்கள். உங்கள் பதிவு நன்றாக இருந்தது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... | December 27, 2010 at 11:59 PM

பாராட்டுக்கள், அவசியமான கட்டுரை. இந்த ஆம்வே இந்தியாவிற்குள் சமீபத்தில் வந்ததல்ல, 97-98லேயே இருந்ததாக ஞாபகம்.
மேலும் இவர்கள் என்னென்ன மருந்துகளை விற்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளமுடியுமா?

Indian said... | December 28, 2010 at 12:17 AM

சொம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கு போல!

பலே பாண்டியா/ said... | December 28, 2010 at 12:20 AM

நான் இதை எதிர்பார்த்து காத்திருந்தேன். நண்பரே எனது கல்லூரியிலும் இது போன்று ஒன்றும், இதுவும் உள்ளது. Dewsoft னு சொல்லி சும்மா online இல் free course என்று சொல்லி. 8,000 ரூபாய் கட்ட சொல்கின்றனர். ஆனால் எவனும் course படிக்கவே இல்லை. இதில் என்ன கொடுமைனா எங்கள் காலேஜ் இல் மட்டும் 500 பேர்கிட்ட இதில் இருக்காங்க (ஒரு சில மாணவிகள் கூட. ). என்னிடம் இது பற்றி என் வகுப்பு தோழன் வந்து பேசினான், நான் கொஞ்ச நாள் சமாளிச்சு பாத்தேன் அப்புறமா சொல்லிட்டேன், டே நான் இதெல்லாம் ஏமாத்து வேலைனு நினைக்கிறேன் என்னை இதில் இழுக்காதேனு . இப்போ கொஞ்சம் அது பத்தி பேசுறது இல்லை. ஆனால் ரொம்ப வருத்தமான விஷயம், அவன் கொஞ்சம் நல்ல படிக்கிறவன் ஆனா இப்போ காலேஜ் பக்கமே வர மாட்டேங்கறான். இன்னொருவன் இரண்டு வருடம் முன்னால் காலேஜ் விட்டு போய்ட்டான். இப்போ ITI படிக்கிறான். கொஞ்சம் யோசிச்சு பாருங்க B .E discontinue பண்ணிட்டு இப்படி எவானவது ஆவானா? இன்னும் சிலர் நிலை ரொம்ப மோசம் இதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. பணமும் கிடைக்குது ஆனால் அதெல்லாம் என்வனோ ஒருவன் விட்ட பணம் தானேன்னு இவங்களுக்கு தெரியல. இதுல தினமும் plan show அப்புறம் வாரம் ஒருமுறை மதுரைல மீட்டிங்னு கிளம்பரானுங்க. நெறைய மாணவர்கள் வாழ்க்கை வீணா போகுதுங்க. இந்த அரசாங்கத்துக்கு அழிக்க மட்டும் தான் தெரியுது நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்ய தோணவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் அதே நிலை தான். நாமளாதான் திருந்தனும். நீதிமன்றம் மூலம் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என சொல்லவும். அத்துடன் ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு கட்டுரை வந்து உள்ளது, அதில் இருந்தும் சொல்லுங்கள்.

பலே பாண்டியா/ said... | December 28, 2010 at 12:24 AM
This comment has been removed by the author.
பலே பாண்டியா/ said... | December 28, 2010 at 12:24 AM
This comment has been removed by the author.
பலே பாண்டியா/ said... | December 28, 2010 at 12:27 AM

என்னால் மீட்க முடிந்த என் நண்பர்களிடம் நான் இது பற்றி சொல்லி உள்ளேன். இனியும் சொல்லுவேன்.

பலே பாண்டியா/ said... | December 28, 2010 at 12:28 AM
This comment has been removed by the author.
Indian said... | December 28, 2010 at 12:56 AM

பதிவின் இரண்டாம் பகுதி ஓக்கே. முதல் பகுதி நெம்ப நெஞ்ச நக்கற மாதிரி இருக்கு. ப்ரீயா குடுத்தா பினாயில குடிக்கிற நம்ம சனங்க வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கறப்ப இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும்கறதையெல்லாம் யோசிப்பாங்க அப்படிங்கறது காமடியா இருக்கு.

ஆம்வேயின் சொந்த ஊரான அமேரிக்காவிலயே இந்தப் பேரக் கேட்ட உடனே தலைதெறிக்க ஓட்டமெடுப்பவர்கள் அனேகம் பேர்.

ஆம்வே தன்னை உய்விக்க வாராது வந்த வாய்ப்பு என திடமாக நம்புகிறவர்கள், விளக்கைத் தேடும் விட்டில்களைப் போல, பலமுறை டுபாக்கூர் பேர்வழிகளைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்தும் பினான்ஸ் கம்பெனியைத் தேடி ஓடும் பதர்களைப் போல, தானே பட்டுத் திருந்திதான் ஓய்வார்கள். அவர்களுக்கு ஆம்வேயின் முதல் பில்லியனராக நம் வாழ்த்துகள்.

Suresh said... | December 28, 2010 at 1:26 AM

நன்றி. நான் இருக்கும் அபர்த்மென்ட்'ல் ஒரு தமிழர் இதற்கஹவே என்னோடு பழகினார். நான் இதிலுருந்து தப்பி விட்டேன் . அதற்கு பிறகு என்னோடு பேசுவதில்லை. Its really helpful for others who does not know about this.

FARHAN said... | December 28, 2010 at 1:49 AM

அடிக்கிற கொள்ளையில் பத்தி அரசுக்கு போகும் போது இத தடுக்க யாரு வருவா?தொப்பி HATS OF TO YOU

FARHAN said... | December 28, 2010 at 1:49 AM

அடிக்கிற கொள்ளையில் பத்தி அரசுக்கு போகும் போது இத தடுக்க யாரு வருவா?தொப்பி HATS OF TO YOU

நண்டு @நொரண்டு -ஈரோடு said... | December 28, 2010 at 6:39 AM

அருமையா சொல்லியிருக்கீங்க .

வைகை said... | December 28, 2010 at 7:21 AM

மிகவும் விரிவான அவசியமான பதிவு!

வெறும்பய said... | December 28, 2010 at 7:36 AM

நல்ல விழிப்புணர்வுப் பதிவு

ஆமினா said... | December 28, 2010 at 8:38 AM

முன்பே இது போன்ற நிறுவனங்களில் நடக்கும் மோசடியை பற்றி எழுதுகிறேஎன் என நீங்கள் சொல்லும் நாளிலிருந்தே காத்திருந்தேன்....புட்டு புட்டு வைக்கிறதுன்னா இது தானா? நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை சகோ

சி.பி.செந்தில்குமார் said... | December 28, 2010 at 8:43 AM

அருமையான பதிவு.கலக்குங்க.விழிப்புணர்வு பதிவு

ஆனந்தி.. said... | December 28, 2010 at 9:18 AM

அருமையான விழிப்புணர்வு சகோ...என் உறவினர்களும் இந்த நிறுவனத்தில் இருந்து தான் இன்னும் டூத் பிரஷ் கூட வாங்குறாங்க...கேட்டால் அது தான் தரம்னு சொல்வாங்க...என்னவோ நமக்கு சுதேசி பொருள் மேலே என்னைக்கு நல்ல அபிப்ராயம் இருந்திருக்கு..அதான் வெளிநாட்டு காரன் ரொம்ப சுலபமா கடைய விரிசுடுறான்...நாமளும் கொஞ்சம் யோசிக்கணும் சகோ...ரொம்ப டீடைல் ஆ நீங்க விவரிச்சததுக்கு உங்களுக்கு நன்றி...நான் கட்டாயம் தெரிந்தவர்களுக்கு உங்க லிங்க் கொடுக்கிறேன்...

இரவு வானம் said... | December 28, 2010 at 10:05 AM

நண்பா கொஞ்ச நாளா கானோமேன்னு நினைச்சிட்டு இருந்தேன், வரும் போதே அருமையான கட்டுரையோடு வந்து இருக்கீங்க, கண்டிப்பா பல பத்திரிகைகள்ள வெளியிட வேண்டிய பதிவு இது, வாழ்த்துக்கள், நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் பகிந்து கொள்கிறேன், நன்றி

diva said... | December 28, 2010 at 10:31 AM

நண்பரே நானும் இந்த நிறுவனத்தில் சேர்க்கபட்டுளேன். இது வரை வாங்கிய வரையில் எந்த லாபமும் இல்லை. கூடுதல் முதலீடுதான். ஆனால் நான் உபயோஹித்த வரையில் சில பொருள்கள் தரம் வாய்ந்தவைதான். என்ன சிக்கல் என்றால் இதில் பணம் சம்பாதிக்க எல்லாம் முடியாது. அதெல்லாம் ரொம்பகாலம் market செய்யவேண்டும். இப்போ இருக்கிற சமுக பொருளாதார சுழ்நிலையில் Direct Sales எல்லாம் முடியாத காரியமே. அதனாலதான் இந்த sales torture கு அனைவரும் உந்தப்படுகிறார்கள். என் இதை அரசாங்கம் அனுமதிக்கிறது என்று பார்த்தால், இதன் முலம் கிடைக்கும் வரிபணமும், அந்நிய செலவாணியும் தான். நல்ல பதிவு, கோபம் கட்டாமல் இன்னும் தெளிவாக சொலியிருக்கலாம்.

ஆதவா said... | December 28, 2010 at 1:06 PM

மிக அருமையான கட்டுரை!!! நல்லவேளையாக நான் எந்த எம் எல் எம்மிலும் சேரவேயில்லை!!!நமது தொழிலை வளர்ப்போம்.. வளம் பெறுவோம்!!

hamaragana said... | December 28, 2010 at 1:16 PM

அன்புடன் வணக்கம் இந்த ஆம்வே கொள்ளை பற்றி முன்னமே தெரிந்தாலும் இன்னும் மக்கள் அதிலேதான் விழுகிறார்கள் எனது வீட்டிலே எனது மகன் சொல் கேட்காமல் சுமார் ஒரு லச்சம் வரை நட்டப்பட்டு படிப்பும் கெட்டுஐயோ கடவுளே !!நினைத்தாலே மனசு வலிக்கும்

hamaragana said... | December 28, 2010 at 1:17 PM

ஆனாலும் எனது உறவு ஆட்கள் புதிதாக தொடங்குகிறார்கள் சொன்னால் நாம் சம்பாதிப்பது பிடிக்கலை என்கிறார்கள் எங்கு போய் முட்ட போ போ நீயா நடப்பட்டு வருவே.. ??உங்கள் பதிவுக்கு நன்றி மேலும் இது போன்ற விஷயங்களை உரியுங்கள் !!

ரஹீம் கஸாலி said... | December 28, 2010 at 1:44 PM

நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை

Speed Master said... | December 28, 2010 at 2:39 PM

அருமைஈரோட்டில் தங்களை சந்திக்க ஆவல இருந்தேன்

இரவு வானம் said... | December 28, 2010 at 3:43 PM

தொப்பி தொப்பி சார், நமது நண்பர் ஒருவர் அருமையாக எழுதி வருகிறார், ஆனால் திரட்டிகளில் இணைப்பதில்லை, அவருடைய தளத்திர்கும் தாங்கள் சென்று படித்தாம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன், ஏன் என்றால் அவரும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என துடிப்பவர்தான்.

http://saigokulakrishna.blogspot.com/

seeprabagaran said... | December 28, 2010 at 4:26 PM

நான் மல்டி லெவல் மார்கெட்டிங்குக்கு எதிரானவன். சுமார் 15 ஆண்டுகளாக இதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறேன். தொடக்கத்தில் என்னை பிழைக்கத் தெரியாதவன் என்று சொன்னவர்களும், வாய்ப்பு கிடைக்கும் போது சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறியவர்களும் ஏராளம். அப்படி சொன்னவர்களில் பலர் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து “நீ சொன்னதை அப்போதே கேட்காமல் போய்விட்டேன்” என்று புலம்பியவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதும் என்னை பலர் (குறிப்பாக மாணவர்கள்) இந்த மல்டி லெவல் மார்கெட்டிங் என்ற கொள்ளை திட்டத்திற்கு பலர் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் ஒரு சில கருத்துக்களை சுருக்கமாகச் சொல்லி புன்னகையோடு அனுப்பி வைக்கிறேன்.

1. இது பிறரை ஏமாற்றும் திட்டம். “பிரமீடு” வடிவத்தில் உள்ள எந்தவொரு திட்டமும் கனிசமான அடிமைகளை எப்போதுமே கொண்டிருக்கும்.

2. இதில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்துங்கள் அல்லது ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்வை உயர்த்தும்.

3. உற்பத்தி சேவை சார்ந்த ஏதாவது ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். நீங்களே ஒரு பெரிய தொழிலதிபராக மாற வாய்ப்புள்ளது.

4. இதற்காக நாயாய் அலைவதைவிட உங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுங்கள். உங்களுக்கும் அறிவு வளரும் உங்கள் குழந்தைகளும் நன்றாக படிப்பார்கள்.

5. மொத்தத்தில் இந்த திட்டத்திற்கு நான் எதிரானவன். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்.

என்று சொல்லி அனுப்பிவிடுவேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said... | December 28, 2010 at 5:13 PM

மிகவும் விரிவான அவசியமான பதிவு! மிக மிக அருமை!! தொப்பிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை !!!

pepsi said... | December 28, 2010 at 5:54 PM

நல்லதொரு பதிப்பு நண்பா...

BORN TO WIN said... | December 28, 2010 at 6:15 PM
This comment has been removed by the author.
BORN TO WIN said... | December 28, 2010 at 6:20 PM

ஆம்வே கொள்ளைக் கும்பலின் விஞ்ஞான பூர்வமான கொள்ளை பற்றி கீழ்க்கண்டவலைப்பூக்களின் கட்டுரைகளில் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது .இவைகளுக்கு இணைப்பு கொடுத்து இளைன்ஞர்களை காப்பாற்றவும்.
http://exeagle.blogspot.com/
http://www.merchantsofdeception.com/
http://amwayscheme.blogspot.com/

http://thefactsabouttheamwayopportunity.blogspot.com/

http://corporatefraudswatch.blogspot.com/2010/12/all-amway-apologists-are-liable-to-be.html
http://professionalliars.blogspot.com/ http://amwayfunctions.blogspot.com/

சிவகுமாரன் said... | December 28, 2010 at 8:03 PM

12 வருடத்திற்கு முன்னால், திருச்சியில் என் பழைய கல்லூரி நண்பர்கள் ஒரு ஸ்டார் ஹோடேலில் ஆம்வே மீட்டிங் நடத்தி என்னை சேரச் சொல்லி வற்புறுத்தினார்கள். நானும் மயங்கினேன். ஆயிரம் ரூபாய் கட்ட கூட வழியில்லாமல் சேரவில்லை. நல்ல வேளை தப்பிச்ன்சேடா சாமின்னு பின்னாடி புரிஞ்சுகிட்டேன்.
உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்

சென்னை பித்தன் said... | December 28, 2010 at 9:10 PM

விளக்கமான,விழிப்புணர்வுப் பதிவு.

bala said... | December 28, 2010 at 9:46 PM

நல்ல பயனுள்ள பதிவு, ஆம்வே கொள்ளைக் கும்பலின் விஞ்ஞான பூர்வமான கொள்ளை,
விளக்கமான,விழிப்புணர்வுப் பதிவு. நான் மல்டி லெவல் மார்கெட்டிங்குக்கு எதிரானவன்.
நன்றி உங்கள் பதிவுக்கு , என்னால் முடிந்த வரை நான்மற்களை தடுத்து வருகிறேன் , இந்த மாதிரிமலம் எமர்ந்தவர் கதையை சொல்லியே . உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது . எந்த நாடும் வளம் பெறுவதும் வீணாய் போவதும் ஆள்பவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கு ...........

komu said... | December 29, 2010 at 11:20 AM

எது நல்லகும்பல், எது கொள்ளை அடிக்கற கும்பல்னு புரியவேமாட்டேங்குதே.

Lakshmi said... | December 29, 2010 at 12:04 PM

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களின் பாடு கொண்டாட்டம்தான்.

Anonymous said... | December 29, 2010 at 12:51 PM

அன்புள்ள நண்பர் தொப்பிதொப்பி,
வணக்கம்! வாழ்த்துக்கள்!!!

மக்களிடையே ஒரே நாளில் அல்லது மிக விரைவில் கோடீஸ்வரனாகி விட வேண்டும், பணம் எந்த(நேர்மையற்ற) வழியில் வந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை வேரூன்றி விட்டது! அதை புரிந்து கொண்ட விற்பனையாளர்களின் உத்தியே இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்.

இதில் சேரும் பலர் தன் உறவினர், நண்பர்களிடம் சேரச் சொல்லி கட்டாயப்படுத்தி அல்லது முக தட்சன்யதுக்காக சேர்ந்து நஷ்டப்பட்டு, உறவுகளையும் நட்பையும் இழந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மிக அருமையான, நல்ல பயனுள்ள, விழிப்புணர்வுப் பதிவு!

என் தளத்தில் இணைப்பும் கொடுத்துவிட்டேன்!
குறிப்பு:
படித்த நபர்களுக்கு வேலையில்லையா??? நம்ம தளத்துக்கு வாங்க! தினமும் புதிய பல வேலைவாய்ப்பு தகவல்களை படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து நல்ல வேலையை பெற வாழ்த்துகிறேன்!
கிடைக்கும் வேலையில் நன்கு நேர்மையாக உழைத்து முன்னேறுங்கள்!

அன்புடன்,
சாய் கோகுலகிருஷ்ணா.

Thaaye Thunai said... | December 29, 2010 at 4:36 PM

sir, neenga solluradhellaam saridhaan.
endha government vandhaalum idhudhaan vaazhkkai. makkalin vaazhkaiye emaaruvadhu dhaane!. 1765 crore makkal panam illaya, silar velinaattu mudhalikku baliyaahiraargal,silar ulnaattu mudalaikku baliyaahiraargal. avvalavudhaan. yenendraal velinaatu mudhalaiyai ulle viduvadhe ulnaattu mudalai dhaane. nammaal Ayyo Ayyo poche poche endru kattha thaan mudiyum. verenna saiya mudium.
ULARUVAANe ungalukku support pannaliya, avanum makklil oruvan thaane!

manjoorraja said... | December 29, 2010 at 4:59 PM

//இதில் சேரும் பலர் தன் உறவினர், நண்பர்களிடம் சேரச் சொல்லி கட்டாயப்படுத்தி அல்லது முக தட்சன்யதுக்காக சேர்ந்து நஷ்டப்பட்டு, உறவுகளையும் நட்பையும் இழந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், சொல்லக் கேட்டிருக்கிறேன்.//இது தான் உண்மை.

manjoorraja said... | December 29, 2010 at 4:59 PM

//இதில் சேரும் பலர் தன் உறவினர், நண்பர்களிடம் சேரச் சொல்லி கட்டாயப்படுத்தி அல்லது முக தட்சன்யதுக்காக சேர்ந்து நஷ்டப்பட்டு, உறவுகளையும் நட்பையும் இழந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், சொல்லக் கேட்டிருக்கிறேன்.//இது தான் உண்மை.

sivaa077 said... | December 29, 2010 at 5:01 PM

வாருங்கள் வந்து பாருங்கள் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ......... MNC நிறுவனங்கள் ஏந்திய பொருளாதரத்தையும் நிர்வானபடுத்துவார்கள். மணி கட்டியுள்ள நண்பருக்கு நன்றி. இதையாவது சாவுமணியாக்குமா அரசு...

sivaa077 said... | December 29, 2010 at 5:04 PM

வாருங்கள் வந்து பாருங்கள் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ......... MNC நிறுவனங்கள் ஏந்திய பொருளாதரத்தையும் நிர்வானபடுத்துவார்கள். மணி கட்டியுள்ள நண்பருக்கு நன்றி. இதையாவது சாவுமணியாக்குமா அரசு...

sivaa077 said... | December 29, 2010 at 5:06 PM

வாருங்கள் வந்து பாருங்கள் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ......... MNC நிறுவனங்கள் India'S பொருளாதரத்தையும் நிர்வானபடுத்துவார்கள். மணி கட்டியுள்ள நண்பருக்கு நன்றி. இதையாவது சாவுமணியாக்குமா அரசு...

வளர்மதி said... | December 29, 2010 at 8:55 PM
This comment has been removed by the author.
வளர்மதி said... | December 29, 2010 at 8:55 PM

நல்ல அலசல்..!!!
அப்பட்டமான உண்மை!!!. எல்லாம் அயல்நாட்டு மோகம், இங்கே உள்ள சோத்து கற்றாலையை எடுத்து aloe-vera என்று விற்பார்கள் அதை வாங்கி நாம் foreign product என்று நம் பணத்திமிரை காட்டிக்கொல்கிறோம். எல்லாம் பணம் இருக்கிறவன் ஆரம்பித்து வைத்தது.

அந்த 6000 ரூபாய்க்கு பொருளை வாங்கிவிட்டு அதை விற்க அவன் படும் பாடு இருக்கிறதே. அவனை கண்டாலே நண்பர்களும் உறவினர்களும் ஒட்டிவிடுவார்கள் ஆளை விடுட சாமி என்று. ஒருகட்டத்தில் வெறுத்து இந்த கொஞ்சம் ஆயிரத்துடன் போகட்டும் என்று விட்டுவிடுவான். ஆகமொத்தம் கம்பெனிக்கு கட்டுபடி ஆகாததால கம்பெனி சார்புல அல்வா கொடுக்கப்படும்.

இதை எல்லாம் செய்யறது யாருன்னு பத்திங்கான நல்ல படிச்ச முட்டாள்கள் தான். ஒரு நபரை செர்த்துவிடும்போது அவனுக்கும் தெரியும் இது எந்தளவில் சத்தியம் என்று இருந்தாலும் அவன் போட்ட காசை எடுக்கனுமே அதானால் அவனை சேர்க்கும் போது என்ன என்ன சொன்னன்களோ அதையே சொல்லி இன்னொருத்தனை மாட்டிவிட்டுட்டு அவன் தொலச்சதுல கொஞ்சம் எடுக்க பார்க்கிறான்.

கல்வி அறிவு இருந்தால் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்து தான் "Dr.கலாம்" 2020 ல் கனவுகண்டார். அனால் இப்போது தனிமனித ஒழுக்கம், சுயனலமின்ன்மை, போன்ற அடிப்படை நல்லொழுக்கங்கள் தான் மிக முக்கியமானவை.

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

ஆமினா said... | December 29, 2010 at 9:05 PM

உங்களுக்கு விருது கொடுத்துருக்கேன்!!!

மறக்காம/மறுக்காம வாங்கிக்கோங்க

http://kuttisuvarkkam.blogspot.com/

Kathiravan said... | December 29, 2010 at 11:46 PM

Very Nice Sir

மதுரை பாண்டி said... | December 30, 2010 at 9:52 AM

நல்ல அலசல்... தேவையான பதிவு!!!

LOKESH said... | December 30, 2010 at 12:37 PM

According to my opinion we cant and should not stop these products,we are always attracted towards western influences,the company may charge extra but at least its giving business to lower class people, which India don't.
but i am not supporting these products anyways. if Indian products start selling like this i will be much happier so that everybody can come up and can listen to things. jai hind

Suriya said... | December 30, 2010 at 11:02 PM

எனக்கு என்னோவோ சரி தான் என்று தோன்றுகிறது .... இன்றைய சூழ்நிலையில் சரியாக இருக்குகிரர்கிறாக்கள் .. அப்படி பார்த்தல் யாருமே எதையும் வாங்க முடியாது .,

yeskha said... | December 31, 2010 at 11:15 PM

இந்த ஆம்வே மூலம் இருமுறை நான் நண்பர்கள் மூலம் மூளைச்சலவை முயற்சிக்கு ஆளானேன். இருமுறையும் தப்பி விட்டேன். அதை விடுங்கள்.

இப்போது இதே எம்.எல்.எம் கான்செப்டில் ஜி7 மொபைல் கம்பெனி (ஜி7 லேப்டாப் காரர்கள் தான்) தன்னுடைய தகர டப்பா மொபைல்களை களம் இறக்கியுள்ளது. சைனா மேக் ஸ்டைலில் இருக்கும் (இரண்டாயிரம் ரூபாய் கூடப் பெறாத) இதனை நாலாயிரம், ஆறாயிரம், எட்டாயிரம் என்ற விலைகளில் களம் இறக்கி விற்று வருகிறது ஜி7. ஃபீச்சர்ஸ் எதுவுமே இல்லையே என்று யாரேனும் கேட்டால் இது உங்களை இலட்சாதிபதியாக்கும் போன். இலட்சம் வேணுமா? ஃபீச்சர்ஸ் வேணுமா என்று கேட்கிறான்கள்... அதைப்பற்றியும் கொஞ்சம் தகவல் திரட்ட வேண்டும்.

"மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்" என்ற என்னுடைய பதிவில் ஓரளவு விபரங்கள் கொடுத்துள்ளேன்.
http://yeskha.blogspot.com/2010/11/blog-post_23.html

Anonymous said... | January 1, 2011 at 1:01 PM

மிக மிக நல்ல பதிவு.......வாழ்த்துக்கள்......

chan said... | January 4, 2011 at 8:44 AM

i am in america. this multilevel marketing is a bullshit. here nobody bothers about amway or herbalife. In India peaple in middle class want to make money and that is the reason they join. but will loose all the money and endup using the amway product for themselves.

Clemi said... | January 13, 2011 at 4:00 PM

There is no useful message from this advertisement.the message shows you did not know about this business. Nobel price nominee do this business. we are not efficient compare with noble price nominee.
if you know English see.... www.amway.in what is the principle of the business. if you did nt do this business. 90 days time period, you can return the product. if your message is correct, 95 countries didnt accept business (including china,japan), dont waste your time for problem of others. First analysis yourself.you can achive it. jai hinth

Mani said... | January 18, 2011 at 4:03 AM

@Clemi,
Since you posted your comments based on the tamil post, I think that you can read TAMIL. Then why do you want to show-off your half-baked english barking with point-less argument?
The biggest problem for our nation is "HALF-BAKED selfish, exploitary" individuals like you. You guys are worse than illiterates, goondas and factionist who are mostly illiterates (low-income group) brain-washed by "supposed-to-be" intellectuals like you. I presume that you are already an AMWAY shark feasting on many innocent victims or a victim who want to hide your self-pride.
Eitherway, I pity and despise you for your low self-esteem and pride.
Kindly dont underestimate others intelligence (especially a Tamilan intelligence) by asking "If you know English" and Lastly dont use "Jai hind" since you are neither an Indian nor worthy human.
Kudos to THOPPITHOPPI.. Keep it up!

rose said... | January 18, 2011 at 12:53 PM

Amway is very good business.No one can not cheat u.i read all comments, from your comments.whose suffered from this business?howmany members did this business and left it?if u want more information,let me know.No one cheat INDIANS

rose said... | January 18, 2011 at 12:53 PM

Amway is very good business.No one can not cheat u.i read all comments, from your comments.whose suffered from this business?howmany members did this business and left it?if u want more information,let me know.No one cheat INDIANS

thirupoondi tntj said... | February 11, 2011 at 4:40 PM

அருமையான பதிவு . நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் . by a.m jalal

AshIQ said... | February 19, 2011 at 2:19 PM

ஆம்வேயின் ஏமாற்று வேலை இருக்கட்டும், முதலில் இந்திய பொருளின் தரத்தை உயர்த்த சொல்லுங்கப்பா, அதுக்கு அப்பறம் மத்ததெல்லாம் தன்னால நடக்கும். நம்ம ஆளு நல்ல சரக்கொ கொடுத்த எதுக்கு கண்டவன் சரக்கையெல்லாம் வாங்கப்போறோம். நம்மளும்தான் நம்ம தயாரிப்புகள் குறித்து விளம்பரமெல்லாம் கொடுக்கிறோம், ஆனா அதையும் மீறி சில அன்னியப்பொருள்கள் நுகர்வோரை கட்டிப்போட்டுள்ளதே, அதற்கு காரணம் தரம்தானே? அண்ணியப்பொருட்களை அறவே நிராகரித்து வாழ்தல் சத்தியமா சாத்தியமில்லை. அந்த Amway Product ஐ நானும் கண்டுள்ளேன். அதாவது உணவுப்பொருட்கள், மருந்துபொருட்கள் இவ்விரண்டிற்கும் தரம் மிகவும் முக்கியமானது, இவ்விரன்டும் தரமற்றுப்போனால் உயிரோடு விளையாடும் விளைவுகள் எல்லாம் நேரிடலாம். அதுனால முதலில் நாம தரமான உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் உற்பத்திசெய்தபின் அன்னிய்ப்பொருட்களை விரட்டலாம். நான் சொன்ன இந்த விஷயம் நிறையபேருக்கு பிடிக்காதுதான்..அதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது, எனக்கு நியாயமா தெரிஞ்சதை சொன்னேன் அவ்வளவுதான்.
அன்புடன்
பஹ்ருதீன்

BACQRUDEEN said... | February 19, 2011 at 3:03 PM

ஆம்வேயின் ஏமாற்று வேலை இருக்கட்டும், முதலில் இந்திய பொருளின் தரத்தை உயர்த்த சொல்லுங்கப்பா, அதுக்கு அப்பறம் மத்ததெல்லாம் தன்னால நடக்கும். நம்ம ஆளு நல்ல சரக்கா கொடுத்த எதுக்கு கண்டவன் சரக்கையெல்லாம் வாங்கப்போறோம். நம்மளும்தான் நம்ம தயாரிப்புகள் குறித்து விளம்பரமெல்லாம் கொடுக்கிறோம், ஆனா அதையும் மீறி சில அன்னியப்பொருள்கள் நுகர்வோரை கட்டிப்போட்டுள்ளதே, அதற்கு காரணம் தரம்தானே? ஆம்வேயின் Nutrilite Protein Powder பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதனால பெரும்பாலான முதியவர்கள் பலமடைந்து பலண்டைந்துள்ளார்கள். உடலின் புரோட்டின் குறித்த குறைபாடுகளுக்கு Amway கிட்டத்தட்ட ஒரு நல்ல தீர்வாகவே இருந்து வருகிறது (இவ்வாறு சொல்வதினால் நான் ஆம்வே வியாபாரத்தில் தொடர்பு உள்ளவன் என என்னிவிடவேண்டாம் இதைப்பற்றி தெரிந்திருந்ததால் சொல்கிறேன்) அண்ணியப்பொருட்களை அறவே நிராகரித்து வாழ்தல் சத்தியமா சாத்தியமில்லைங்க. முடியும் எப்படி முடியும் என்றால் மிக நேர்மையாக இல்லேனாலும் ஓரளவுக்காவாது உணவுத்துறையில் உள்ள அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நேர்மையாகவும், பொறுப்புடனும், பொதுநோக்குடனும் செயல்பட்டால் கலப்படமற்ற தரம் மிக்க மருந்து பொருட்களையும் உணவுப்பொருட்களையும் கண்டிப்பாக 100% மக்களுக்கு வழங்கிட முடியும். அதன் பின்பு வேண்டுமானால் சுதேசியாக செயல்படலாம். அதாவது உணவுப்பொருட்கள், மருந்துபொருட்கள் இவ்விரண்டிற்கும் தரம் மிகவும் முக்கியமானதுங்க இல்லீங்களா? இவ்விரன்டும் தரமற்றுப்போனால் உயிரோடு விளையாடும் விளைவுகள் எல்லாம் நேரிடலாம். அதுனால முதலில் நாம தரமான உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் உற்பத்திசெய்தபின் அன்னிய்ப்பொருட்களை விரட்டலாம். நம்முடைய ஆரோக்கியம்தான் முதலில் முக்கியம். அதுனால விழிப்புணர்வு சொல்றேன் பேர்வழினு ஒரு தரமான பொருட்கள் கிடைத்துக்கொண்டிருப்பதை கெடுத்துவிடவேண்டாம். மத்தப்படி மார்க்கெட்டிங்கல ஏமாத்துறான் என்றால்..நீங்க ஏன் சார் ஏமாறுரீங்க..நாமெல்லாம் படிச்சிருக்கோம்தானே? இங்கே கேட்ட எல்லா கேள்வியையும் அந்த நிறுவனத்தாரிடம் தொடர்பு கொண்டு கேட்கவேண்டியதுதானே? அவன் தான் வெப்சைட்லாம் வச்சு எதாவது கேட்கனும்னு கேளுங்கனு கூவிகிட்டுதானே இருக்கான்? அங்கே போயி கேட்டு அந்த விபரங்களை இங்கே சொல்லவேண்டியதுதானேன்றேன்? அது ரெம்ப பலனுள்ளதாவே இருக்கும் இல்லையா? நான் சொன்ன இந்த விஷயம் நிறையபேருக்கு பிடிக்காதுதான்..அதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது, எனக்கு நியாயமா தெரிஞ்சதை சொன்னேன் அவ்வளவுதான். தொப்பி தொப்பி உங்கள் சேவைப்பணி சிறக்க வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க! நலமுடன், வளர்க வளமுடன்
அன்புடன்
பஹ்ருதீன்

Anonymous said... | March 7, 2011 at 11:29 AM

Sir neenga solradhu sarithan enkita oruvarvandhu ippadithan sonnar.nankuda seralam ninechen.ana ippaneenga sonna msg very super.ennaku innum niraiya vilakam thevai ennaudiya mobile no9750771740 please call me.ungaludiya contact No kodunga ok
INDIAN

Vairavan said... | October 19, 2011 at 12:45 PM

நானும் ஆம்வே நிறுவனத்தில் சேர்ந்துள்ளேன். பொருட்கள் தரமானவைதான். ஆனால் விலை ரொம்ப அதிகம். இதில் சம்பாதிக்க முடியாது என்பது நிஜமே.

ganesh said... | October 20, 2011 at 9:35 PM

what you said is wrong. Soap cost is Rs.5 only. It sells Rs.37. But the 70% difference goes to Amway members only but not immediately when we make net work. The details are you have given is immuture

b positive said... | November 3, 2011 at 1:04 AM

I agree with you, NEGATIVE IS AUTOMATIC (like without any effort unwanted plants are grown up automatically in paddy field)

where as POSITIVE NEEDS PATIENCE AND BELIEF WITH HARD EFFORTS.

I got some evidence about amway, pls go thru youtube site and simply type "amway diamonds". just visit www.brittindia.com and go to IBO site then go through the Leaderships.

presently I trust more than 90 countries amway business has huge market, it includes CHINA (is number one leading amway market among the world amway),second is JAPAN.


http://nutrilite.com.sg/images/img4.jpg


http://www.amwaywiki.com/Nutrilite

Readers Digest magecine has awarded the Amway Nutrilite brand as Most trusted dietary supplementary products in the world.

I recommend all the people that "One's life is not determined by future" it is "if one wants to win in life and future, he needs to focus only habits"

Stay positive, be excited, be a good dreamer, learner, put systematic action, u will be in top"

b positive said... | November 3, 2011 at 1:09 AM

I agree with you, NEGATIVE IS AUTOMATIC (like without any effort unwanted plants are grown up automatically in paddy field)

where as POSITIVE NEEDS PATIENCE AND BELIEF WITH HARD EFFORTS.

I got some evidence about amway, pls go thru youtube site and simply type "amway diamonds". just visit www.brittindia.com and go to IBO site then go through the Leaderships.

presently I trust more than 90 countries amway business has huge market, it includes CHINA (is number one leading amway market among the world amway),second is JAPAN.


http://nutrilite.com.sg/images/img4.jpg


http://www.amwaywiki.com/Nutrilite

Readers Digest magecine has awarded the Amway Nutrilite brand as Most trusted dietary supplementary products in the world.

I recommend all the people that "One's life is not determined by future" it is "if one wants to win in life and future, he needs to focus only habits"

Stay positive, be excited, be a good dreamer, learner, put systematic action, u will be in top"

indha business-il win panna mothalla "nallavanaga maranum, piragu nalla dreams varum,nalladhai learn pannuvanga, systematic action poduvaanga... massive success pannuvaanga.

neenga epdi?