திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது

Sunday, December 5, 2010
 http://www.treehugger.com/20090702-india-parliament.jpg
              

                         "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது..."   இந்த  பாடல்  வரிகள் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த  திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் . இந்த பாடல் வரிகளை இதுவரை நாம் கேட்க்கும்போதெல்லாம்  பசிக்காக திருடியவனுக்கான  அறிவுரை பாடல் என்றுதான் நினைத்திருப்போம் ஆனால் இது அவனுக்காக எழுதப்பட்ட பாடல் கிடையாது  அவர் சொன்ன திட்டம் வேறு நாம் புரிந்து கொண்ட திட்டம் வேறு. அவர் சொன்ன திட்டத்தை  உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் "சேது சமுத்திர திட்டம்",  "நூறு நாள் வேலை  திட்டம்", "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திட்டம்", " "கார்கில் வீடு திட்டம்", " டெல்லி காமன்வெல்த்  திட்டம்" இன்னும் பல மக்கள் நலப்பணி திட்டம் வர இருக்கின்றன. இப்படி இவர்கள்   மக்கள் நல  திட்டம் போடுவதெல்லாம் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக  கிடையாது, அரசியல் தர்மத்துக்காக.

இப்ப இந்த பாடல் வரிகளை படிச்சி பாருங்க உங்களுக்கே புரியும்.


திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது 

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம் 
கீழும் மேலும் புரளாது! 


                               சேது சமுத்திர திட்டம் -அவசர அவசவரமாக  ஆரம்பிக்கப்பட்டு மக்கள் வரிப்பணத்தை  கடலில் கொட்டி இப்போது எதுவும் நடக்காததுபோல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக சொல்கிறது கொள்ளை கும்பல் கூட்டம். பல ஆயிரம் கோடிரூபாய் முதலீட்டில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது என்றால் அதில் என்ன பிரட்ச்சனை உள்ளது இதனால் மக்களுக்கு என்ன பயன் உள்ளது என்று முதலில் ஆராய்ந்திருக்க வேண்டும். பல ஆண்டுகள் கோரிக்கை வைக்கப்பட்ட திட்டம் என்ற ஒன்றை மட்டும் வைத்து இவர்களுக்கு  கமிஷன்  கிடைக்க வேண்டும் என்பதற்காக  திட்டம் பற்றி ஆராயாமல் தடாலடியாக கோடிகளை கடலில் கொட்டயுள்ளனர். நம் கண்ணுக்கு தெரிந்த  காமன்வெல்த், ஸ்பெக்ட்ரமிலே  இவ்வளவு பெரிய ஊழல்  நடந்துள்ளது என்றால் நம் கண்ணுக்கு தெரியாத கடலுக்கடியில் எவ்வளவு பெரிய ஊழலால் நடந்திருக்கும்?.  சேது சமுத்திர திட்டம்  முழுமை அடைந்தால்  கடல் ஆழம் 12 மீட்டர் இருக்கும் என கூறப்படுகிறது இந்த ஆழத்தில் 30,000 டன் எடைக்கு மேல் உள்ள கப்பல்கள் போக முடியாது என கூறுகிறார்கள்  , அப்படிபார்த்தால் மிக எடை உள்ள கப்பல்கள் போக முடியாது.  இந்த வழியில் செல்ல சிறப்பு மாலுமிகள் வேறு  நியமிக்க வேண்டுமாம்  இதனால் கப்பல் நிறுவனங்களுக்கு லாபம் குறைவுதான்  போதாகுறைக்கு மிக வேகத்திலும் போக முடியாதாம் இப்படி பல இன்னல்கள் இருக்கும்போது  எப்படி போட்ட முதலை அரசு  எடுக்க முடியும்?. இதில்  ராமர் பாலம் பிரட்சனை வேறு பெரிய தடங்களை ஏற்ப்படுத்தி உள்ளது.  இவ்வளவு பிரச்சனைகளையும் முன்கூட்டியே  ஆராயாமல் இந்த திட்டத்தை  ஆரம்பித்து இப்போது கிடப்பில் போட்டுள்ளார்கள்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கும் என்று.
                                  
                                                        இப்படி எதில் தொட்டாலும் ஊழல் நடக்க காரணம் அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் இப்போது தேர்தலில் செய்யும் செலவை முதலீடாக பார்ப்பதுதான். அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் சேவை என்பது மாறி இப்போது கொல்லை கும்பலும், ரவுடிகலும்  விரைவில் பணம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது.  2008 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக ப.ஜ.க நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்த போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பிரதம்  மன்மோகன் முகேஷ் அம்பானியை பார்க்க செல்கிறார்,  வாக்குப்பதிவு நாளன்று  கத்தை கத்தையாக பணத்துடன் எதிர்க்கட்ச்சியின் நாடளுமன்றத்தில் பணத்தை காட்டுகிறார்கள் இவ்வளவும்  120 கோடி மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  இந்நிலையில்  கடந்த இரு வாரங்களாக  நாடாளுமன்றம் முடங்கி போய் உள்ளது, காரணம் ஒரு கொள்ளை கும்பல் கூட்டுக்குழு வேண்டும் என்கிறது இன்னொரு கொல்லைகும்பல் முடியாது என்கிறது இதில் எதிர்க்கட்ச்சியினர் எதிர்ப்பார்ப்பது கூட்டுக்குழுவா இல்லை கொள்ளையில் பங்கா என்பது தான் எனது சந்தேகம்.
                                
                                                      இப்படி இந்த கொள்ளை கும்பல்களுக்குகெல்லாம்   இன்னும் எத்தனை  நாட்களுக்கு தான்  ஓட்டு போட போகிறோம்.  தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக இருக்க தலித்  என்ற ஒரு தகுதி போதுமா? கப்பல் போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருக்க மூப்பனாரின் மகன் என்ற ஒரு தகுதி போதுமா?  ரசாயனத்துரைக்கு  அமைச்சராக இருக்க முதல்வரின் மகன் என்ற ஒரு  தகுதி போதும்? இப்படி இந்த தகுதிகள் போதும் என்றால் கல்லூரியில் கணக்கு பாடம் எடுக்க நாடார், அறிவியல் பாடம் எடுக்க வன்னியன், பொருளியல் பாடம் எடுக்க யாதவரை நியமிக்க வேண்டியது தானே?.  இனி அப்பன் செத்தால் மகனுக்கு பதவி, புருஷன் செத்தால் பொண்டாட்டிக்கு பதவி என்பதெல்லாம் மாறவேண்டும்.  கணக்கு வாத்தியார் செத்துட்டாருணா அவர் பொண்டாட்டி கணக்கு எடுக்க முடியுமா இல்லை அவர் மகன்தான் கணக்கு எடுக்க முடியுமா?  தகுதி வேண்டாம்.  
                                     
                                                      இனி வரும் தேர்தலிலாவது மாற்றம் வரவேண்டும் உள்த்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் IPS/IAS தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும், ராணுவ அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் ராணுவத்தில்  மேஜராக இருந்திருக்க வேண்டும், சட்டத்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் வழக்கறிஞ்சராக  இருந்திருக்க வேண்டும்  இப்படி அந்தந்த துறைக்கு தகுதியானவனை நியமிக்கும் சட்டம் வந்தால் தான் ரவுடியும், செத்தவனின் மகனும் பொண்டாட்டியும்  அரசியலுக்கு வராமல் தடுக்க முடியும்., படித்த இந்திய மக்களே இதை முன்னிறுத்தியாவது  இனி வரும் காலங்களில் கோரிக்கை வையுங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துங்கள். 
                          

44 comments:

ஜீ... said... | December 5, 2010 at 8:38 PM

//"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது..."//

ஓட்டுப் போடும் கூட்டமும் தொடர்ந்து போட்டுக்கொண்டே இருக்குதே! :-)

KANA VARO said... | December 5, 2010 at 8:42 PM

இந்த பாடல் பல சமயங்களில் உதாரணம் காட்டுவதற்கு தேவைப்படுகின்றது. வாழ்க எம்.ஜி.ஆா்...

ம.தி.சுதா said... | December 5, 2010 at 9:17 PM

எரியிற வீட்டில் உள்ள தணிமணி எடுத்து தம் மாபிள் தரை துடைக்கும் இவர்களை சமூகத்திலிருந்து துடைக்க வேண்டும்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

அன்பரசன் said... | December 5, 2010 at 9:40 PM

//"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது..."//

:)

asiya omar said... | December 5, 2010 at 10:50 PM

இதுவும் பொருந்துவது போல் தான் இருக்கு.

கக்கு - மாணிக்கம் said... | December 5, 2010 at 11:22 PM

இன்னமும் எழுதுங்கள். தொடருங்கள்.

பாரத்... பாரதி... said... | December 5, 2010 at 11:22 PM

//இன்னும் பல மக்கள் நலப்பணி திட்டம் வர இருக்கின்றன//

தடுக்கிற கூட்டம் இலவசம் வாங்க, கியூவில் நின்றுக் கொண்டிருக்க , யார் இதை மாற்றுவது...

பாரத்... பாரதி... said... | December 5, 2010 at 11:22 PM

//இன்னும் பல மக்கள் நலப்பணி திட்டம் வர இருக்கின்றன//

தடுக்கிற கூட்டம் இலவசம் வாங்க, கியூவில் நின்றுக் கொண்டிருக்க , யார் இதை மாற்றுவது...

ஹரிஸ் said... | December 5, 2010 at 11:24 PM

மிக நல்ல பதிவு பாஸ்...கடைசி பத்தி சிறந்த வழிகாட்டல்..

பாரத்... பாரதி... said... | December 5, 2010 at 11:24 PM

தொப்பி,தொப்பி அவர்களே...நீங்கள் இன்று எங்கள் வலைப்பூவிற்கு வந்தீர்கள் ஆனால் எங்கள் பதிவுக்கு வாக்களிக்க வில்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஏன் கோபமா?

பாரத்... பாரதி... said... | December 5, 2010 at 11:26 PM

//கணக்கு வாத்தியார் செத்துட்டாருணா அவர் பொண்டாட்டி கணக்கு எடுக்க முடியுமா இல்லை அவர் மகன்தான் கணக்கு எடுக்க முடியுமா? தகுதி வேண்டாம்.
//

அனல் பறக்கிறது..

பாரத்... பாரதி... said... | December 5, 2010 at 11:28 PM

//எதிர்க்கட்சியினர் எதிர்ப்பார்ப்பது கூட்டுக்குழுவா இல்லை கொள்ளையில் பங்கா என்பது தான் எனது சந்தேகம். //

வழிப்போக்கன் - யோகேஷ் said... | December 6, 2010 at 1:00 AM

//
கணக்கு வாத்தியார் செத்துட்டாருணா அவர் பொண்டாட்டி கணக்கு எடுக்க முடியுமா இல்லை அவர் மகன்தான் கணக்கு எடுக்க முடியுமா?
//
நச்சின்னு சொன்னீங்க...........

philosophy prabhakaran said... | December 6, 2010 at 5:15 AM

என்னவொரு ஆராய்ச்சி... ஆனாலும் உருப்படியான ஆராய்ச்சி ஆதலால் பாராட்டுக்கள்...

philosophy prabhakaran said... | December 6, 2010 at 5:17 AM

இடுகைக்கும் முன்போன்றும் பின்போன்றுமாக ஓட்டுப்பட்டைகளை நிறுவுவது எப்படி என்று சொல்லித்தர முடியுமா...?

சங்கரியின் செய்திகள்.. said... | December 6, 2010 at 6:44 AM

நெத்தியடி........

தொடருங்கள், நண்பரே......அருமை.

பார்வையாளன் said... | December 6, 2010 at 7:47 AM

எந்த கல்வி தகுதியும் தேவையில்லாத வேலை, அமைச்சர் வேலைதானே !!

விக்கி உலகம் said... | December 6, 2010 at 8:01 AM

விஜய் படம் எடுக்குற டைரக்டர் கிட்ட போய் கதை என்னன்னு கேட்ட மாதிரி இருக்குது உங்க கேள்வி.

இதுக்காக தான் நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். ஆனா நான் ஆட்சிக்கு வரும் போது தான் அத சொல்லுவேன் - இப்படிக்கு அடுப்புக்கரி

விக்கி உலகம் said... | December 6, 2010 at 8:04 AM

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே -

எ.கா. விக்கிலீக் உடைத்த அமெரிக்கா எனும் தேங்காய்.

வைகை said... | December 6, 2010 at 8:07 AM

திட்டம் போடறதே திருடுரதுக்குதானே!! இதுக்கு நான் முன்பு எழுதுய பதிவு சரியா இருக்கும்! " எத்தனை யுகங்கள் வேண்டும்"

நாகராஜசோழன் MA said... | December 6, 2010 at 10:27 AM

நீங்கள் சொல்வது உண்மைதான். அவர்கள் போடும் திட்டம் அவர்கள் திருடத்தான்.

//கொல்லைகும்பளும்//

நண்பா இது போன்ற எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.

நா.மணிவண்ணன் said... | December 6, 2010 at 10:36 AM

நல்ல பதிவு . திட்டத்திற்கு மேல் திட்டமாக போட்டு திருடும் திருட்டு கூட்டங்கள் அரசியவாதிகளும் அரசாங்க உயர் அதிகாரிகளும்

தமிழ் உதயம் said... | December 6, 2010 at 11:42 AM

ஓட்டுக்கு பணம் கொடுத்து, இலவசத்துக்கு மேல இலவசம் கொடுத்து, திருட்டுக்கு நம்மளயும் பங்காளி ஆக்கிட்டாங்களே.

THOPPITHOPPI said... | December 6, 2010 at 11:49 AM

///
தமிழ் உதயம் said...

ஓட்டுக்கு பணம் கொடுத்து, இலவசத்துக்கு மேல இலவசம் கொடுத்து, திருட்டுக்கு நம்மளயும் பங்காளி ஆக்கிட்டாங்களே.
///////////////////////

என்னுடைய நோக்கமே வரும் தேர்தலுக்குள் பதிவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான். இது விரைவில் சாத்தியமானால் பாருங்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பவனுக்கு பதிவர்கள் வைப்பார்கள் வேட்டு

Vinoth said... | December 6, 2010 at 11:54 AM

அரசியல் வாதிக்கு தகுதி வேண்டும் என்ற வாதிற்கு எத்தனை இட்டுகட்டினாலும் அது எடுபடாது.

தகுதி இருந்தால் இன்னும் சிறப்பு என்று வேண்டுமானல் சொல்லலாம்.

அரசமைப்பு சட்டத்தை முழுமையாக படித்து பர்ரும். அப்போது தெரியும் எது சரி என்று

முஹம்மத் ஆஷிக் said... | December 6, 2010 at 12:23 PM

சகோதரர் தொப்பிதொப்பி,
உங்கள் ஆதங்கம் ஒவ்வொரு நேர்மையான இந்தியக்குடிமகனுக்கும் இருக்கும் ஒன்றுதான்.

அரசியல்வாதியாக தகுதி என்று ஒன்று அவசியம் வரவேண்டும்தான். மறுப்பதற்கில்லை. ஆனாலும், பூனைக்கு எந்த பூனை மணிகட்டும்?

பாராளுமன்றத்தில் பேசக்கூடத்தேரியாமல், கல்வி அறிவற்ற நிலையில், அவ்வளவு ஏன், தாய்மொழியில் கையெழுத்துக்கூட போடத்தெரியாமல் எல்லாம் அரசியலுக்கு வருபவர்களைப்பற்றி என்ன சொல்ல?

அப்படியே ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டியில் பட்டம் பயின்று வந்தாலும் அவர் ஊழல் செய்யாமல் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஹூம்... எல்லாம் அவரவர் தாய் தந்தையர் வளர்க்கும் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட வளர்ப்பிலும், நன்னெறி போதனை கல்வியுடன் கூடிய நேரிய வாழ்வியல் கோட்பாடும், யாரும் பார்க்காவிட்டாலும் தவறு செய்யாமல் தடுக்கும் இறையச்சமுமே நல்ல அரசியல்வாதிகளை நமக்குத்தரும்.

அரசியல்வாதிகள் தனிப்பிறவிகள் அல்லர். நம்மிலிருந்து வந்தவர்கள்தான் அவர்கள். நாம்தான் அவர்கள். நல்லோர் நிறைந்த நாட்டில் நல்ல அமைச்சர்கள் நிறைவோர்.

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 6, 2010 at 2:17 PM

நிச்சயமா உங்க யோசனைகள் வரவேற்க்ககுடியவை..அப்பன் செத்தா மகன் அடுத்த தலைவர் என்னும் பரிதாப கொல்ளையை தடுக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 6, 2010 at 2:18 PM

நம்ம நாட்டுலதான் இப்படி கேவலமான அரசியல்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | December 6, 2010 at 2:19 PM

பிச்சைகார நாடு,அழுக்கு நாடு என்ற பெயர் போய் ஊழல் நாடு என்ற பெயர் பெற்று தந்து விட்டார்கள்

இரவு வானம் said... | December 6, 2010 at 4:26 PM

எப்படிங்க இப்படி எல்லாம் எழுதறீங்க? சான்சே இல்லை போங்க, உங்களோட ஆதங்கம்தான் எல்லோருக்கும், கண்டினியூ பண்ணுங்க.

சென்னை பித்தன் said... | December 6, 2010 at 5:10 PM

திட்டம் என்ற சொல்லுக்கு இதுதான் உண்மையான பொருள் போலத் தோன்றுகிறது!

வெறும்பய said... | December 6, 2010 at 6:13 PM

அவங்க திருடிட்டு தான் இருக்கிறாங்க.. நம்ம ஏமாந்திட்டு தான் இருக்கிறோம்..

பாரத்... பாரதி... said... | December 6, 2010 at 7:05 PM

//எந்த கல்வி தகுதியும் தேவையில்லாத வேலை, அமைச்சர் வேலைதானே !!//

venkat said... | December 6, 2010 at 7:16 PM

நல்ல பதிவு நண்பரே.

//நம் கண்ணுக்கு தெரிந்த காமன்வெல்த், ஸ்பெக்ட்ரமிலே இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது என்றால் நம் கண்ணுக்கு தெரியாத கடலுக்கடியில் எவ்வளவு பெரிய ஊழலால் நடந்திருக்கும்?. \\

மக்கள் ஈனா - வானா வாக இருகிறவை அரசியல்வாதிகளுக்கு கொண்டாம்தான்.
நல்ல பதிவு நண்பரே.

Chitra said... | December 6, 2010 at 8:06 PM

வேதனையான நிஜங்கள். ம்ம்ம்ம்.....

மாணவன் said... | December 6, 2010 at 8:23 PM

அருமை நண்பரே,
உணர்ச்சிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பணி...

Jayadev Das said... | December 6, 2010 at 10:22 PM

//இனி வரும் தேர்தலிலாவது மாற்றம் வரவேண்டும் உள்த்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் IPS/IAS படித்திருக்க வேண்டும், ராணுவ அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் ராணுவத்தில் மேஜராக இருந்திருக்க வேண்டும், சட்டத்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் வழக்கறிஞ்சராக இருந்திருக்க வேண்டும், பிரதமராக இருக்க வேண்டும் என்றால் முதல் அமைச்சராக இருந்திருக்க வேண்டும்.// அப்படியொன்றும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. விப்ரோவின் அஜிம் பிரேம்ஜிக்கு கம்பியூட்டரைப் பற்றியும், மென்பொருள் பற்றியும் என்ன தெரியும்? இருந்த போதும் இந்தியாவின் மிகச் சிறந்த மென்பொருள் நிறுவனத்தை நடத்த வில்லையா? கர்ம வீரர் காமராஜர் ஐயா எவ்வளவு படித்திருந்தார்? இருந்தபோதும் தமிழக முதல்வர்களில் அவரைப் போல மக்கள் தொண்டாற்றியவர் உண்டா? சச்சின் டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரன்தான், ஆனபோதிலும் அவரால் இந்திய அணியின் கேப்டனாக ஜொலிக்க முடிந்ததா? எனவே தலைமைப் பொறுப்புக்கு சிறந்த தலைப் பண்புகளும், ஆளுமையும், திறமையுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.

Jayadev Das said... | December 6, 2010 at 10:29 PM

//பல ஆயிரம் கோடிரூபாய் முதலீட்டில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது என்றால் அதில் என்ன பிரட்ச்சனை உள்ளது இதனால் மக்களுக்கு என்ன பயன் உள்ளது என்று முதலில் ஆராய்ந்திருக்க வேண்டும்.// அவரும் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் வரும் என்றுதான் பார்த்தார். [மக்கள் என்றால் பெற்ற பிள்ளைகள் என்ற பொருளும் உண்டு! வள்ளுவர் "தம் மக்கள்" என்று சொல்கிறாரே!]. சேது சமுத்திர திட்டத்தில் முதலில் கால்வாய் தோண்டலாம், அந்த காண்டிரக்டுகள் மூலம் கொள்ளைப் பணம் கமிஷனாக வரும், அப்புறம் சீக்கிரமே அந்தப் பள்ளம் மூடப் பட்டுவிடும், மீண்டும் தூர் வார வேண்டும், அதற்கும் கான்டிரேக்ட், கமிஷன் என்று மீண்டும் மீண்டும் காலா காலத்துக்கும் கமிஷன் வந்துகொண்டே இருக்கும் , அவரது பிள்ளை, பேரன், கொள்ளு, எள்ளு பேரன் என்று எல்லா மக்களும் சுகமாக இருப்பார்கள். இந்த மக்கள் நன்மையை மனதில் வைத்துத்தான், பாடையில் போகும் வயதிலும், "பிறந்த நாள் பரிசாக அந்த சேது பாலத் திட்டத்தைக் கொடுங்களேன்", என்று எல்.கே.ஜி. பிள்ளை சாக்லேட் வாங்கித் தரச் சொல்லி கேவிக் கேவி அழுவதுபோல மஞ்சள் துண்டு அழுதது. தமிழன் கேட்ட நேரம் என்று விலகுமோ தெரியவில்லைடா சாமி.

Jayadev Das said... | December 6, 2010 at 10:34 PM

நீங்க நினைக்கிற மாற்றங்கள் வரவேண்டுமானால் சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் உயிரையும், செல்வங்களையும் தந்து தன்னலமில்லாமல் நாட்டு நலனுக்காக போராடியது போல இன்னொரு சுதந்திரப் போராட்டம் வந்தால் தான் இந்தத் களவாணித் திருட்டு நாய்களிடமிருந்து விடுதலை உண்டு. அதற்க்கு சுபாஸ் சந்திர போஸ் போல இன்னொரு தலைவர் வர வேண்டும். இப்போது நல்லவன் யாரும் கண்ணில் படவில்லை, அப்படியே நல்லவர்கள் வந்தாலும் நமது திருட்டு நாய்கள் காசு கொடுத்தான் கள்ள வோட்டு போட்டுமே ஜெயித்து விடும். வயது ஆக ஆக கொஞ்சமாச்சும் நல்லவர்களாக ஆக வேண்டும், இங்கே ஒருத்தன் சில்லரையாகப் போய் கொண்டிருக்கிறான். என்ன செய்வது?

சுருதிரவி..... said... | December 6, 2010 at 10:34 PM

எப்போ குவாட்டருக்கும், கோழிபிரியாணிக்கும்,200க்கும்,500க்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போட்டார்களோ அப்போதே இதெல்லாம் எப்படி சம்பாரிச்சாங்கண்ணு யோசிச்சிருக்கணும் பொதுஜனங்க..அதவுட்டுட்டு அரசியல்வாதிங்கன்னா அடிப்பாங்கதான்,அவிங்ககிட்டேருந்து நாம ஏதாவது கறக்கலாம்னா இதுதான் சமயம்னு தேர்தலை பயன்படுத்திகிட்டா இதையெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும் பொதுஜனங்க..

பிரியமுடன் பிரபு said... | December 7, 2010 at 8:18 AM

ennamo ponga ....

enna solliyum use illa...

Jayadev Das said... | December 7, 2010 at 11:30 AM

//இனி அப்பன் செத்தால் மகனுக்கு பதவி, புருஷன் செத்தால் பொண்டாட்டிக்கு பதவி என்பதெல்லாம் மாறவேண்டும். //மன்னராட்சி காலத்தில் அப்பனுக்கப்புரம் மகன், பேரன் என்று தலைமுறை தலைமுறையாக குடும்ப ஆட்சி நடக்கிறது, மேலும் மன்னர்கள் மக்கள் வரிப் பணத்தை தங்களது சுகத்துக்காகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள், மன்னர்கள் கொடுங்கோலர்கள் ஆதலால் மக்களாட்சி வேண்டும் என்று சொன்னார்கள். இப்போது மக்களாட்சிதான் நடக்கிறது, ஆனால் அந்த நிலை மாறிவிட்டதா? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி [அடுத்து ராகுல் காந்தியாக இருக்கலாம்] என்று குடும்ப சொத்தாக மாறி விட்டதே? தமிழகத்திலும் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி அப்புறம் அவர்களுக்குப் பிறந்த வெங்காய நிதி, பூண்டு நிதி என்று ஊருபட்ட நிதிகள் வேறு இருக்கிறார்கள். மன்னராட்சி காலத்திலாவது மக்கள் பணம் உள்நாட்டிலேயே மன்னருடைய கஜானாவில் தங்கமாகவோ, நவரத்தினகலாகவோ இருக்கும், ஆனால் இப்போது இந்தியப் பணம் முழுவதும் சுவிஸ் வங்கியில் அல்லவா தூங்கிக் கொண்டிருக்கிறது? நம் மக்கள் இங்கு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு வாடிக் கொண்டிருக்கும் போது நமது பணம் என்பது லட்சம் கோடி ரூபாய் வேறு ஏதோ ஒரு நாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறதே? திருடன் கையில் வீட்டின் பீரோ சாவியைக் கொடுத்த மாதிரியல்லவா நாம் மஞ்சள் துண்டு, அவருடைய அடியாள் ராசா போன்றவர்களை ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறோம்? நாட்டையே காட்டி கொடுக்கும் இந்த களவாணிப் பயல்களை என்ன செய்வது? மக்களாட்சி என்பது அமேரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற விவரமான மக்கள் வாழும் நாடுகளில் நன்றாக இருக்கும், பிரியாணி பொட்டலத்தை வாங்கி தின்றுவிட்டு ஓட்டு போடும் அற்ப புத்திக் காரர்கள் வாழும் நாட்டில் அது எடுபடாது.

Kalidoss said... | December 8, 2010 at 10:49 AM

தொலை நோக்கு இல்லாத திட்டங்கள்.
பொருள் விரயம்.மக்கள் நலனில் அக்கறையில்லாத தலைவர்கள்....
எங்கே போகிறோம்?.எதிர் காலம் ஒரு கேள்விக் குறியாய் உள்ளது.மாற வேண்டுங்க.மாற்ற வேண்டுங்க...
நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை இருக்குங்க ..

Anonymous said... | December 10, 2010 at 9:06 PM

ஆம் நண்பா சரியாகச் சொன்னீர்கள்..........