கொக்கா மக்கா 22/11/2010

Monday, November 22, 2010
பதிவர்கள் உதவியால் ஒரு சிறுவனுக்கு செவி கேட்க்காமை சரி செய்யப்பட்டது என்று   கேபிள் ஷங்கர்  வலைத்தளத்தில் படிக்கும்போது சந்தோஷம்மாக  இருந்தது, இது நமக்கு தெரிந்த ஒருவர் மட்டும்தான். பதிவர் சந்திப்பை இன்னும் பலப்படுத்தி நம்மால் முடிந்த வரை நிதி திரட்டினால்(நமக்குள்) இன்னும் பலர் பயனடைவார்கள்.   எத்தனை நாட்களுக்குதான் அரசை குறை கூறி பதிவுகள் போட போகிறோம்? நாம் திரட்டும் சிறு நிதியை கொண்டு  அரசு செய்யாத சிறு பிரச்சனைகளையும்  நாம் சரி  செய்யலாம்.அரசு பள்ளிகளுக்கு ப்ளாக்  போர்டு பெயிண்ட் அடிப்பது, குப்பை தொட்டி இல்லாத இடங்களில் குப்பை தொட்டி வைப்பது என பல சிறு ப்ரட்ச்ச்சனைக்கு நாமே தீர்வு கண்டால் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.  படித்த நாமே இன்னும் எத்தனை நாட்களுக்கு வெட்டிப்பேச்சை பேசி ஓட்டுபோடுவது, ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யலாமே?
 _________________________________________________

பதிவர்கள் தங்களுக்குள் ஏதேனும் மனக்குறை இருந்தால் மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பிரட்ச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள் தயவு செய்து அதற்காக ஒரு பதிவு போட வேண்டாம், இதனால் இவருக்கு ஒரு ஆதரவாளர் அவருக்கு  ஒரு ஆதரவாளர் என நமக்குள் பிரிவினைதான் வரும்( இன்ட்லியில் ஓட்டு குறையும், தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழும் தேவையா?). பத்திரிக்கையாளர்கள் கூட எழுதமுடியாமல் பயப்படும் விஷயத்தை நாம் தைரியம்மாக எழுத ஒரு சந்தர்ப்பம்(வலைப்பதிவு)  கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 _________________________________________________

ஆங்கில மருந்துகள்  பக்கவிளைவுகளை  ஏற்ப்படுத்தும் என பலர் பக்கம்பக்கமாக வசனம் பேசினாலும் மீண்டும் மாட்டிக்கொள்வது அதே ஆங்கில மருந்தில்தான் காரணம் இயற்க்கை மருந்து(சித்தமருந்து) எங்கு கிடைக்கும் என்று தெரியாததே அல்லது மருந்து கடைகளில் சென்று கேட்க்க கூச்சம். அப்படிப்பட்டவர்கள் சென்னை பாரிமுனை(parrys ) க்கு வந்து போகும் வாய்ப்பு கிடைத்தால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள "குறளகம்" என்னும் இடத்துக்கு மறக்காமல் வந்து போகவும் இது  அரசு "கோ ஆப் டேக்ஸ்" பின்புறம் உள்ளது, இதுவும் அரசு நடத்தும் விற்பனை நிலையம் தான். இங்கு பல இயற்க்கை மருந்துகள், ஆன்மிக பொருட்கள், இயற்க்கை உணவுகள், வீட்டு அலங்கார பொருட்கள் அரசு நிர்ணயித்து விலைக்கு கிடைக்கும்(பேரம் பேச தேவை இல்லை).
பி.கு: இங்கு வருபவர்களுக்கு எந்த பொருளை கண்டாலும் வாங்க ஆசை வரும் அதனால் தேவைக்கு அதிகமாக பணம் எடுத்து வர வேண்டாம் . குறிப்பாக  பெண்களை உடன் அழைத்து வருபவர்கள்.
 _________________________________________________

அரசியல் தலைவர்கள்  பெண்கள் ஓட்டை கவருவதற்காக தகுதியே இல்லாத பெண்களை முக்கிய பதவிகளில் அமரவைக்கின்றனர்(உதாரணம்: தலையாட்டி பொம்மை  பிரதிபா பாட்டில், அதுவும் அப்துல் கலாம் இடத்தில்). எப்படியோ போகட்டும் இதனால் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இதே அரசியல் பேருந்தில் இருப்பது ஆண்களை மட்டம்தட்டுவது போல் உள்ளது. பெண்களுக்கு தனி இருக்கை  என்று இருப்பது நல்லதுதான்(எங்கள் வீட்டு பெண்களும் ஆண்களின் உரசல் படாமல் செல்ல) அதற்காக ஆண்கள் பேருந்தில் அமரவே முடியாத நிலை தேவைதான என தோன்றுகிறது. பெண்கள் தங்களுடைய இருக்கை காலியாகி விட்டால் நேராக ஆண்கள் இருக்கும் பக்கத்தில் தான் வந்து உட்க்காருகின்றனர்(அந்த சீட் கடைசி பேருந்து நிலையும் வரும் வரை  பெண்கள் இருக்கை தான்). இனி வரும் காலங்களில் இரண்டே ஜாதி தான் போல தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி.
தாழ்ந்த ஜாதி- ஆண்.
உயர்ந்த ஜாதி- பெண்.
 _________________________________________________

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்ப லச்சியமே எங்கள் வீட்டுக்கு டிவி வாங்குவது தான். பல நாட்கள் பணத்தை சேமித்து   பழைய டிவியை ஒருவரிடம் இருந்து வாங்கினோம் அன்றிலிருந்து பலநாட்களுக்கு என் கனவில் டிவி தான் வந்து போனது இந்த சந்தோஷம் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை இடி பகவான் ஒரு இடியை போட்டு வீட்டில் இருந்த அனைத்து மின்சார பொருட்களையும் நாசம் செய்து விட்டு போனார்(அப்போதிருந்த சூழ்நிலைக்கு அது எங்களுக்கு பேரிழப்பு). ஆனால் விடாமுயர்ச்சியால் மீண்டும் சாதித்தோம் மூன்றே ஆண்டுகளில்  இன்னொரு second hand டிவி வாங்கினோம், அன்றில் இருந்து இன்று( LCD எல்லாம் வாங்கியாச்சி)  வரை ஒரு சிறு மழை பேய்தால்கூட எங்கள் வீட்டில் எல்லோரும் செய்யும் முதல் காரியம் கேபிள் ஒயரை  டிவி யில் இருந்து பிடுங்குவது தான். ஆனால் இன்னும் மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு வரவில்லை தொடர்ந்து வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது டிவி. நீங்களாவது உங்களுக்கு தெரிஞ்சவுங்க கிட்ட சொல்லுங்க.
 _________________________________________________

 சில தனியார் தொலைக்காட்ச்சிகள் இப்போது கேள்வி பதில் போட்டி நடத்துவது போல் நமக்கு தெரிந்த கேள்வியையே கேட்டு தொலைப்பேசியில் பதில் சொல்லுங்கள் என்று போட்டி நடத்துகின்றனர்( சூர்யா, ஜோதிக முகத்தை காட்டி இவர்கள் யார்னு கேட்க்குதுங்க). இந்த நிகழ்ச்சியில் இவர்கள் கொடுக்கும் பரிசு தொகை வெறும் 10000 , 15000 ரூபாய்தான் எதற்க்காக சொல்கிறேன் என்றால் இவர்கள் தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்துக்கு பிடிக்கும் சார்ஜ் பத்து ரூபாய், கால் வேய்ட்டிங்கில் இருந்தால் கூட. கணக்கு போட்டு பாருங்கள் எவ்வளவு பெரிய கொள்ளை என்று.
 _________________________________________________

ஜோக்: 

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி: எருமைனாயக்கம் பட்டினு ஒரு ஊர் இருந்துச்சே அது தெரியமா உனக்கு?
அஜித்: தெரியாது.........
நீதிபதி: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சி போ............


ஜீவன்: அவள தூக்குரண்டா.... உனக்கு வலிக்கும்டா.... நீ அழுவடா.......
சூர்யா: அவள தூக்குனா உனக்குதான் வலிக்கும். ஏனா அவ ரொம்ப வேயட்டுடா.........

 _________________________________________________

நான் ரசித்த புகைப்படம்:


http://news.nationalgeographic.com/news/2006/10/photogalleries/child-labor/images/primary/raid-crying-boy-big.jpg
(இந்த சிறுவன் ஏதோ சொல்கிறான், முகத்தை பார்த்து தெரிந்துக்  கொள்ளுங்கள் )

 _________________________________________________


                                                                                       -கூகுள்
 _________________________________________________

நான் ரசித்தது:(மவுஸ் கர்சரை அந்த பெண் முகத்தில் வைத்து கொஞ்சம் ஆட்டிப்பாருங்கள்).


 _________________________________________________

 நகைச்சுவை புகைப்படம்:

http://www.indiaonrent.com/forwards/f/funny-animated-wallpapers/res/64kr_2.gif

 _________________________________________________

கொக்கா மக்கா 15/11/2010

Monday, November 15, 2010

இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியாத்தனம்மா என்னுடைய கணினியில் மாதத்தை மாற்றிவிட்டேன்  நவம்பர்க்கு பதிலாக ஏப்ரல் என்று. அவ்வளவுதான் என்னால் ப்ளாக்காரில் லாகின் செய்யமுடியல , மற்ற தளங்களில் பின்னூட்டம் போடமுடியல எப்பா தலையே சுத்துற மாதிரி இருந்தது.  ஊமை மாதிரி மற்றதளங்களுக்கு சென்று படிப்பதோடு சரி. நானும் firefox ரீஇன்ஸ்டால் செய்துபார்த்துட்டேன் OS மாத்தி பார்த்துட்டேன் வைரஸ் ஸ்கேன் செய்து பார்த்துட்டேன் ஒன்னும் வேலைக்காகல. கடைசியா ஒவ்வொன்றாக சரி செய்து பார்க்கும்போது தான்  கணினியில் மாதத்தை சரி செய்து பார்த்தேன்  அதன்பின் தான் என்னால்  பதிவு போட முடிந்தது.
****************************************************************************************************************
நேற்றுதான் மைனா படம் பார்த்தேன் பயப்புள்ளைங்க என்னாமா நடிச்சிருக்குங்க. தமிழ் சினிமாவில் இப்போது மாஸ் ஹீரோக்கள் படங்களை விட இதுபோன்ற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களை மக்கள் வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள் நல்லதுதான். ஆனால் ஒருசிலர் படம் எடுக்கிறேன் என்று கண்ட கருமத்தை படம் பிடித்து போடுகின்றனர், திருட்டு சிறுக்கின்னு ஒருபடத்தோட  புகைப்படங்களை பார்த்தேன் அந்த படத்த  எடுத்தவனை  நாடு கடத்துவதே சிறந்தது.

இந்த புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்(குடும்பத்தோடு படிப்பவர்கள் பார்க்க வேண்டாம் ):

http://ottran.com/wp-content/flgallery/images/2svyhz49.jpg
http://lh4.ggpht.com/_OMHy_G6FX48/TK2RB6YfckI/AAAAAAAAHZQ/aTYNzKbVlVI/Thiruttu-Sirukki-1.jpg

நாம் முயன்றால் இதுபோன்ற படங்கள் வெளிவருவதையும், பல பெண்களின் வாழ்க்கை சீரழிவதையும் தடுக்க முடியும்.
***************************************************************************************************************
சென்னையில் பொருட்காட்சி நடக்கும்போதெல்லாம் அங்கே வண்ணமீன்கள் வைக்கப்பட்டு உள்ளே செல்ல கட்டணத்தொகை வசூலிக்கப்படும் நாமும் பணத்தை செலுத்தி உள்ளே சென்று பார்த்தால் இருட்டில் ஏதோ ஒரு சில மீன்கள் மட்டுமே பார்க்கமுடியும். இதுப்போன்ற வண்ணமீன்களை பார்க்க விரும்புபவர்கள்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள மூர் மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களை நேரம் இருக்கும்போது பார்க்கவும். தரை தளத்திலும் முதல் தளத்திலும் பல விலை உயர்ந்த வண்ணமீன்கள் விற்கும் கடைகள் உள்ளது அந்த வழியாக செல்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பல வண்ணமீன்களையும், பறவைகளையும் இலவசமாக பார்க்கலாம். குழைந்தைகளை அழைத்து சென்றால் ஒரு பொருட்காட்சி போன்று தான் வேடிக்கை பார்ப்பார்கள்.
பி.கு: மூர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் பேரம் பேச தெரிந்திருக்க வேண்டும், மற்ற இடங்களை விட இங்கே குறைந்த விலைக்கு பொருட்களை  வாங்கிவிடலாம்.  புதிதாக செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு வீடு திரும்பினால்  நிம்மதியோடு  திரும்பலாம்.
****************************************************************************************************************
அரசியலில் தேர்தல்  பயம் இப்போதே நம் அரசியல்வாதிகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது. பல ஆர்ப்பாட்டங்களில் ஜெயலலிதா பேசும்போது நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி அமையும் என்று சொல்லும்போதெல்லாம்  நான்கூட ஏதோ மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்காங்க போல என்று நினைத்திருந்தேன். ஆனால்  மறைமுகமாக ஆங்கில தொலைக்காட்ச்சி வழியாக பேட்டி கொடுக்கிறேன் என்று சீப்பாக காங்கிரஸ்சை கூட்டணிக்கு அழைத்ததை பார்க்கும்போது   கருணாநிதியின் அரசியல் தந்திரங்களில்  இவர் குழந்தையாகதான் தெரிகிறார்.  அதே போல்  மேடையில் பேச எழுதிகொடுப்பவர்கள் தரம் கெட்ட வார்த்தைகளையும் எழுதி கொடுக்கின்றனர். ஒரு முன்னாள் முதல் அமைச்சருக்கு  இப்படியா எழுதிகொடுப்பது. இவர் மேடைகளில் மைனாரிட்டி தி.மு.க அரசு என்று சொல்லும்போதெல்லாம் "20  மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தவன் 35  மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவனை பார்த்து "ஜஸ்ட் பாஸ்" "ஜஸ்ட் பாஸ்" என்று கிண்டல் செய்வது போல்தான் உள்ளது.(( அண்ணே நீங்க SSLC  பெயில்னே நான் எட்டாங்க்லாஸ் PASS) FAIL பெருசா பாஸ் பெருசா? ).
***************************************************************************************************************
எங்க ஊர்ல்ல பாட்டன் பூட்டானில் இருந்து எங்க தாத்த அப்பா வரைக்கும் எல்லாரும்  படிக்க ஆசைப்பட்டு இப்ப எங்க தலைமுறையினர்தான் படிக்க ஆரம்பிச்சி இருக்கோம்  ஆனால்  இந்த பெருசுங்க பண்ற தொல்ல இருக்கே தாங்க முடியல எதுக்கெடுத்தாலும் "படிச்சிருக்கல இது கூட தெரியாதா"  இந்த ஒரு கேள்விதான். சாத்துக்குடிய நேரா  வேட்டலனா கூட இந்த கேள்விதான் கேக்குதுங்க .  ஸ்கூல்ல என்ன சாத்துக்குடி எப்படி வேட்டுரதுனா சொல்லிதராங்க.
****************************************************************************************************************
என்கவுண்டர் பண்ணனும்:
             சில நாட்களுக்கு முன்பு கோவையில் என்கவுண்டர் பண்ணதா கேள்வி பட்டேன் இதே மாதிரி எங்க ஊர்ல்லையும் ஒருத்தன என்கவுண்டர் பண்ணனும். ஒரு சின்ன ப்ளாஷ்  பேக்,  அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கும் நான் நாலாவ்ம்பு படிச்சிகிட்டு இருந்தேன்  என் வகுப்புல படிச்ச கவிதா ரொம்ப அழகா இருப்பா நான் எங்க வீட்டு மரத்துல இருந்து புளியங்காலாம் பரிச்சி கொடுத்து அவள உசார் பண்ணி வெச்சி இருந்தேன் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் திடிர்னு ஒருநாள் அஞ்சாவது படிச்சிகிட்டு இருந்த ராஜான்ற பையன் அவுங்க வீட்ல்ள இருந்து கொருக்களிக்காவ பறிச்சிட்டு வந்து அவளுக்கு கொடுத்து உசார் பண்ணிட்டான். அன்னையில்ல இருந்து அவ எங்கிட்ட சரியா பேசுறது இல்ல அப்படியே  நாள் ஆக ஆக என்ன மறந்துட்டா. இப்ப அவ எங்க இருக்கானு தெரியல. ஆனால் கொருக்களிக்காவ கொடுத்து என் ஆள உசார்ப்பன்னவன் இன்னைக்கு ஏதோ ஒரு மூலைல சந்தோஷமா சிரிச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கானு நினைக்கும்போது என்னால நிம்மதியா தூங்க  முடியல. சைலேந்திர பாபு சார் அவன எப்படியாவது என்கவுண்டர் பண்ணுங்க  சாரி  பண்ணுறோம்.
****************************************************************************************************************
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், அரசு கொடுத்த இலவச தொலைக்காட்ச்சியை தலையில் சுமந்து கொண்டு ஒரு முதியவர்  நடந்து வரும்போது எதிர்பாராமல் ரோட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் கால் தடுமாறி  கிழே விழுந்து விட்டார். அதனால் அவருக்கு காலில் பலத்த  காயம் ஏற்பட்டு  அவர் தலையில் வைத்திருந்த டீவியும் கீழே விழுந்து உடைந்து விட்டது. நம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எது முக்கியம் டீவியா இல்ல நல்ல சாலையா. இது போன்ற இலவசங்களை  மக்கள் ஆதரிக்காமல் எதிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்த தேர்தலில்  CD PLAYER இலவசமாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
***************************************************************************************************************
 ஜோக்:
 முன்பெல்லாம் சர்த்தார்ஜி ஜோக் அப்படினாதான் பேமஸ் ஆனால் இப்ப இந்த ஜோக் சொன்னாதான் சிரிக்கிறாங்க

http://2.bp.blogspot.com/_ZWmAxH1YBC0/SGIEsHGNaXI/AAAAAAAADd0/6dQwNR3Q8ig/s320/image002-780784.jpg

***************************************************************************************************************
கவிதை:

http://lh4.ggpht.com/_8ge30S9ih80/R5a0PCYBLEI/AAAAAAAAAlM/JBdncSqPJOk/s640/friends4.jpg

****************************************************************************************************************
அப்போ:  கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
இப்போ:  மின்சாரம் வெங்காயம் தட்டுப்பாடு.
**************************************************************************************************************** 
நான் ரசித்த புகைப்படம்:

http://almostfit.com/wp-content/uploads/2009/08/rima-sad-face.jpg
***************************************************************************************************************

 நகைச்சுவை   புகைப்படம் :
http://pigimail.com/funny-pictures/gallery/c7d4c17278f8997f39f5de3aef0e85e5.gif
 ***************************************************************************************************************
 

கொக்கா மக்கா 5/11/2010

Friday, November 5, 2010


http://2.bp.blogspot.com/_orZtZMfkcDI/SR_hEh7K-HI/AAAAAAAABtM/I3Qzh0__dXI/s400/funny-kids-in-swimming-pool.jpg

                                                               நாகரீக வளர்ச்சி என்று பெண்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்ற ஆடைகளை பெண்கள் அணிவது  வேண்டுமானால் நாகரீக வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ப்ரா, ஜட்டி போன்றவற்றை  மட்டும் போட்டுக்கொண்டு  தொலைகாட்சி நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்ப்பதை எதில் எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.  இவள்களை பார்த்துதான் ஓடுகாலிகள் அதிகரிக்கின்றன. 

*****************************************************************************************************************
கொலை கொள்ளை கடத்தல் போன்றவை அதிகரிக்க சினிமாதான் இப்போது பெரும் உதவியாக இருக்கிறது. ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் கொலை செய்யும் விதம், அஞ்சாதே படத்தில் போலீசில் இருந்து தப்பிக்க சிம்கார்டை பேருந்தில் அனுப்புவது, அயன் படத்தில் கடத்துவது என இப்போது மொள்ளமாரிகளுக்கு டிப்ஸ் எடுத்து கொடுப்பதே சினிமாதான்.  கடத்தல்காரர்கள்  பெண்களை கடத்தினால் பணம் மட்டும்தான் பறிப்பார்கள்.  ஆனால் அஞ்சாதே படத்தில் பெண்களை கற்பழித்தால் தான் போலீசில் சொல்ல மாட்டார்கள் என்ற டிப்ஸ் கொடுத்தார்கள். அயன் படத்தில் போலிஸ் ரைட் என்றவுடன் மிளகாய் தூளை தூவுவது என புதிது புதிதாக டிப்ஸ் கொடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள். என்னைகேட்டால் சமுதாயம் சீரழிய முதல் காரணமே சினிமாதான் என்று சொல்வேன்.

உதாரணம்: சிந்து சமவெளி - நாயே நீ நடக்குறத தான் சொல்லுற நான் இல்லன்னு சொல்லல ஆனால் 100 ல ஒன்னு நடந்தா அத 100 க்கு 50 னு  உருவாக்கிடுற. நீ சிந்து சமவெளி எடுத்து இப்ப சந்துல சிந்து பாய வெச்சிட்ட.


             நல்ல வேலை  அந்தகாலத்தில் சினிமா இல்லை அதனால் ராவணன் சீதையை கடத்தியதோடு விட்டான். அதே ராவணன் இப்போதிருந்திருந்தால் சீதையை கடத்தி ரேப் செய்து உடலை  புதைத்து கைவிரலை ராமன் வீட்டு வாசலில் தொங்க விட்டிருப்பான்.
*****************************************************************************************************************
தமிழ் வலைப்பதிவுகள்  வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்றால் சந்தேகமே.  பல பிரபல் எழுத்தாளர்கள் 18+ என்ற ஒன்றை போடுகிறார்கள் எதற்க்காக? அப்படியென்றால் 18+ போடாத பதிவுகள் எல்லாம் குழந்தைகளுக்கா?. கூகுள், youtube போன்றவற்றில் பல 18+ இருக்கும்போது நான் போடும் ஒரு பதிவால் என்ன ஆக போதுனு நீங்க கேட்கலாம்.  அவன் பணத்துக்காக போடுறான் நமக்கு என்ன பணமா காசா,  வெறும் ஹிட்ஸ், follower இதற்க்காக  நீங்கள் போடும் ஆபாச பதிவுகளை எல்லாம்    ஞயாயப்படுத்தினால் முடிவு சரியானதாக இருக்காது.

நல்லவற்றையே சொல்லுவோம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம். 
                         
**************************************************************************************************************** நேற்று நான் ATM ல பணம் எடுக்கும்போது எனக்கு பின் நின்ற ஒருவர் தம்பி எனக்கு ATM ல பணம் எடுக்க தெரியாது கொஞ்சம் எடுத்து கொடுங்கனு சொன்னாரு . நான் கார்டை செலுத்தி நம்பரை போட சொல்லும்போது அவர் ATM கார்ட் வைக்கும் அட்டையில் எழுதி வைத்திருந்ததை என்னிடம் காட்டினார்.  வங்கியில்    இன்செண்டிவ்க்காக வேலைசெய்யும் பன்னாடைகள் எப்படியாவது இது free அது free என்று அக்கவுன்ட் ஒப்பன் செய்யத்தான் நினைக்கிதுங்களே தவிர ATM கார்ட் எப்படி பயன்படுத்தணும் பின் நம்பரை எப்படி பாதுகாக்கணும்னு சொல்லித்தறது இல்ல .
*****************************************************************************************************************
 போலிஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் பதவி ஏற்கும்போது நான் இதை செய்வேன் அதை செய்வேன்  என்று பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள்  கையாலாகாதவர்கள் என்பதற்கு சில சான்றுகள் இதோ

1)  குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிறைதண்டனை, லைசன்ஸ் கேன்சல் என்று பீத்திக்கொள்ளும் போலிஸ் சுப்பன்கள் டாஸ்மாக்கில் இருந்து வாகனத்தில் செல்பவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா?. டாஸ்மாக் பாரில்  இருந்து  வாகனத்தில் செல்பவன் எல்லாம் குடித்துவிட்டுத்தான் செல்கிறான், டாஸ்மாக் வாசலில் நின்று பிடிக்க வேண்டியது தானே?

2) தீபாவளிக்கு பேருந்து நிறுவனங்கள்  எல்லாம் தன் இஷ்டத்துக்கு  300  ரூபாய் டிக்கெட்டை 700 , 1000 ரூபாய்க்கு  விற்கும்போது போலீசார் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை  கடைசி நேரத்தில் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து நிறுவனங்களில் ரைட் . இதனால் என்ன பிரயோஜனம்.  டிக்கெட் எல்லாத்தையும் வித்து முடிச்சதுக்கு அப்புறம் மக்களை ஏமாற்ற இந்த நடவடிக்கை. போலீசாருக்கு கணினி பயன் படுத்த தெரியாதோ? பல ஆன்லைன்  பஸ் டிக்கெட் புக்கிங் தளங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் என்று டிக்கெட் விற்றது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ? இவர்களுக்கு போட்டி, குட்டி இது இரண்டுதான் முக்கியம் என்று நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

தீபாவளிக்கு முன்பு(3.11.2010):


அதே பேருந்து(6.11.2010):
****************************************************************************************************************
பேருந்து நடத்துனர்கள் சமீப காலமாக சீட்டுக்கடியில் சூடா ஏதோ இருப்பது போல் கடுகடுவென தான் வேலை செய்கின்றனர் பயணிகள் ஏறும்போதே அவர்களை பயமுறுத்துவது போல் வழில நிக்காத உள்ள போனு கொரங்கு மூஞ்ச வெச்சிக்கிட்டு பயமுறுத்துவது டிக்கெட் எடுத்தியான்னு அதட்டி கெடக்குறது. இது  ஏன் என்று விசாரித்த போதுதான் தெரிந்தாது இப்போது பேருந்து டிக்கெட்டுகளில் அதிகமானவை 2.50,3.50 ,4.00, ரூபாயாம் பயணிகள் பணம் கொடுத்து  டிக்கெட் வாங்கியப்பின் எங்கே மீதி சில்லறையை கேட்டுவிடுவார்களோ என்று தான் இப்படி நடந்து கொள்கின்றனர். அதிலும் ஒருசிலர் சில்லறை இல்லனா பேருந்தில் ஏறாதே என்பது போல் பயமுறுத்துவதால் பயணிகள் மீதி சில்லறை கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்ல என்று டிக்கெட் எடுக்கின்றனர். அதிகமாக இவர்கள் 50 பைசாதான் தருவதில்லை யாம்.  இவர்கள் இப்படி சில்லறையில் அடிக்கும் கொள்ளையே ஒரு மாதத்துக்கு  1500 முதல் 2500 வரை இருக்கும் என்பது என் கணிப்பு.
*****************************************************************************************************************
விறு விறு மாண்டி விருமாண்டி
*****************************************************************************************************************
ஜோக்:
அமைச்சர்:   தலைவரே உங்களுக்கு சின்னவீடு இருப்பதால் எதிர்கட்சி தலைவர் கிண்டல் செய்கிறார்.
தலைவர்: ஏன் பெண்களுக்கு புகுந்த வீடு பிறந்த வீடு என இரண்டு வீடு இருக்கும்போது எனக்கு சின்ன வீடு இருக்க கூடாதா?
*****************************************************************************************************************
 தமிழ் திரட்டிகள் ஒவ்வொன்றாக  வந்து கொண்டே இருக்கின்றன இப்போது புதிதாக ta.tamilers.com என்று ஒரு திரட்டி வந்துள்ளது இந்த திரட்டி பார்ப்பதற்கு இன்ட்லி திரட்டி போலவே உள்ளது ஆனால் ஓட்டு பட்டை இல்லை. இன்டலி திரட்டி போலவே இருப்பதால் ஏதாவது உல்குத்து வேலை இருக்குமோ?
*****************************************************************************************************************
களவாணி படம் நேற்று தான் பார்த்தேன் அதில் கதாநாயகன் பள்ளி சிறுவர்களை காதலிப்பது போல் எடுத்துள்ளனர். இது எங்க  போய் விட போகுதுன்னு  தெரியல. குடி, புகை, சினிமா இவற்றை தடை செய்தாலே இந்தியா வல்லராசாக மாறிவிடும்.
*****************************************************************************************************************
சன் நியூஸ்  தொலைக்காட்ச்சியில் இன்று தொடர்ந்து பாண்டிச்சேரியில் மது பாட்டில்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதாக காட்டுகிறார்கள். அவர்கள் மது விர்ப்பனையிலும் இறங்கி இருக்கானுங்களான்னு தெரியல.  
சன்: "  எவன் செத்தா என்ன எனக்கு காசு வந்தா போதும்".
*****************************************************************************************************************