பகுதி நேரத்தில் சம்பாதிக்க- தொழில்-1

Monday, January 10, 2011

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  


இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 


சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)

1. TICKET BOOKING 
டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.

TRAIN : ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:
1 . IRCTC - www.irctc.co.in
IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.

இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS
பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள் TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

3.CINEMA TICKET
சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள் 1.WWW.TICKETNEW.COM

2.BILL PAYMENT
இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:
►INSURANCE
►TELEPHONE BILL
►ELECTRICITY BILL

இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. அரசு இணையதள  முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.


அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL  போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை


►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN
►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM
►ITZCASH               - WWW.ITZCASH.COM
►ICASHCARD          -WWW.ICASHCARD.IN
►BEAM                    -WWW.BEAM.CO.IN

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.

பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:

►TICKET GOOSE  - WWW.TICKETGOOSE.COM
►REDBUS             - WWW.REDBUS.IN

TRAIN, FLIGHT இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:
1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்) 
  
3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.

இன்னும் ஒரு சிறந்த தொழிலுடம் அடுத்த பதிவில்.........46 comments:

ம.தி.சுதா said... | January 10, 2011 at 5:14 PM

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ம.தி.சுதா said... | January 10, 2011 at 5:15 PM

மிக மிக உபயோகமானது மிக்க நன்றிகள்..

தங்கள் பணி தொடரட்டும்...

Speed Master said... | January 10, 2011 at 5:18 PM

மிக மிக உபயோகமானது மிக்க நன்றிகள்..

தங்கள் பணி தொடரட்டும்...

shanmugavel said... | January 10, 2011 at 5:21 PM

பயனுள்ள பதிவு.தொடருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said... | January 10, 2011 at 5:27 PM

சூப்பர்.....

ஆதவா said... | January 10, 2011 at 5:28 PM

ஆன்லைனில் போன் ரீசார்ஜ் செய்வது போல ஒரு தொழில் தொடங்க நீண்டநாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். சாதக பாதகங்கள் எப்படி இருக்கின்றன?

பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.

தமிழ் உதயம் said... | January 10, 2011 at 5:36 PM

நிச்சயம், இந்த பதிவின் சேவையை பயன் படுத்தி கொள்ள போகிறேன்.

THOPPITHOPPI said... | January 10, 2011 at 5:40 PM

@ஆதவா

மொபைல் ரீசார்ஜ் மட்டும் செய்ய நினைத்தால் நேரடியாக AIRTEL, AIRCEL, ஐடியா போன்ற நிறுவன அலுவலகங்களை அணுகினால் லாபம் அதிகமாக கிடைக்கும். DEMO CARD என்று சொல்லப்படும் சிம் கார்ட் வாங்கிவிட்டால் போதும் ONLINE சேவைகளை விட லாபம் அதிகம் (வாங்குவது சுலபம்தான் அவர்களே எல்லாம் உதவிகளையும் செய்வார்கள் (போட்டி காரணமாக)).

டெமோ கார்டு சேவை - 3.50 முதல் 4 % வரை
(நேரடி நிறுவன வருமானம்/முன்பணம் எதுவும் செலுத்த தேவை இல்லை)

ஆன்லைன் சேவை - 2.50 முதல் 3 வரை
(முன்பணம் செலுத்த வேண்டும்)

மொபைல் ரீசார்ஜ் மட்டும் செய்ய நினைத்தால் ஆன்லைன் வழியே வரும் வருமானம் குறைவே.

மாணவன் said... | January 10, 2011 at 5:56 PM

மிகவும் பயனுள்ள தகவல்கள் இது பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

ஆதவா said... | January 10, 2011 at 5:59 PM

தகவலுக்கு மிக்க நன்றிங்க தொப்பி!

பாரத்... பாரதி... said... | January 10, 2011 at 6:00 PM

பயனுள்ள பதிவு, பலருக்கு வழிகாட்டுவதாக அமையும். நீங்கள் சிந்திக்கும் விதம் எல்லா பதிவுகளிலும் நேர்மறையாகவே உள்ளது.

பார்வையாளன் said... | January 10, 2011 at 6:02 PM

useful

செங்கோவி said... | January 10, 2011 at 6:02 PM

வீட்டில் இருக்கும் தங்கமணிகள், வயதானோர் கூட முயற்சி செய்யலாம்..உபயோகமான தகவல்கள்..அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

சி.பி.செந்தில்குமார் said... | January 10, 2011 at 6:24 PM

GOOD POST AND USEFULL TO MANY

அன்புடன் அருணா said... | January 10, 2011 at 6:38 PM

பயனுள்ள பதிவு!

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 10, 2011 at 8:05 PM

அருமையான யோசனைகள் பலருக்கும் பயன்படும் நன்றி

Chitra said... | January 10, 2011 at 8:35 PM

நல்ல ஆலோசனையுடன் வந்துள்ள அருமையான பதிவு.

சிநேகிதி said... | January 10, 2011 at 11:45 PM

மிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி

FARHAN said... | January 11, 2011 at 3:02 AM

good keep it up....

நண்டு @நொரண்டு -ஈரோடு said... | January 11, 2011 at 5:54 AM

பயனுள்ள பதிவு

தோழி பிரஷா said... | January 11, 2011 at 7:27 AM

பயனுள்ள பதிவு அருமை...

தமிழ்க் காதலன். said... | January 11, 2011 at 8:55 AM

அன்பு தொப்பி தொப்பி அவர்களுக்கு வணக்கம். முதல்வருகை தருகிறேன் அருமையானதொரு பதிவில். நல்ல நோக்கமுடன் எளிமையாய் எழுதப் பட்டிருக்கிறது. பாராட்டுக்கள். நிறைய பயனுள்ள விசயங்கள் எழுதுகிறீர்கள். நிதானமாய் படித்து விட்டு பதில் தருகிறேன். இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள். உங்களை நேரில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எமது தொடர்புக்கு...( thamizhkkaathalan@gmail.com )

ஆமினா said... | January 11, 2011 at 8:59 AM

//. இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள். //

கண்டிப்பாக அண்ணா....

எல்லோரும் இணையத்தில் ஏமாந்து வரும் நிலையில் முதலீடுக்கு மோசம் இல்லாமல் இருக்கும் இத்தகைய தொழில்கள் கண்டிப்பாக எல்லோர் வாழ்விலும் பயன்தரக்கூடிய ஒன்று...

தொடருங்க..படிக்க பயன்பெற ஆவலாக உள்ளேன்

ஜீ... said... | January 11, 2011 at 9:01 AM

Nice! Good Job! :-)

கே.ஆர்.பி.செந்தில் said... | January 11, 2011 at 9:20 AM

இந்த தொழிலில் போட்டிகள் அதிகம் இருப்பதாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இதனை வைத்திருப்பதாலும் (ஆன்லைன்) வருமானம் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களைப்பற்றி எழுதுங்களேன் ...

THOPPITHOPPI said... | January 11, 2011 at 9:54 AM

@ கே.ஆர்.பி.செந்தில்

போட்டி இருப்பது உண்மைதான் ஆனால் போட்டி போடுவது முக்கியமான இடத்தில்தான்.

என் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டரக்கு இதுப்போன்ற சேவைகள் இல்லாமலே இருந்தது. என் உறவுக்காரர் ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த சேவைகள் பற்றி இணையத்தளத்தில் தகவல் அறிந்து முடித்துக்கொடுத்தேன். இப்போது நல்ல லாபம் பார்க்கிறார் நாங்கள் அப்போது உரிமம் பெற 10000 ருபாய் செலவிட்டோம் ஆனால் இப்போது 1500 ரூபாய்க்கு உரிமம் கொடுக்க பல நிறுவனங்கள் வந்துவிட்டது.

அதேப்போல் முதலீடு என்று பார்த்தல் உரிமம் போக 5000 ரூபாய் இருந்தால் போதும்(சுழற்ச்சி முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்). நமக்கு பிடிக்கவில்லை என்றால் கூட 5000 ரூபாயை எடுத்துக்கொள்ளலாம். அதனால் நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை.

உதராணம் சொல்லவேண்டும் என்றால் கரண்ட் பில் கட்ட இங்கே இருந்து தொலைவில் இருப்பதால் அதன்மூலம் வரும் வருமானம் மட்டும் ஒருநாளைக்கு 100 ரூபாய்(குறைந்தது (5 card - 1 கார்டுக்கு 20 ரூபாய் சர்விஸ் சார்ஜ்).- இது மற்றவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது ஊரை பற்றியும்/மக்களை பற்றியும் கணிக்க வேண்டும்.

ஏற்க்கனவே இந்த தொழில் இருக்கும் இடுத்தில் போட்டி போடுவதை தவிர்த்து இந்த சேவை இல்லாத இடத்தில் தொடங்கினால் நிச்சயம் லாபம் எதிர்ப்பார்க்கலாம்.

இன்சுரன்ஸ் ரெனிவல், ரயில் முன்பதிவு, ரீசார்ஜ்(மொபைல்,DTH ) , கரண்ட் பில் போன்ற சேவைகள் தினமும் லாபம் கொடுக்கும்.

FLIGHT டிக்கெட் RESERVATION , ஸ்கூல்/காலேஜ் RESULTS , EMPLOYEMENT RENEWEL போன்றவை எப்போதாவது லாபம் கொடுக்கும். (எப்போதாவது என்றாலும் நல்ல லாபம் பார்க்கலாம்)

பஸ், டெலிபோன் பில், பிரிண்ட் அவுட், ஈமெயில் SENDING , RESUME TYPING , போன்றவற்றை முழுநேரமாக செய்பவர்கள் இதையும் சேர்த்து செய்தால் இன்னும் லாபம் கிடைக்கும்.

கணினியில் இலவசமாக கிடைக்கும் ஜாதம் பார்க்கும் மென்பொருள் பதிவிறக்கம் செய்து பார்த்து கொடுத்துள் ஒரு நபருக்கு 100 ருபாய் வருமானம் கிடைக்கும்.(பிறந்த தேதி, ஊர், நேரம், பெயர் கொடுத்தாலே போதும் அதேவே கணித்து கொடுக்கிறது/ ஜோதிடர்கள் கணிப்புன் இதில் வரும் கணிப்பும் சரியாக உள்ளது)-CLASSROOM2007 பரிந்துரைத்த மென்பொருளை பயன்படுத்தினால் இன்னும் சரியாக இருக்கும். ( இதையும் என் உறவுக்காரர் செய்கிறார் தகவல்களை கொடுத்து பிரிண்ட் ஒவுட் மட்டும் எடுத்துக்கொடுக்கிறார் ஒரு நபருக்கு 100 ரூபாய்.

வீட்டில் படித்த வயதானவர்கள் இந்த சேவையை முழுநேரமாக தொடங்கினால் நிச்சயம் தன்னுடைய கடைசி காலம் வரை கவுரவமாக இருக்கலாம்.

ஏற்க்கனவே வீட்டில் கணினி/இணையத்தளம் வைத்திருப்பவர்கள் தன்னுடைய ஊரை பற்றி சரியாக கணித்து இந்த தொழிலை தொடங்கினால் நிச்சயம் லாபம் கிட்டும்.

புதிதாக கணினி/ இணையத்தளம் பெற்று இந்த தொழிலை தொடங்க நினைத்தால் கடின உழைப்பும், ஊர் மக்களின் ஆதரவும் பெற்றிருக்கவேண்டும்.

சித்தூர்.எஸ்.முருகேசன் said... | January 11, 2011 at 10:04 AM

//ஏற்கெனவே வருமானம் உள்ளவர்கள் தயவு செய்து இதை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்த வேண்டாம்//

சூப்பர் கண்ணா!

இந்த புத்தி அல்லாருக்கும் இருந்திருந்தா இப்படி எல்லா தொழிலும் துவண்டு போய் கிடக்காது

உருத்திரா said... | January 11, 2011 at 10:41 AM

வருமானத்தை அதிகரிக்க வழியும் சொல்லிவிட்டு,நன்மை தீமைகளையும்,அறிவித்திருக்கிறீர்கள். அருமை

மதுரை பாண்டி said... | January 11, 2011 at 10:59 AM

உபயோகமான பதிவு!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

நா.மணிவண்ணன் said... | January 11, 2011 at 11:19 AM

நல்ல பதிவு நண்பரே

விக்கி உலகம் said... | January 11, 2011 at 12:17 PM

பயனுள்ள பதிவு.

தொடரட்டும் உங்கள் சேவை

எல் கே said... | January 11, 2011 at 12:28 PM

உபயோகமான இடுகை

தமிழ் உலகம் said... | January 11, 2011 at 12:31 PM

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

பட்டாபட்டி.... said... | January 11, 2011 at 2:03 PM

நல்ல ஐடியா...!!!

Vimal said... | January 11, 2011 at 2:18 PM

very useful post and congratulations.

redbus.com is not working it is www.redbus.in

asiya omar said... | January 11, 2011 at 2:28 PM

பகிர்வுக்கு நன்றி.

இரவு வானம் said... | January 11, 2011 at 3:55 PM

உண்மையிலேயே அருமையான தகவல்கள், பகிர்வுக்கு நன்றி நண்பா

பதிவுலகில் பாபு said... | January 11, 2011 at 4:16 PM

ரொம்ப நல்ல யோசனைகள்தான் நண்பரே.. ம்ம்ம்.. ட்ரை பண்ணலாம்தான்..

இன்னும் பாக்கி வைத்திருக்கும் யோசனைகளையும் சொல்லுங்க.. வெயிட்டிங்..

THOPPITHOPPI said... | January 11, 2011 at 4:20 PM

@ Vimal

//redbus.com is not working it is www.redbus.in//

நன்றி நண்பரே .com தான் டைப் செய்யும்போது வந்துவிடுகிறது

மாற்றிவிட்டேன்

THOPPITHOPPI said... | January 11, 2011 at 4:22 PM

@ பதிவுலகில் பாபு

//இன்னும் பாக்கி வைத்திருக்கும் யோசனைகளையும் சொல்லுங்க.. வெயிட்டிங்..//

நிச்சயம் பதிவிடுகிறேன்

♠புதுவை சிவா♠ said... | January 11, 2011 at 4:24 PM

ஆன்லைன் மூலம் ஆட்டோ அனுப்பலாம் 12 X 7 ( இதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் ரவுடிகளின் ஒப்பந்தம் பெறவேண்டும்.

:-)))))))

ஆனந்தி.. said... | January 11, 2011 at 5:16 PM

சகோ...ரொம்ப உருப்படியான பதிவு இது...நன்றி..

Mohamed Fayaz said... | December 19, 2011 at 7:32 AM

சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)

NICE JOKE & NICE POST mACHCHEEEE

www.v-taa.blogspot.com Soft collection blog

விழித்துக்கொள் said... | August 30, 2012 at 12:09 PM

payanulla padhivu nandri
surendran

Usha Nandhini said... | January 28, 2014 at 8:22 PM

மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி!!
mahibritto.blogspot.com/

Sam Raj said... | April 2, 2014 at 4:59 PM

For genuine online jobs visit: Earn Money on Home Based Jobs
Work from home - Online & Offline Jobs