கொக்கா மக்கா 6/1/2011

Thursday, January 6, 2011

தேர்தல் நெருங்குவதால்  வலைப்பதிவர்கள் தங்களை இப்போதே தயார் படுத்திக்கொண்டால் நமக்கு அங்கிகாரம் கிடைக்க  சரியான வாய்ப்பாக இருக்கும். எப்படியும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு ஊதியம் கொடுக்கும் கட்சியினருக்குத்தான் சாதகமாக செய்திகளை வெளியிடுவார்கள் என்று மக்களுக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது.  இப்போதைய சூழ்நிலையில்  நடுநிலையோடு செய்திகள், விமர்சனங்கள் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பது வலைப்பதிவர்களைத்தான்.  அதனால் இப்போதே   அரசியல் கட்சிகளை நடுநிலையோடு விமரிசிக்க பதிவர்கள்  தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தால்  நன்றாக இருக்கும்.
 __________________________________________________
அதேப்போல் தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் வலைப்பதிவர்களிடம் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.  வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களிடம் இந்த கருத்துக்கணிப்புகளை நடத்த ஒரு விட்கேட் தயாரிக்க முயற்சி செய்து வருகிறேன்.  அதனால் சரியான கேள்விகளை தயார்ப்படுத்திக்கொண்டு  அந்த கருத்துகணிப்புகள் நடத்துவதற்கு இப்போதே தயார்ப்படுத்திக்கொண்டால் சரியாக இருக்கும்.   கருத்துக்கணிப்புகளை அனைத்து வலைத்தளங்களிலும் நடத்தாமல் அண்ணண்கள் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், KRP செந்தில் ,சித்ரா அக்கா, CLASSROOM 2007 போன்ற வலையுலக  ஜாம்பவான்கள் தளங்களில் மட்டும் நடத்தினால் கருத்துக்கணிப்புக்கள் நடத்தவும், வெளியிடவும் கவுரவமாக இருக்கும். கருத்துக்கணிப்பும், ஓட்டுக்கள் எண்ணிக்கை, முடிவு எல்லாம் ஒரே நாளில் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.  உங்கள் முடிவை சொல்லுங்கள்.
 __________________________________________________
 சில நாட்களுக்கு முன் செங்கோவி என்ற வலைத்தளத்தை பார்த்தேன்.  தேர்தல் ஸ்பெஷல் என்ற தலைப்பில் அரசியல்  பதிவுகளை  நண்பர் எழுதி வருகிறார், வலைப்பதிவர்கள் அவரை  ஊக்குவித்தால் அவர் இன்னும் சிறந்த பதிவுகள் எழுத ஏதுவாய் இருக்கும். அரசியல் பதிவுகள் எழுதுவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் திரட்டி அருமையாக    எழுதி  வருகிறார். ஆனால் அதற்கேற்ற வரவேற்ப்பு எனக்கு குறைவாகத்தான் தெரிந்தது.  அவருடைய வலைத்தளத்தை பார்க்க செங்கோவி , வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)
 __________________________________________________
சில நாட்களாக உஜிலா தேவி என்ற வலைப்பதிவை விளம்பரம்படுத்தும் நோக்கில் ஒரு மனிதர் வலையுலகில்  உலா வருகிறார். அவர் எதற்க்காக இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அண்ணன் "உண்மைத்தமிழன்"  பெயரில் ஒரு பிரச்னையை உருவாக்கியவரும் இவர்தான்.  எல்லாம்  வலைத்தளத்திலும்  பின்னூட்டம் போட்டுவிட்டு உஜிலாதேவி வலைத்தளத்துக்கு லிங்கும் கொடுக்கிறார். அவருடைய PROFILE பார்த்தல் "எனக்கு பிடித்த தளம் உஜிலா தேவி அதை படித்துவிட்டுத்தான் வேறு தளத்தை பார்ப்பேன்" என்று எழுதி உள்ளது.   இன்று ஒரு தனியார் செய்தி தளத்திலும் அவர்களுடைய பின்னூட்ட விளம்பரம் பார்த்தேன். உஜிலா தேவி வலைத்தளம்   ஆன்மிகம் சார்ந்த  வலைத்தளம் என்பதால்  உரியவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் வலைப்பதிவர்கள் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
 __________________________________________________
 நான் எழுதிய "கொள்ளை கும்பல் ஆம்வே" என்ற பதிவை பல தளங்களிலும், வலைத்தளங்களிலும் பார்த்தேன் நான் பதிவிட்ட மறு நாளே பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்களாலும்  விழிப்புணர்வு ஏற்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால்  கடைசி வரியில் எனக்கு ஒரு லிங்க்காவது  கொடுத்து இருக்கலாம. ஏன் என்றால் அந்த பதிவை எழுதவும், அதில் உள்ள தகவல்களை திரட்டவுமே எனக்கு  பல நாட்கள் பிடித்தது. அதனால் அந்த பதிவுக்கு முன்பு பத்து நாட்களுக்கு வேறு பதிவு எழுத, பதிவிட  முடியாமல் போனது வேறுகதை. அந்த சிறு வருத்தத்தால் எனது வலைத்தளத்தில் யாரும் காபி(COPY) செய்ய முடியாமல் செய்துவிட்டேன். ஆனால் இது  பின்னூட்டம் இடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் மன்னிக்கவும்.
 __________________________________________________
 2011 ஆம் ஆண்டு தமிழ் வலையுலகுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. பதிவுலகுக்கான அங்கிகாரமும், கவுரவமும் கிடைக்கும் நோக்கில் பதிவர்கள் பதிவுகளை தேர்வு செய்து எழுதினால் கொஞ்சம்  நன்றாக  இருக்கும். அதேப்போல் தரம் கெட்ட வார்த்தைகளையோ அல்லது மதம், ஜாதி, ஆபாசம், வன்முறை  போன்றவற்றை ஆதரித்து, எதிர்த்து பதிவுகள் எழுதாமல் இருந்தால் இன்னும்  நன்றாக இருக்கும். அண்ணன் சவுக்கு, வினவு போன்று இன்னும் பலர் துணிந்து எழுதினால் மக்கள் போலி வார இதழ்களை குப்பையில் போட்டுவிடுவார்கள்.   2011க்கான உங்கள் சபதத்தில் வலைப்பதிவை ஊக்குவிப்பேன், கவுரவிப்பேன் என்றும் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் கட்சிகளின் பலம் பணம் என்றால் மக்களின் பலம் வலைத்தளம் என்று மாறவேண்டும். அது நம் கையில்தான் உள்ளது.
 __________________________________________________
 இலங்கையில் இருந்து எழுதும் தமிழ்  வலைப்பதிவர்கள் கொஞ்சம் அங்கே உள்ள சூழ்நிலையையும், அவர்களுடைய  இப்போதைய நிலையையும் குறித்து  எழுதினால் இங்கே உள்ள உண்மையான  தமிழர்களுக்கு உதவியாய் இருக்கும். கையில் ஆயுதம் ஏந்தி போராடுவதுதான் போராட்டம் என்று அர்த்தம் இல்லை எழுத்து,  பேச்சு போன்றவற்றால் கூட அநீதிகளை எதிர்த்து போராடலாம். பதிவர் ம.தி.சுதா அவர்கள் எழுதிய ஒரு பதிவில் அங்கே உள்ள விலைவாசியும்,  அவர்களுடைய அவல நிலையம்  இங்கு உள்ளவர்களுக்கு தெரியவைத்தது.  அதே போல் "எப்பூடி" என்ற வலைத்தளத்தில் எழுதும் "ஜீவதர்ஷன்" அவர்கள் கூட ஈழம் பற்றி  எழுதினால் நன்றாக இருக்கும். நான் பார்த்த இலங்கைத்தமிழர்களில்  எழுத்தால் என்னை கவர்ந்தவர். அவர் சொல்லவந்ததை படிப்பவர்களுக்கு சுலபமாக புரியவைக்கும் சக்தி அவரிடம் உள்ளதை நான் சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன்(ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்). முயற்சி திருவினையாக்கும்.
 __________________________________________________
செல்போன் சர்வீஸ் கொடுப்பவர்கள் அதற்கு முன்  என்னென்ன உங்களால் சரி  செய்ய முடியுமோ அவற்றை முயர்ச்சித்துவிட்டு முடியவில்லை என்றால் மட்டும்  சர்வீஸ் சென்டரில்  கொடுக்கவும். ஏன் என்றால் இப்போது சில சர்வீஸ் சென்டர்கள் பட்டன்கள்(KEYS) அடியில்  தூசி தட்டி கொடுக்க கூட நூறு  ரூபாய் சார்ஜ் செய்கிறார்கள். அதே போல் முன்னணி  நிறுவன  சர்வீஸ் சென்டர்களில் மட்டும் சர்விஸ்க்காக ` கொடுக்கவும், பயபுள்ளைங்க நல்ல பொருளை திருடி பழைய பொருளை போட்டு விடுகிறார்கள். என் நண்பர் அப்படி செய்ததை நேரில் பார்த்ததால் தான்  சொல்கிறேன்.
 __________________________________________________
கண்டிப்பா சிரிப்பிங்க:


 __________________________________________________

  வாழ்த்துக்கள்: மீண்டும் ஒரு காதல் கதை

கேபிள் ஷங்கர் அண்ணனின் இந்த படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்


37 comments:

இரவு வானம் said... | January 6, 2011 at 7:11 PM

கொக்கா மக்கா நன்றாக உள்ளது, நானும் பஸ்ஸில் ரீசேர் செய்திருந்தேன் உங்கள் பெயருடன், இந்த வருடம் வலைப்பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க்கும் என நம்புவோம்.

நா.மணிவண்ணன் said... | January 6, 2011 at 7:16 PM

.அந்த டான்ஸ் சூப்பர் . ஆனா கிராபிக்ஸ் வேலை மாதிரி தெரியுதே

இரவு வானம் said... | January 6, 2011 at 7:16 PM

http://www.youtube.com/watch?v=jk7UQ08xMAk

ரஹீம் கஸாலி said... | January 6, 2011 at 7:19 PM

இன்றைய கொக்கா மக்கா பதிவர்கள் ஸ்பெஷல் லோ.....அருமை கலக்குங்க....

THOPPITHOPPI said... | January 6, 2011 at 7:28 PM

@இரவு வானம்
DOWNLOAD ஆகிட்டு இருக்கு நன்றி

Chitra said... | January 6, 2011 at 7:35 PM

வலையுலக ஜாம்பவான்கள் லிஸ்ட்ல் என் பெயருமா? எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க.... நானும் ரவுடிதான்... ரவுடிதான்... ஜீப்புல ஏறிட்டோம்ல....
விட்ஜெட் தயாராகவும் சொல்லுங்க அப்பு..... மி saying ...ஓகே!

வெறும்பய said... | January 6, 2011 at 7:39 PM

நல்ல பகிர்வு .. தங்களுடைய "கொள்ளை கும்பல் அம்வே" பதிவு நீங்கள் பதிவிட்ட அன்றே படித்து விட்டேன்.. ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எனக்கு சில நண்பர்களிடமிருந்து அதே பதிவு முழுவதும் மின்னஞ்சலில் கூட வந்தது....

பாரத்... பாரதி... said... | January 6, 2011 at 7:49 PM

வலையுலக வாக்குப்பதிவு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது உண்மைதான், நல்ல யோசனையும் கூட...
ஆனால் நூறு சதவீத மக்களின் மனநிலையை அது காட்டுமா என்பது சந்தேகம் தான். கிராமபுறம், இணையம் சென்று சேராத பகுதிகளில் உள்ள மக்கள் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

பாரத்... பாரதி... said... | January 6, 2011 at 7:54 PM

செங்கோவி, ம.தி. சுதா.,எப்பூடி ஆகியோரின் பதிவுகள் தரமானவையே, நம் ஆதரவை அவர்களின் நல்ல பதிவுகளுக்கு நிச்சயம் வழங்கலாம். அவர்களின் வலையுலக பணிக்கு உங்கள் பதிவு தூண்டுகோலாக அமையும்.

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 6, 2011 at 7:57 PM

வலைப்பதிவர்கள் சற்று பொறுப்புடன் தேர்தல் வேலைகளை தொடங்க சொல்லி இருக்கீங்க ஆரம்பிச்சிருவோம்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 6, 2011 at 7:57 PM

நமக்கும் பிளாக்குக்கு 2000 கொடுத்து வாய மூட சொன்னாங்கன்னா

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 6, 2011 at 7:58 PM

என்ன கொடுமை சரவணா...ஆம்வே மேட்டரை காப்பி பண்ணி போடுறவனுக பிளாக் அட்ரசை காப்பி பண்ண மாட்டேங்காரானுகளே

உருத்திரா said... | January 6, 2011 at 8:12 PM

இலங்கைப் பதிவர்களையும் தங்களுடன் இணைத்ததற்கு நன்றிகள், இலங்கைத் தமிழர்களைப் பற்றி இன்று ஒரு சிங்கள அரசியல் வாதியின் தொகுப்பு, நீங்க கட்டாயம் படிக்க வேண்டும் http://manyandten-rudra.blogspot.com/2011/01/blog-post_06.html

வைகை said... | January 6, 2011 at 8:16 PM

கருத்துகணிப்பு நல்ல முயற்சி! நானும் ஆர்வமாக உள்ளேன்!

எல் கே said... | January 6, 2011 at 8:18 PM

செல்போன் சர்வீசுக்கு குடுப்பதாய் இருந்தால் அதற்க்கு உண்டான அங்கீகரிக்கப் பட்ட சர்வீஸ் சென்டரில் தரவும்,அங்கு, வாரண்டியில் உள்ள செல்போன்களுக்கு காசு வசூலிக்க முடியாது, அதே போல் உள்ளே இருக்கும் பொருட்களை மாற்ற இயலாது.

தமிழ்மலர் said... | January 6, 2011 at 8:30 PM

// எனது வலைத்தளத்தில் யாரும் காபி(COPY) செய்ய முடியாமல் செய்துவிட்டேன். ஆனால் இது பின்னூட்டம் இடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் மன்னிக்கவும்.//

இணையத்தில் காப்பியடிப்பதை தடுக்கிறோம் என்று சிலர் செய்யும் வித்தையை நீங்களும் செய்திருக்கிறீர்கள். இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

இணையத்தில் எழுதப்படுவது நமது கருத்துக்கள் உலகெங்கும் தங்கு தடையின்றி பரவதான். இதை ஒருவர் காப்பியடித்து பரப்புகிறார் என்றால் மகிழ்ச்சி தானே தவிர வேதனை அடைய கூடாது.

நமது படைப்புக்கு நாம் செலவிடும் நேரம், உழைப்பு, நிதி இதற்கு ஈடுஇணை இல்லை. ஆதற்காக காப்பியடிப்பதை தடுப்பதால் மட்டும் ஆறுதல் அடைவது நமது படைப்பு தவறு. படைப்பு பலபேரை சென்று செல்வதை நாமே தடுக்கும் செயல் இது என்பது எனது கருத்து.

உங்கள் பதிவை இப்போதும் காப்பியடித்து தமிழ்மலர் வலைபூவில் பதிவுசெய்துள்ளேன்.

தமிழ் உதயம் said... | January 6, 2011 at 8:51 PM

இலங்கை பதிவர்கள் குறித்து சொன்னது மிக சரி. ஏனைய விஷயங்களும் ஏற்று கொள்ளவேண்டியவையே.

ஜீ... said... | January 6, 2011 at 10:21 PM

நல்ல பதிவு!

செங்கோவி said... | January 6, 2011 at 10:33 PM

இன்ப அதிர்ச்சி நண்பரே..எனது தேர்தல் ஸ்பெஷல் தொடரைப் பரிந்துரைப்பதற்கு நன்றிகள் பல.

மாணவன் said... | January 6, 2011 at 10:53 PM

சிறப்பான பதிவு

பகிர்வுக்கு நன்றி நண்பரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... | January 6, 2011 at 11:30 PM

good collection news. thanks

Sai Gokula Krishna said... | January 6, 2011 at 11:50 PM

வேண்டும் அரசியல் மாற்றம்! நம்ம கட்சியில சேருங்க!!! வேண்டுகோள்!

http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_05.html

வழிப்போக்கன் - யோகேஷ் said... | January 7, 2011 at 12:04 AM

antha dance enakku rompa pidikkum. niraya thada pathurukken
(sorry for the commnet in thanglish)

Philosophy Prabhakaran said... | January 7, 2011 at 4:59 AM

உஜிலாதேவி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது எனது கருத்து... ஆனால் ஆதாரமில்லாமல் இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள்... சொல்லப்போனால் என்னிடம் ஆதாரம் கூட இருக்கு... இப்போ எதுக்கு பிரச்சனைன்னு அமைதியா இருக்கேன்...

ம.தி.சுதா said... | January 7, 2011 at 6:40 AM

அடங்கொக்கமக்கா எல்லாம் டெரரா இருக்கே..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

THOPPITHOPPI said... | January 7, 2011 at 9:28 AM

@ Philosophy Prabhakaran

//உஜிலாதேவி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது எனது கருத்து... ஆனால் ஆதாரமில்லாமல் இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள்... சொல்லப்போனால் என்னிடம் ஆதாரம் கூட இருக்கு... இப்போ எதுக்கு பிரச்சனைன்னு அமைதியா இருக்கேன்...//

நண்பரே அவர்கள் பாரதியாருடன் மீடியம் வைத்து பேசினேன் என்று பதிவு வெளியிட்ட போதே அவர்கள் மேல் எனக்கு சந்தேகம் வந்தது, நான் நினைத்த மாதிரியே "ஊர் கூடி தேர் இழுத்தால்" என்ற பதிவில் கேட்டு விட்டார்கள். ஆனால் அவசரத்தில் எந்த முடிவும் எடுத்துவிட கூடாது பொறுமையாக கையாளுவோம். எனது பயமெல்லாம் வலைப்பதிவு வைத்து இணையத்தளங்களில் மக்களை ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்று செய்திதாள்களில் வந்துவிடக்கூடாது என்பதுதான். ஏற்க்கனவே சிலப்பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம்மை நாறடிக்க.

ஆனந்தி.. said... | January 7, 2011 at 9:38 AM

ஹாய் சகோ..உங்களை ரொம்ப ஆரம்பத்தில் இருந்தே கவனிச்சிருக்கேன்...அப்போதைக்கும்..இப்போதைக்கும் ஏகப்பட்ட வித்யாசம்...தூரமாய் இருந்து பார்த்து பல நேரம் ஆச்சர்யபட்டு இருக்கேன்...சமூக அக்கறையுடன் நீங்கள் எழுதிய தற்போதைய பதிவுகள் பற்றி சொன்னால்...சில பதிவுகளில் எனக்கு மாற்று கருத்து இருந்த போதிலும்...அந்த அக்கறை சார்ந்த விழிப்புணர்வுக்கு சபாஷ்...இந்த தேர்தல் கருத்து கணிப்பினால் என்ன பெரிய பிரயோஜனும்னு எனக்கு தெரில..வோட்டின் முக்கிய முடிவுகள் கீழ்மட்ட பிரிவினர் கிட்டே தான் இருக்குங்கிறது என் எண்ணம்...அவர்கள் யாரும் வலைத்தளம் பக்கம் வரபோரதில்லை...ஊடககளின் கருத்து கணிப்பு இப்ப பெரிய விஷயமாக இல்லை...பணம்..இலவசங்கள் படுத்தும் பாட்டில் எந்த கணிப்பும் சரியா இருக்குமாங்கிறதும் எனக்கு தெரில...இது என் கண்ணோட்டம் மட்டுமே...மத்தபடி உருப்படியான சில விஷயங்கள் நீங்க முயற்சி பண்றதற்க்கு(முக்கியமாய் ஆம்வே விஷயம்) மனம நிறைந்த வாழ்த்துக்கள்...:))
அப்புறம் செங்கோவி அவர்களின் வலைதளத்துக்கு ஒரு முறை போயிருக்கேன்...நல்லா இருந்தது...அப்டியே விடுறேன்..நீங்கள் உணர்த்தியதற்கு நன்றி...

Speed Master said... | January 7, 2011 at 11:29 AM

வழக்கம் போல் பயனுள்ள பதிவு

மதுரை பாண்டி said... | January 7, 2011 at 11:56 AM

விழிப்புணர்வு சார்ந்த பல விசயங்களை உங்கள் பதிவில் பார்த்து இருக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. காபி அடிக்றவன் காபி அடிச்சுட்டு தான் இருப்பான்... அவங்களை திருத்த முடியாது...

உண்மைததமிழன் அண்ணனை வச்சு உஜிலாதேவி ஆளுங்க விளையாடிட்டு இருகாங்க... நான் அந்த தளத்தை இதுவரைக்கும் படிச்சது இல்ல...

சென்னை பித்தன் said... | January 7, 2011 at 1:13 PM

ஒரே பதிவில் எத்தனை செய்திகள்?ரொம்ப நல்லாருக்கு!

விக்கி உலகம் said... | January 7, 2011 at 2:30 PM

பகிருவ்க்கு நன்றி

ஊர் கோடி இழுத்து கொண்டு போய் சாக்கடையில் போடும் அரிய உணவு தேர்தல் -

எழுதுவோம் ஆனால் கேட்போர் யார்............தட்டுவோம் நம் கடமை, திறப்போர் யார் மனதை......!?

சி.பி.செந்தில்குமார் said... | January 7, 2011 at 6:03 PM

very good sir. as usual mainas vote.??/

Chandran said... | January 8, 2011 at 4:02 AM

உங்கள் இணையத்தில் சவுக்கு இணையத்திற்க்கு தொடுப்பு கொடுத்துள்ளீர்கள். சவுக்கு இணையத்தில் பிரபாகரன் படம் போட்டிருக்கிறது. சீமானுக்கும் பிரபாகரன் தான் தலைவர். சவுக்கும் அவர்தான் தலைவர் என்ற படியால் உங்களுக்கும் அவர் தானே தலைவர்! பின்பு எதற்காக சீமானை எதிர்க்க வேண்டும்?

ஆமினா said... | January 8, 2011 at 9:39 AM

உங்க முடியவை சொல்லுங்கன்னு கேட்டதை காப்பி பண்ணா முடியல. அப்ப தான் தெரிஞ்சது திருட்டை ஒழிக்கன்னு!!! நல்லது... (இரண்டுக்கும்)!!!!

அரசியல் பத்தி நடுநிலையா போடுவது இருக்கட்டும் அண்ணா.... இங்கேயும் அவர்கள் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கிடுவாங்களோ???? ;(

அந்த பயகுட்டி டான்ஸ் பயங்கரமா இருந்துச்சு!!! அடுத்த மாதுரி மாதிரி வரும் ;)

ஆமினா said... | January 8, 2011 at 9:40 AM

உஜிலா தேவிக்கு விளம்பரம் நானும் பார்த்தேன்!!! என் ப்ளாக்கிலும் வந்தார்!!!

இது விளம்பரத்திற்காக தான்!!!

FARHAN said... | January 8, 2011 at 2:56 PM

கொக்கா மக்கா ...செம கலக்கல்

asiya omar said... | January 11, 2011 at 2:39 PM

நீண்ட அனைத்தும் உபயோகமானது.நானும் ஆன்லைன் ட்ரேடிங் செய்யலாம் SBI ஆரம்பித்தேன்,ஆனால் 6 மாசம் ஆகுது,என்னால் இன்னும் எதுவும் வாங்க முடியலை.அக்கவுண்ட் டெல் என்று வந்தது,அக்கவுண்ட் ரிலீஸ் செய்தாலும்,not able to buy தான் ஊரில் போய் நேரில் தான் விளக்கம் கேட்கணும் பேங்க்கில்.