கொள்ளை கும்பல் AMWAY NUTRILITE-2

Tuesday, January 11, 2011






ஆம்வே  நிறுவனத்தின் கொள்ளைகளை பற்றி நான் முன்பு எழுதியிருந்த பதிவுக்கு  பல  எதிர் பின்னூட்டங்கள் போடப்பட்டன அவர்கள் அனைவரும் ஆம்வே நிறுவனத்தில் இணைந்தவர்கள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது, ஏன் என்றால் நான் ஸ்பாம் செய்த பின்பும் மின்னஞ்சல் வழியாக பல கேள்விகள்,  உங்களுக்கு ஆம்வே நிறுவனம் பற்றி என்ன தெரியும்?, அவர்களுடைய தரம் பற்றி தெரியுமா? இப்படி   பல கேள்விகள். சரி இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று டெலிட் செய்துவிட்டேன். ஆனால் அந்த ஆம்வே பதிவில் கடைசியாக சிலர் பின்னூட்டம் போடும்போது எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள் நாங்கள் எங்கள் பொருட்களின் தரத்தை பற்றி விளக்குகிறோம் என்று பின்னூட்டம் செய்து இருந்தனர்.

எனக்கு அந்த பதிவில் சரியாக அவர்களுக்கு விளக்கவில்லையோ என்றுதான் தோன்றியது. சரி அந்தபதிவில்  அப்படி  என்ன  விடுப்பட்டது  என்று தேடியபோது மருத்துவம், தரம் போன்றவற்றை சரியாக  விமர்சிக்கவில்லை என்று தெரிந்தது, ஏன் என்றால் நான் அந்தபதிவில் பணம் இழப்பு பற்றித்தான் விளக்கி இருந்தேன.  அவர்களுடைய தரத்தையும், மருத்துவ பலன்களையும் பற்றி சரியாக விளக்கவில்லை. சரி அதைப்பற்றியும் விளக்கிவிடுவோம் இல்லையென்றால் எங்கள் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சிறந்தது என்று ஏமாற்றிவிடுவார்கள்.

இவர்கள்  ஒவ்வொரு பொருட்களையும் பரிந்துரைக்க  சொல்லும் வார்த்தை பக்கவிளைவுகள் இல்லை என்பதுதான், இன்னும் ஒரு சிலர் இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் நோய் வாய்  பட்டு  இறந்துவிடுவீர்கள் என்பது போல  பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்கள் அதிகமாக பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் NUTRILITE பொருட்கள்தான் அதிலும் இவர்கள்  பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ப்ரோட்டின் பவுடர்தான் இந்த ப்ரோடீன் பவுடரை இவர்கள் என்னென்ன சொல்லி விற்க முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி விற்று வருகின்றனர். எங்கள் உறவுக்கார் சில நாட்களுக்கு முன்பு  இனிப்பு வகையை உண்ணும்போது  உங்களுக்கு சுகர் இருக்கே  ஏன் இவ்வளவு  இனிப்பு எடுத்துக்குரிங்க என்று கேட்டபோது அவர் சொன்னபதில் "இல்ல நான் ஆம்வே ப்ரோடீன் பவுடர் சாப்பிடுறேன் அதனால எனக்கு சுகர் வராது" என்றார். இவருக்கு யார் இப்படி பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை, ப்ரோடீன் பவுடர் சாப்பிட்டால் சுகர் குறைந்துவிடும் என்று. இவர்களுக்கு மாதம் கிடைக்க வேண்டிய PV க்காக கண்ணா பின்னாவென வாயில் வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றி விற்று வருகின்றனர்.

இப்படி இவர்கள் கண்மூடித்தனமாக மருத்துவ பொருட்களை எடுத்துக்கொள்கிரார்களே, இப்படி  மருத்துவர் ஆலோசனை இல்லாமலே நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றிய சந்தேகத்தை  போக்கிக்கொள்ள இலங்கை மருத்துவர்   துமிழ் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்கள் உங்களுக்காக




புரோட்டின் என்றால என்ன ?
 
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவில் உள்ள போசனைப் பதார்த்தங்கள் பிரதானமாக கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), FAT, புரோட்டின, விட்டமின்கள், கனியுப்புக்கள் எனப் பிரிக்கப்படலாம்.இதிலே உடலின் அன்றாடத்  தேவைக்குரிய சக்தியை வழங்குவது பிரதானமாக கார்போ ஹைட்ரேட் அதைத் தொடர்ந்து கொழுப்புக்களும் (FAT)ஆகும். 

புரதமானது அன்றாட தேவைக்கான சக்தியை வழங்குவதை விட மிக முக்கியமாக உடலின் கட்டமைப்பை பேணுவதற்கு அவசியமாகும். குறிப்பாக உடலின் வளர்ச்சியின் போது இதன் அளவு   வழங்கப்படவேண்டும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து சுகமகிக் கொண்டிருக்கும் போதும் புரத தேவை சடுதியாக அதிகரிக்கும். அதாவது உடலின் கலங்கள் மீள் கட்டமைப்பதற்கும் சீர் செய்யப்படுவதற்கும் புரதம் இன்றி அமையாதது.அதுதவீர ஒருவர் போதியளவு மாப்பொருள் சத்தையும் ,கொழுப்புச் சத்தையும் உட்கொள்ளாவிட்டாலஅன்றாட தேவைகளின் சக்திக்காக உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதங்கள் பாவிக்கப் படும்.  இதனால் உடலின் கட்டமைப்புச் சீர் குழைந்து மெலிந்த தோற்றமுடையவர்களாக மாறுவார்கள். 


அதாவது ஒருவர் உண்ணும் உணவில் அனைத்துவிதமான போஷாக்குப் பதார்த்தங்களும் தேவையான அளவிலே இருக்க வேண்டும். மாறாக தனியே புரதத்தினை மட்டும் அதிகம் உட்கொள்ளுவதால் நன்மையில்லை .


புரோட்டின் பவுடர்கள் எனப்படுபவை யாவை?

இவை உடலுக்குத் தேவையான அமைனோ அமிலங்களை செறிவாக்கி உருவாக்கப் பட்டவை. இவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்களை இலகுவாகப் பெற்றுக்  கொள்ள முடியும் என்று சொல்லப் படுகிறது. இவற்றில் உள்ள அமைனோ அமிலங்களும் இலகுவாக உள்லேடுக்கப் படக் கூடியதென சொல்லப் படுகிறது.  இவற்றை உண்பதால் உண்மையில் நன்மைகள் ஏற்படுமா? ஏற்கனவே சொன்னது போல நமக்குத் தேவையான போஷாக்குகள் அனைத்தும் தேவையான அளவிலே கிடைத்தால் மட்டுமே நமது உடலின் தொழிற்பாடுகள் சரியாக நடைபெறும். அவ்வாறு நாமக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளையும் பெற்றுக்கொள்ள சிறந்த வழி போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதே. தனியே புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளுவதால் புரோட்டினும் சில கனியுப்பு,விட்டமின்களும் கிடைத்தாலும் நமது அன்றாடத் தேவைக்கான சக்தியை வழங்கும் மாப்பொருள் கொழுப்பு என்பவற்றிற்காக நாம் உண்ணும் உணவையே நம்பியிருக்கு  வேண்டும். இவ்வாறு உண்ணும் உணவில்  முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்த்து விட்டாலே போதும் தேவையான புரதத்தையும் சுவையான சாப்பாடுடன் பெற்று விடலாம். பிறகேன் தேவை இல்லாமல்புரட்டின் பவுடர்களுக்காக காசினைச் செலவு செய்ய வேண்டும்?



உண்மையில் யாருக்கு புரோட்டின் பவுடர் தேவைப்படும்?

படுக்கையிலே இருக்கும் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ள  முடியாமல் குழாய் மூலம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு புரட்டின் பவுடர் வழங்குவது இலகுவாக இருக்கும். சில நோய்கள் ஏற்பட்டு சுகமாகும் காலத்தில் புரோட்டின் தேவை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது புரட்டின் பவுடர் உதவும் என்றாலும் அந்த நேரத்திலும் உணவின் மூலம் புரதத்தினைப் பெற்றுக் கொள்ள கூடியவர்கள் உணவில் புரதம் கூடிய உணவுகளை அதிகரிப்பது புரோட்டின் பவுடர் பாவிப்பதை விட சிறந்தது.

உடற் கட்டலகுக்காக தசைகளை புடைக்கச் செய்யும் நோக்கோடும் புரோட்டின் பவுடர்களை ஆண்கள் பாவிப்பதுண்டு.  இந்த நோக்கத்திற்காக பாவிக்கும் ஆண்கள் கட்டாயமாக மாப்பொருள் கொழுப்பு போன்றவற்றையும் சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டியதோடு போதிய உடற்பயிர்ச்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.

ஆக , சுகதேகியான ஒருவர் அல்லது உணவுகளை உட்கொள்ளக் கூடிய ஒருவர் தனக்குத் தேவையான புரத்தைத்தினை உணவின் மூலம் பெருக் கொள்ள முடியும் போது அனாவசியமாக எதற்காக புரோட்டின் பவுடர்களை நம்பி காசை செலவழிக்க வேண்டும். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் அனைத்துமே  ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்டவை.அந்த காசிற்கு நல்லஉணவினை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடலாமே.

அதற்கும் மேலாக சந்தையில் இப்போது ஏராளமான புரோட்டின் பவுடர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அதிக விளம்பரம் உள்ள புரோட்டின் பவுடர் நல்ல தரமானது என்ற பெயருடன் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆகவே புரோட்டின் பவுடர் பாவிக்கத்தான் போகிறேன் என்று அடம் பிடிப்பவர்கள் விளம்பரத்தில் ஏமாறாமல் மற்றைய புரோட்டின் பவுடர்களின் விலைகளை பார்த்து நியாயமான விலையில் இருப்பதை தெரிவு செய்யுங்கள். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்களின் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். முக்கியமாக நாட்பட்ட நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் வைத்தியரின் அனுமதி இன்றி புரோட்டின் பவுடர்களை பாவிக்க வேண்டாம்.
                                                                                                     

நான் ப்ரோடீன் பவுடரை மட்டும் குறிப்பிட்டு சந்தேகங்களை கேட்க்க காரணம் ஆம்வே நிறுவனம் NUTRILIRE என சொல்லப்படும் மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் இதை தான் முன்னிறுத்தி விற்பனை செய்துவருகின்றனர். 

இன்னொரு விஷயத்தில் ஆம்வே நிறுவனத்தில் கவனிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய பொருட்களை வாங்குபவர்கள் எப்படியாவது முதல் முறை ஏமாற்றப்பட்டு வாங்கிவிடுகின்றனர், பின்பு அந்த பொருளை பயன்படுத்தும்போது  விலை உயர்ந்த பொருள் என்று மனதில் நினைத்துக்கொண்டே பயன்படுத்துவதால் இதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்(உளவியல் ரீதியில் இதுதான் நடந்து வருகிறது).

சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவுக்காரர் ஊரில் இருந்து ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர் எப்போதும் ஹமாம் சோப்புதான் பயன்படுத்துவார், நாங்கள் வேறு ஏதேனும் ஒரு சோப்பை கொடுத்தால் வேண்டாம் எனக்கு ஹமாம் பழகிவிட்டது என்று சொல்வார். ஆனால் இந்த முறை அவருக்கு ஹமாம் சோப்பு கொடுக்கும்போது அவர் சொன்ன பதில்  "ஆம்வே சோப்பு தவிர வேறு சோப்பு போட்டால் உடல் அரிக்கிறது" என்று. எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை பல ஆண்டுகளாக ஹமாம் சோப்பு பயன்படுத்தியவர் இப்போது இந்த விலை உயர்ந்த சோப்பை பயன்படுத்தவில்லை என்றால் உடல் அரிக்கிறது என்று கூறுகிறார் என்றால் பாருங்கள் இவர் எந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனம் மாறிவிட்டார் என்று. 

அதேப்போல்தான் இவர்கள் விற்பனை செய்யும் முகத்தை அழகுப்படுத்தும் க்ரீமும் , யாராவது ஒருவர் தன் கண் முன் கருப்பாக தெரிந்துவிடக்கூடாது உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று ஏதாவது ஒரு க்ரீமை பரிந்துரைத்து பணத்தை கரந்து  விடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால்  இதுவரை ஒருநாளைக்கு ஒருமுறை முகம் கழுவியவன் இந்த க்ரீம் தடவுவதர்க்காகவே மூன்று நான்கு முறை தன் முகத்தை கழுவுகிறான். இதனால் முகம் கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தாலும் க்ரீம் மூலம் தான் வெள்ளை கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு  மற்றவர்களிடமும் பரிந்துரைக்கின்றார்.  சாதாரணமாக  எந்த ஒரு க்ரீமும் போடாமல் ஒருநாளைக்கு காலையும் மாலையும் முகத்தை கழுவினாலே முகம் பளிச்சிடும்.  ஆனால்  ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முகம் கழுவும்  நபர்களை    இப்படி விலைஉயர்ந்த பொருட்களை வாங்கவைத்து  தனக்குள்ளேயே இவர்கள் பொருட்கள்தான் குணப்படுத்துகிறது என்று நினைக்கவைத்து  மேலும் மேலும் ஏமாற்றி  வருகின்றனர்.

அதே போல் இவர்கள்  விற்பனை செய்யும் பேஸ்ட், பிரஷ்  போன்றவற்றுக்கும் இவர்களைவிட விலைகுறைந்த தரமான இந்தியபொருட்க்கள் பலவற்றை  கூறலாம்.  ஆனால் பரிந்துரைப்பவர் உறவினர் நண்பர் என்பதால் முகத்தாட்ச்சனைக்காக  வாங்கிவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருள் என்பதால் தனது மனதுக்குள்ளேயே தான் இதற்க்கு முன் பயன்படுத்திய பொருளை விட நன்றாக உள்ளது என்று தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர். 



விழித்துக்கொள்ளுங்கள்:
நம் நாட்டின் மீது மறைமுகமாக பல நாடுகள் போர் தொடுத்து  வருகின்றன, போர் என்பது ஆயுதம் ஏந்தி போரிடுவதுதான் என்று இல்லை. பொருளாதார ரீதியில் 120 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நமது பொருட்களை நாம் தயார்க்கமுடியாமல், பயன்படுத்த முடியாத அளவுக்கு   பல அயல்நாட்டுப் போருட்களை வாங்கி நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் சீரழித்து, அழித்து வருகிறோம். இதனால்  நமக்கு எந்த பாதிப்பும் வராது என்ற மனக்கணக்கை போட வேண்டாம், நாம் என்னத்தான் கோடி கோடியாக  பணம் சம்பாதித்தாலும் சாப்பிட  உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்று உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியாலும், வறுமையாலும் தற்கொலை செய்துக்கொள்ளும் அவல நிலையை உருவாக்கி வருகிறோம். இந்த தற்கொலைகள் நாளை மிகப்பெரிய  ஒரு அழிவை உண்டாக்குவதர்கான அறிகுறி மட்டுமே. பறவைகளின் அழிவு எப்படி இயற்க்கை சீரழிவை காட்டுகிறதோ அதே போல்  தான் இந்த உழவர்களின் தற்கொலை நாளை நம் நாட்டின் பேரழிவை எச்சரிக்கிறது. இந்த அழிவை தவிர்க்கவேண்டிய கடமை மக்களாகிய நம்மிடம்தான் உள்ளது.  ஆட்சியாளர்களை  குறைக்கூறி அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாம். நம் நாட்டின் வளத்தை சுரண்டி வெளி நாட்டில் பதுக்கவும், வசிக்கவும் தயாராகி வருகின்றனர்.  இலங்கையை  போல் நாளை நாமும் இழப்பு என்று வரும்போது வசதி படைத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற அவள நிலையை நம்மை அறியாமலே நாம் உருவாக்கி வருகிறோம்.

நம் நாட்டின் அருமை பெருமை தெரியாத இத்தாலிய பெண்ணும், ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நம் நாட்டை அண்டை நாடுகளிடம் அடகு வைத்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கப்போவது   நாம்  தான். தயவு செய்து அண்டைநாட்டு பொருட்களையும், உணவுகளையும் தவிர்த்து நம் நாட்டின் உழவர்களையும், தொழிலாளர்களையும் பாற்றி சிந்தித்து செயல்படுங்கள்.  எதிலுமே சுயநலமாக சிந்தித்து இன்று நமக்கு நாமே குழிபறித்து வரும் செயல் தான் இந்த அண்டை நாட்டு பொருட்களை பயன்படுத்துவது. விழித்துக்கொள்ளுங்கள்....

 பதிவை எழுத  ஊக்கமும், உதவியும் செய்த இலங்கை பதிவர்கள்  நண்பர் துமிழின் பக்கங்கள் மற்றும் தோழி  சித்தர்கள் இராச்சியம்  அவர்களுக்கு எனது நன்றிகள்.



கொள்ளை கும்பல் AMWAY முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்

60 comments:

கக்கு - மாணிக்கம் said... | January 11, 2011 at 8:54 PM

எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை. குறைந்தது இங்கு வருபவர்களாவது தெரிந்து கொள்ளட்டும்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said... | January 11, 2011 at 8:58 PM

அருமையான பயன்ணுள்ள பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்ணுள்ளதாக, தகவல் களஞ்சியமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

THOPPITHOPPI said... | January 11, 2011 at 9:05 PM

@ கக்கு - மாணிக்கம்

// எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை. குறைந்தது இங்கு வருபவர்களாவது தெரிந்து கொள்ளட்டும்.//

மக்களின் மனதில் விழிப்புணர்வு என்ற கதவு திறக்கும்வரை இந்த வலைத்தளம் தட்டிக்கொண்டேதான் இருக்கும்

நிகழ்காலத்தில்... said... | January 11, 2011 at 9:10 PM

தான் சம்பாதிக்க பலரை பொருளாதாரரீதியாகவும், மனோரீதியாகவும்
சிக்கலில் தள்ளிவிடும் இந்த ஆம்வே விற்பனைத்திட்டம் கண்டிப்பாக ஒதுக்கத் தக்கதே..

DrPKandaswamyPhD said... | January 11, 2011 at 9:12 PM

மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். உடல் நலம் குன்றியவர்கள் தவிர மற்றவர்களுக்கு சாதாரண உணவே போதும். உடல் நலம் குன்றியவர்களுக்கும் பல விதமான சத்துணவுகளை மிகவும் சலீசாக வீட்டிலேயே தயார் செய்து கொடுக்க முடியும்.
ஆனால் நம் மக்கள் ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள். யார் என்ன சொன்னாலும் தாங்கள் பிடித்ததே சரி என்று வாதம் செய்வார்கள். இந்த மடையன்களை அம்வேக்காரன் நன்கு புரிந்துகொண்டு தலையில் மிளகாய் அரைக்கிறான்.

தமிழ்மலர் said... | January 11, 2011 at 9:12 PM

// நம் நாட்டின் அருமை பெருமை தெரியாத இத்தாலிய பெண்ணும், ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நம் நாட்டை அண்டை நாடுகளிடம் அடகு வைத்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கப்போவது நாம் தான்.//

// தயவு செய்து அண்டைநாட்டு பொருட்களையும், உணவுகளையும் தவிர்த்து நம் நாட்டின் உழவர்களையும், தொழிலாளர்களையும் பாற்றி சிந்தித்து செயல்படுங்கள். //

நன்று ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... | January 11, 2011 at 9:25 PM

தொடர்ந்து எழுதுங்கள்

Jayadev Das said... | January 11, 2011 at 10:43 PM

ஒரு முக்கிய விஷயம்: இவர்கள் உண்ணச் சொல்லி கொடுக்கும் புரோட்டீன் பவுடர்கள், அது.. இது .. எல்லாவற்றின் டப்பாகளில் பார்த்தால் "இதை நீங்கள் சும்மா சாப்பிடத்தானே தவிர எந்த மருத்துவ காரனுத்துக்காகவும் பயன் படுத்துவதற்க்காக அல்ல" என்று எழுதி தப்பித்துக் கொள்வார்கள். அனால் அதை விற்கும் நம்முடைய நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் [காசுக்கு காட்டி கொடுக்கும் கம்மனாட்டிகள்], இதை தின்றவன் இதய பை பாஸ் ஆபரே ஷன் பண்ண வேண்டிய நிலையில் குணமாகி விட்டான், பத்து வருஷம் இன்சுலீன் ஊசி போட்டுக் கொண்டவன் இப்போ மாத்திரை கூட இல்லாமல் தினமும் ஒரு கிலோ அல்வாவும், ஜாங்கிரியும் தின்கிறான், வழுக்கைத் தலையனுக்கு இதை தின்ற பின் கரு கரு வென புதர் மாதிரி முடி முளைத்தது, என்று எத்தனை புளுக முடியுமோ அத்தனையும் புளுகி விற்று விடுவான். மேலும் இவர்கள் விடும் இன்னொரு ரீல், "முன் காலத்தில் பூச்சி மருந்து, உரமில்லாமல் விளைவிக்கப் பட்ட உணவு சாப்பிட்டோம், ஆனால் இன்று எல்லாமே கெடுதி, அதற்க்கு ஈடு செய்யத்தான் இந்தக் கருமாந்திரத்தை திண்ணனும்" மென்பார்கள். நம்மாளு ஏமாற மேலும் ஒரு காரணம் இருக்கு. அது உழைக்காமலேயே கமிஷன் வருமென்பது! இதனால் அவன் விடுவது கப்சா என்ற உண்மை இவன் கண்களுக்கு புலப் படுவதில்லை. இந்த மாதிரி அயிட்டங்களை விற்ப்பவன், வாங்குபவன் இருவருமே மோசடிப் பேர்வழிகள்தான்.

vignaani said... | January 11, 2011 at 10:57 PM

ஆம்வே சங்கிலியில் உள்ளவர்கள், தமக்கு என்ன ஆதாயம் என்றே யோசிப்பவர்கள்.
ஒரு முறை ஆம்வே ஏஜெண்டுகளின் கூட்டம் ஒன்றுக்கு போக நேர்ந்தது.
விநியோக சங்கிலியில் எப்படி சிக்கனம் செய்கிறார்கள்;அதனால் ஏஜெண்டுகளுக்கு எவ்வளவு வருமானம் என்று திரும்ப திரும்ப சொன்னார்கள். அதனால், பயன் படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்குமா என்று கேட்டேன்; பதில் இல்லை. வாய் அடைக்கப் பட்டேன்.
சோப்பு, பற்பசை போன்றவற்றில் இந்தியப் பொருள்களின் தரம் நன்றாகவே இருப்பதுடன், விலையும் (ஆம்வேயுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால்), மலிவே. அப்படி இருக்கையில், ஆம்வே சரக்குகள் எப்படி விற்பனை ஆகின்றனவோ எனப் பலமுறை வியந்து இருக்கிறேன். . பதிவர் சொன்னது போல் மூளைச் சலவை தான் போலும்.

செங்கோவி said... | January 11, 2011 at 11:36 PM

ஆம்வே சங்கிலியில் இணைபவர்கள் முதலில் இழப்பது நல்ல உறவுகளை..எல்லாரையும் கஸ்டமர்களாகவே பார்ப்பதும், அவர்கள் தலையில் பொருட்களைக் கட்டப்பார்ப்பதும் என்ன வித வாழ்க்கையோ!

Chitra said... | January 12, 2011 at 1:04 AM

Amway பற்றி எவ்வளவோ சொன்னாலும், என்னுடைய நண்பர்கள் கூட அதற்கு பலியாவது கண்டு வருந்தி இருக்கிறேன். அவர்களை உள்ளே இழுத்து விடுபவர்கள் எல்லாம், முதலில் அவர்களுடன் தோழமையுடன் பழகி - அவர்களின் weakness or weak points தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் பேசி, அவர்களை வலையில் விழ வைத்து விடுகிறார்கள். பணம் இழந்த பின், இப்பொழுது ஓரிருவரை தவிர மற்ற அனைவரும் விடுபட்டு வந்து விட்டார்கள். விரிவான விளக்கங்களுடன் தந்து இருக்கும் இந்த பதிவுக்காக, பாராட்டுக்கள்!

ம.தி.சுதா said... | January 12, 2011 at 5:23 AM

நல்ல நல்ல தகவல்களை சுவாரசியமாகத் தருகிறீர்கள் நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

மாணவன் said... | January 12, 2011 at 6:11 AM

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுள்ள தகவல்களை தெளிவாக எழுதி வருகிறீர்கள் அருமை நண்பரே

தொடர்ந்து எழுதுங்கள்.....

புலிகேசி said... | January 12, 2011 at 6:36 AM

unga ப்ளாக்ல மட்டும் ரைட் கிளிக் வேலை செய்யல ஏன்?

guna said... | January 12, 2011 at 6:48 AM

அருமையான பயன்ணுள்ள பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்ணுள்ளதாக, தகவல் களஞ்சியமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

பாலகிருஷ்ணா said... | January 12, 2011 at 8:56 AM

சம்பளம் இல்லா வேலைக்காரர்களை நியமிப்பது தான் இந்த மல்டிலெவல் மார்க்கெட்டிங் விற்பனை முறை. இந்த வேலைக்கார ஏமாளிக்கு கொடுக்க பொருட்களின் மீது அதிக விலை விதிக்கப்படுகிறது. ஆம்வேயை விட மிகத் தரமான பொருட்கள் மிகவும் குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மூளைச்சலவை செய்வதில் ஆம்வேயின் சம்பளமில்லா வேலைக்காரர்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரம் கொஞ்சம் நஞ்சமல்ல.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஆம்வேயினால் சாயப்பட்டறையை விற்று அதன்பிறகு கடனாளியாக மாறி தற்கொலை செய்து கொண்டார்.

துணிக்கடை வைத்திருந்த ஒருவர் பைத்தியமாய் அலைகிறார்.

மளிகைக்கடை வைத்திருந்தவர் ஊரை விட்டே சென்று விட்டார்.

சாப்ட்வேர் கம்பெனி வைத்திருந்தவர் கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்.

கொள்ளை என்றால் அப்படி ஒரு கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இந்த ஆம்வே கூட்டம்.

மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தவறினால் உள்ளதும் போய் விடும்.

dondu(#11168674346665545885) said... | January 12, 2011 at 9:30 AM

ஆம்வே கும்பல் போலவே செயல்படும் இன்னொரு கும்பல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என திரிபவர்களே.

சமீபத்தில் 1956ல் என் அன்னையின் தோழி ஒருவர் இம்மாதிரி ஒரு திட்டத்தில் தான் சேர்ந்து கொண்டு அவரையும் சேருமாறு படுத்தினார். என் தந்தை அதெல்லாம் நடக்காத காரியம் என்று விரட்டி விட்டார். பிறகு ஒரு நாள் என்னுடன் இது பற்றிப் பேசுகையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விளக்கினார்.

அவர் சிந்தனை தெளிவாக இருந்தது. இம்மாதிரி திட்டங்கள் பலவற்றை அவர் தன் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அதில் வெகு சிலரே லாபம் அடைந்தனர் பலர் நஷ்டப்பட்டனர். அவருக்கு இரண்டில் எந்தக் குழுவிலும் இருக்க விருப்பமில்லை அவ்வளவே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?

ஒரு பெரிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு அமெரிக்கர் ஒருவர் ப்ரசெண்டேஷனுக்கு வந்த போது நான் குறிப்பிட்ட நபர் தேவைப்பட்டார்.

அவர்தான் மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆமினா said... | January 12, 2011 at 9:56 AM

தமிழ்மணத்தில் டாப் 20யில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்(இப்ப தான் பாத்தேன். அதான் லேட்;)

ஆமினா said... | January 12, 2011 at 10:00 AM

என் வீட்டு பக்கத்திலுள்ள பெண்ணும் என்னை வாங்க சொல்லியும் சேர சொல்லியும் ரொம்ப தொந்தரவு பண்ணிட்டு இருந்தா. படிப்பறிவே இல்லாத அவள் ஆனா "அப்படி ஆகிடும்,இப்படி ஆகிடும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு ஏமாத்திட்டு இருக்கா. உடனே மக்களும் இத்தனை பயன் இருக்கான்னு வாங்கிடுறாங்க. இவங்கள மாதிரி மூளைசலவை செய்றவங்க இல்லவே இல்ல ;)

எங்கே போனாலும் இதே தொந்தரவு தான். கண் வலிக்குதுன்னு சொன்னாலும் ஆம்வே நீட்டுறாங்க. நகம் உடையுதுன்னு சொன்னாலும் அதையே நீட்டுறாங்க. எப்ப குறையுமோ இந்த மோகம்???

நல்ல பதிவு அண்ணா...

உருத்திரா said... | January 12, 2011 at 10:17 AM

நல்லது சொன்னால் நாலுபேர் எதிர்ப்பாக இருக்கத்தான் செய்வார்கள்,மீதி தொன்நூற்று ஆறுபேர் உங்களை வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

தமிழ் உதயம் said... | January 12, 2011 at 10:29 AM

மிகவும் ஆழமான சிந்தனை. விழித்து கொள்ளுங்கள் தலைப்பில் வந்த பகுதியை வாசித்தாவது விழிப்புணர்வு பெற வேண்டும்.

விக்கி உலகம் said... | January 12, 2011 at 10:58 AM

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

marketing உக்தி மூலம் மட்டுமே இன்னும் இவர்கள் பிழைத்துக்கொண்டு உள்ளனர். நம்மூரில் கிடைக்கும் கீரைகளை வாங்கி சாப்பிட யோசிக்கும் கூட்டம் இந்த புல்லுருவிகளின் "protien" எனும் சொல்லுக்கு மயங்கும். இந்த இடத்திலும் நீங்கள் ஓர் விஷயத்தைப்பர்க்கவேண்டும் அக்தாவது இந்தப்போருள்களை வாங்குவோர் நடுத்தர மற்றும் சற்று உயர் வகுப்பைசார்ந்தவரே!

மதுரை பாண்டி said... | January 12, 2011 at 11:16 AM

விழிப்புணர்வு பதிவு!!

sha said... | January 12, 2011 at 11:28 AM

நல்ல பகிர்வு அண்ணா. கடந்த வாரம் அருசுவை தளத்தில் பற்றிய சகோதரிகளின் உரையாடல்களை கண்டேன். இதை பற்றி விழிப்புணர்வு கொடுக்க உங்களுடைய லின்க்கை கொடுக்குமாரு அட்மினிடம் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். மேலும் அவர் கொடுத்த பதில்
//
சில வருடங்களுக்கு முன்பு ஆம்வே போன்ற Mள்M நிறுவனங்கள் குறித்து அறுசுவையில் பேசி இருக்கின்றோம். அது எத்தகைய ஏமாற்று என்பது குறித்து நானும் சில பதிவுகள் கொடுத்து இருக்கின்றேன். சகோதரி ஒருவர் இணையத்தில் கிடைத்த வலைப்பதிவு ஒன்றினை எனக்கு அனுப்பி, இது குறித்த விழிப்புணர்வு உண்டாக்க இதனை வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அந்த பதிவு உண்மையானது மட்டுமல்ல, நிறைய பேர் படிக்க வேண்டியது என்பதால் அந்த பக்கத்திற்கான லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன்.

http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.html

ஆனால், இதனைப் படித்து விட்டு, ஆம்வே விற்பனையாளர்களும், பொருட்களை வாங்கி உபயோகிப்பவர்களும் உண்மையை அறிந்து, அதை ஒதுக்குவார்கள் என்று எண்ணவில்லை. வழக்கம்போல், காசு அதிகமா கொடுத்தாலும் பொருளோட தரம் ரொம்ப அருமையா இருக்கு என்று சில பதிவுகள் இங்கே வரலாம். :-) நானும் வழக்கம்போல் மனதிற்குள் சிரித்துக் கொண்டு சென்றுவிடுவேன்.

தூக்கத்தில் இருப்பவர்களை உலுக்கி எழுப்பலாம்.. மயக்கத்தில் இருப்பவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பலாம். கோமா ஸ்டேஜில் கிடப்பவர்களை சாமானியர்களால் எழுப்ப இயலாது. :-)
//

Speed Master said... | January 12, 2011 at 11:36 AM

அருமையான பயனுள்ள பதிவு

Lakshmi said... | January 12, 2011 at 11:37 AM

நாமதான் கூடியமானவரை விழிப்புணர்வுடன் இருக்கனும்.

இனியவன் said... | January 12, 2011 at 11:48 AM

இப்படி ஒரு சுயநலமே குறிக்கோளாகக்கொண்ட செம்மறியாட்டுக்கூட்டம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஏமாற்றித்திரிகிறது. நானும் வேறுவழியில்லாமல் ஒரு டூத்பேஸ்ட் வாங்கினேன் ஆனால் உபயேகிக்காமல் அப்படியே வைத்திருந்தேன். ஒரு மாதம் கழித்து வந்த அந்த நபர் அண்ணே உங்க பல் இப்போ உண்மையாகவே நல்ல சைனிங்கா இருக்க்குன்னான். ஆமாம்பா எல்லாம் colgate -ன் மகிமைதான் amway paste இன்னும் யூஸ் பண்ணலேன்னேன். அன்று போனவன்தான். மக்களுக்கு தேவையான பதிவு. இனியும் ஏமாறமல் இருக்க. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

நா.மணிவண்ணன் said... | January 12, 2011 at 11:55 AM

நண்பரே .மிக அருமையான பதிவு .amway மட்டுமல்ல இது போல் நிறைய MLM கம்பனிகள் உள்ளன ஏமாற்று வதர்க்காகவே உருவாகின்றன .லட்சம் லட்சமாக பணம் எளிதில் சம்பாரிக்கலாம் என்று நண்பர்களின் அழைப்பின் பெயரில் அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு சென்றிருக்கிறேன் .பயங்கரமாக மூளை சலவை செய்வார்கள் .உங்களுக்கு லட்சம் முக்கியமா ,லட்சியம் முக்கியமா . ஒரு பொருளை எப்பொழுது தயாரிக்கபடுகிறதோ அப்பொழுதே அதை வாங்குவதற்கு ஒருவர் பிறந்து விட்டார் .என்றெல்லாம் மண்டையை கழுவுவார்கள் . ஆனால் என்னுடைய பொருளாதார சூழ்நிலை அப்போது அதில் சேர ஒத்துழைக்கவில்லை .இப்பொழுது தெரிகிறது அவர்கள் எந்தளவிற்கு ஏமாற்றுக்கார்கள் என்று .நல்ல வேளை என்னுடைய பொருளாதரா சூழ்நிலை என்னை காப்பாற்றிவிட்டது

உங்களது பணி என்றென்றும் சிறக்க வாழ்த்துக்கள்

அர்ச்சனை said... | January 12, 2011 at 12:03 PM

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதை தட்டிக்கேட்கவேண்டும் என்ற உங்கள் நோக்கம் வாழ்க..

சி.பி.செந்தில்குமார் said... | January 12, 2011 at 12:47 PM

i also cheated by that company by purchasing a washing poeder item one bottle rs 600.

பட்டாபட்டி.... said... | January 12, 2011 at 1:06 PM

செவிட்டில் அறையும் உண்மை..

இதை விற்கிறோம் என, பல பைத்தியகாரர்கள்... நண்பர்கள் என்ற போர்வையில் சுற்றுகிறார்கள்..

அருமையான விழிப்புணர்வு பதிவு..

பட்டாபட்டி.... said... | January 12, 2011 at 1:16 PM

அண்ணே.. எதிர்கருத்துக்கள் வந்தால் டெலிட் பண்ணவேண்டாம்..

விவாதம் மூலம், அவர்களின் முகத்திரையை கிழிப்போம்..

பட்டாபட்டி.... said... | January 12, 2011 at 1:16 PM

பட்டாபட்டி.... said... | January 12, 2011 at 1:17 PM

To Followup

விஜய் said... | January 12, 2011 at 1:55 PM

உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் சோம்பேறிகளின் கூட்டம்தான் இந்த சங்கிலித்தொடர் வியாபாரக் கூட்டம். ஏற்கனவே இதில் இணைந்தவர்கள் திருந்தப் போவதில்லை. தப்பு என்று தெரிந்தால் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

இரவு வானம் said... | January 12, 2011 at 2:02 PM

ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை எப்படியாவது சம்பாதித்து முன்னேறிவிட வேண்டும் என நினைப்பவர்கள் ஏமாந்து கொண்டேதான் இருப்பார்கள், எனவே ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும், அதைத்தான் உங்கள் பதிவு வெளிப்படுத்துகிறது, வாழ்த்துக்கள் நண்பா.

தஞ்சாவூரான் said... | January 12, 2011 at 2:26 PM

AMWAY - An AMerican WAY of cheating. I have many stories to share. Will do when time permits.

அருமையான, விழிப்புணர்ச்சி பதிவு. தொடருங்கள்.

sakthistudycentre.blogspot.com said... | January 12, 2011 at 2:27 PM

மறுபடியும்..
நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

பாரத்... பாரதி... said... | January 12, 2011 at 2:50 PM

ஆம்வேயில் இணைபவர்கள் அதற்கு சொல்லும் காரணங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. அவர்கள் பேச ஆரம்பித்தாலும் பிரச்சார நெடியே அடிக்கிறது. ஆனால் ஊர்ல பாதிப்பேர் இது மாதிரி ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையே.

FARHAN said... | January 12, 2011 at 3:34 PM

போட்டு தாக்கு தல ....

"உழவன்" "Uzhavan" said... | January 12, 2011 at 4:01 PM

One more product is thr like Amway.. Herbalife.

பாரத்... பாரதி... said... | January 12, 2011 at 5:22 PM

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

சங்கர் குருசாமி said... | January 12, 2011 at 6:31 PM

Very informative article. I am a regular user of this product. This was recommended by my doctor(???). Still I am using this. But now I realise the reality..

Thanks for your wonderful and eye opening article.

Pls visit my blog :

http://anubhudhi.blogspot.com/

NKS.ஹாஜா மைதீன் said... | January 12, 2011 at 7:02 PM

மிகவும் பயனுள்ள பதிவு....இலவசமாக ப்ரோட்டின் பற்றிய தகவலுக்கும் நன்றி....

ஜோதிஜி said... | January 12, 2011 at 7:17 PM

அரசியல் குறித்து எழுதும் போது படிக்க நன்றாக இருக்கும். மாற்றுக்கருத்துக்களும், உபி மற்றும் ரர போன்றவர்கள் எதிர்மறை எண்ணங்கள், இது போக எப்போதும் போல படித்துவிட்டு நகர்பவர்கள் என்று பலவிதமான கூட்டம் உண்டு. ஆனால் இது போன்ற விசயங்களை நீங்கள் கொடுத்தால் நிச்சயம் ஒரு விதமான விழிப்புணர்வு உருவாகும்.

அரைகிறுக்கன் said... | January 12, 2011 at 8:27 PM

அப்படியே இந்த ஆம்வே பார்ட்டி மற்றும் எல் ஐ சி எஜெண்டுங்ககிட்ட இருந்து தப்பிக்க இல்லான கண்ணுல தெரியாம மறைந்து போக ஏதாவது வழி சொல்லுங்க.

அரைகிறுக்கன் said... | January 12, 2011 at 8:27 PM

அப்படியே இந்த ஆம்வே பார்ட்டி மற்றும் எல் ஐ சி எஜெண்டுங்ககிட்ட இருந்து தப்பிக்க இல்லான கண்ணுல தெரியாம மறைந்து போக ஏதாவது வழி சொல்லுங்க.

mani said... | January 12, 2011 at 8:37 PM

hi

five years back my friend asked to came that meeting and also i have attend the meeting. but i asked to give selling agent for amway they are refused. still i cannot know who is the seller

சென்னை பித்தன் said... | January 12, 2011 at 8:58 PM

பயனுள்ள,விளக்கமான பதிவு! தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வுப் பதிவுகள்!

முகுந்த் அம்மா said... | January 12, 2011 at 9:02 PM

செங்கோவி அவர்கள் குறிப்பிட்டது போல ஆம்வே சங்கிலியில் இருப்பவர்கள் முதலில் இழப்பது நல்ல உறவுகளை. என்னுடைய நெருங்கிய சில நண்பர்கள் இவ்விதம் மார்கெட்டிங் செய்யப்போக இறுதியாக அவர்கள் நிறைய நண்பர்களை, பணத்தை இழந்து விட்டனர்..இப்போது புலம்புகின்றனர்.

நல்ல விழிப்புணர்வு பதிவு.

பலே பிரபு said... | January 13, 2011 at 12:35 AM
This comment has been removed by the author.
பலே பிரபு said... | January 13, 2011 at 12:44 AM
This comment has been removed by the author.
பலே பிரபு said... | January 13, 2011 at 12:47 AM
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said... | January 13, 2011 at 4:31 PM

தேவையான சரியான விளக்கங்கள் நண்பரே. ஆனால் இன்னும் வித்ண்டாவதம் பண்ணிக் கொண்டு திரிபவர்கள் நிறைய உள்ளனர். ஏமாந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதை நியாயப்படுத்த முயல்வர். அதுதான் இதிலும் நடக்கிறது! அரசு நடவடிக்கையால்தான் இந்த ஏமாற்றுக்கும்பலை தடுக்க முடியும்.

Johnny said... | March 17, 2011 at 11:19 PM

Really wonderful post. I was arguing with my family friend that its all rubbish but was not able to provide them proper explanation, this post will really help me in doing that.

Rathnavel said... | January 25, 2012 at 9:40 PM

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

Thangasivam said... | January 26, 2012 at 12:41 PM

அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு நன்றி நான் ஆம்வே பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்...

vivekanandan s s said... | November 28, 2012 at 8:39 PM

vivek erode puratham 9 amino acid kondathu mulumaiyana puratham ithil 1kg edai ullavar 1gm puratham ungal unavil thinasari irunthal amway nutrilite mattra entha purathamum thevai illai illai endral thinasari kurainth patcham 20gm amway puratham eduthu kollungal sugar bp arthritis pondra ethuvum varathu evan petchai kettu edukkamal irunthal pothikkum pothu puriyathu pathikkum pothu evan varamattan enenil evanukku sugaro bp pakkavathamo vanthu mudangi viduvan evanukku puriya vaikka amway nanbargal muyalavendam

தொழிற்களம் குழு said... | November 29, 2012 at 9:15 PM

மிகவும் அருமையாகத் தங்களது தொகுப்பு இருக்கிறது சகோ,,,


தொடருங்கள்,,,

தொழிற்களம் வாசியுங்கள்

என்றும் இனியவன் said... | January 3, 2013 at 2:02 AM

நண்பர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் 5 வருடத்தில் இந்தியாவில் NO 1 இடத்திற்கு வரும் . அது ஆம்வே பண்ணும் மக்களால் அல்ல , உங்களைபோல இலவசமாக மார்கெட் பண்ணும் மக்களால் தான்.நீங்கள் நல்லது பண்றோம் என்று, கூட ப்ரொமோட் தான் பண்றோம். சில படங்கள் ரிலீஸ் ஆகும் முன் கோர்ட்ல கேஸ் போடுவாங்க , அது எதுக்குனா அதுவும் ஒரு விளம்பர ட்ரென்ட் .பேப்பர் காரர் காசே இல்லாம டெய்லி படத்தோட நேம் ப்ரமோட் பண்ணுவார்.
ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன் நீங்கள் KFC சிக்கென் சாப்டதே இல்லையா ? இல்ல macdonald போனது இல்லையா? புள்ள குட்டி மட்டும் MNC ல வேல பாத்தா ,MNC ல வேல பாக்குறானு சீன் போடுறது இல்ல. இது எல்லாம் உங்க அப்பனோட கம்பெனியா? இதுக்கெல்லாம் அமெரிக்க காரன் வேணும். எந்த ஊரு நாயம் ?
உன் பொருளு 100% தரமா இருந்தா எந்த நாயாவது ஆம்வே பக்கம் போகுமா? உங்களுக்கு கடுப்ப இருந்த யாரு என்ன பண்ண முடியும் ? ஆம்வே ப்ரோட்டின் பவுடர் 10% கு 8% ப்ரோட்டின் இறுக்கம், ஆனால் இந்தியன் ப்ரோட்டின் பௌடர்ல 10% கு 2% தான் ப்ரோட்டின் இருக்காம் ? நான் சொல்லப்பா நம்ம நாடோட நிபுணர் குழுதான் சொல்லுது . IDSA இந்தியன் டைரக்ட் செல்லிங் association ஆம்வேய மெம்பரா சேத்த குழுவ கேள்வி கேக்காம என் இப்படி நெட்ல ? என்னத்த சொல்றது.
உங்கள பாத்தாதான் எனக்கு பாவமா இருக்கு
போங்கப்பா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க .