ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே

Tuesday, January 18, 2011  சில மாதங்களுக்கு  முன்பு அண்ணன் சவுக்கு அவர்கள்  "ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே !" என்ற பதிவின் மூலம் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த பதிவில் சில வரிகள் உங்களுக்காக:

"பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு. நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை. நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.  

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம். 

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!" பதிவர்களுக்கு இருக்கும் கடமையையும், வலிமையையும் உணர்த்தவே இந்தபதிவை சவுக்கு அவர்கள் எழுதி இருந்தார். ஆனால் பதிவர்கள் தங்கள் கடமையை இன்னும் உணர்ந்ததாக  தெரியவில்லை.  நான் வலைப்பதிவிற்கு  வரும் முன் வரை நினைத்துக்கொண்டு இருந்தது நம் ஆட்சியாளர்கள்தான் சரியில்லை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் வலையுலகம் வந்து  நாட்கள் போக போகத்தான் தெரிந்தது ஆட்சியாளர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் சரியில்லை என்று. வலைப்பதிவு  என்பது படித்தவர்கள் மட்டுமே கூடும் இடம், அப்படியென்றால் எவ்வளவு நாகரீகமாக இருக்கவேண்டும்? ஆனால் ஜாதி, மதம், இனம், ஆபாசம், சினிமா என்று இங்கே தான் பல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. படித்தவர்கள் கூடும் இடத்திலேயே இப்படியென்றால் படிக்காதவன் எப்படி இருப்பான்?  இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி சரியான ஆட்சியை கொடுக்க முடியும்?.முதலில் நம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும் பிறகு தான் அடுத்தவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்க  வேண்டும்.  இங்கே பதிவர்கள் என்ற பெயரில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அதிகமான வலைத்தளத்தில்  சினிமா, ஆபாசம்  சார்ந்த பதிவுகள்தான் குவிந்து கிடக்கின்றது.  கொஞ்சம் கூட நாட்டின் மீதும், மக்களின் மீதும் கவலை இல்லாமல் இப்படி இருந்துவிட்டு பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் பேசி என்ன பயன்?.ஒருசிலர் தன்னிடம் இருக்கும் வக்கிரங்களை  ஜோக் என்ற பெயரில்  எழுதிவிட்டு 18+ என்ற ஒரு வார்த்தை போட்டுவிட்டு பதிவிடுகின்றனர். இதனால் யாருக்கு என்ன பயன்? மற்றவர்களை மகிழ்விக்கவா? அப்படியென்றால் எதற்காக  விளம்பரம் செய்ய வேண்டும்?  விளம்பரம் செய்ய இங்கே அணுகவும் என்று போடவேண்டும்? ஏன் இரவு நேரங்களில்  படுக்கை  அறை   கதவை திறந்துவைத்துக்கொண்டு வாசலில்  18+ போட வேண்டியது தானே?  பணத்துக்காக சமுதாயம் சீரழிந்தாலும் பரவாயில்லை என்று இதுபோன்ற சுயநலவாதிகள் இருப்பதால்தான்  புதியவர்களும் இவர்களை பார்த்து சீரழிந்து வருகின்றனர்.நம் நாடு இப்போது  மிகவும் மோசமான  நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது, அண்டை நாட்டினர் நம் நாட்டில் நடக்கும் ஊழல்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் நாமோ எதைப்பற்றியும் கவலையில்லாம் சினிமா மட்டுமே வாழ்க்கை என்று எதில் தொட்டாலும் அதிலேயே மூழ்கி கிடக்கிறோம்.  என்று நம் நாட்டிற்காக சிந்திக்கப்போகிறோம்? யாராவது ஒருவர் துணிந்து முன் வந்து கேள்வி கேட்டாலும் அவனை கேள்வி கேட்கத்தான் இங்கே பலர் இருக்கிறார்கள், நீ அந்த ஜாதியா, அந்த மதமா, அந்த கட்சியா என்று? பிறகு யார்தான் முன்வந்து கேள்வி கேட்க முடியும்?நம்மிடம் நிறைய மாற்றங்கள் தேவை. பதிவர்கள் ஒன்றிணைந்து நாட்டுக்காக ஏதாவது  செய்யவேண்டும், முன் மாதிரியாக செய்யவேண்டும். அதற்கு முதலில் நாம் ஒற்றுமையாக செயல்படவேண்டும் நமக்குள்ளேயே பலர் ஜாதி, கட்சி என்று போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம்  ஒதுக்கிவைத்து மனிதன், தமிழன், இந்தியன்  என்ற ஒற்றை வார்த்தையில்  இணையவேண்டும்.    

இன்றிலிருந்து சிலவற்றை நீங்கள் தவிர்த்தாலே நிச்சயம் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்,
►மற்ற தளங்களில் இருந்து அனுமதி இன்றி எழுத்துக்களை திருடுவது:
ஒருவருடைய எழுத்துக்களை அவருடைய அனுமதி இன்றி வெளியிடுவது முற்றிலும் தவறான ஒன்று. அவருடைய கருத்து அல்லது கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால் அவருடைய தளத்துக்கு உங்கள் வலைத்தளத்தில் சில விளக்கங்களுடன்  லிங்க் கொடுக்கலாம். மொத்தமாக அவருடைய எழுத்துக்களை காபி செய்து பதிவிட்டு கடைசியில்  லிங்க் கொடுப்பது/கொடுக்காமல் இருப்பது  என்பது தவறான செயல். 
►சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம் போன்றவற்றை எழுதிவருவது:
 இன்று சினிமா துறையில் இல்லாதவர்கள் ஓட்டுக்காகவும், ஹிட்ஸ் போன்றவற்றிர்க்காவகும் முதல் நாளே படம் பார்த்து விமர்சினம் எழுதி வருகின்றனர்.  இது பதிவுலகில்  தவறான  போட்டியை உருவாக்கிவிடும். வலையுலகில் புதியவர்களுக்கு தவறான முன் உதாரணத்தை உருவாக்கிவிடும். உங்களுடைய இந்த விமரிசனம் திறமையை வேறு ஒரு துறையில் செலுத்தினால் நிச்சயம் உங்களுக்கும்  மற்றவர்களுக்கும் அது பயனாக  இருக்கும். ஆனால் நீங்கள் சினிமா விமர்சினம் போன்றவற்றை எழுதுவதால் உங்கள் நேரே விரயம் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் சினிமா பார்க்க ஊக்கவிக்கும். இதனால் பயன் என்பது  சினிமா துறையினருக்கு மட்டுமே.இன்று பதிவர்கள் என்றாலே சினிமா துறையை சார்ந்து செயல் படுபவர்கள் என்று மாறி வருகிறது. நம் சமுதாய சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணாமாக அமைந்துவிடும்.  தயவு செய்து இன்றிலிருந்து சினிமா பதிவுகள் எழுதுபவர்களை   ஊக்குவிப்பதை தவிர்த்திடுங்கள். ►ஆபாச ஜோக் பதிவுகளை ஊக்குவிப்பது :
நீங்கள் ஊக்குவிப்பதால்தான் ஆபாச பதிவுகளை  எழுதுகிறார்கள். அதுபோன்ற பதிவுகளுக்கு  ஒருமுறை  உங்கள் பின்னூட்டம், ஓட்டுக்களை தவிர்த்துப்பாருங்கள். நிச்சயம் மாற்றம் வரும்.முக்கியமாக இந்த மூன்றையும் தவிர்த்தாலே போதும் பதிவர்கள் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க செயல்படுவார்கள். 

நான் தமிழ்மணம் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளான், அவர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதும் வலைத்தளங்கள்மேல் நடவடிக்கை   எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  தயவு செய்து உங்கள் மகிழ்ச்சிக்கு நடுவே நாட்டைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.
 

 இன்றிலிருந்து பதிவுலகம் சினிமாவை விட்டு பிரிந்து செயல்பட  வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றிலிருந்து சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம்  பதிவு எழுத மாட்டேன், சினிமா பதிவுகளுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று. நாம் சாதித்துக்காட்டுவோம்.  புதிய வரலாறு படைப்போம்.

68 comments:

sakthistudycentre-கருன் said... | January 18, 2011 at 4:02 PM

கஷ்டப்பட்டு பல தகவல்கலுடன் எழுதினால் படிப்பவர்கள் சிலரே..

என்னுடைய ஆதங்கம் பெயரிட்ட பதிவுகள் பாருங்கள்,அதை படித்தவர்கள் சிலரே...

ஆனால் சினிமா துறையில் இல்லாத நான் எழுதிய விமர்சனங்கள் பல ஆயிரம் பேர்கள் படித்திருக்கிறார்கள்..

அதனால்தான் பதிவுலகில் .
????????????????

மாணவன் said... | January 18, 2011 at 4:02 PM

தெளிவான பார்வை...

“நாம் சாதித்துக்காட்டுவோம். புதிய வரலாறு படைப்போம்.”

sakthistudycentre-கருன் said... | January 18, 2011 at 4:06 PM

இனிமேல் நான் முயற்சிக்கிறேன்.
பதிவுகளை படிக்கும் வாசகர்கள் திருந்தாதவரை நாமும் திருந்தப் போவதில்லை.
இந்நிலை மாறவேண்டும் நண்பரே..
பதிவிற்கு நன்றி.

Madurai pandi said... | January 18, 2011 at 4:12 PM

முயற்சிக்கிறேன் !!! சினிமாக்கு இருக்கும் ஆதரவு மற்ற பதிவுகளுக்கு ரொம்ப கம்மி என் தனிப்பட்ட கருத்து ...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

sakthistudycentre-கருன் said... | January 18, 2011 at 4:18 PM

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் இல்லை பிடித்திருக்கும் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

கவிதை காதலன் said... | January 18, 2011 at 4:22 PM

மனதில் நீண்ட நாட்களாக இருந்த சிலவிஷயங்களை பட்டியலிட்டுவிட்டீர்கள். அருமை.. தொப்பி தொப்பி எப்போதுமே சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை தெரிவித்துவருகிறது என்பதை இந்தப்பதிவிலும் நிரூபித்துள்ளீர்கள்.

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

Speed Master said... | January 18, 2011 at 4:31 PM

தெளிவான பார்வை...

“நாம் சாதித்துக்காட்டுவோம். புதிய வரலாறு படைப்போம்.

சங்கர் குருசாமி said... | January 18, 2011 at 4:35 PM

This is the general trend.. To take higher hits and votes, these are being done. This is a kind of thirst for recognition. Once this thirst is fulfilled ...yes... they will also come into the right track.

Thanks for sharing such concern,

visit to my blog : http://anubhudhi.blogspot.com/

தங்கம்பழனி said... | January 18, 2011 at 5:02 PM

தங்களின் ஆதங்கம் புரிகிறது...! அடிக்கடி உணர்ச்சிப் பொங்க இப்படிப்பட்ட பதிவுகளை அளித்து வருகிறீர்கள்.. உணர்வுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே அது உறைக்கும்.. ! நன்றி...பாராட்டுக்கள்..!

பாரத்... பாரதி... said... | January 18, 2011 at 5:18 PM

நீங்கள் சொன்னவற்றில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன,
நீங்கள் சொன்னதை பாஸிடிவ் ஆக எடுத்துக்கொண்டால், நல்ல பதிவுகள் வெளியாகும் போது, அதற்கு ஆதரவுகள் பெருகினால் நிச்சயம் வலையுலகம் முழுவதும் ஆரோக்கியமான நிலை உண்டாகும்.

நல்ல விஷயங்களுக்கு கிடைக்கும் ஆதரவே, ஆபாசம், மத, சாதி பாகுபாடு பற்றிய விஷயங்களை புறக்கணிக்க வழி.

அசோக்.S said... | January 18, 2011 at 5:20 PM

இன்றிலிருந்து சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம் பதிவு எழுத மாட்டேன், சினிமா பதிவுகளுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று. நாம் சாதித்துக்காட்டுவோம். புதிய வரலாறு படைப்போம்

அசோக்.S said... | January 18, 2011 at 5:21 PM

இன்றிலிருந்து சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம் பதிவு எழுத மாட்டேன், சினிமா பதிவுகளுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று. நாம் சாதித்துக்காட்டுவோம். புதிய வரலாறு படைப்போம்

பாரத்... பாரதி... said... | January 18, 2011 at 5:26 PM

நல்ல விஷயங்களை எழுதிக்கொண்டிருந்த சிலர், தற்போது கமர்சியல் பாதைக்கு மாறிவிட்டனர் என்பது உண்மை.

பத்திரிக்கைகளுக்கு தார்மீக பொறுப்பு இருப்பதைப் போலவே, வலைப்பூக்களுக்கும் உண்டு.

தற்போதைய தமிழ்ச்சூழலில் சினிமா என்பது அரசியல், அன்றாட வாழ்வு என அனைத்தையும் பாதித்திருப்பது உண்மை. வலைப்பூக்களிலும் அது எதிரொலிக்கிறது.

மேலும் வலைப்பூ என்பது இது வரை வாசகர்களாக இருந்தவர்கள், எழுத்தாளர்களாக மாறும் முயற்சி, சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை நீங்கள் அடையாளம் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
மாற்றம் நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.

எங்கள் பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள், மாற்றம் எம்மில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

தமிழ் உதயம் said... | January 18, 2011 at 5:29 PM

தங்களின் சில கருத்துகளில் உண்மை உள்ளது. ஏற்று கொள்ளலாம்.

DrPKandaswamyPhD said... | January 18, 2011 at 5:38 PM

முகமூடி போட்டுக்கொண்டு அட்டைக்கத்தி வைத்துக்கொண்டு என்ன தேச சேவை செய்யப் போகிறோம்?
சினிமா ஒரு நிழல் உலகம் என்றால் பதிவுலகம் ஒரு மாயா உலகம்.

தான் எழுதும் கருத்துக்களுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளக் கூட விரும்பாதவர்களின் கூட்டம்தான் பதிவர்கள். இவர்கள் நிஜ உலகில் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

ganesh said... | January 18, 2011 at 5:48 PM

I have questions to you. could you please answer them?

1) When Pakistan was affected by flood, India helped them. We are also helping Afghanistan for building infrastructure, Why not tamil people? I am not talking about the srilankan army. I am talking about the tamil people who died in there. At least india should not have helped srilankan army. If india, raised their voice against the war, Lots of tamil peoples life could have been saved.

2) I am not supporting seeman, But my question, by the name of india he is targeting the indian government which was ruled by congress. Why we should not talk about indian government? Are proud to say "My governement helped srilankan army to kill tamil people, Just because we were afraid that china, pak may help srilanka if we are not? Cant you see blood in every Indian’s hand. I hate say my taxes have been used to kill the innocent tamil people who my brothers and sisters.

3) Leave everyting, as a human being i cry the tamil people who died in srilanka. Dont you?

4) Decades ago, we are not indian we are tamilan and i am proud to be one. We are not getting water from karnataka, andhra and kerla. And the central government didnt care about it. But you still want me to believe in india. We need power to get what we want for our people. Why we need to beg people for water?

5) The same central government didnt care for our fisherman who is getting killed every other day. How are going to justify it.

DrPKandaswamyPhD said... | January 18, 2011 at 5:54 PM

இந்தப்பதிவையும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள்.
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/1.html

Jana said... | January 18, 2011 at 5:56 PM

பயனுறப்பதிவெழுதுங்கள், நாட்டிற்கும் சமுகத்திற்கும் உபயோகமாக எழுதுங்கள் என்றகோசம் எப்போதும் வந்துகொண்டே உள்ளது. ஆனால் பயனுற பதிவெழுதுபவர்களை எவரும் ஊக்கவிப்பதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும்.
கூடுமானவரை பிரயோசனமான பதிவுகள் வந்தால் அனைவருக்கும் நன்று.

பாரத்... பாரதி... said... | January 18, 2011 at 6:13 PM

//முகமூடி போட்டுக்கொண்டு அட்டைக்கத்தி வைத்துக்கொண்டு என்ன தேச சேவை செய்யப் போகிறோம்?//

பாரத்... பாரதி... said... | January 18, 2011 at 6:14 PM

//முகமூடி போட்டுக்கொண்டு அட்டைக்கத்தி வைத்துக்கொண்டு என்ன தேச சேவை செய்யப் போகிறோம்?//

இதற்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்...

Anonymous said... | January 18, 2011 at 6:26 PM

வலைப்பதிவிற்கு புதியாய்
வந்த சில நாட்களிலே...
பிரபலமாக்குவதை விரும்பாமல்
எழுதி அதை ஓட்டுக்கு விடுவதை
தவிர்த்து விட்டேன்...

தரமான விஷயங்களை
தருவோம்...
"தரம் நிரந்தரம்"

நானும்
"புது நெல்லு... புது நாத்து...(puthuvayal.blogspot.com) "பதிவர் எழுதிய பதிவிற்கான எனது விமர்சனத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தேன்...

THOPPITHOPPI said... | January 18, 2011 at 6:31 PM

@DrPKandaswamyPhD
@பாரத்... பாரதி

//முகமூடி போட்டுக்கொண்டு அட்டைக்கத்தி வைத்துக்கொண்டு என்ன தேச சேவை செய்யப் போகிறோம்?//இத்தனை ஆண்டுகள் இப்படியே இருந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க கூடாது என்பதற்குதான் இந்த பதிவு.

உண்மையான நூறு பேர் ஒன்றிணைய தயார் என்றால் முகமூடியையும் அட்டைக்கத்தியையும் தூக்கி எரிய பலர் இங்கு தயாராக உள்ளனர். அந்த நூறு பேரில் நீங்களும் ஒருவராக வர தயாரா?

செங்கோவி said... | January 18, 2011 at 7:00 PM

நான் எழுதும் தேர்தல் ஸ்பெஷல் தொடர் மற்றும் ஆன்மீகப் பதிவுகளைப் படிப்போர் வெகுசிலரே. அதை எழுதிவிட்டு அடுத்து ஒரு சினிமாப் பதிவு எழுதினால் ஆயிரக்கணக்கில் வந்து படிக்கிறார்கள். அவர்களில் 400 பேராவது முந்தைய தேர்தல் ஸ்பெஷல் பதிவைப் படிக்கிறார்கள். எனவே பதிவர்கள் சினிமாவை உபயோகிக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்..மேலும் உண்மையான சினிமா விமர்சனம் மழுப்பல் இல்லாமல் பதிவுலகில்தான் எழுதப்படுகிறது. ஈசன், மன்மதன் அம்பு போன்ற படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, நெகடிவ் டாக் உருவானதை அறியாதவரா தாங்கள்..மனிதனுக்குப் பொழுதுபோக்கும் தேவையே..நல்ல சினிமாவையும் அடையாளம் காட்டுவது தேவை என்றே நினைக்கிறேன். நான் ஒரு சாமானியன்..உங்கள் புரட்சியில் பங்கெடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஏதோ என்னால் முடிந்தது ஒரு ஓட்டு.போட்டாச்சு.

அன்புடன்
செங்கோவி

இரவு வானம் said... | January 18, 2011 at 7:01 PM

நண்பா நல்ல விசயங்களை பற்றியே பதிவெழுதுபவர்களை பெரும்பாலும் ஊக்குவிப்பதில்லை, அப்படியே ஊக்குவிப்பவர்களும் சில நாளில் வருவதில்லை, பெரும்பாலானவர்கள் வலையுலகை ஒரு பொழுதுபோக்குதளமாகத்தான் பயன்படுத்துகிறார்கள், வெறுமனே நல்ல பதிவே எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், சில நாட்களில் படிப்பவர்களுக்கு போரடித்து விடுகிறது, முதலில் நமது தளத்திற்கு படிப்பவர்கள் அதிகம் வரவேண்டும் என்றால் சினிமா பற்றி பதிவழுத வேண்டி உள்ளது, நானும் முதலில் நல்ல பதிவினையே எழுதி வந்தேன், யாருமே வரவில்லை, பிறகு சினிமா பற்றி எழுதிய பிறகுதான் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதே சமயம் நான் சினிமா பதிவு எழுதுவதையே எப்போதும் செய்வதில்லை, இப்பொது பெருமள்வில் குறைத்து விட்டேன், சொல்வதற்கு மன்னிக்கவும், தங்களுடைய ஆரம்ப கால பதிவு சரியானதாக அமையவில்லையே நண்பா, கசப்பான மருந்தை தேனுடன் கலந்து கொடுப்பதை போல நல்ல விசயங்களை நாலு பேர் படிக்க வேண்டும் என்றால், அவர்களை நமது தளத்தில வரவைக்க வேண்டும் என்றால் சில காம்ப்ரமைசை செய்ய வேண்டி உள்ளது, சரக்கு இருக்கும் உங்களை போன்றவர்களுக்கு இது எல்லாம் தேவையில்லை, ஆனால் என்னை போன்ற புதியவர்களுக்கு உடனடியாக இதனை தவிர்க்க இயலாது, புரிதலுக்கு நன்றி :-)

NKS.ஹாஜா மைதீன் said... | January 18, 2011 at 7:11 PM

நீங்கள் சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை....சமுக அக்கறையுள்ள நெத்தியடி பதிவு.....எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு.....

FARHAN said... | January 18, 2011 at 7:34 PM

உண்மயான ஆதங்க பதிவு வலையுலகில் வந்த நாள் முதல் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் சினிமா பதிவுகளை தவிர்த்தே வந்துள்ளேன் .
நிச்சயமாக பாராட்ட படவேண்டிய பதிவு ,
சமூகத்திற்கு தேவையான பதிவுகளை பதிவிடதன் எனக்கும் ஆசை ஆனால் பணிநிமித்தமாக வெளிநாட்டில் வாசிக்கும் நான் நாட்டு நடப்பு சமூக பிரச்சனைகள் போன்ற பதிவுகளை பகிர முடியாமல் உள்ளது .
அதனால் தான் நான் கற்ற வற்றில் இருந்தும் நான் படித்த ,கண்ட நல்ல விடயங்கள் பற்றியும் பதிவுகளை பதிவிடுகின்றேன்

நன்றி தொப்பி தங்களின் கருத்தை 100% வீதம் நான் அமோதிக்கின்றேன்

THOPPITHOPPI said... | January 18, 2011 at 8:04 PM

பலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நான் எல்லோரும் நாட்டுக்காக போராடுங்கள், விழிப்புணர்வு பதிவு எழுதுங்கள் என்று சொல்லவில்லை அது உடனே நடக்கக்கூடிய காரியமும் இல்லை. இப்போதைக்கு தேவையானது வலைப்பதிவை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்பதுதான். அந்த மரியாதை வந்தாலே நாம் அந்த மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவாவது சில நல்ல முயற்ச்சிகள் எடுப்போம் என்பதுதான். அந்த மரியாதைக்கு இப்போதைக்கு தேவையானது ஆபாசத்தை தவிர்ப்பது, ஆபாச பதிவுகளை ஊக்குவிக்காமல் இருப்பது, பதிவு திருட்டுக்களை தவிர்ப்பது(முக்கியமாக செய்தி தாள் இணையத்தளங்களில்). இப்போதைக்கு இவற்றை தவிர்த்தாலே போதும்.

சினிமா இப்போதைக்கு வலைப்பதிவர்களிடம் இருந்து பிரிக்க முடியாதது போல, முறச்சி செய்வோம்.

நகைச்சுவை, ஜோக், கேளிக்கை பதிவுகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஏன் என்றால் பலருடைய பொழுதுபோக்கே அதுதான்(நல்லதுதான்). ஆனால் கேளிக்கையில் சினிமாவே ஆக்கிரமித்துவிட்டது அதைதான் தவிர்க்க வேண்டும். ஏன் சினிமா இல்லாமல் சசிகுமாரின் வந்தேமாதரம் சினிமா காரர்கள் பதிவை விட ஹிட்ஸ் வாங்கவில்லையா? FARHAN பதிவு கூட ஒருவகையில் நல்ல வலைத்தளம்தான். இதுபோன்று உங்கள் திறமையை காட்டலாமே ? இதுபோன்ற பதிவுகளில் நடு நடுவே விழிப்புணர்வு, சமுதாய பதிவுகள் எழுதலாமே?

இங்கே பல பெண்பதிவர்கள் வலைத்தளம் வைத்திருக்கிறார்கள் அவர்கள் என்ன சினிமா பதிவையா எழுதுகிறார்கள்?. சித்ராக்கா வலைத்தளமும் ஒரு முன் உதாரணம் தான். அவர்கள் தன் திறமையை காட்டும்போது ஏன் ஆண்கள் மட்டும் சினிமாவிலேயே முடங்கி கிடக்க வேண்டும்?.

Chitra said... | January 18, 2011 at 8:13 PM

உங்கள் ஆதங்கமும் கருத்துக்களும் புரிகின்றன. பதிவுலகை பத்திரிகை உலகுக்கு மாற்றாக (bloggers as journalists ) கருதுபவர்களின் கண்ணோட்டமும், பதிவுலகை - ஒரு சினிமா உலகம் போலவே அங்கீகார கனவோடு (bloggers as entertainers /ஆர்டிஸ்ட்) கருதுபவர்களின் கண்ணோட்டமும் வேறு வேறாக இருக்குமே.

சென்னை பித்தன் said... | January 18, 2011 at 8:27 PM

”கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை.பதிவு பிரபலமாக வேண்டும் என்ற ஆசையின்றி,நல்ல விஷயங்களைப் பதிவில் சொல்வது என் கடமை என்று செயல் பட்டால்,நல்லதே நடக்கும்.
பதிவுக்கு நன்றி.

சென்னை பித்தன் said... | January 18, 2011 at 8:27 PM

”கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை.பதிவு பிரபலமாக வேண்டும் என்ற ஆசையின்றி,நல்ல விஷயங்களைப் பதிவில் சொல்வது என் கடமை என்று செயல் பட்டால்,நல்லதே நடக்கும்.
பதிவுக்கு நன்றி.

உருத்திரா said... | January 18, 2011 at 8:29 PM

நமது உடன் பிறப்புக்கள் சினிமா மாயையில் இருந்து விடுபட்டால்,அது ஒன்றே போதும்,நமது நாட்டில் எவ்வளவோ
மாற்றங்களை எதிர்பாக்கலாம்.

அமுதா கிருஷ்ணா said... | January 18, 2011 at 8:42 PM

அருமையான கருத்துக்கள்.

THOPPITHOPPI said... | January 18, 2011 at 8:56 PM

@Chitra

bloggers as entertainers /artist இது ஜப்பான், சீனா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இங்கே ஆனால் அப்படி இல்லை வீட்டை விட்டு வெளியே வந்தாலே குப்பை, தூசி, பள்ளம், மேடு, கொலை, கொள்ளை, ரவுடி, ஊழல் என்று அடுக்கிக்கொண்டே போகிறது. இதெல்லாம் பதிவர்களுக்கு(மக்களுக்கு) தெரியாது என்று இல்லை தெரிந்து கொண்டே எப்படி கேளிக்கை மட்டுமே வாழ்க்கை என்று இருக்க முடிகிறது?

Philosophy Prabhakaran said... | January 18, 2011 at 9:27 PM

@ DrPKandaswamyPhD
// இந்தப்பதிவையும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள்.
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/1.html //

எனது இடுகையோன்றினை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்... எனது இடுகையில் தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை எனது இடுகையிலேயே சுட்டிக் காட்டியிருக்கலாமே... நான் எப்போதும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்...

ஜீ... said... | January 18, 2011 at 10:24 PM

உங்களின் பல கருத்துகளில் எனக்கு சம்மதமே! ஆனால் சில 'நல்ல', 'தரமான' சினிமாக்களை பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து!

பலே பிரபு said... | January 18, 2011 at 11:24 PM

அனல் தெறிக்கும் பதிவு. படித்த பின் நான் ஒரு சினிமா பதிவில இட்ட பின்னூட்டத்தை டெலீட் செய்து விட்டேன்.

சேட்டைக்காரன் said... | January 18, 2011 at 11:34 PM

நண்பரே! ஒவ்வொருவரும் வலைப்பூக்களை நடத்துவதன் நோக்கம் மாறுபடுகிறது என்பதனை உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். பதிவர்கள் தங்களது நிஜவாழ்க்கையில் அரசியலோடும், சமூகத்தோடும் தொடர்புடையவராகவே இருப்பார்கள் என்று எனது அனுபவத்தின் அடிப்படையில் நம்புகிறேன். மேலும் வலைப்பதிவர்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாமல் இருப்பது, அப்படியோர் அமைப்பு ஏற்படுகிற சூழல்களில் அவை தள்ளிப்போடப்பட்டது, அது நிகழுமா என்ற சந்தேகம் தொடர்வது ஆகிய ஊசலாடும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். அரசியல் விமர்சனங்களும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் வலைப்பூக்களில் நிறையவே உள்ளன் என்று தான் சொல்ல வேண்டும். மாறுகிற சூழல்களுக்கு ஏற்ப அவர்களும் மாறுவார்கள், மாறுகிறார்கள் என்பதே உண்மை.

மற்றபடி, சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை ஆகியவற்றிற்கும் வலையுலகம் இடமளித்தே தீரும். சினிமாத்துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம் எழுதக்கூடாது என்ற அளவுகோல் ஏற்புடையதல்ல. வலைப்பூக்கள் அவரவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிற இடமேயன்றி, தங்கள் கருத்தை அடுத்தவர் மீது திணிக்க முயல்கிற இடமாக இருப்பதை அனுமதிக்க இயலாது. சினிமா, நகைச்சுவை போன்றவற்றை எழுதுபவர்களுக்கும் அரசியல் குறித்த விழிப்புணர்ச்சி இருந்தே தீரும். ’அதெல்லாம் கிடையாது,’ என்று சொல்ல யாராவது முயன்றால், அது அவர்களது சொந்தக்கருத்து என்ற அளவிலே சிலரால் ஏற்கப்பட்டு, பலரால் உதாசீனம் செய்யப்படும். அவ்வளவே!

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், நீங்கள் சொல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதவை.

பலே பிரபு said... | January 18, 2011 at 11:38 PM

நல்ல கருத்துகள் நண்பா.
நான் சில நேரங்களில் ரொம்ப வருத்தப்படுவேன் ஏன் நாம் சரியாக எழுதுவது இல்லையா,? நமக்கு ஏன் அதிக கருத்துகள் வருவது இல்லை?, இண்ட்லியில் பப்ளிஷ் பகுதியில் என்னுடையது வராதா? என்றெல்லாம் ஏங்கி உள்ளேன்.

பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்த போது எதை எழுதுவது என்றே தெரியாமல் கூட பல யோசித்து இருந்தேன். கடைசியில் நான் தெரிவு செய்தது தான் Aptitude,Test of Reasoning,HTML,Computer Tricks. இப்போது சிலர் நல்ல ஆதரவு தருகின்றனர். இருந்த போதும் ஒரு சிறிய வருத்தம் இருந்து வந்தது.

உங்கள் பதிவில் மீண்டு இருக்கிறது என் மனம். இனி இந்த கவலைகளை மறந்து என் முழு கவனத்தையும் நல்ல பதிவுகளுக்காக பயன்படுத்துகிறேன்.

நூறில் நானும் ஒருவன்.

ஆமினா said... | January 18, 2011 at 11:52 PM

எல்லோரிடத்திலும் இருக்கும் ஆதங்கமே... சினிமாக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற படைப்புகளில் யாரும் கொடுப்பதில்லை. அதனை தடுக்க சினிமா பதிவுகளுக்கு ஓட்டு போட கூடாது என சொன்னதை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்...

நாம் ஒன்றும் பெரிய புரட்சி செய்து நாட்டை காப்பாற்ற போவதில்லை தான். ஆனா யாரோ ஒருவனிடத்தில் ஏற்படும் மாற்றம் மெல்ல மெல்ல மற்றவர்களிடத்திலும் பரவினால் நாடு கொஞ்சமாவது உறுப்புடும் இல்லையா???

சகோ தொப்பி தொப்பி சொன்ன அனைத்து கருத்துக்களிலும் எனக்கு கண்டிப்பாக சம்மதமே!!!

பலே பிரபு said... | January 18, 2011 at 11:57 PM

ஆனால் உண்மையில் எனது நோக்கம் சினிமா இயக்குனர் ஆவது. நீங்கள் சினிமாவை குறை கூறி பயன் இல்லை.சில விஷயங்கள் சினிமா மூலம் மட்டுமே சாத்தியம்(வரலாறு,ஆன்மீகம்,நாட்டுப்பற்று, போன்றவை. இது தமிழ் நாட்டில் இப்போது இது 1% கும் குறைவு.).

நல்ல சினிமாவை நம்மவர்கள் மறந்து விட்டோம்("அம்பத்கர்" நான் பார்க்க விரும்பி எங்கும் காண இயலவில்லை).

ஆபாசத்தை மட்டும் விரும்பும் ஈனத் தமிழனாய் நாம் மாறிவிட்டோம், இது மாற வேண்டும். எதையுமே ஆபாசம் இன்றி செய்ய முடியும், நான் இயக்குனர் ஆகும் போது இதை கண்டிப்பாக செய்வேன்.

நல்ல சினிமாக்கள் வரும்போது அவைகளை ஆதரிப்பதில் தவறில்லை. நாம் அதையும் ஒதுக்கும் போதுதான், ஒரு சில படங்கள் கூட வருவது இல்லை.

இரண்டாம் உலகப் போர், ஈராக் போர், ஜாலியன் வாலாபாக், காந்தி வாழ்க்கை , பாரதி வாழ்க்கை ,இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம், இவை எல்லாவற்றையும் நம் கண்முன் நிறுத்தியது சினிமா,(புத்தகங்கள் இருந்த போதும், ஒரு காட்சி நம் மனதில் எளிதாய் பதிந்து விடும்.) இந்த படங்களை நாம் ரசிக்க மறந்த போதுதான் நம் இயக்குனர்கள் பெண்ணின் உடலை கதை ஆக்கினர். எனவே நான் மேலே சொன்னது போல நல்ல சினிமாக்களை ஆதரிப்பதால் தவறில்லை.

பலே பிரபு said... | January 19, 2011 at 12:09 AM

பதிவர்களுக்கும் ஒரு விண்ணப்பம், சினிமா என்பது பல பேர் ஈடுபடும் ஒரு தொழில், இதில் நீங்கள் முதல் நாளின் முதல் காட்சி முடிந்த பின் விமர்சனம் என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள்.

ஒரு சில படங்கள் நல்ல கருத்து பெற்ற போதும் நிறைய தோல்விகள் இப்போது.

அதிலும் இன்னும் சிலர், "நடிகை கவர்ச்சி சூப்பர்", எனவும்,இன்னும் பல அவர்கள் உடல் அங்கங்கள் பற்றியும் எழுதுகிறீர்கள்.கதை பிடிக்கவில்லை என்றால் அதை சொல்லுங்கள், அதை விட்டு மற்ற எல்லாம் சொல்ல வேண்டியது. உங்களுக்கும் சரோஜாதேவி புத்தகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பலே பிரபு said... | January 19, 2011 at 12:14 AM

தங்களை இங்கே அழைக்கிறேன்

http://bloggersbiodata.blogspot.com/

THOPPITHOPPI said... | January 19, 2011 at 12:45 AM

@சேட்டைக்காரன்

நீங்கள் சொல்வதுபோல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறிவிடுவார்கள் என்று எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் நாம் இல்லை. எல்லாம் கையை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது. எதில் தொட்டாலும் ஊழல், கலப்படம், கொலை, கொள்ளை, ஏமாற்றம். இன்று பணம் சம்பாதிக்க ஒருபக்கம் மக்கள் உழைக்கிறார்கள் என்றால் அவர்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவே ஒரு பக்கம் மக்கள் உழைக்கிறார்கள். இன்று நாம் உண்ணும் உணவில் பல கலப்பட பொருட்கள்தான். ஒருவாரமாக வடசென்னையில் தொடர்ந்து விஷவாயு போன்ற ரசாயன் கசிவு இதுவரை எங்கே இருந்துவந்தது என்று தெரியவில்லை அதை அரசும் சரியாக விசாரிக்கவில்லை என்று இந்த பகுதி மக்கள் சாகப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக மீனவனை குருவி சுடுவது போல் சுட்டு வீழ்த்திக்கொண்டு இருக்கிறான் அதையும் ஏன் என்று கேட்க்க ஆள் இல்லை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வேன் என்று சொல்லும் அரசு ஊழியர்கள் ஒருபக்கம். நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் சீனா பொருட்கள் என்று வந்துவிட்டது. 120 கோடி மக்கள் தொகை கொன்ற நம்மால் நாம் பயன் படுத்தும் பொருளை தயாரிக்க முடியவில்லை, செல்போன், டிவி, FRIDGE, என எதில் எடுத்தாலும் அயல்நாட்டு பொருட்கள்தான். போதாதென்று ஆம்வே என்ற நிறுவனம் வேறு FMCG பொருட்களை விற்று வருகிறார்கள். இந்தியர்களுக்கு எந்த ஒரு பயனுமே இல்லாமல் அமெரிக்காவிற்கு பயனளிக்கும் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மத்திய அரசு. பல மக்கள் வாழ்க்கையை சீரழித்து வரும் டாஸ்மாக் பணத்தில் பல மக்கள் நலப்பணிகள். அரசே இன்று சாராய கடையை நம்பி இருக்கும் நிலை. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சாலை வரி ஆனால் மிகவும் மோசமான சாலை இங்கேதான். இன்னும் பல அடுக்கிகொண்டே போகலாம் இதையெல்லாம் நினைத்தால் எனக்கு ஏதோ நரகத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.

இதெல்லாம் போகிற போக்கில் சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது, அதேவேளையில் எனக்கென்ன என்றும் இருந்துவிட முடியாது. நாளை என் பிள்ளைகள் இந்த நாட்டில் அடிமையாக வாழவேண்டிய சூழலை நான் உருவாகி விட்டு போக விருப்பம் இல்லை. இவ்வளவு பிரட்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்றால் மிகப்பெரிய புரட்ச்சி நடந்தால் மட்டுமே தவிர வேறு வழி இல்லை. ஆனால் இது எதுவுமே அறியாமல் சினிமா மட்டுமே வாழ்க்கை என்று கிடைக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தையும் வீணாக்குவதை எப்படி சகித்துக்கொள்வது?

விக்கி உலகம் said... | January 19, 2011 at 3:30 AM

உங்கள் கருத்துகள் சரியே

முஹம்மத் ஆஷிக் said... | January 19, 2011 at 4:58 AM

சகோ.தொப்பி தொப்பி...
தங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக.

அருமை. அற்புதம். ஒவ்வொரு வரிகளும். வார்த்தைகளும்.

பதிவின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஓட்டு போடலாம் என்றுஆசை...!

எழுதுவோர் நாம் தொடர்ந்து இப்படியே ஆக்கபூர்வமாய் எழுதுவோம்... காலப்போக்கில் தவறுணர்ந்து மாறுவோர் மாறுவார்கள்.

Arun Ambie said... | January 19, 2011 at 8:34 AM

நீங்கள் சொல்வது உண்மை....சமுக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். எனக்கு இந்த ஆதங்கம் நிறையவே உண்டு.

http://ch-arunprabu.blogspot.com/க்கு வாங்க பழகலாம்!

மங்குனி அமைச்சர் said... | January 19, 2011 at 11:44 AM

நல்ல கருத்துதான் தொப்பி ............ஆனாலும் இங்கு வருபவர்கள் அதிகம்பேர் தங்களின் வேலைப்பழுவின் சுமையை குறைக்கவே வருகிறார்கள் ........ தங்களின் சிந்தனைகளின் வடிகாலாக இதை எண்ணுகிறார்கள் .......... எல்லோரையும் ஒரே மாதிரி சிந்திக்க வைப்பது கடினம்.....சிந்திக்கவும் முடியாது ........ இது பதிவுலகை பற்றிய எனது கருத்து மட்டுமே ........ ஆனாலும் உங்கள் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் .......

சி.பி.செந்தில்குமார் said... | January 19, 2011 at 12:39 PM

GOOD POST , BUT...???

AAPPU TO ME ..HI HI

MANO நாஞ்சில் மனோ said... | January 19, 2011 at 12:45 PM

நல்லா இருக்கு.....

சங்கவி said... | January 19, 2011 at 1:01 PM

இங்கு 18+ இதைப்படிப்பவர்கள் தான் அதிகம் சமூக அக்கறை உள்ள பதிவை படிப்பவர்கள் சிலர் தான்... சமூக அக்கறையுடன் பதிவெழுதி வெற்றி பெறுவது கடினம் தான்...

Geetha6 said... | January 19, 2011 at 3:33 PM

உண்மை!வாழ்த்துக்கள் .

அரபுத்தமிழன் said... | January 19, 2011 at 3:43 PM

உண்மையான கருத்துக்களைக் கொண்ட அருமையான பதிவு.
என் மன ஓட்டத்தை உங்களின் இந்தப் பதிவில் கண்டேன்.

சிவகுமார் said... | January 19, 2011 at 4:02 PM

நண்பர் தொப்பி தொப்பி அவர்களே, இது சந்தேகமின்றி ஒரு நல்ல விவாதத்திற்கு உரிய தலைப்புதான். இதை விருப்பம் உள்ள நண்பர்கள் நேரில் சந்தித்து பேசுவது இன்னும் பலன் சேர்க்கும் என்பது என் எண்ணம். தாங்கள் ஒரு வேலை சென்னையை சேர்ந்தவர்/வசிப்பவர் எனில் தங்களுக்கு ஏற்ற நாளில் சொல்லுங்கள். அல்லது என்றேனும் சென்னை வந்தால் தெரிவிக்கவும். நேரில் சந்திப்போம். எனக்குத்தெரிந்த சில பதிவர்களை அழைத்து வருகிறேன். ஓரிரு வரி கருத்து போடுவதை விட தங்களை நேரில் சந்தித்து விரிவாக பேசுவதே நல்ல கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். முடிவு தங்கள் கையில்.

THOPPITHOPPI said... | January 19, 2011 at 4:38 PM

@ சிவகுமார்

இதைதான் எதிர்ப்பார்த்தேன், இப்படி ஒரு பின்னூட்டம் வரவில்லையே என்றுதான் காத்திருந்தேன். எனது மின்னஞ்சல் வலது பக்கம் உள்ளது.

Philosophy Prabhakaran said... | January 19, 2011 at 8:17 PM

நாங்க comment follow up வைத்திருக்கிறோம்... நீங்கள் டெலீட் செய்யும் பின்னூட்டத்தை மீண்டும் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விஷயமல்ல...

THOPPITHOPPI said... | January 19, 2011 at 8:51 PM

@ Philosophy Prabhakaran

அவர் கேட்ட பதிலுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று இல்லை. எதற்கு தேவையில்லாத வாக்குவாதம் என்று ஸ்பாம் செய்துவிட்டு அவருக்கு என் பதிலை மின்னஞ்சல் செய்து நாங்கள் எங்களுக்குள் பேசி தீர்த்துவிட்டோம். நான் அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.


தேவையில்லாமல் நீ ஏன் இங்கே ஆஜர்ராக வேண்டும்?.

Philosophy Prabhakaran said... | January 19, 2011 at 10:25 PM

அப்படிஎன்றால் தனிப்பதிவு போட வேண்டிய அவசியமே இல்லையே... நீங்களே மெயிலில் உங்கள் பிரச்சனைகளை பேசிக்கொள்ள வேண்டியதுதானே... பதிவாக வெளியிட்டால் சக பதிவனாக நான் ஆஜர் ஆவேன்... அவருக்கு நீங்கள் சொன்ன பதிலை எனக்கு தெரிவிக்கவும்... எதற்கு தேவையில்லாத விவாதம் என்று எண்ணினால் பதிவை டெலீட் செய்துவிட்டு வீட்டின் மூலையில் சென்று முடங்கிக்கொள்ளவும்...

Philosophy Prabhakaran said... | January 19, 2011 at 10:26 PM

நீங்கள் டெலீட் செய்த பின்னூட்டங்களை மீண்டும் மீண்டும் காப்பி பேஸ்ட் செய்வதற்கு எனது ஒரு நிமிடம் கூட ஆகாது...

THOPPITHOPPI said... | January 19, 2011 at 11:02 PM

@ Philosophy Prabhakaran

உன்னை பற்றி எனக்கு ஓரளவு தெரியும் எங்கேயாவது பிரட்ச்சனை உருவாக்கி அதில் பிரபலம் ஆகா நினைப்பவன் நீ. நான் எதற்க்காக சேட்டைக்காரன் பின்னூட்டத்தை தூக்கினேன் என்று அவருக்கே தெரியும். அவரே அமைதியாக இருக்கும்போது நீ ஏன் அதை காபி செய்து பிரட்ச்சனை உறவாகக நினைக்கவேண்டும்? குளிர் காயலாம் என்றா? நான் பின்னூட்டத்தை தூக்கியதையே தவறு என்று சொல்லும் நீ பதிவையே தூக்கிய விஷயம் பலருக்கு தெரியும். நல்லவன் போல் இங்கே வந்து நடிக்க வேண்டாம். உனக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை. உனக்கு தேவையில்லாத ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்து பகையை உருவாக்கி அதன் மூலம் ஹிட்ஸ் வாங்க நினைப்பவன்தான் நீ என்று எனக்கு நல்லாவே தெரியும். நாளை எனது வலைத்தள பெயரில் எதிர்ப்பதிவு போட உத்தேசமோ? சேட்டைக்காரன் நண்பருடன் பகை உருவாகிவிட கூடாது என்பதற்காக இங்கே பின்னூட்டத்தை தவிர்த்து அவருக்கு மின்னஞ்சலில் பதில் சொல்லி முடித்தேன். அதெல்லாம் உனக்கு தெரிவிக்கவேண்டிய தேவையில்லை.


உன்னுடைய பின்னூட்டத்தை ஒருமுறை நீயே படித்துப்பார். இன்னும் நீ பாலகனாகவே இருக்க. வேறு யாரும் உன் பின்னூட்டத்தை படிக்கும்முன் நீ அழித்துவிட்டால் உனக்கு நல்லது

Philosophy Prabhakaran said... | January 20, 2011 at 4:07 AM

என்னைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டது அவ்வளவுதான்... சரி இருக்கட்டும் நான் இதுபற்றி சேட்டையிடம் பேசிவிட்டு திரும்ப வருகிறேன்... எதிர்பதிவு போடுமளவிற்கு நீங்கள் ஒன்றும் பெரிய ஆள் இல்லை...

DrPKandaswamyPhD said... | January 20, 2011 at 4:53 AM

தொப்பி தொப்பி said:
//உண்மையான நூறு பேர் ஒன்றிணைய தயார் என்றால் முகமூடியையும் அட்டைக்கத்தியையும் தூக்கி எரிய பலர் இங்கு தயாராக உள்ளனர். அந்த நூறு பேரில் நீங்களும் ஒருவராக வர தயாரா?//
தயார்.

THOPPITHOPPI said... | January 20, 2011 at 7:49 PM

பிலாசபி, ஒரு விஷயம் தகராறில் போவதாக தெரிந்தால் அதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பதுதான் நல்லது, பிரட்ச்சனையை பெரிதுபடுத்தி பிறகு மன்னிப்புகேட்டு எந்த பயனும் இல்லை. அது ஒருவருடைய மனதை புண்படுத்துவதில் தான் முடியுமே தவிர யாருக்கும் பயன் இல்லை.

சேட்டைக்காரன் அவர்கள் இரண்டுமுறை என் பதிவுக்கு எதிர்மறையாக பின்னூட்டம் செய்து இருந்தார் சரி இதற்குமேல் வாக்குவாதம்செய்தால் சரியாக இருக்காது என்றுதான் மேலும் வாக்குவாதம் செய்யாமல் அவருக்கு மின்னஞ்சல் செய்து தவிர்த்துவிட்டேன். ஆனால் தேவையில்லாமல் அதே பின்னூட்டத்தை காபி செய்து இங்கே பேஸ்ட் செய்து நீங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக நீங்கள் எனக்கு நண்பராகத்தான் இருந்தீர்கள் பிறகு எதற்கு திடீரென இந்த மாதிரி?. அடுத்தவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் உங்களுக்கு என்ன சந்தோஷம். நான் எதற்கு பின்னூட்டத்தை தூக்கினேன் என்று செட்டைக்காரனுக்கு தெரியும், பின்னூட்டத்துக்கு உரிய நண்பரே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன?


அதுவும்

//அப்படிஎன்றால் தனிப்பதிவு போட வேண்டிய அவசியமே இல்லையே... நீங்களே மெயிலில் உங்கள் பிரச்சனைகளை பேசிக்கொள்ள வேண்டியதுதானே... பதிவாக வெளியிட்டால் சக பதிவனாக நான் ஆஜர் ஆவேன்... அவருக்கு நீங்கள் சொன்ன பதிலை எனக்கு தெரிவிக்கவும்... எதற்கு தேவையில்லாத விவாதம் என்று எண்ணினால் பதிவை டெலீட் செய்துவிட்டு வீட்டின் மூலையில் சென்று முடங்கிக்கொள்ளவும்...//

ஏன் இதுப்போன்ற பின்னூட்டம் எல்லாம்?

//அவருக்கு நீங்கள் சொன்ன பதிலை எனக்கு தெரிவிக்கவும்//

தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப்போறிங்க? அடுத்தவர் பிரச்சனையையும், பேச்சையும் கேட்க்க உங்களுக்கு என்ன ஆர்வம்?

//எதற்கு தேவையில்லாத விவாதம் என்று எண்ணினால் பதிவை டெலீட் செய்துவிட்டு வீட்டின் மூலையில் சென்று முடங்கிக்கொள்ளவும்//

வலைத்தளம் என்பது மற்றவர்களுடன் தங்களின் கருத்தை பகிர்ந்துகொள்ளத்தான் விவாதம் செய்ய அல்ல.

அதுவும் தேவையில்லாத விவாதம் செய்யவில்லை என்றால் பதிவை டெலிட் செய்துவிட்டு வீட்டின் மூலையில் முடங்கவும் என்பதெல்லாம் உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் தரத்தை நீங்களே குறைத்துக்கொல்வதுபோல்.

முடிந்தவரை மற்றவர்களுடன் நட்ப்பாக பழக பாருங்கள். உங்களால் நண்பர் சசிகுமார் மனம் பட்டது எனக்கும் வருத்தமே. பிறகு மன்னிப்பு கேட்டு எந்த பயனும் இல்லை. என்னுடைய தளத்தில் மீண்டும் மீண்டும் பேஸ்ட் செய்யும்போது commend moderation செய்ய எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?. மற்றவர்கள் நம்மை கண்கானிக்கும்போது நாகரீகத்தோடு நடந்துக்கொள்வதுதான் நல்லது.

# கவிதை வீதி # சௌந்தர் said... | January 22, 2011 at 10:37 AM

அன்பான பதிவரே...
தங்கள் பதிவை பார்த்து.. தங்களுக்கு மக்கள் மீது இருக்கும் ஆதங்கமும்.. நாட்டின் வளர்சியின் மீது தங்ளுக்கு இருக்கும் அக்கரையும் புலப்படுகிறது .. இநத சமுதாயம் மனிதக் காடுகளால் நிறைந்தது முல்லைகளை விட முட்கள் தான் அதிகமாக நிறைந்துக்கிடக்கிறது.. ஒரு குழு அதை அகற்றப் பாடுபடுகிறது ஒரு குழு அதை வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது என்ன செய்ய கழுகுகளின் கூட்டத்தில் குயில்கள் ஒளிந்துதான் வாழ வேண்டும்.. (தொடருவோம்)

தினேஷ்குமார் said... | January 25, 2011 at 8:15 PM

நெஞ்சம் கொதிகாத்தான் செய்கிறது நண்பரே அனல் காற்று சுடவில்லை சுடலையில் அந்திமழை பொழியவில்லை பொய்மையான வாழ்க்கையிலே எதை நோக்கி செல்கிறோம் என்ற எண்ணமில்லாமல் குண்டுகுழி எல்லாம் சுயம் வளர்க்கும் சூழ்ச்சிகளில் மாண்டுமாய்கின்றன வெந்துபோன உடல் கூட நொந்துபோகிறது புரட்சி ஓங்கட்டும் புயலாய் மாறட்டும் பதிவர்களே நம்மால் இயலும் என்ற காரணத்தால் தான் எவருக்கும் கிடைக்கா அறிய வாய்ப்பை நமக்கு கொடுத்துள்ளான் படைத்தவன் மாறுங்கள் நண்பர்களே மாற்றுவோம் உலகை உன்னால் முடியும் என்பதல்லாமல் நம்மால் முடியும் என்று கரம் கோருங்கள் நம்பிக்கையோடு நானும் ....

செங்கோவி said... | January 27, 2011 at 12:54 AM

என்ன பாஸ் அடுத்த பதிவைக் காணோம்...

நாங்கள் தமிழர்கள் said... | January 30, 2011 at 1:42 PM

அண்ணாத்தே....தமிழக மீனவர்களை பற்றி ஒரு எழுத்தையும் கானல..

ஓ... நீங்கதான் இந்தியாவோட ஒரு தூன் ஆச்சே... மன்னிச்சிருங்க....

! சிவகுமார் ! said... | February 3, 2011 at 2:54 PM

>>> சென்னை ட்விட்டர் மற்றும் பதிவர்கள் சந்திப்பு சென்ற ஞாயிறு மெரினாவில் நடந்தது. பல ஆக்கபூர்வமான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. நம் குரல் கதவுகளை ஓங்கி தட்டும் என்பது உறுதி.

முகமூடி said... | February 28, 2011 at 12:52 PM

எல்லாம் கலந்ததே சமூகம். எனக்கு என்னவோ தேர்தல் முடியும் வரை கலைஞர், ஜெயா, கேப்டன், காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள் என்று தலைப்பில் எதாவது வந்தால்தான் ஹிட் கிடைக்கும் என்று எழுதுகிறார்கள்.
பதிவிடப்படும் அரசியல் கட்டுரைகள் எதிலும் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் வெகுவெகு சிலரிடம் தான் உள்ளது.

இங்கு எல்லாமே கொட்டி கிடக்கிறது. நாம் தான் நமக்கு என்ன தேவையோ அதை எடுத்துகொள்ள வேண்டும். மேலும் மற்றவருக்கும் அதை பகிர வேண்டும். மற்றபடி இணையத்தில் எழுதுவதால் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட போவதில்லை.