JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்

Wednesday, January 12, 2011


இந்தியாவில்  இப்போது  கொள்ளை கும்பல்கள் ஒருபக்கம் போட்டி போட்டுக்கொண்டு  கொள்ளையடிக்கிறது என்றால் ஆன்மீகத்தை பரப்புகிறேன்  சுகம் அளிக்கிறேன் என்று இன்னொரு கும்பல் ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டு வருகிறது.   இவர்கள் கொட்டத்தை அடக்கவேண்டிய ஆட்சியாளர்களோ  இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று அனைத்து போலி  ஆன்மிகவாதிகளும் ஊர் ஊராக கிளைகள் வைத்து தங்கள் கொள்ளையை தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வேளி நாடுகளில் இருந்து  தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS  குடும்பத்தினரின்  வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கும் வளர்ந்துவிட்டனர்.


இவர்களுடைய நூதன கொள்ளை முறைகள்:

►தீர்க்கதரிசனம் சொல்வது
►ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
►பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
►பங்காளர், உறுப்பினர் திட்டம்.
►நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
►ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது
►கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது

தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும்  இவர்கள்  ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா  இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே?

ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
 உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம்  பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்கலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்ச்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைப்பேசி என்னை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின்தான்  அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செளுத்தியப்பிந்தான் அமருவார்கள்.

பங்காளர், உறுப்பினர் திட்டம்:
இவர்கள் அலுவலகத்துக்கு யாராவது குறை என்று வந்துவிட்டால் போதும் அவர்கள் முகவரியை வாங்கிவிட்டு அவர்கள் வீட்டுக்கு MONEY ORDER அனுப்புவதற்கான படிவத்தை அனுப்பிவிடுவார்கள் காணிக்கை அனுப்பச்சொல்லி. அதுமட்டும் இல்லாமல் பணம் கொடுத்தால் தான் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்பது போல் பல திட்டங்களை காட்டி பணம் பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இவர்கள் பணம் பிடுங்க பயன்படுத்தும் திட்ட விபரங்கள் உங்களுக்காக

►ஆசிர்வாத திட்டம்
►குடும்ப ஆசிர்வாத திட்டம்
►கட்டிட ஆசிர்வாத திட்டம்
►பிள்ளைகள் ஆசிர்வாத திட்டம்
► டிவி க்ளப்
►பிரார்த்தனை திருவிழா திட்டம்
►வணிக ஆசிர்வாத திட்டம்

இப்படி எதில் தொட்டாலும் கடவுளிடம் ஜெபம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட இவர்களிடம் பணம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் இவர்களிடம் வருபவர்களை பயமுறுத்தி பணம் பிடுங்கி வருகின்றனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து  சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது 

கும்பகோணம்  தீவிபத்தால் இறந்த  குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர்.  ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர்.  இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக  எடுத்து தொலைக்காட்ச்சியில் வெளியிடுகின்றனர்,   இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.


இப்படி இவர்கள் கொள்ளையையும், மோசடிகளையும் அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட இன்னொரு கொடுமை மக்களிடம் வாங்கப்படும் காணிக்கையை இவர்கள் செலவழிக்கும் விதம்தான். நீங்களே பாருங்கள்




மக்கள் பணத்தில் இருந்து கட்டப்பட்ட கல்லூரி:(சில உதாரணம் மட்டும்தான் இன்னும் நிறைய கட்டிடங்களும், வானகரம் போன்ற இடங்களும் கணக்கில் அடங்காதவை)




சென்னை பீச் ஸ்டேஷன்:


இந்த கட்டிடம் சென்னை பீச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் தொழில் முறையில் வணீக வளாகம் பிடிப்பதே பெரிய விஷயம் ஆனால் இவர்கள் மக்கள் பணத்தில் பெறப்பட்ட காணிக்கையை வைத்து இவ்வளவு விலை உயர்ந்த கட்டிடத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்புவதாக கூறிக்கொண்டு தொழில் நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றனர்.

மக்கள் காணிக்கை என்று இவர்களிடம் கொடுப்பது இறைப்பணிக்கு உதவும், ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றுத்தான் ஆனால் இவர்கள் அந்தப்பணத்தில் கல்லூரி கட்டவும், புதிதாக இடம் வாங்குவதிலுமே அதிகமாக செலவிடுகின்றனர்.

கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது

 கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும், தொலைக்காட்ச்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரட்ச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

JESUS CALLS நிறுவன இணையத்தளத்தின் சிலப்புகைப்படங்கள்:





இதில் ஒரு புகைப்படத்தில் கூட  கிறிஸ்த்துவத்தை குறிக்கும் சிலுவையையோ அல்லது கடவுளின் படமோ இல்லை இவர்கள் முழுக்க முழுக்க இவர்களது குடும்பத்தின் படத்தையும் இவர்கள் நிறுவனத்தின் லோகோவை குறிக்கும் கையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றுவதில் இவர்களும் ஒருவர் மட்டுமே, இன்னும் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன. அவர்களை பற்றிய விபரங்களுடன் அடுத்த பதிவில்.


பாவமும், குற்றமும் குறையும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்


90 comments:

தமிழ்மலர் said... | January 12, 2011 at 9:18 PM

சமீபத்தில் கோவை வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த இவர்கள் அறிவிக்கையை பார்த்து சிரிப்பு தான் வந்தது. அமாவாசை முழு இரவு செபமாம். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்? அமாவாசை வசூல்வேட்டை துவங்கிட்டாங்கனு நினைச்சுட்டேன்.

கோவையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நல்லூர்வயல் என்ற ஊரின் பெயரை இவர்கள் பணத்தை இறைத்து காருண்யா என்று மாற்றிவைத்துக்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட மதவெறி பிடித்த ஊமை குசும்பர்களை இன்னும் தோளுறித்து காட்டுங்கள்...

நல்ல பதிவு

Chitra said... | January 12, 2011 at 9:28 PM

இவர்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர - கூட்டங்கள் சென்றதில்லை. நிறைய யோசிக்க வைத்து இருக்கிறீர்கள்.

தமிழ் உதயம் said... | January 12, 2011 at 9:36 PM

தமிழகத்தில் வசிக்கும் பிற மொழிக்காரர்களுக்கு தனி தனியாக ஜெபக்கூட்டங்கள் மற்றும் திரைக்கலைஞர்களை வைத்து கூட்டங்கள் என்று இவர்களின் பயணம் தொடர்கிறது.

ஜீ... said... | January 12, 2011 at 10:35 PM

இவர்களின் 'சேவை?' பற்றி சில வருடங்களுக்கு முன்பே எங்கோ படித்ததாக நினைவு! யார் என்ன சொல்லி என்ன? எல்லாமே தொடர்கிறது!

ஆமினா said... | January 12, 2011 at 11:05 PM

ரொம்ப விளக்கமா சொல்லியிருக்கீங்க அதுவும் ஆதாரத்தோட

தைரியத்துக்கு பாராட்டுக்கள்...

அவங்கவுங்களா திருந்துனா தான் அண்ணா உண்டு. இந்தா பாருங்க நித்யானந்தாவை கடவுளா நெனச்சாங்க. அப்பறம் குப்பையாக்குனாங்க. இப்ப மறுபடியும் கோபுரத்துல ஏத்திட்டு இருக்காங்க. திருடன் அதிபுத்திசாலி.... மக்களாம் அடிமுட்டாளாக இருக்காங்க என்ன செய்ய???

asiya omar said... | January 12, 2011 at 11:29 PM

கல்லூரி நாட்களில் ஹாஸ்டலில் என் ரூம்மேட்ஸ் ப்ரேயர் மீட்டிங் என்றும் வசூல் செய்து மணியார்டர் செய்ததை பார்த்திருக்கிறேன்.இப்ப முழு விபரமும் தெரிந்து கொண்டேன்.

பலே பிரபு said... | January 13, 2011 at 12:20 AM

விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினத்தில் ஒரு நல்ல பதிவு. உண்மையில் உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்.
இளைஞர் தின வாழ்த்துக்கள் (short late)

ரிஷபன்Meena said... | January 13, 2011 at 12:42 AM

அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். பொழுது போகாத ஒரு நாளில் இவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியே வியாபாரி பேசுவது போலவே இருக்கும்.

தொட்டதெற்கெல்லாம் கடவுளின் பெயரை சொல்பவர்களிடம் நேர்மைக் குறைவைக் கண்டிருப்பதால், அந்த மாதிரி ஆசாமிகளிடம் நான் எட்டடி தள்ளியே இருப்பேன்.

ஆன்மீகத்தை வர்த்தகமாக அல்லது விளம்பரமாக செய்பவர்களிடம் எட்டி இருப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

ரிஷபன்Meena said... | January 13, 2011 at 12:46 AM

விவேகானந்தர் சொற்பொழிவுகள் எதிலும் ஆன்மிக வியாபரம் அல்லது விளம்பரம் இருக்காது.

இன்று இளைஞர் தினமா ? இன்னும் ஒரிரு நாளில் ஒரு இளைஞன் வேறு திரைக்கு வருகிறான்.

சிவகுமார் said... | January 13, 2011 at 5:15 AM

I Salute you..Sir. BOLD Article.

Philosophy Prabhakaran said... | January 13, 2011 at 5:54 AM

இந்தப்பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டும்...

மாணவன் said... | January 13, 2011 at 6:26 AM

போலியானவர்ர்களையும் கொள்ளைக்கும்பலையும் பற்றி சிறப்பாகவும் தெளிவாகவும் பதிவு செய்து வருகிறீர்கள் உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட நண்பரே,

தொடர்ந்து இதுபோன்றவர்களின் முகத்திரையை கிழியுங்கள்....

வாழ்த்துக்கள்.....

guna said... | January 13, 2011 at 6:34 AM

ரொம்ப விளக்கமா சொல்லியிருக்கீங்க அதுவும் ஆதாரத்தோட

தைரியத்துக்கு பாராட்டுக்கள்...

ஜோதிஜி said... | January 13, 2011 at 7:29 AM

நண்பா இதில் சொல்வதற்கு இன்னும் நிறைய விசயம் இருக்கிறது.

பினோட்டத்தை தொடர

ஜோதிஜி said... | January 13, 2011 at 7:29 AM

விமர்சனத்தை தொடர

சேட்டைக்காரன் said... | January 13, 2011 at 7:39 AM

முதலில் உங்களது துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். ஏதோ குருட்டாம்போக்கில் பொதுப்படையாக எழுதிவிடாமல், பல்வேறு கோணங்களில் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறீர்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... | January 13, 2011 at 7:48 AM

தொடருங்கள் ...
தொடர்கிறேன் ...

சுதாகர் said... | January 13, 2011 at 8:18 AM

அண்ணே, தயவு செய்து பேர, UNION OF INDIA ன்னு மாத்துங்க..
UNITED STATES OF AMERICA - ன்னா எந்த ஒரு state-ம் அந்த state விருப்பத்தோட தனி நாடாகலாம்.
UNION OF INDIA - ன்னா central கவர்மென்டு உத்தரவு வேணும். நம்மளோடது USAய விடவும் உசத்தி. யாரலயும் பிரிக்க முடியாது.

THOPPITHOPPI said... | January 13, 2011 at 9:16 AM

@சுதாகர்

/// அண்ணே, தயவு செய்து பேர, UNION OF INDIA ன்னு மாத்துங்க..
UNITED STATES OF AMERICA - ன்னா எந்த ஒரு state-ம் அந்த state விருப்பத்தோட தனி நாடாகலாம்.
UNION OF INDIA - ன்னா central கவர்மென்டு உத்தரவு வேணும். நம்மளோடது USAய விடவும் உசத்தி. யாரலயும் பிரிக்க முடியாது.
///



நான் UNITED STATES OF INDIA என்று எழுதியதுக்கே பல எதிர்ப்புகள், ஏன் என் நண்பர் ஒருவர் கூட ஏன் இப்படி போட வேண்டும் "தமிழன்" என்று போட வேண்டியது தானே என்று இந்தியாவின் மீது தனது கோபத்தை காட்டுவதாக நினைத்து என்னுடன் வாக்குவாதம் செய்து இரண்டு நாட்கள் பேசவில்லை. ஆனால் உங்களுடைய இந்த பின்னூட்டம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

//நம்மளோடது USAய விடவும் உசத்தி. யாரலயும் பிரிக்க முடியாது.//

எனக்கு வந்த பின்னூட்டத்தில் என்னை மகிழ்வித்தது என்றால் அது உங்களுடைய இந்த பின்னூட்டம்தான்.

கக்கு - மாணிக்கம் said... | January 13, 2011 at 9:41 AM

இந்த கொள்ளை கும்பல் இன்று நேற்றல்ல, நான் சென்னை வந்த நாள் (1980 )முதல் இவர்களை அறிகிறேன். அவ்வபோது வரும் ஆளும் கட்சிகளின் ஆசீர்வாதம் நிறைய இந்த கும்பலுக்கு உண்டு. எம்.ஜி.ஆர். ஆட்சி காலங்களில் அப்பாவும் பிள்ளையும் செழிக்கத்தொடங்கி, இன்று மஞ்சள் துண்டு சுயமரியாதை காரர்வரை இவர்களின் செல்வாக்கு மிக அதிகம். அத்தனையும் வியாபாரம், ஆன்மிகம் ஒரு சிறு சதவீதம் கூட இருக்காது. வசூல் வேட்டை நிறைய, சொத்துக்களும் மிக அதிகமாகிவிட்டது. அமெரிக்க மெஷினரிகள் மூலம் நிறைய பணம்.
அவசியமான் பதிவு. அதுசரி, இந்த கன்றாவிதான் எல்லா மதக்கும்பல்களிடமும் இருக்கே. நம்ம ஆளுங்க மாலை போட்டுக்கொண்டு அய்யப்பன் கேவிலுக்கு போவதெல்லாம் நூற சதவீதம் வியாபாரம்/ டயம் பாஸ்.

Madurai pandi said... | January 13, 2011 at 9:47 AM

அருமையான கட்டுரை நண்பா!!! தொடர்ந்து இது போலானவர்களின் முகத்திரையை கிழியுங்கள்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

நா.மணிவண்ணன் said... | January 13, 2011 at 9:57 AM

நல்ல விழிப்புணர்வு

கட்டுரை . நண்பரே

விஜய் said... | January 13, 2011 at 10:48 AM

இவர்களின் சுவிசேஷப் பிரசங்கக் கூட்டங்களைப்பற்றி என் நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் என்னிடம் சொன்ன ஒரு கவிதை:

கண்ணில்லாதவன் பார்க்கிறான்!
காதில்லாதவன் கேட்கிறான்!
காளில்லாதவன் நடக்கிறான்!
மூளையில்லாதவன் நம்புகிறான்!

தனி காட்டு ராஜா said... | January 13, 2011 at 10:51 AM

For Following....

THOPPITHOPPI said... | January 13, 2011 at 10:57 AM

@தனி காட்டு ராஜா

நண்பரே நான் JESUS CALLS நிறுவனத்தை பற்றி தான் இங்கே விமர்சனம் செய்துள்ளேன், தயவு செய்து ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ விமர்சித்து பின்னூட்டம் போடவேண்டாம். அதுவும் நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் செய்யப்பட்டுள்ளது.

அமுதா கிருஷ்ணா said... | January 13, 2011 at 11:01 AM

நிஜமா கஷ்டப்படுகிற குடும்பம் கூட ஏதோ வசியம் வைத்த மாதிரி இவர்கள் பின்னால் செல்கிறது, மூளைசலவையில் கைதேர்ந்தவர்கள். இவர்களிடம் வேலைப்பார்ப்பவர்களுக்கு மிக குறைந்த சம்பளமே கொடுக்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

Speed Master said... | January 13, 2011 at 11:01 AM

இந்த மாதிரி உள்ள நபர்களை தடை செய்ய வேண்டும்

மாட்டுவானுக

நிந்தியாணந்தா மாதிரி

மங்குனி அமைச்சர் said... | January 13, 2011 at 11:28 AM

சார் வெளுத்து வாங்கிட்டிங்க

FARHAN said... | January 13, 2011 at 11:30 AM

விகிலீக் உலக போலி முகத்திரையை கிழிக்கும்

தொப்பிலீக் இந்திய போலி ஆசாமிகளின் முகத்திரையை கிழிக்கும்

வாழ்த்துக்கள் நண்பா உன் பயணம் மென்மேலும் தொடர்க ...

தனி காட்டு ராஜா said... | January 13, 2011 at 11:53 AM

//நண்பரே நான் JESUS CALLS நிறுவனத்தை பற்றி தான் இங்கே விமர்சனம் செய்துள்ளேன், தயவு செய்து ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ விமர்சித்து பின்னூட்டம் போடவேண்டாம். அதுவும் நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.//

வேர் இல்லாமல் கிளை சாத்தியம் இல்லை ....
வேரின் அடிப்படை உணர்வுதான் தான் கிளைகளிலும் இருக்கும்....

நீங்கள் கிளையை விமர்சனம் செய்கிறிர்கள்
நான் வேரையும் கிளையையும் விமர்சனம் செய்கிறேன் ....அவ்வளவே :)

THOPPITHOPPI said... | January 13, 2011 at 12:04 PM

@தனி காட்டு ராஜா

கொஞ்சம் பொருங்க நாளைய பதிவு உங்களுக்காக

தனி காட்டு ராஜா said... | January 13, 2011 at 12:06 PM

//கொஞ்சம் பொருங்க நாளைய பதிவு உங்களுக்காக//

நாளை நமதே :)

கவிதை காதலன் said... | January 13, 2011 at 12:10 PM

கூடிய சீக்கிரம் அவர்களுக்கு செய்யும் போன் கால்களுக்கு எல்லாம் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை

அஞ்சா சிங்கம் said... | January 13, 2011 at 12:23 PM

இது போல் பதிவை தான் உங்களிடம் அதிகம் ஏதிர்பார்கிறோம் ..................

தொடரட்டும் உங்கள் பனி............

மதத்தை பரப்ப ஆங்கிலேயர்கள் பின்பற்றிய வழி இது அல்ல ......
இலவச மருத்துவமனை இலவச கல்வி என்று மக்கள் மனதில் அந்த மதத்தை பற்றி உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று ஊழியம் செய்தார்கள் .....
தங்களை ஊழியக்காரர்கள் என்று சொல்லும் இந்த கயவர்கள் மக்கள் பணத்தை வாங்கி ஏழைகளுக்கு என்ன செய்தார்கள் ....

sakthistudycentre.blogspot.com said... | January 13, 2011 at 12:29 PM

மிகவும் துணிச்சலான பதிவு.

இது போல் பதிவை தான் உங்களிடம் அதிகம் ஏதிர்பார்கிறேன்.

தொடரட்டும் உங்கள் பனி............

Denzil said... | January 13, 2011 at 1:33 PM

காலேஜ்ல ஒரு பேராசிரியர் எப்பவும் சொல்வார் "இன்னைக்கு இருக்கிறதுலே நல்ல 2 பிஸினஸ் எதுன்னா, ஒன்னு education பிஸினஸ், இரண்டாவது bible பிஸினஸ்". இவங்க இரண்டையுமே mix பண்ணின கில்லாடிங்க. (காருண்யா யுனிவர்சிட்டியை பால் தினகரன் நிர்வகிக்கிறதே ஒரு ரவுடி ஸ்டைலதான்)

jayaramprakash said... | January 13, 2011 at 1:34 PM

தொடரட்டும் உங்கள் மகத்தான பணி.சொந்த புராணம் எழுதி ஹிட்ஸ் வாங்குபவர்களை விட உங்களை போன்றோர்களின் பதிவு தொடரவேண்டியது அவசியமே.

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 13, 2011 at 1:42 PM

இவன்கிட்ட நிறைய பணம் இருக்கு அதனால இவன் ஒரு நச்சு பாம்பு..சமூகத்துல அழிக்கப்பட வேண்டிய முள் செடி தொடர் பதிவு போட்டு முடித்து கட்டுங்கள்

இளம் தூயவன் said... | January 13, 2011 at 1:51 PM

நண்பரே எந்த ஒரு மதமும், தன் வழிபாட்டுக்கு என்று செலவு செய்ய சொல்லவில்லை. சில சுயநலவாதிகள் இது போன்று செய்கிறார்கள். அருமையாக ஆதாரத்துடன் கூறியுள்ளிர்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

சங்கர் குருசாமி said... | January 13, 2011 at 2:08 PM

Dear Friend, Excellent...

This is very nice that such people are getting exposed. Most of the Churches are targetting downtrodden people only. These people take their labour and money and give them some raw accomodation. They also accept these people's words and start preaching their concepts. But these people's other side is to be looked at. Very Ugly...

Continue your good work...

Sankar G

http://anubhuthi.blogspot.com

THOPPITHOPPI said... | January 13, 2011 at 2:16 PM

@Girish Garnad

இது கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான பதிவு இல்லை கொள்ளை கும்பலுக்கு எதிரானது. கிறிஸ்த்தவர்களின் மனம் புண்படும்படி இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டேன். கிறிஸ்த்தவர்களுக்கே தெரியும் இந்த கொள்ளைக்கும்பலை பற்றி.



நீங்கள் அநாகரீகமான வார்த்தைகளில் என்னை திட்டுவதாலோ, முஸ்லிம் ஹிந்து பற்றி எழுதசொல்லி என்னிடம் கேள்வி கேட்பதாலோ ஒன்றும் நடந்துவிடாது. உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் அவதூறாக எதுவும் எழுதவில்லை.

அநாகரீகமான வார்த்தைகளில் திட்டுவதை நிறுத்திவிட்டு மேலே நான் பதிவு செய்திருக்கு குற்றங்களுக்கு பதில் சொல்லவும் உங்கள் பருப்பை வேகவைக்க முடிந்தால்.

என் வலைத்தளத்தில் முதல் முறை commend moderation உங்களுடைய அந்த தகாத வார்த்தைகளால்.

INDIA 2121 said... | January 13, 2011 at 2:20 PM

super , ACCHAMILLAI ACCHAMILLAI ACCHA MENPATHILLAIYE,UCCHI MEETHU VAANIDINTHU VIZHUKINTRA POTHILUM ACCHAMENPATHILLAIYE.

ரஹீம் கஸாலி said... | January 13, 2011 at 2:50 PM

என்னத்த சொல்ல....

Robin said... | January 13, 2011 at 2:56 PM

மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியவர்களே. பின்னூட்டக்களத்தை நாகரீகமாக வைத்திருப்பதற்குப் பாராட்டுக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... | January 13, 2011 at 3:40 PM

நமது நாடுகளில் வறுமை கைகோர்த்த அறியாமை இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழையே!
இங்கு கூட இவர்கள் குறிவைத்து மடக்குவது ஆசிய; ஆபிரிக்கர்களையே! ; பல்லாயிரம் பேதைகள்
அல்லேலுய்யா என்று அலைகிறார்கள். பல தடவை என் வீட்டுக் கதைவையும் தட்டியுள்ளார்கள்.
வணக்கம் அண்ணா!(தமிழரே) எனத் தமிழில் விளிக்கும் போது; அவர்களை வெளியே போ என்று சொல்ல மனம்
வருவதில்லை.
சில நிமிடங்கள் அவர்களுடன் பேசி; எந்த நிலையிலும் நான் இப்போ உங்கள் கூட்டங்களுக்கு வரும் நிலையில் இல்லை. அப்படித் தேவை வந்தால் நானே வருவேன். என அன்பாகச் சொல்லி அனுப்புவேன்.
சிலர் வசமாக மாட்டிவிருகிறார்கள்.
மிக உச்சமான வியாபாரம்.

பாரத்... பாரதி... said... | January 13, 2011 at 3:59 PM

மதங்களின் பெயரால், மக்களின் வறுமை மற்றும் இயலாமையை பயன்படுத்தி பணம் பறிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கூட்டம் நாட்டில் நிறைய இருக்கிறது. உங்கள் பார்வையை மிக ஆதாரமாக, தெளிவாக செலுத்தியிருக்கிறீர்கள். நல்ல விஷயம், நன்றிகள்.

பாரத்... பாரதி... said... | January 13, 2011 at 4:00 PM

கடவுளை தொழுவதற்கு எதற்கு இடைத்தரகர்கள்?

பதிவுலகில் பாபு said... | January 13, 2011 at 4:00 PM

ரொம்ப சென்சிடிவ் மேட்டர்.. தைரியமாகக் கையாண்டிருக்கீங்க.. பாராட்டுக்கள்..

Jayadev Das said... | January 13, 2011 at 4:15 PM

ஏழை, தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் வறிய மக்களிடம் பணம், கல்வி, மருத்துவம் போன்ற இனாம்களைக் கொடுத்து தங்கள் மதத்துக்கு மாற்றுகிறார்கள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் அவர்களிடம் நடக்கும் வசூல் வேட்டை பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். ஒரு முறை பெரிய தினகரனின் பேட்டி "The Hindu" வில் வந்திருந்தது, அப்போது அவருடைய குடும்பத்தில் சிலரைப் பறிகொடுத்திருந்த நேரம். "என்ன சார் ஊருக்கெல்லாம் கஷ்டங்களை ஆண்டவர் மூலமா போக்குகிறீர்கள், உங்களுக்கு ஏன் இத்தனை கொடூரமான கஷ்டங்கள்?" என்ற கேள்விக்கு அவர் கொடுத்த அறிவுப் பூர்வமான பதில், "அது தான் சார் எனக்கும் தெரியவில்லை" !!!

dr suneel krishnan said... | January 13, 2011 at 4:16 PM

ஆன்மீகம் என்பது தனி மனித தேடல் சார்ந்தது ,ஒரு தன்னுணர்வு எழுச்சி ,நம்மை நாம் காணும் ஒரு நிகழ்ச்சி ,இதை வியாபாரமாக்கி -நமது பலவீனங்களை ,பேராசைகளை ,பயங்களை பயன் படுத்தி தங்கள் வயிறாய் வளர்க்கும் கூடம் எல்லா மதத்திலும் உண்டு ,இவர்களுக்கும் அந்த மதத்திற்கும் ஒரு காத தூரம் என்பதும் உண்மை .ஆன்மிகம் என்பது அமைப்பாக மாறினாலே சிக்கல் தான் அது மடமாக ,ஆசிரமமாக ,அல்லது பெரும் பணம் புழங்கும் அமைப்புகளாக எதுவாக இருந்தாலும் ,அவர்களின் நோக்கம் ஆன்மீகத்தை தாண்டி ஏதோ ஒன்று உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் .நல்லதோர் பதிவு .

Jayadev Das said... | January 13, 2011 at 4:25 PM

இவனுங்க பீச்சுல கூட்டம் போட்டு ஊளையிட்டுக் கொண்டிருப்பார்கள். மேடைக்குச் சிலரை அழைப்பார்கள் திடீர் என அவர் பரவச நிலைக்குச் சென்று மயங்கி விழுவார். ....ங்கொய்யால குடுத்த காசுக்கு மேலேயே நடிக்கிரான்டா, [இங்க என்ன அவார்டா குடுக்குறாங்க!!] என்று எண்ணத் தோன்றும். அப்புறம் சிலர் கண்ணே தெரியவில்லை என்பார், கோட்டு சூட்டு போட்ட வெளிநாட்டுக் காரன் ஒருத்தன் ஆண்டவர் கிட்ட ஏதோ ரெக்கமன்ட் பண்ணுவார், ஆ... கண்ணு தெரியுதேன்னுவார். [....ங்கொய்யால ஏன்டா வெளிநாட்டுக் காரா, நீ தான் இருக்கியே உங்க நாட்டுல ஆஸ்பத்திரியே இல்லியாடா?]. அப்புறம் நொண்டி ஒருத்தன் வருவான், நடப்பான், காது கேட்காதவன் ஒருத்தன் காது கேட்குதுன்னு சொல்லுவான். இதெல்லாம் ஏமாற்று வேலை என்று இதைச் செய்யும் கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும், அங்கே போகிறவர்களுக்கும் தெரியும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களையும் மனசாட்சிக்கு விரோதமாக விற்க்கிறார்களே என்பதுதான் கொடுமை.

Jana said... | January 13, 2011 at 5:51 PM

சில விடயங்களை எழுத உண்மையான தைரியம் வேண்டும். உங்கள் "தில்" ரொம்ப பிடித்திருக்கின்றது. நேதாஜியின் படம் அர்த்தப்படுகின்றது.

பன்னிக்குட்டி ராம்சாமி said... | January 13, 2011 at 6:28 PM

துணிச்சலான போஸ்ட்! சரியாக தோலுறித்திருக்கிறீர்கள், வெல் டன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... | January 13, 2011 at 6:29 PM

தொடர்ந்து இது போன்று சமூகத்தில் ஊடுருவிருக்கும் புல்லுருவிகளை கிழியுங்கள் நண்பரே......!

ஆனந்தி.. said... | January 13, 2011 at 7:13 PM

தைரியமான விழிப்புணர்வு பதிவு...

வெறும்பய said... | January 13, 2011 at 8:11 PM

உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள்... இதை பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்... அவர்களது டி வி யில் கூட எவரேவரும் வருவதில்லை என்று நினைக்கிறேன்...

K.S.Muthubalakrishnan said... | January 13, 2011 at 8:23 PM

Good post Expecting more from u

ராஜவம்சம் said... | January 13, 2011 at 9:07 PM

வாழ்த்துக்கள் நண்பா இது போல் மற்ற மதத்தில் உள்ள குறைகளையும் நடு நிலையோடு வெளியிட வேண்டும் என் ஆதரவு என்றும் உண்டு.

அதே நேரத்தில் எந்த மத நம்பிக்கையையும் இளிவுப்படுத்திட வேண்டாம் என்பது என் கணிவான வேண்டுகோள் நன்றி.

kanna said... | January 13, 2011 at 9:10 PM

நண்பா, பாராட்டுகள். என் மனதை பல வருடங்களாக கொந்தளிக்க வைத்த உண்மையை பளிச்சென்று சொல்லி இருக்கிறிர்கள். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தில் சொல்லபடிருக்கும் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள உரிமை உள்ளது. அது பல நன்மைகளை சேர்க்கும் என்று கூட சொல்லலாம். ஆனால் இது போன்ற போலி ஆசாமிகளால் அவரவர் மதம் தான் அசிங்கபடுகின்றது என்று ஒவ்வொருவரும் உணர்ந்து இவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி தான்.



இவன்,
மதத்தில் சார்பில்லாமல் கடவுளை நம்புபவன்.

baln said... | January 14, 2011 at 2:04 AM

naan oru kristhavan ..itharkku munnaal ungal pathivin rasiganaai irunthen aanaal ippoluthu unga pathivu manathai punpaduthiyathu ..konjamum ungalidam ethirpaakkavillai ..anyway best of luk

கால்கரி சிவா said... | January 14, 2011 at 3:52 AM

மிக்க நன்றி இவர்களைப் பற்றி அம்பலப் படுத்தியத்திற்கு

கால்கரி சிவா said... | January 14, 2011 at 3:53 AM

மிக்க நன்றி இவர்களைப் பற்றி அம்பலப் படுத்தியத்திற்கு

சும்மா.. டைம் பாஸ் said... | January 14, 2011 at 6:11 AM

My Mother is very firm believer of him, I heard from my mother a week before, in their meeting in Vanagaram, they introduced new scheme for those who attend the prayer meeting there was lucky draw and the first prize was scooty, when said this I could not digest this, its a pacca business style run organization.

விக்கி உலகம் said... | January 14, 2011 at 8:03 AM

பகிர்வுக்கு நன்றி

உங்க தில்லுக்கு ஒரு சல்யூட்

கடவுள் எப்போதும் பணம் கேட்பதில்லை அன்பை மட்டுமே கேட்கிறார்.

பூசாரிகள் பணம் கேட்கிறார்கள் - மக்கள் கடவுளை நேரில் காண முடியாததால் இந்த பூசாரிகளை நம்பி பின் தொடர்கின்றனர்.

தயாளன் said... | January 14, 2011 at 11:16 AM

http://www.cfcindia.com/tamil/articles/Counterfeit_Revival_Tamil.pdf

Roy said... | January 14, 2011 at 12:42 PM

nallathu nanbarae...

ithu comments kodutha silarukaga yeluthugiraen...

1)kastangal yenbathu yellorukum ullathu. athil noaivai paduvathum ondrae...
iraivan ovvarukum valnalkalai kurithirukiran. athai puriyatha muttalgal silar avar thanthaikai jebam seiyavaendiyathuthanae yendru solli irupathu paditha muttalgal nam thamilagathil irupathai vetta velichamaga kaatugirathu. pirapu yendru ondru irunthal irapum undu nanbargalae...
yendro oru naal avar marithagavaendum avarin vaalnal mudinthathum marithu vittar... avlo than simple concept...purinjikamudilaya ungaluku...?
2) ithu TAMILMALARUKAGA...
yella samayangalilum iravu naera valibadugal undu...
amavasai poojai namathu hindu samayathilum undae... purinthu kondal nalam... mathavery yendru kuripittu ullirgal...
kiristhavargal yaraum kattayam yengal mathathil saerungal yendru kattayapaduthuvathilayae... namathu nanbargal than kiristhavargalayum matra mathathinarayum thunburuthugindranar...
avasiyam therindu kollungal... namathu nilayai...

3)ITHU DENZILUKAGA...
nallavaiyai katru koduka vaendiya aasiriyarae ungalai thavaraga nadathi irupar pondru ullathu..
BIBLE oru business yendral NAMATHU GEETHAYUM , KURANUM business puthagangala...

yeluthumun yosikavum... it is written about OUR NATION ,"UNITY IN DIVERSITY" i can tell u my friend... itz obviously wrong... many are like u... then hw can it be... unarvugalai mathika katru kolungal nanbarae...

3) ithu JAYADEV DASkaga,
yosithu paesinaal nadrayirukum.... yella mathathilum sugam adaigiravargal undu... athisayangal nadaiperuvathum undu...
antha foreigner (missionary) varavillai yendralneer ipdi yelutha kuda katruikamateer... indian tie than thangalathu udayai iruthirukum... ulagim migaperiya hospitals indiavil irupathin karaname avargal than... purithu kondal nalam...

Roy said... | January 14, 2011 at 1:43 PM

hi frnz think well before u comment...
Dnt trust humans.
Trust only on God. Itz better not to judge others.. think abt ourselves ... r we are gud to our family n society.? most propably many of our answers will be NO. so... try to change ourselves first n then v can change others...
i hope u will understand... most of the comments shows that they r still not respecting others ... itz really bad...

தமிழ்மலர் said... | January 14, 2011 at 2:48 PM

திரு ரோய்

மதவெறி என்று நான் குறிப்பிட்டது இயேசு அழைக்கிறார் தினகரன் கும்பலை தான். சில கிறிசுத்தவர்களை அல்ல.

நல்லூர்வயல் என்ற பெயரில் புனிதம் இல்லையா? எதற்காக அந்த பெயரை மாற்றி காருண்யா என்று வைத்துக்கொண்டார்கள்? இதற்கு பெயர் மதவெறி இல்லையா? நல்லூர்வயலின் பெயரை மீட்டெடுக்க இன்றும் கூட மக்கள்போராடிக்கொண்டு இருக்கின்றனர். (இது குறித்து தனிப்பதிவாக எழுதுகிறேன்.)

ஒருவன் கிறிசுத்தவனாக மதம் மாறினால் ஞானசுத்தானம் என்ற பெயரில் உடனே அவனுக்கு மத்தேயு, மார்க்கு, பேதுரு, அந்திரேயா கிரேசி, ரோசி, அன்டோனியா (இந்திய சனியன்) என்றெல்லாம் எதற்கு மாற்றுகிறார்கள். கிறிசுத்தவர்கள் சாத்தான் என எதை குறிப்பிடுகிறார்கள் என்று தெரியுமா? உங்கள் பிள்ளைகள் கிறிசுத்தவ பள்ளிகளில் படிப்பார்களானால் கேட்டுப்பாருங்கள்.

பல கிறிசுத்துவ அமைப்புகளுக்கு அதிகமாகவே மதவெறி உள்ளது. இது தீவிரவாதமாக வெளியே தெரிவதில்லை அவ்வளவே. ஆனால் ஊமை குசும்பில் அதிகப்படியான மதப்பிரச்சனைகளுக்கு இவர்கள் தான் காரணம்.

பைபிள் கல்லூரியில் படித்தவள், கிறிசுத்தவ அனாதை விடுதியில் குழந்தை பருவம் முதல் 10 ஆண்டுகள் தங்கிபடித்தவள் நான். கிறிசுத்துவத்தை பற்றி எதையும் தெரியமால் எழுதவில்லை.

முழு இரவு செபத்தை அமாவாசை செபம் என்று மாற்றிவைத்தன் ரகசியம் என்ன?

சி.பி.செந்தில்குமார் said... | January 14, 2011 at 3:20 PM

சாரி ஃபார் லேட் சார். செம போஸ்ட் சார். இந்த மாதிரி ஆட்கள் அடையாளம் காணப்பட்டு தண்டனை தரப்பட வேண்டும்

சி.பி.செந்தில்குமார் said... | January 14, 2011 at 3:21 PM

தொப்பி தொப்பி இந்தப்பதிவின் மூலம் தனது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது வாழ்த்துக்கள்

NKS.ஹாஜா மைதீன் said... | January 14, 2011 at 7:40 PM

எந்த ஒரு மனிதனும் கடவுளாக முடியாது.....கடவுளின் பெயரால் ஏமாற்ற மட்டுமே முடியும்....இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்....நெத்தியடி பதிவு....

malgudi said... | January 15, 2011 at 12:26 AM

இந்த உண்மையை ஏன் கிறிஸ்தவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.:-(
பல போதகர்களும் இவர்களுக்கு வக்காலத்து வாங்கி,அதனூடே ஆதாயம் தேட முயல்கிறார்கள்.

ஒட்டக்கூத்தன் said... | January 15, 2011 at 1:00 PM

"இயேசு அழைக்கிறார்" நாத்திகம் ராமசாமி கட்டுரையை தொடராக வெளியிடவும். மிகவும் நல்ல பதிவு

ஒட்டக்கூத்தன் said... | January 15, 2011 at 1:00 PM

"இயேசு அழைக்கிறார்" நாத்திகம் ராமசாமி கட்டுரையை தொடராக வெளியிடவும். மிகவும் நல்ல பதிவு

Arun Ambie said... | January 15, 2011 at 1:40 PM

"டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்" என்பது சினிமா பாடலாசிரியர் வாக்கு.

"சாமி பேர சொல்லிக்கிட்டா போதும் நீங்க தப்பு செஞ்சு துட்டு பாக்க ஆகும்" இது இவர்களைப் பற்றி அறிந்த பின் எனக்குத் தோன்றிய பாட்டு.

ஆட்சியாளர்கள் இவர்களை ஆதரிக்காது குற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தாலே குற்றங்கள் குறையும். ஆனால் நம் அரசியல்வாதிகள் இவர்களிடம் பொற்குவையும் பெற்றுக்கொண்டு ஏழை பாழைகளிடம் காசும் பெற்றுக் கொண்டு வளர்த்துவிடுகிறார்கள்.

மக்கள் இவர்களின் செல்வாக்கைக் கண்டு அஞ்சி பேசாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஆராய்ச்சி மணியை அடித்துவிட்டீர்கள். இனி நடவடிக்கை அவர்கள் மீது வருகிறதா, உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வருகிறதா என்பதே கேள்வி. ஜாக்கிரதையாக இருங்கள்.

http://ch-arunprabu.blogspot.com/ க்கு வாங்க, பழகலாம்!

Selvaraj said... | January 15, 2011 at 7:16 PM

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா திருச்சபையை சார்ந்த ஒருவர் சொன்னார். ஒரு அவசர தேவைக்காக ஜெபம் செய்ய அவர்களை தொடர்பு கொண்டபோது, பத்தாயிரம் ருபாய் கட்டினால் மட்டுமே தினகரன் அவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார். இல்லை என்றால் ஏதாவது ஒரு ஊழியர் தான் ஜெபிப்பார் என சொன்னதாக சொல்லி வருத்தப்பட்டார்.

எம் அப்துல் காதர் said... | January 17, 2011 at 2:03 AM

படிக்கப் படிக்க மயக்கமே வருது சார். இந்தப் பணத்தை கொண்டுப் போய் எங்கே கொட்டி வைக்கப் போகிறார் கள். தனக்கு மரணமில்லை என்று நினைக்கிறார்களா?? கேட்க ஆளில்லை என்றுதானே இப்படி யெல்லாம் செய்கிறார்கள்? இப்ப நீங்க கேட்டுட்டீங்க என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? உங்கள் பதிவுக்கு ஒரு ராயல் சல்யூட்!!

இரவு வானம் said... | January 18, 2011 at 1:24 PM

உங்களின் பதிவின் வீரியத்துக்கு பின்னூட்டங்களே சாட்சி, தொடருங்கள் நண்பா அருமையான பதிவு

Tyson said... | February 4, 2011 at 1:53 AM

Hai Roy ,Thanks man for your wonderful words between the dirty words .Lets see the day will come and Mr.Editor dont think that you are smart enough that you have achieved you will face the problem and you are a timid guy man you are using the wordpress and joking ahhh you are a slutty attitude dude come on see i can surely say that you are a cursed human i can say you wont see any good news or good things will happen in your life spam .GET A LIFE.

Roy said... | February 5, 2011 at 11:33 AM

Hi Tyson...
thanks for ur comments ... but i still tell u... plz dnt shout at others. tey should knw wat s happening in and around the world... it will be gud if they are posting all the works going on, in all religious ppl

Roy said... | February 5, 2011 at 12:26 PM

Hi TAMIL MALAR,
" ஒருவன் கிறிசுத்தவனாக மதம் மாறினால் ஞானசுத்தானம் என்ற பெயரில் உடனே அவனுக்கு மத்தேயு, மார்க்கு, பேதுரு, அந்திரேயா கிரேசி, ரோசி, அன்டோனியா (இந்திய சனியன்) என்றெல்லாம் எதற்கு மாற்றுகிறார்கள். கிறிசுத்தவர்கள் சாத்தான் என எதை குறிப்பிடுகிறார்கள் என்று தெரியுமா? உங்கள் பிள்ளைகள் கிறிசுத்தவ பள்ளிகளில் படிப்பார்களானால் கேட்டுப்பாருங்கள். "
wat is this...
u never can call u as an indian...
ur mind is not matured. india has all type of religious beliefs... do u knw?
hw cme u can tell antonio as an இந்திய சனியன better mind ur words my sis.
i think itz better if some one from abroad can call u as something else...
tey hve the rights to change their name... k
do u knw... y ppl are having the actors , criketers name... u really not belonged to this world even if u dnt knw this simple logic...
i studied in a christian institution only k... i knw better than u... even if u studied in a hindu institution u should say the slogan .... u knw that...
u said that,"மதவெறி என்று நான் குறிப்பிட்டது இயேசு அழைக்கிறார் தினகரன் கும்பலை தான்"

if u knw abt them really u wont say dz... itz nt lyk tat... itz something else... evn they didnt ask anyone to change themselves. k.

u did christian theology?
k... u learnt dz only thr?

im nt supporting them ms.tamil but still ur words n writings affects others too...

இக்பால் செல்வன் said... | March 2, 2011 at 12:05 AM

மிகவும் அருமையானதொரு பதிவு !!!

இயேசு என்ற மாமனிதர் எளிமையாக பிறந்து எளிமையாக வாழ்ந்து எளிமையாக சென்ற இறைமகன்... ஆனால் அவரின் பெயரால் எளிமைய என்றால் என்னவென்றே தெரியாமல் வாழும் இந்தக் கூட்டத்தினை என்னச் சொல்ல ! கிருத்துவம் இந்தியாவின் சமூக விடுதலைக்கு வித்திட்ட காலம் மலையேறி சமூக வியாபாரத்துக்கு வித்திட்டு வரும் காலமிது என்பதன் ஒரு எடுத்துக்காட்டே இதுவாகும்.....

இவர்களின் போதனைக்கு mesmerise ஆகி பல கிருத்துவர்களும்/இந்துக்களும் உண்மையான விவிலிய வாழ்வினை தொலைத்துள்ளார்கள்.... இது கிருத்தவத்துக்கே இழுக்காகும்.......

இயேசுவின் வாழ்வியல தத்துவங்கள் உன்னதமானவை...

கடவுளை தொழு நினைப்பவர்கள் தனி அறையில் யாருக்கும் தெரியாமல் தொழுங்கள் என்றார். ஆனால் இவர்கள் தொலைப்பேசியில் அழையுங்கள் எங்கின்றார்கள். இவர்கள் இறைவனுக்கும் - மனிதருக்கும் இடையில் மாமா வேலை செய்கிறார்களோ.

இயேசு பிறருக்க்காக ஜெபன் செய்யுங்காள் என்றார்க். இவர்கள் பிறருக்காக ஜெபம் செய்கிறோம், அதற்குப் பணம் தாருங்கள் எங்கின்றார்கள்...

எத்தனை எத்தனை ஏழை மாணவர்கள், சரி ஏழை கிருத்தவ மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்களின் காருண்யா பல்கலைக்கழகத்தி இலவசக் கல்வி தருவார்கள். பெயரில் மட்டும் தான் காருண்யா....

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்......

! ஸ்பார்க் கார்த்தி @ said... | August 6, 2011 at 10:33 PM

இந்த கொள்ளை கும்பல் என்று ஒளியும். மதத்தின் பெயரல் இவர்கள் நடத்தும் இது போன்ற செயல்களை தட்டி கேட்க வேண்டிய அரசாங்கமே இவர்களுக்கு துணைபோவது அநியாயம். சிறுபான்மை என்ற ஒரு ஆயுதத்தை வைத்து இவர்களை போன்றோர் செய்யும் கொள்ளைகள் ஏராளம், இந்த குடும்பம் ஒரு சோறு பதம்,
இவர்களையும் நம்பி பலர் பிதொடருகின்றனரே அதை நினைத்தால் வேதனையாக உள்ளது.........

Priyajanish said... | August 16, 2011 at 5:38 PM

Yosikka vaikum Pathivu Romba thairiyam Anna ungaluku

peter said... | February 4, 2012 at 3:24 PM

They are very good people. Please don't blame any body like those without knowing true things about this people.

Florence Varghese said... | October 15, 2012 at 12:08 PM

மிகவும் நன்றி. கள்ள தீர்கதரிசிகளை நாம் அடையாளம் கண்டு புறகணிக்க வேண்டும். உங்கள் மனித நேயம் உண்மையிலேயே வியக வைக்கிறது.

Sudhan said... | January 3, 2013 at 8:31 PM

Hey What u thing JESUS. JESUS IS POWER OF THE WORLD. Jesus is our GOD. Ok, Its a true, u thinking world is last days, jesus fake christiansa summa vidamaattaar ok. christians pathi vimarsanam seiyatheerkal...

sudhakar

Femina said... | February 20, 2013 at 6:20 AM

Ms.Tamilmalar its better if u mind your words...no one has the rights to judge others that too without knowing the entire things in and around.Dont leave any rubbish comments and avoid using naughty words.

raja durai said... | October 13, 2013 at 8:22 PM

முக்கியமாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கு சென்று என்ன நடக்கிரது என்று பார்த்தீரா....கிறிஸ்தவத்திற்கு உருவம் கிடையாது.
முக்கிய குறிப்பு:

அனைத்தையும் அறிந்தவர் போல் பேசுவதை தவிர்க்கவும்...என்றுமே அது நமது நன்மைக்கு அல்ல....

Raj Manick said... | May 19, 2014 at 4:27 PM

Dear friend (thoppithoppi),
i think this article is posted for your publicity and the other reason is jealousy.
I am asking one question. Are YOU a good man?, Are you a perfect? answer yourself genuinely.
Nobody can cheated by others except cheating themselves. Now you are cheating yourself. Don't look at others, other human beings or organizations. Look at JESUS
CHRIST and believe Him. He can do any miracles and can give JOY, PEACE, and LIFE directly.
Repent today and experience fullness of life in CRIST.