பங்குச்சந்தை என்றால் என்ன? ( A முதல் Z வரை)

Monday, January 3, 2011


 http://4.bp.blogspot.com/_Mi7AIQ22soI/SMj4j_CagPI/AAAAAAAACNU/saJdYqptZP0/s400/bombay_stock_exchange_dalal_street.JPG
பங்குச்சந்தை  என்றால் என்ன,  அதை  எங்கே  போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.  ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி  ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.

நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள். அதனால்தான் ஒரே ஒரு பங்குசந்தை பற்றிய எதிர்ப்பதிவு மட்டும் பதிவிட்டு விலகியே இருப்போம் என்று அதுபோன்ற பதிவுகளை தவிர்த்து விட்டேன்.

ஆனால் இன்று பண ஆசையை காட்டி பலர் மக்களுக்கு சேவை  வழங்குவது  போல் தொலைக்காட்ச்சியில் வர ஆரம்பித்து விட்டனர், அப்படி வருபவர்களில் முதன்மையானவர்கள் மக்கள் தொலைக்காட்ச்சியில் வருபவர்கள் தான். அவர்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் ஏதோ சேவை மனப்பான்மையுடன்தான் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது போல் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால் தொட்டதர்க்கெல்லாம் பணம் கேட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். எனக்கு  தொலைக்காட்ச்சியில் இவர்களை பார்த்தால் இவர்களுக்கு யாருமே முடிவு கட்ட மாட்டார்களா என்று  தான் தோன்றும். ஆனால் இப்போது இவர்களுக்குத்தானே காலம், யார் தட்டிக்கேட்ப்பார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்று சொல்லித்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். சரி நாம் ஏதேனும் முயற்சி செய்வோமே என்று நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு.

இணையதளத்தில் கூட  பலர் பங்குசந்தை பற்றி உதவுவதாக கூறிக்கொண்டு உலா வருகின்றனர். ஆனால் அவர்களும் பங்குசந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறோம், சிடி விற்பனை செய்கிறோம் என்று பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.  உண்மை என்னவென்றால் அவர்களுக்கே பங்குசந்தை பற்றிய முழுமையான அறிவு இருக்காது இல்லை பங்கு சந்தையில் பணம் விட்டு இருப்பார்கள். விட்ட பணத்தை எடுத்துவிட உங்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சி டி யை வாங்கி நூறு பிரின்ட் போட்டு உங்களிடம் ஒரு சி டி ஆயிரம் ரூபாய் என்று விற்று விடுவார்கள். ஆனால் அந்த சி டி யில் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

எனக்கு  பங்குசந்தையில் தெரிந்தவரை உங்களுக்கு கூறுகிறேன் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.

பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.

1 . பொறுமை காத்தல்
இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று,  எந்த ஒரு நேரத்திலும்  அவசரப்பட்டு முடிவுகளை  எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இன்று சில பங்குசந்தை தரகர்களே புதியவர்களுக்கு  உதவுவதாக கூறி  தினவர்த்தகத்தில் ஈடுப்பட வைப்பதே நிஜம். காரணம் அவர்களுக்கு கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இது தெரியாத வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் போல என்று நினைத்து அவர்கள் சொல்லுவதர்க்கேல்லாம் தலையாட்டிவிட்டு பணம் போனப்பின் தனது தவறை நினைத்து வருந்துவார்கள். பங்குசந்தையில் பணம் ஈட்டுவதை விட தனது கையில் உள்ள பணத்தை பாதுக்காப்பதே சிறந்தது அதற்க்கு மிக முக்கியமான ஒன்று பொறுமை.

 2 . கற்றல் அறிவு
 ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று.   பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள். 

3 .  அதிர்ஷ்ட்டம் 
என்னதான் தொழில்நுட்ப பகுப்பாய்வை கறைத்து குடித்திருந்தாலும்  அதிர்ஷ்ட்டம் பங்குசந்தையில் கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும்.  அதுவும் தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 99 சதவிகிதம் இது கட்டாயம் தேவை. ஏன் என்றால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரே நிமிடத்தில் நாம் வாங்கிய பங்கு படு வீழ்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளது அதற்க்கான காரணத்தை ஆராய்ந்தால் 75 %  புரளியாகத்தான் இருக்கும். அதையும் மீறி வேறு ஒரு காரணம் இருக்கும் என்றால் வெளிநாட்டில் ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவார்கள். இதனால் கண்டிப்பாக பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.

பங்குசந்தையில் ஈடுப்ப்படும்முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:

► பங்கு தரகர் 
►தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு

பங்கு தரகர்
இன்று பங்குசந்தையில் ஈடுப்படும் பலர் பணத்தை இழப்பது இவர்களிடம் தான் காரணம் பங்குசந்தையில் ஏற்ப்படும் நட்டம் ஒருபக்கம் என்றால் இவர்கள் புதிதாக இனைபவர்களிடம் கமிஷன் என்ற பெயரில் கறக்கும் பணமே அதிகம். அதிலும் இப்போது உதித்திருக்கும் பல தரகு நிறுவனங்கள் ஒருவர் இணையும்போதே தரகு தொகையை செலுத்திவிட வேண்டும் என்று  ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து விடுகின்றனர். இது புதிதாக இணைபவர்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்ப்படுத்திவிடும் பங்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கியே தீர வேண்டும் என்று. அதனால் புதிதாக பங்கு சந்தையில் இணைபவர்கள் தயவு செய்து முன் கூட்டியே தரகு தொகையை செலுத்த வேண்டாம்.  நீங்கள் இணைந்தபின் யார் உங்களிடம் பங்குகளை  வாங்கும் நேரத்தில் தரகு தொகையை பிடித்துக்கொள்கிரார்களோ அவர்களிடம் இணைந்தால் உங்களுக்கு எந்த நிர்பந்தமும் இருக்காது. இதை முன்கூட்டியே நன்கு விசாரித்துவிட்டு அவர் சரியான அனுபவம் வாய்ந்த தரகர் தான என்று முடிவு செய்த பின்  தரகரிடம்  இணையவும்.

தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு 
இனி வரும் நாட்களில் என்னால் முடிந்த வரை உங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப்ப பகுப்பாய்வை பற்றி விளக்கி விடுகிறேன். தயவு செய்து யாரும் ஆரம்பித்திலேயே பயன் படுத்தி விட வேண்டாம். பங்குசந்தையில் ஈடுபட போதிய அனுபவம் கட்டாயம்  இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் பங்குச் சந்தையில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள், பங்குசந்தையில் ஈடுபட என்ன தகுதி வேண்டும்,  பங்கு கணக்கை   ஏமாறாமல் யாரிடம் எப்படி தொடங்குவது என்று விளக்குகிறேன்.


41 comments:

பாரத்... பாரதி... said... | January 3, 2011 at 5:44 PM

vadai?

பாரத்... பாரதி... said... | January 3, 2011 at 5:46 PM

வலையுலகில் பங்கு சந்தை பற்றிய பதிவு, மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்க்கத்தக்கதே... பகிர்வுக்கு நன்றிகள்.

மாணவன் said... | January 3, 2011 at 5:58 PM

//பாரத்... பாரதி... said... | January 3, 2011 5:44 PM
vadai?//

பாரதி நீங்களும் வடை வாங்க ஆரம்பிச்சுட்டீங்களா....

ஹிஹிஹி

Samudra said... | January 3, 2011 at 6:00 PM

நல்ல பதிவு

பார்வையாளன் said... | January 3, 2011 at 6:05 PM

பயனுள்ள பதிவு

karthikkumar said... | January 3, 2011 at 6:18 PM

உபயோகமான பதிவு நண்பரே....

தனி காட்டு ராஜா said... | January 3, 2011 at 6:19 PM

:)

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

http://gunathamizh.blogspot.com/ [This link is for sample]


தல ...இப்போது இப்படி ஒரு குரூப் கெளம்பி உள்ளது ....கொஞ்சம் இதை பற்றி ஆராய்ச்சி செய்து எழுத முடியுமா?

தனி காட்டு ராஜா said... | January 3, 2011 at 6:20 PM

For following..

மாணவன் said... | January 3, 2011 at 6:22 PM

//பங்குச்சந்தை என்றால் என்ன? ( A முதல் Z வரை)//

தெளிவாக விளக்கியுள்ளீர்கள் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 3, 2011 at 6:32 PM

அருமையான தொடக்கம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...டிரேடிங் பற்றியும் எழுதுங்கள்

abbeys said... | January 3, 2011 at 6:37 PM

nalla pathivu... valthukkal thodarungal.

இரவு வானம் said... | January 3, 2011 at 6:57 PM

நல்ல பயனுள்ள பதிவு தொடரவும்

தமிழ்மலர் said... | January 3, 2011 at 7:56 PM

பங்கு சந்தை என்றால் என்ன ? அது எப்படி செயல்படுகிறது. அதன் ஆபத்துக்கள் என்ன? அதில் உள்ள நன்மை தீமைகள் என்ன என்பது பற்றி விரிவாக எழுதவும். பங்கு சந்தை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும். நல்ல முயற்சி. நன்றி.

THOPPITHOPPI said... | January 3, 2011 at 7:58 PM

@தமிழ்மலர்

நிச்சயம் நீங்கள் சொன்ன அனைத்தையும் எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே

பலே பாண்டியா/பிரபு said... | January 3, 2011 at 8:25 PM

மிகவும் அருமை நண்பரே!! தொடருங்கள்!!!! நிச்சயம் பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கும் .

பலே பாண்டியா/பிரபு said... | January 3, 2011 at 8:26 PM
This comment has been removed by the author.
அன்பரசன் said... | January 3, 2011 at 8:51 PM

நல்ல தொடக்கம் நண்பரே!

ஆமினா said... | January 4, 2011 at 7:17 AM

நல்ல தொடக்கம்

ஆமினா said... | January 4, 2011 at 7:18 AM

//.டிரேடிங் பற்றியும் எழுதுங்கள்//

கண்டிப்பா எழுதுங்க!!!!

பணம் போட சொல்லி ஓவர் டார்ச்சர் :(

p said... | January 4, 2011 at 7:22 AM

பயன் உள்ளபதிவு ... தொடருங்கள்...

-அன்புடன் பல்லவன்

Speed Master said... | January 4, 2011 at 11:32 AM

பயனுள்ளபதிவு விளக்கம் அருமை

சங்கவி said... | January 4, 2011 at 12:08 PM

Very Useful Post....

செங்கோவி said... | January 4, 2011 at 12:32 PM

அடிப்படைத் தகவல்களை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி. பயனுள்ள பதிவு.

Best Online Jobs said... | January 4, 2011 at 1:08 PM

Use Full Information

Good

சி.பி.செந்தில்குமார் said... | January 4, 2011 at 1:39 PM

very usefull post

சி.பி.செந்தில்குமார் said... | January 4, 2011 at 1:39 PM

social awarness

INDIA 2121 said... | January 4, 2011 at 1:54 PM

NALLA PATHIVU. ARUMAI

சொல்லச் சொல்ல said... | January 4, 2011 at 2:04 PM

amazing details! Does this come under a type of Gambling?

சொல்லச் சொல்ல said... | January 4, 2011 at 2:04 PM

amazing details! Does this come under a type of Gambling?

THOPPITHOPPI said... | January 4, 2011 at 2:20 PM

@சொல்லச் சொல்ல

// amazing details! Does this come under a type of Gambling?//

நீங்கள் தினவர்த்தகமோ அல்லது OPTION,FUTURE TRADING போன்றவற்றில் ஈடுப்பட்டால் மட்டுமே இது GAMBLING.

அதை பற்றி நான் இனி வரும் பதிவுகளில் விளக்கமாக எழுதுகிறேன்.

விக்கி உலகம் said... | January 4, 2011 at 3:12 PM

ரொம்ப பயனுள்ள பதிவு.

உங்களுக்கு என் நன்றிகள்.

இன்று வரை இந்த பங்குச்சந்தை பற்றிய சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நான் இதுவரை இந்த விஷயத்தில் நாட்டம் கொள்ளவில்லை. உங்களிடம் இருந்து நிரம்ப செய்திகளை எதிர் பார்க்கும் ஒரு சராசரி இந்தியனாய் நான்.

நன்றி

ரஹீம் கஸாலி said... | January 4, 2011 at 3:16 PM

பங்குச்சந்தை பற்றி மிக தெளிவான பதிவு.

kaja said... | January 4, 2011 at 11:54 PM

its very usful, i am waiting for your next post. because i like to learn about sharemarket. and can u explain about indian tax rules, how to pay, and all formalities. it will be usful for many people. thanks.

வெத்து வேட்டு said... | January 5, 2011 at 7:14 AM

All I can say is Share Market is not really for common man..it is mainly for traders(who trade on behalf of banks and other financial institutes to park the money)...people who has knowledge about market dynamics (ups and downs) only should be trading...
don't listen to people who push you to invest in the share market....this is to steal the money from you(common unsuspecting man)

GANESH said... | February 22, 2011 at 9:10 PM

I don't know anything about share market.Now i get some idea thanks for your useful information.

chennai said... | February 25, 2011 at 10:46 AM

VANAKKAM NANBARE , PANGU CHANDHAI PATRIYA UNGALIN PATHIVU ENAKU UDHAVIYA ULLATHU , ITHAI PATRI MELUM THERINDHU KOLLA AASAI PADUGIREN . MELUM MELUM PATHIVINAI NEENGAL THODARA , ENUDAYA MANAMARNTHA VAZHTHUKKAL.

Dharan said... | April 9, 2012 at 10:14 AM

Very useful for me

RAJA RATHANAM said... | July 8, 2012 at 7:22 PM

very very thanks for your job

RAJA RATHANAM said... | July 8, 2012 at 7:28 PM

Ungal pani thodara en vazhukal.

senthur stocks said... | May 15, 2013 at 2:27 PM

அருமையான பதிவுகள்!!!!!

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips
For earn money in free time visit Mcx Tips, Share Tips,
To earn daily 5000-10000 rupees by our Free Mcx Tips , Free Stock Tips and earn money by investing stock market

jameel said... | October 5, 2013 at 11:16 PM

இன்னுமே எனக்கு ஒரு சரியான ஐடியா கிடைக்கலையே.யார் கிட்டே தான் இதை பற்றி தெளிவா தெரிஞ்சு்கிறது.