பங்குச்சந்தை ஓர் அறிமுகம் (புதியவர்களுக்கு A-Z)

Friday, January 7, 2011பங்குச்சந்தை பற்றி அறியவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு.

புதியவர்களுக்கு பங்குச்சந்தை என்பது   இன்னும் ஒரு மாயையாகத்தான் உள்ளது. அதில் பணம் பண்ண முடியுமா  முடியாதா  என்பதே பலரின் கேள்வி. இந்த  சந்தேகம் புதியவர்களிடம் மட்டும் இல்லாமல் பங்குச்சந்தையில் உள்ள பலரது சந்தேகமும்  இதுதான். ஏன் என்றால் லாபம் வந்தாலும் ஏதோ ஒரு வழியில் மீண்டும் பணத்தை இழப்பவர்கள் தான் பலப்பேர். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் புதியவர்கள் பங்குச்சந்தையை அணுகும் முறைதான். சரி பங்குச்சந்தையை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழிகள்:
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூன்று வழிகளில் முதலீடு செய்யலாம் 1 . MUTUAL FUND வழியாக முதலீடு செய்வது,  2 . ULIP என்று சொல்லப்புடும்  இன்சூரன்ஸ் திட்டங்கள் வழியாக அல்லது  3 . புரோக்கர் உதவியுடன் நாமே நேரடியாக முதலீடு செய்வது .

1 . MUTUAL FUND :
 MUTUAL FUND வழியாக  முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஓரளவு பங்குச்சந்தை பற்றிய அறிதல் இருந்தாலே  போதுமானது.  இதில் சிறப்பம்சம் என்று பார்த்தல்  ULIP திட்டத்தை விட முதலீட்டின்  வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்,  அதேப்போல் ULIP திட்டத்தை விட இதில்  முதலீட்டின் நிறுவன  கமிஷனும்  குறைவுதான். ஆனால் முதலீடு ரிஸ்க் முழுவதும் முதலீட்டாளரையே சாரும். ULIP திட்டங்களை விட கொஞ்சம் ஆபயகரமானது என்பதால் தினமும் முதலீட்டின் வளர்ச்சியை கவனிக்கக்கூடியவர்கள் மட்டும் MUTUAL FUND ல் முதலீடு செய்தால் நல்லது.


2 . யூலிப் திட்டங்கள்(ULIP)
யூலிப்  திட்டங்கள்  பற்றி  சொல்லவே தேவையில்லை என்று  நினைக்கிறேன்,  ஏற்க்கனவே பலர் இந்த திட்டத்தால்  ஏமாற்றப்பட்டு விட்டனர்.  தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், இன்சூரன்ஸ் நிறுவனங்களால் நடத்தப்படுவது தான்  யூலிப் திட்டங்கள். நண்பர்களோ அல்லது உறவினர்கள் மூலமாக நீங்கள் இந்தத்திட்டத்தை இனி  அறியப்படலாம். அவர்கள் உங்களை  அணுகும்போது உங்களிடம் சொல்லும் வார்த்தை வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதம் ஒரு முறை   குறிப்பிட்டத் தொகையை தொடர்ந்து  மூன்று வருடங்களுக்கு கட்டினால் போதும்,  அதற்குப்பின் உங்கள் முதலீடு கன்னாப்பின்னாவென்று ஏறிவிடும் இப்படித்தான் ஆசைவார்த்தை கூறி உங்களை இணைக்க முயற்சி செய்வார்கள். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கீழே உள்ளதை படித்து விழித்துக்கொள்ளுங்கள்.

யூலிப்-  இதில் சிறப்பம்சம் என்று சொன்னால் நாம்  முதலீடு செய்யும்  தொகையில்  பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும், முதலீடு செய்பவருக்கு இன்சுரன்ஸ் போன்றவையும் ஒரே திட்டத்தால் கிடைப்பதுத்தான். ஆனால் இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் திட்டம் என்றே சொல்லலாம். யூலிப் திட்டத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் வங்கியில் நாம் முதலீடு செய்யும் நிரந்தர வைப்புத்தொகையை (FIXED DEPOSIT) விட குறைவுத்தான், ஏதாவது ஒருதிட்டம் நிரந்தர வைப்புத்தொகையை விட  வளர்ச்சி அதிகமாக இருக்கலாம் அது ஏமாற்றுபவர்களை  பொறுத்து.   ஆனால் இதில்  முதலீட்டின் ரிஸ்க் முழுக்க முதலீட்டாளரையே சாரும். அதேப்போல் நாம் முதலீடு செய்யும் தொகையில் அதிகப்படியான வளர்ச்சித்தொகை நாம் முதலீடு செய்த  நிறுவனங்கள் சுரண்டவே  சரியாக இருக்கும்.  என்னைக்கேட்டால் இதுப்போன்ற திட்டத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்றுத்தான் சொல்வேன், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பயன்படுத்தும் திட்டம் தான் இந்த யூலிப் திட்டம் என்பது என்கருத்து, லாக்கிங் பீரியட்  கூட இதில் ஒரு பாதகமான அம்சம்தான்.  இன்சுரன்ஸ் நிறுவனங்களை கண்காணிக்கும் IRDA இவர்கள் சுரண்டலை கண்டும் காணாமல் இருப்பது வருத்தமே. கேரண்டி தொகை சிறப்பம்சம் உள்ளது  என்று கூட  உங்களிடம் யாராவது இந்த திட்டத்தை பரிந்துரைத்தால் ஆங்கில படிப்பறிவு இல்லாதவர்கள்   முடிந்தவரை ULIP திட்டத்தை தவிர்க்கவே  பாருங்கள் அல்லது இந்த திட்டத்தை பற்றி இணையும் ஒப்பந்தத்தில் சரியாக படித்துவிட்டு இந்த திட்டத்தால்  நமக்கு நன்மை உண்டா என்று அறிந்து விட்டு இணையப்பாருங்கள். இல்லையென்றால் வங்கியில் செய்யப்படும் நிரந்தர வைப்புத்தொகையே யூலிப் திட்டத்தை விட  சிறந்தது, அபாயகரம் இல்லாதது.

3 . பங்குச்சந்தையில் நேரடி முதலீடு:
நேரடியாக நாமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும். தகுதியே தேவையில்லை கணினி பயன்படுத்த தெரிந்தால் போதும்  என்று சிலர் தொலைக்காட்ச்சியில் கதை அளப்பார்கள் நம்பிவிட வேண்டாம்.

தகுதி:
படிப்பறிவு நிச்சயம் தேவை(பங்குச்சந்தை பற்றிய செய்திகளை உள்வாங்கும் அளவுக்கு), பொறுமையாக எதையும் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும், பதட்டப்படுபவராக இருக்ககூடாது,  மாதவருமானம் பெறக்கூடியவர் அல்லது செலவுக்கு மீறி கையில் பணம் வைத்திருப்பவர்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே பங்குச்சந்தையை நாடினால் நல்லது இந்த  தகுதிகளில்  ஏதேனும் ஒன்று இல்லை  என்றால் கூட  அவர்கள் பங்குச்சந்தை பக்கமே வரவேண்டாம், உங்களுக்கு வங்கி நிரந்தர வைப்புத்தொகையே சிறந்தது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க. 

முதலீடு தொகை:   
எக்காரணத்தைக்கொண்டும் புதியவர்கள் முதல் முறை முதலீடு செய்யும்போது   5000 (ஐந்தாயிரம்) ரூபாய்க்கு  மேல் முதலீடு செய்ய வேண்டாம். ஐம்பதாயிரம்/ஒருலட்ச்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் தரகு தொகையில் சலுகை கொடுக்கிறேன் என்று தரகு நிறுவனங்கள் ஆசைக்காட்டினாலும் அடம்பிடிக்கவும் வேண்டாம் என்று.  ஆரம்பத்தில் 2500 ரூபாய் முதலீடு செய்தாலும் நல்லதே. முதலீடு செய்து சில மாதங்களுக்குப்பின் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தகுதியானவர்தான் என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே மேலும் முதலீடு செய்யவும்,தொடரவும்  இல்லையென்றால் கணக்கை மூடிவிட்டு பொழப்பை பார்க்கவும்.

பங்குச்சந்தையில் கணக்கு தொடங்க தேவையானவை:
            பான் கார்ட்(PAN CARD),  வங்கி கணக்கு( கண்டிப்பாக  வாடிக்கையாளர்  பெயரில்), ரேஷன் கார்ட், புகைப்படம், படிப்புச்சான்றிதல்.

தரகர்:
பங்குச்சந்தையில் நாம் இணைய வேண்டும் என்றால் முதலில் அணுகவேண்டிய நபர் பங்கு தரகர்/தரகு நிறுவனம். பங்கு கணக்கை தொடங்கும்போது அதை சரியான இடத்தில் தொடங்கினாலே பாதி கிணறு  தாண்டிய  மாதிரித்தான். ஏன் என்றால் இன்று பல நிறுவனங்கள் தரகர் தகுதி இல்லாமலே தரகு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், ஏமாற்றி வருகின்றனர்.  எப்படியாவது பணம் சம்பாதித்துவிடலாம் என்றுத்தான்.

சில முன்னணி பங்கு நிறுவனங்கள்:

1. ANGEL BROKING
2. INDIA INFOLINE
3. ICICI DIRECT
4. RELIGARE
5. RELIANCE MONEY

இன்னும் பல பெரிய, சிரிய நிறுவனங்கள் உலா வருகின்றன. இவற்றில் சிறந்தது எது என்று கண்டுப்பிடிப்பது கடினமே. சில தகுதிகளை சொல்கிறேன் இணையும்போது கவனித்துக்கொள்ளுங்கள்: நீங்கள் இணையும் முன் அந்த நிறுவனத்தில் ஒருவாரம்மாவது தினமும்  சென்று பங்குச்சந்தையை கவனிக்கவும். கவனிக்கும் சாக்கில் அங்கே வந்து செல்பவர்கள், நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் அணுகும் முறை, அவர்களின் வணிக உத்திகள் போன்றவற்றை கவனித்துக்கொள்ளவும்.  ஒருவாரம் கழித்து உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அங்கே பங்கு கணக்கை தொடங்கவும். இல்லையென்றால் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அவர்களை கட் செய்யவும்.

அதேப்போல் நீங்கள் இணையும்போதே தரகு தொகையை கேட்க்கும் நிறுவனத்தில் இணையவேண்டாம். பங்குகணக்கை தொடங்கும்போது 750 முதல்  1000  ரூபாய்  வரை மட்டுமே கேட்கும் நிறுவனத்தில் மட்டும் கணக்கை தொடரவும். ஏதாவது பிளான் என்று சொல்லி வருடம் 2000, 3000 என்று சொன்னால் இவர்களையும் கட் செய்யவும்.

பங்குச்சந்தையில் லாபம் பார்க்க முடியுமா?
நான் மேலே   தகுதி என்று கூறியது பங்குச்சந்தையில் ஈடுப்படுவதர்க்கு மட்டுமே ஆனால் பங்குச்சந்தையில் லாபம் பெறவேண்டும் என்றால் சிலவற்றை  கற்றிருக்க வேண்டும். அவற்றை கற்காமல்  எக்காரணத்தை கொண்டும் பங்கு கணக்கை தொடங்க வேண்டாம். பங்கு கணக்கை தொடங்கியப்பின் கற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஆர்வக்கோளாரில் பணத்தை இழந்துவிடுவீர்கள். நீங்கள்  கறக்கவேண்டியதில்  முதன்மையானது தொழில்நுட்பப பகுப்பாய்வு(TECHNICAL ANALYSIS). தொழில்நுட்ப  பகுப்பாய்வில் பல வகைகள் உள்ளது  அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது சிறந்த முறையில் கற்றிருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக புகைப்படத்துடன் விளக்கத்துடன் பதிவிடுகிறேன் அதற்குள் ஆர்வத்தில் யாரிடமாவது பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறேன்  என்று பணத்தை இழந்து விட வேண்டாம்.                    

புதியவர்களின் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்கள்:
புதிதாக  பங்குச்சந்தைக்கு வருபவர்களின் சந்தேகம் என்று பார்த்தால் ►பங்கு என்றால் என்ன?  ►ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது? ►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்? ►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது? ►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?   என்பதுததான்.

பங்கு என்றால் என்ன?
ஒரு நிறுவனம்/கம்பனி தொடங்கும்போது முதலீட்டின் தொகை நிறவனத்தின் முதலாளியிடம் குறைவாக இருந்தால் அதனை மக்களிடம் இருந்து   வசூலிக்க  பயன்படுவதுதான் பங்கு(SHARE ). அதாவது ஒரு நிறுவனத்துக்கு மக்கள் மூலம் 100000 (ஒருலட்சம்) ரூபாய் தேவைப்படுகிறது என்றால் அதை பங்கு என்று வெளியிடும்போது சிறு விலைக்கு பிரித்து  வெளியிடுவார்கள். உதாரணத்துக்கு ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்றால் (100000/100) ஆயிரம் பங்குகளை வெளியிடுவார்கள் 1000X100=100000 ரூபாய். அதை வெளியிட சில வழிமுறைகள் உள்ளது  அதைப்பற்றி பின் வரும் நாட்களில் விளக்கமாக பதிவிடுகிறேன்.

ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது?
பங்குகள் மக்களிடம் வெளியிட்டப்பின் பங்கை வெளியிட்ட நிறுவனத்தின்  செயல்பாட்டை பொறுத்து பங்கின் விலை நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு  அந்த நிறுவனம் புதிதாக ஏதாவது அரசு டெண்டர் எடுத்தால் அல்லது புது ஆர்டர் பெற்றால் அதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கில் கொண்டு  அந்த நிறுவனத்தின்  பங்கு(SHARE ) விலை பங்குச்சந்தையில் ஏற்றம் அடையும்.  ஒரு வேலை அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒருவழியில் இழப்போ அல்லது நட்டமோ அடைந்தால் பங்குச்சந்தையில் அதன் பங்கு விலை குறையும். இதை கருத்தில் கொண்டுத்தான் பங்கின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்?
சரி நிறுவனம் தான் லாபத்தில் போகிறதே பிறகு  ஏன் பழைய ஆட்கள்(பங்குதாரர்கள்) பங்கை(SHARE ) விற்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்க்கு காரணம் நூறு ரூபாய்க்கு வாங்கியவன் கொஞ்சம் லாபம் வந்தவுடன் லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் தன் கையில் இருந்த பங்கை விற்க முயலுவான். அந்த பங்கை வாங்குபவன் அந்த நிறுவனம் இன்னும் லாபம் அடைந்து பங்கின் விலை இன்னும்  மேலே போகும் என்ற நம்பிக்கையில் அந்த பங்கை வாங்குகிறான். அதேப்போல் அந்த நிறுவனம் நஷ்ட்டம் அடைந்தால் அந்த பங்கின் விலை சரியும், அப்படி சரியும்போது மேலும் நஷ்ட்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக பழைய பங்குதாரர்கள் பங்கை விற்று நஷ்ட்டத்தை தவிர்க்க பங்கை விற்ப்பார்கள். அந்த பங்கை வாங்குபவர்கள் அந்த நிறுவனம் நஷ்ட்டத்தில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கையில் வாங்குவார்கள்.

►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது?
 பங்கை(SHARE ) வாங்குபவன் பங்கின் விலை சரியும்போது வாங்கினால் எப்படியும் மீண்டும் பங்கின் விலை உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறான். ஆனால் அவன் வாங்கியப்பின்பும் பங்கின் விலை மேலும் சரிந்தால் பங்கின் விலை ஏறும் என்று நம்பி வாங்கியவனுக்கு நஷ்ட்டத்தை ஏற்ப்படுத்திவிடும், இதனால்தான் பங்குச்சந்தையில் நஷ்ட்டம் ஏற்ப்படுகிறது. இது உதாரணம் மட்டும்தான் மேலும் நஷ்ட்டம் அடைய பல வழிகள் உள்ளன அதனை பின்வரும் நாளில் பதிவிடுகிறேன்.

►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?
ஆரம்ப நாட்களில் பங்கை விற்பனை/வாங்க  வேண்டும் என்றால் பத்திரம் மூலம் தான் வாங்க முடியும் அதுவம் நாம் வாங்கியப்பங்கு கைக்கு வரவேண்டும் என்றால் பலநாட்கள் பிடிக்கும்.  பிறகு கணினி, இணையத்தளம்  பயன்ப்பாடு அதிகரித்தப்பின் DEMAT என்னும் முறையில் கணினி வழியாகவே பங்குகளை வாங்கிவிடலாம் என்று  இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை அறிமுகப்படுத்தியது. இப்போது பங்குகளை வாங்கவேண்டும் என்றால் இணையத்தளம் வழியே ஒரு நிமிடத்தில் வாங்கி விடலாம். பணம் பரிமாற்றம், பங்கு பரிமாற்றம் எல்லாமே சில வினாடியில் கணினி வழியே நடந்து விடும்.


தயவு செய்து யாரும் ஆர்வக்கோளாரில் பங்குச்சந்தையில் இணைந்துவிட வேண்டாம். மேலே நான் சொன்ன தகுதிகள் இருக்க வேண்டும், இன்னும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவரை பொறுமை காக்கவும்.

அடுத்தப்பதிவில் பங்கு பரிமாற்றம், பணம் பரிமாற்றம் எப்படி நடக்கிறது. DEMAT என்றால் என்ன என்று விளக்குகிறேன்.


44 comments:

Speed Master said... | January 7, 2011 at 7:19 PM

அருமை

Speed Master said... | January 7, 2011 at 7:19 PM

தெளிவாக விளக்கிய்ள்ளீர்கள் நன்றி

Chitra said... | January 7, 2011 at 7:49 PM

விரிவான விளக்கம். நன்றி.

தமிழ் உதயம் said... | January 7, 2011 at 7:53 PM

பங்குசந்தை குறித்த அனைத்து தகவல்களையும் தெளிவாக தந்துவிட்டீர்கள். சிறப்பான பதிவு.

NKS.ஹாஜா மைதீன் said... | January 7, 2011 at 7:58 PM

பங்குசந்தை பற்றி பயனுள்ள தகவல் தந்ததுக்கு நன்றி.....

பலே பிரபு said... | January 7, 2011 at 8:11 PM

Super boss...!!

பலே பிரபு said... | January 7, 2011 at 8:13 PM

Reduce the number of related widgets

சென்னை பித்தன் said... | January 7, 2011 at 8:25 PM

பயனுள்ள பதிவுதான்.
ஆனால் எனக்குத்தான் இந்தப் பங்குச் சந்தைன்னாலே பயம்!

ஜீ... said... | January 7, 2011 at 8:32 PM

Nice Boss!:-)

kanna said... | January 7, 2011 at 9:33 PM

நல்ல பதிவு நண்பரே.... மேலும் தகவல்களை எதிர் நோக்குகிறோம்.

மாணவன் said... | January 7, 2011 at 9:35 PM

பங்குசந்தைபற்றி அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் தங்களின் மூலம் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே அறியதந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

செங்கோவி said... | January 7, 2011 at 10:07 PM

தொடர் சூப்பராப் போகுது பாஸ்..இது பகுதி-2 தானே? தலைப்பில் சேர்க்கலாமே? Fundamentals-ஐ இன்னும் கொஞ்சம் விளக்கி விட்டு, டெக்னிகலுக்குள் நுழையுங்கள்.

shanmugavel said... | January 7, 2011 at 11:22 PM

பல சந்தேகங்களை போக்கிய பதிவு.தொடருங்கள்

சிவகுமாரன் said... | January 8, 2011 at 12:45 AM

பங்குச் சந்தையைப் பற்றி எதுவும் தெரியாத எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி. தொடருங்கள்.

சிவகுமாரன் said... | January 8, 2011 at 12:47 AM

உங்கள் ஆம்வே பதிவை அப்படியே காப்பி அடித்து எனக்கு இன்று மெயில் வந்தது. பாவிகள்.இவர்கள் ஆம்வேயை விட பெரிய திருடர்களாய் இருக்கிறார்கள்..

Philosophy Prabhakaran said... | January 8, 2011 at 5:29 AM

இப்படி ஒரு பதிவை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன்... நன்றி... இப்போது முழுமையாக படிக்க நேரமில்லாததால் சேமித்து வைத்துக்கொண்டு பிறிதொரு நன்னாளில் படிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said... | January 8, 2011 at 7:22 AM

mika மிக நல்ல பதிவான இதற்கு கிடைத்திருக்கும் ஓட்டு ரொம்ப குறைவா இருக்கே...

சி.பி.செந்தில்குமார் said... | January 8, 2011 at 7:22 AM

ஒ தமிழா ....ம் ம்

சி.பி.செந்தில்குமார் said... | January 8, 2011 at 7:23 AM

இதை ரெடி பண்ணீ டைப் பண்ணவே 2 மணி நேரம் ஆகி இருக்குமே,, உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்

பார்வையாளன் said... | January 8, 2011 at 8:10 AM

மீண்டும் மீண்டும் படித்து வருகிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 8, 2011 at 1:11 PM

பங்கு சந்தை பர்றி அருமையான அலசல்...நாமே பங்குசந்தையில் ஏஜன்சி தொடர்பில்லாமல் செய்ய முடிந்தவை பற்றி விளக்குங்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said... | January 8, 2011 at 1:13 PM

தினசரி வர்த்தகம் காலையில் வாங்கி மாலையில் விற்பது செய்து நிரைய சம்பாதித்தவர்கள் இட்ருக்கிறார்களே நாணயம் விகடனில் பெண்கள் கூட மாதம் 10000 சம்பாதிக்கிறார்கள் என்ற ரீதியில் செய்தி வெளியிடுகிறார்கள் உங்கள் பார்வை பயமுறுத்துகிறதே

THOPPITHOPPI said... | January 8, 2011 at 1:29 PM

@ஆர்.கே.சதீஷ்குமார்

பங்குச்சந்தையில் சம்பாதிக்கவே முடியாது என்று சொல்லவில்லை. நான் சொன்ன தகுதிகளும் பங்குச்சந்தை பற்றிய முழுமையான அறிவும் உள்ளவர்கள் மட்டுமே அதில் சம்பாதிக்க முடியும். ஒருவர் மாதம் 10000 சம்பாதிக்கிறார் என்றால் அதை இழந்தவர் நான் சொன்ன தகுதிகள் இல்லாதவராகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தத்தான் இந்தபதிவு. என்னுடைய இந்த பதிவின் நோக்கம் அனைவரையும் பங்குச்சந்தையில் ஈடுப்படுத்த அல்ல தகுதி இல்லாதவர்களை வரவேண்டாம் என்று சொல்லவே. அதற்காகத்தான் இவ்வளவு விளக்கத்துடன் பதிவு.

Rajasurian said... | January 8, 2011 at 2:04 PM

மிக தெளிவான எளிமையான பகிர்வு. நன்றி

இளங்கோ said... | January 8, 2011 at 2:18 PM

நல்ல அறிமுகப் பதிவு.. நன்றிகள் நண்பரே..

Lakshmi said... | January 8, 2011 at 2:59 PM

பங்குச்சந்தை பற்றி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கி சொல்லி இருக்கிரீகள். நன்றி.

உருத்திரா said... | January 8, 2011 at 5:29 PM

அவசியம் அறியவேண்டிய அறிவுரை,நன்றிகள்

இரவு வானம் said... | January 8, 2011 at 6:05 PM

ரொம்ப நல்ல பதிவு நண்பா, நான் 3 வருசத்துக்கு முன்னமே பஜாஜ் இன்சுரன்ஸ்ல செர்ந்துட்டேன், ஏமாந்துட்டேன்னு தெரிஞ்சாலும் வேற வழி இல்லாம தொடர்ந்துட்டு இருக்கேன், இன்னும் ஒரு டியூ பாக்கி :-(

விக்கி உலகம் said... | January 9, 2011 at 5:59 AM

நல்ல பதிவு நண்பரே,


நல்ல வேலை ஆரம்பத்திலேயே ஈடுபட இருந்த என்னை தடுத்துநிருத்தியதட்க்கு நன்றி.

ம.தி.சுதா said... | January 9, 2011 at 6:07 AM

நன்றாக விளக்கியுள்ளிர்கள் நன்றி..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ஜோதிஜி said... | January 9, 2011 at 7:22 AM

இது போன்ற துறை சார்ந்த பதிவுகளை தொடர்ந்து எழுதுவும்..

ஆமினா said... | January 9, 2011 at 9:24 AM

பங்கு சந்தை பத்தி ரொம்பவே விளக்கமா சொல்லியிருக்கீங்க!!!!

நிறைய விஷயம் கற்றுக்கொண்டேன்!!!

நன்றி அண்ணா

முஹம்மத் ஆஷிக் said... | January 9, 2011 at 10:27 AM

மிகவும் அருமையான பதிவு.
தெளிவான விளக்கங்கள்.
தூரப்பார்வையுடன் ஒரு பொதுநலன்.

வெல்டன் சகோ.தொப்பிதொப்பி.

உங்களின் ஒரே ஒரு பின்னூட்டமும் மிக்க அருமை.

"பலரின் நஷ்டம்தான் சிலருக்கு லாபம்".----இதுதான் பங்குச்சந்தை.

"லாபம் பெறுவோரில் இருப்பது எப்படி? அதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?"----இதுதான் நீங்கள் சொல்ல வருவது.

"நஷ்டமடைவோரில் நீங்கள் ஒருவராகிவிட வேண்டாம்"---இதுதான் நீங்கள் எச்சரிப்பது.

தெளிவு... பெர்ஃபெக்ட்.

ஹேட்ஸ் ஆஃப் டு யூ..!

ரஹீம் கஸாலி said... | January 9, 2011 at 10:33 AM

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 3-வது இடம். வாழ்த்துக்கள்.

p said... | January 9, 2011 at 11:05 AM

பங்குச் சந்தையைப் பற்றி எதுவும் தெரியாத எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி. தொடருங்கள்.

-அன்புடன் பல்லவன்.

எஸ்.கே said... | January 9, 2011 at 12:26 PM

நல்லவேளை நான் இதில் நுழையலாம்னு நினைச்சேன்! நிறைய விசயம் தெளிவா புரிஞ்சது சார்!

asiya omar said... | January 9, 2011 at 1:36 PM

தேவையான பகிர்வு,நன்றி.அருமை.

மதுரை பாண்டி said... | January 10, 2011 at 11:27 AM

நல்லதொரு கட்டுரை!!! போன வாரம் தான் ULIP ல ஒண்ணு ஆரம்பிச்சுருக்கேன்... கொஞ்சம் முன்னமே சொல்லி இருக்க கூடாதா?
-
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

THOPPITHOPPI said... | January 10, 2011 at 11:45 AM

@ மதுரை பாண்டி

போன வாரம்தான் என்றால் நல்லதே, ULIP திட்டத்தில் நாம் சேர்ந்தப்பின் 45 நாட்களுக்குள் நாம் சேர்ந்த திட்டம் பிடிக்கவில்லை என்றால் விலகிவிடலாம். உங்களை சேர்த்து விட்ட நபரை அணுகி திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் கட்டிய தொகை எவ்வளவு அதில் ALLOCATION சார்ஜ் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ளுங்கள்(ALLOCATION சார்ஜ் பற்றி உங்களை இணைக்கும்போது சொல்லி இருக்க மாட்டார்கள்). பகல் கொள்ளை என்று தெரிந்தால் முகத்தாட்ச்சனை பார்க்காமல் திட்டத்தை கேன்சல் செய்யவும்.

பாரத்... பாரதி... said... | January 10, 2011 at 2:10 PM

// ULIP திட்டத்தில் நாம் சேர்ந்தப்பின் 45 நாட்களுக்குள் நாம் சேர்ந்த திட்டம் பிடிக்கவில்லை என்றால் விலகிவிடலாம்.//
புது தகவல் இது.

பதிவுலகில் பாபு said... | January 10, 2011 at 2:43 PM

ரொம்ப நல்ல பதிவுங்க..

மதுரை பாண்டி said... | January 10, 2011 at 3:16 PM

Thanks for the suggestion. I have done that for tax exception for this year and submitted the docs to my company for income tax calculation... If i withdraw the policy, It will be look like cheating to the IT.

Arvind said... | February 10, 2013 at 3:01 PM

Informative

ATOZ FOREX DETAILS said... | August 6, 2013 at 4:22 PM

முறையான தொடர் பயிற்சி தேவை
அன்பான நண்பர்களே, எந்த ஒரு துறையிலும் நாம் கால் பதிப்பதற்கு முன்னால், அந்த துறையைப் பற்றிய முன் அனுபவம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு டிரேடிங் கம்பெனி ( trading company ) யும் டெமோ ( demo ) அக்கௌன்ட் இலவசமாக தருகிறார்கள். அந்நிய நாடுகளில் இலவசமாக தர வேண்டும் என்பது கட்டாய சட்ட மாகவே உள்ளது.

எனவே உங்கள் பணத்தினை எந்த ஒரு மார்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன்னால், முறையான பயிற்சி அவசியம். எதற்கு நான் சொல்கிறேன் என்றால், மார்கெட்டில் லாபம் வரும்போது வரும் மகிழ்ச்சியின் மன நிலையை விட , நஷ்டம் வரும் போது வரும் மன நிலையின் வலி மிக மிக மிக ...அதிகம் . அதற்காக பயப்பட வேண்டாம். முறையான டெமோ நமக்கு ஓரளவு பயிற்சியை தரும்.