பிரபல மாயாஜால ஜாம்பவான் சாய்பாபா மரணம்

Sunday, April 24, 2011


நேற்று   DGS தினகரன் இன்று புட்டபர்த்தி சாய்பாபா நாளை...............?
************************************************************


அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதாகச் சொல்வது அறியாமையே. "தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார்" அதனால் மக்கள் அவரை கடவுளாக வழிபடுகிறார்களாம். கிண்டலுக்காக இல்லை.... பட்டினியால் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற தானியங்களை வரவழைத்து தந்து இருக்கலாம். எத்தனையோ மக்கள் பசியாறி இருப்பார்கள். லிங்கம், மோதிரம், கடிகாரம் போன்றவை பசியை தீர்த்து விடுமா என்ன..! இதை எத்தனையோ தந்திர வித்தை தெரிந்தவர்கள் செய்து காட்டியுள்ளார்களே...! தாஜமஹாலை பெருந்திரளான மக்கள் பார்த்திருக்கும்போதே மறையவைத்தும், அந்தரந்தத்தில் மனிதனை மிதக்க வைத்தும், உடலை வெட்டி பிறகு ஓட்டவைததுமான எத்தனையோ ஆச்சரியங்களை தந்திர வித்தகர்கள் செய்து காட்டியுள்ளார்கள். அப்படித்தான் இவர் அந்தரத்தில் வரவழித்ததாக சொல்வது. இவருக்கு மட்டும் கடவுள் அந்தஸ்தத்து எப்படி கொடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. டாக்டர் கோவூர் என்பவர் கடவுள் சக்தியை நிரூபித்துக் காட்டினால் ஒரு கோடி ரூபாய் தருவதாக சவால் விட்டார்,  அதற்கு தனது மௌனத்தை மட்டுமே பதிலாகத்தந்தார். ஆனால் கண்மூடித்தனமாக நம்புவர்களுக்கு மட்டும் தாம் அவதாரமாகக் காட்டிகொண்டார். "நான் 96 வயதில் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று சொன்னவர் 86 வயதிலேயே இறந்து விட்டார். ஒருவேளை 96 வயதிற்கு மேல் வாழ்ந்து, சுய நினைவில் இருந்திருந்தால் இவரே தானாகவே தனது உயிரை முடித்துக்கொண்டு இருப்பார்... தான் சொன்னது போலவே நடந்து விட்டது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக. இவரும் மற்றவர்களைப்போல, சதையும் எழும்பும் கொண்ட ஒரு உயிர். பிறப்பையும், இறப்பையும் நாம் முடிவு செய்வதல்ல. ஆனால் தான் அவதாரம் என்று மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இறப்பு ஆண்டை சொல்லி உள்ளார். இயற்கை இவரை முந்திக்கொண்டது. அவ்வளவே. உண்மையிலேயே இவருக்கு அற்புத சக்தி இருந்து இருக்குமேயானால் எதற்க்காக இவ்வளவு பெரிய மருத்துவமனைகள் அமைத்துள்ளார். கடைசியில் இவருக்கும் மருத்துவர்கள்தான் மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தது. இவரது இறப்பு கூட சாதரணமாக இருக்கவில்லை. கல்லீரல் கெட்டு, சிறு நீரகம் செயலிழந்து, இதயத் துடிப்பு நின்று, நினைவிழந்து - இப்படி சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஏற்ப்படுகிற  அவஸ்தைக்குப் பிறகு இறந்துள்ளார். ஒரு மனிதர் இறந்துள்ளார். அது இயற்க்கை.  சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அவரை வைத்து பலர் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்.- ராமராசு


19 comments:

Bala said... | April 24, 2011 at 2:02 PM

Excellent.

He is just a magician.

செங்கோவி said... | April 24, 2011 at 2:11 PM

மீண்டு(ம்) வந்த தொப்பிக்கு நல்வரவு...மேஜிக் மென் பற்றிய பதிவு கலக்கல்!

விக்கி உலகம் said... | April 24, 2011 at 2:21 PM

உண்மைதான் நண்பா!

புரட்சிக்காரன் said... | April 24, 2011 at 3:17 PM

visit please :
http://puratchikkaaran.blogspot.com/2011/04/blog-post_21.html

MANO நாஞ்சில் மனோ said... | April 24, 2011 at 3:52 PM

// பட்டினியால் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற தானியங்களை வரவழைத்து தந்து இருக்கலாம். எத்தனையோ மக்கள் பசியாறி இருப்பார்கள்.//

சூப்பர் பன்ச்....

கக்கு - மாணிக்கம் said... | April 24, 2011 at 4:09 PM

சரி, என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம்?

சி.பி.செந்தில்குமார் said... | April 24, 2011 at 4:55 PM

கரெக்ட் தான்.. அவர் மகானா இருந்தா ஏன் இப்படி நோய்வாய்ப்பட்டு இறக்கனும்?

சி.பி.செந்தில்குமார் said... | April 24, 2011 at 4:56 PM

எனக்கு இன்னொரு வருத்தமும் உண்டு.. இன்னும் ஒரு மைனசஸ் ஓட்டு கூட வாங்கலை.. புகழ் குறைஞ்சிடுச்சா? கவனிக்கவும். ஹி ஹி

yanan.wordpress.com said... | April 24, 2011 at 5:19 PM

இதையும் படிங்க...

http://yananwritings.wordpress.com/2010/10/04/guru/

guna said... | April 25, 2011 at 6:03 AM

bad words

பார்வைகள் said... | April 25, 2011 at 7:14 AM

நல்ல பதிவு. (பகுத்தறிவான)வாழ்த்துகள். பொதுபுத்தி இல்லாதவன்தான் பக்தன்.
நன்றி.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

Nalliah said... | April 25, 2011 at 9:12 AM

கடவுளின் அவதாரம் என்று தன்னை மக்களை ஏமாற்றிய சாய்பாபா தன்னை தானே காத்துக்கொள்ள முடியாத , மூச்சு விடுவதற்கே நவீன மருத்துவ சாதனங்களை நம்பியிருக்க வேண்டிய, முடிவில் மரணமாகி போகின்ற சாதாரண மனிதன் தான் என்பதனை சாய்பாபாவின் மரணம் தெளிவாக்கியிருக்கிறது. கடவுளின் அவதாரம் என்று லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய சாய்பாபாவுக்கு தனது மரணத்தில் இருந்து தப்ப முடியவில்லை. மரணத்தை ஏமாற்றவும் முடியவில்லை

அருள் said... | April 25, 2011 at 11:46 AM

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

hesed david said... | April 25, 2011 at 6:07 PM

sir, u r doing great job, but Mr. DGS Dinagaran is not bad, but their son Paul dinagaran is the culprit the who change the organization into a company, sorry to say in english

Anonymous said... | April 28, 2011 at 3:26 AM

பால் தினகரன், பாபா, பிரேமானந்தா என இந்தியாவில் தானுங்க இப்படி கொள்ளைக் கார சாமிங்க.. கேட்கிறவன் கேணைய இருந்தா கேப்பையிலும் நெய் வடியுமுன்னு சொல்லுவாங்க.. என்னப் பண்ண நம்ம நாட்டில முக்கால் வாசிப் பேருக்கு மேல கேணையா இருக்காங்க.. கால்வாசிப் பேர் நம்மை கேணையாக்கிட்டு இருக்காங்க............

பெயரில்லா said... | April 30, 2011 at 6:30 PM

கூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது

அந்த பெண் பெயர் வலைத்தளம்

http://avanidamnaan.blogspot.com/

தனி காட்டு ராஜா said... | May 3, 2011 at 3:09 PM

Your Post is stolen
http://inthiya.in/ta/?p=6657

பலே பிரபு said... | May 6, 2011 at 9:33 AM

மற்றவர்கள் மாட்டினார்கள் இவர் மாட்டவில்லை அவ்வளவுதான்.
இன்னும் இவர்களை நம்புவது வெட்கக்கேடு.

செங்கோவி said... | May 11, 2011 at 1:53 AM

உங்க மின்னஞ்சல் கிடைக்குமா..எனது:sengoviblog@gmail.com