ரஜினி ஜாதகம் ஒரு நகைச்சுவை அலசல்

Friday, June 3, 2011
ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இந்த பதிவில் ரஜினியின் ஜாதகத்தை கணித்து அவரைப்பற்றிய பல  ரகசியங்களை வெளியிட்டு உள்ளேன். இந்த பதிவை படித்து அவருடைய ரசிகர்கள்  யாரும் கடுப்பாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

http://2.bp.blogspot.com/-8-uevZihfbk/TeEpsW5loFI/AAAAAAAAGHw/rBEXj1Wx7ss/s1600/rajini-hospital1-300x300.jpg

ரஜினி ஜாதகம்;

தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

►இந்த ஜாதகத்துக்கு உரியவர் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில்  பிறந்தவர் என்பதால்  சிறந்த நடிகராக  வந்திருப்பார்.

►இரவு பதினொரு மணிக்கு பிறந்தவர் என்பதால் இரண்டு பெண்குழந்தைகள் உண்டு.

►முதல் பெண்குழந்தை நடிகரையே திருமணம் செய்துகொள்வார் என்று ஜாதகம் சொல்கிறது.

► எட்டாம் வீட்டில் சனி இருப்பதால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பார், பக்கத்து வீட்டில் செவ்வாய் இருப்பதால் புகைப்பழக்கம் உண்டு. 

பழைய ஓலைச்சுவடி பாட்டு:

ஒமாக சீயா ஓமாக சீயா
நாக்கு மூக்க நாக்கா ஓ சக்கலாக்க
ஓ ரண்டாக்கா.......
டைலமோ டைலமோ பல்லேலக்கா.........

கி.பி. 1400 ஆம் ஆண்டு சாமியாடி சித்தர் எழுதிய இந்த ஓலைச்சுவடி பாடல் என்ன சொல்கிறது என்றால்.....

►ரஜினியின் ஜாதகத்தில் குறு உச்சம் பெற்று இருப்பதால் இந்நேரம் வெளிநாடுகளில் இருப்பார். 

►இவருடைய மனைவியின் பெயர் எல் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து ஏ என்ற ஆங்கில எழுத்தில் முடியும்.

►இவருக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

►இவருக்கு எழுபது வயது முடிவதற்குள் இவருடைய இரண்டு  மகளுக்கும் திருமணம் முடிந்திருக்கும்.


அரசியலுக்கு வருவாரா:                                                                                 


இவருடைய ஜாதகத்தில்  சனியும், புதனும் எதிர் எதிர் வீட்டின் ஜன்னல் வழியாக சந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜாதகத்தை கொண்டிருப்பவர்கள் அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் அரசியலுக்கு வருவார். ஆக ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அடித்து சொல்லலாம். அரசியல் கட்சி தொடங்கிய பின்பும் அரசியலுக்கு  வரவில்லை என்றால் நான் ஜோசியம் பார்ப்பதையே நிறுத்தி விடுகிறேன்.


ரானா படம் வெளியாகுமா?                                                                         

லக்கினத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால்,  படப்பிடிப்பு நூறுசதவிதம் முடியும்போது நிச்சயம் படம் வெளியாகும். 

உடல் நிலை, ஆயுள்:                                                                                        

► ஜாதகத்தில் கேது சாதுவாக இருப்பதால் இந்த ஜாதகத்துக்கு உரியவர் சேது போல் காணப்படுவார்.

►சுக்கிரனும், சந்திரனும் போன மாதமே சந்தித்து பேசிவிட்டார்கள் என்பதால் இப்போது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்.

►எட்டாம் கட்டத்தில் சனியும் பக்கத்து கட்டத்தில் குருவும் இருப்பதால் தலையில் முடி கொட்டிக்கொண்டே இருக்கும். ஏன் என்றால் குறு என்பவர் சூரியன். சூடு தாங்காமல் முடி கொட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.  இந்த ஜாதகத்துக்கு உரியவர் வழுக்கைத்தலையுடன்  காணப்படுவார்.  முடி கொட்டுவதை தடுக்கவேண்டும் என்றால் குருவையும் சனியையும் சற்று தள்ளி வைக்கவேண்டும்.

ஆயுள்: 2040 ஆம் ஆண்டை கடந்துவிட்டால் தொண்ணூறு வயது வரை உயிரோடு இருப்பார்.

உடல் நலம் சுகம் பெற என்ன செய்யவேண்டும்:                              

http://3.bp.blogspot.com/-5o19O1vSySM/TdTuVBj7GrI/AAAAAAAACAM/NcmfL2O5jFc/s1600/rajini2.bmp 


 செவ்வாயும், புதனும் வீக்காக இருப்பதால் அருகில் உள்ள  ரிலைன்ஸ் அல்லது ஏர்டெல் ஷோரூம்களுக்கு சென்று  செவ்வாயையும், புதனையும்  ஆக்டிவேட் செய்துக்கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து மூன்ற சனிக்கிழமை ஏர்செல் ஷோரூமை சுற்றிவர வேண்டும். 

பரிகாரம்: டோக்கொமோ ஷோரூம் படிக்கட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.   

 

25 comments:

ஜீ... said... | June 3, 2011 at 2:41 PM

//ரானா படம் வெளியாகுமா?

லக்கினத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால் படப்பிடிப்பு நூருசதவிகிதம் முடிவடைந்தால் நிச்சயம் படம் வெளியாகும்.//

பார்ரா! இன்னொரு கொலம்பஸ்ஸூ!! :-)

ஜீ... said... | June 3, 2011 at 2:44 PM

ஏன் பாஸ்? ஏன்? எதுக்கு??

!* வேடந்தாங்கல் - கருன் *! said... | June 3, 2011 at 2:58 PM

அட ,, ஏதோ சொல்லப்போறார் ன்னு வந்தா?

♔ℜockzs ℜajesℌ♔™ said... | June 3, 2011 at 3:03 PM

மச்சி , any problem? if u dont mind அப்படியே என்னோட ஜாதகத்தையும் கணிச்சு குடுக்க முடியுமா? ப்ளீஸ் . .

Speed Master said... | June 3, 2011 at 3:13 PM

எங்கெங்க போனீங்க ஆளவே காணோம்

அடிக்கடி பதிவிடுங்கள்


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

Speed Master said... | June 3, 2011 at 3:13 PM

நலமா

விக்கி உலகம் said... | June 3, 2011 at 3:15 PM

மாப்ள நீயும் பாதிக்கப்பட்டு இருக்க போல ஹிஹி!

விக்கி உலகம் said... | June 3, 2011 at 3:34 PM

"ஆர்.கே.சதீஷ்குமார் said...

மாப்ள நீயும் பாதிக்கப்பட்டு இருக்க போல ஹிஹி//
உங்க வயெத்தெரிச்சலும் தெரிகிறது விக்கி!! மிக்க நன்றி!!"

>>>>>>>>>>>

அண்ணே இப்போ உங்க பிரச்சன என்ன.........இதுல என்ன வயிற்தேரிச்சல்னு புரியல...........இப்போ நீங்க ஹிட்ஸ் வாங்கி பென்ஸ் கார்ல போறத பாத்து நான் வவுறு எரியிரனா சொல்லுங்க!

விக்கி உலகம் said... | June 3, 2011 at 3:35 PM

இப்போ பைசல் பண்ணிப்புடுவோம் இந்த பிரச்சனைய....யோவ் வெளிய வாய்யா மாப்ள!

# கவிதை வீதி # சௌந்தர் said... | June 3, 2011 at 4:07 PM

தங்களின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சல்யூட்...


வெகு நாட்களுக்கு பிறகு ஏதோ பரபரப்புடன் வந்துள்ளீர் என்று நினைத்து வந்தேன்..

வித்தியாசமான பதிவு...

சென்னை பித்தன் said... | June 3, 2011 at 4:31 PM

பரிகாரம் செய்யும்போது இரண்டு தொப்பி(தொப்பி,தொப்பி!) அணிய வேண்டும்!

Philosophy Prabhakaran said... | June 3, 2011 at 6:11 PM

// ஜாதகத்தில் கேது சாதுவாக இருப்பதால் இந்த ஜாதகத்துக்கு உரியவர் சேது போல் காணப்படுவார் //

அட்ரா அட்ரா நாக்கமுக்க...

சார்வாகன் said... | June 3, 2011 at 7:15 PM

அருமை

bandhu said... | June 3, 2011 at 10:33 PM

நல்ல நகைச்சுவை!

Avargal Unmaigal said... | June 4, 2011 at 8:19 AM

நல்ல நகைச்சுவை. ரஜினியின் பழைய நண்பர் கலைஞரின் ஜாதகத்தையும் இது போல கணிச்சால் மிகவும் நன்றாக இருக்கும்.

WorldEntertainer said... | June 4, 2011 at 11:37 AM

ean ippadi

R.Puratchimani said... | June 4, 2011 at 6:25 PM

Super...I enjoyed it

சி.பி.செந்தில்குமார் said... | June 6, 2011 at 12:05 PM

haa ஹா ஹா செம காமெடி.. ஆனா இது எங்க அண்ணன் சித்தோடு சிங்கத்தை தாக்கற மாதிரி இருக்கே?

sasibanuu said... | June 6, 2011 at 3:40 PM

Attagasam... "Savukku Adi" for who is using analyzing VIP's Jasagam (horoscope)... Nice

Shaj said... | June 6, 2011 at 11:03 PM

உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரி இல்லனா இது மாதிரி ஜாதகம் பார்த்து கமன்ட் அடிபீங்களா.. மனசாட்சி இல்லாத பதர்கள், அதுக்கு ஜால்ரா தட்ட
ஒரு கூட்டம்..

THOPPITHOPPI said... | June 6, 2011 at 11:09 PM

//உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரி இல்லனா இது மாதிரி ஜாதகம் பார்த்து கமன்ட் அடிபீங்களா.. மனசாட்சி இல்லாத பதர்கள், அதுக்கு ஜால்ரா தட்ட
ஒரு கூட்டம்.. //


நெஞ்ச நக்கிட்டிங்க

♥♪•வெற்றி - VETRI•♪♥ said... | June 7, 2011 at 9:18 PM

//உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரி இல்லனா இது மாதிரி ஜாதகம் பார்த்து கமன்ட் அடிபீங்களா.. மனசாட்சி இல்லாத பதர்கள், அதுக்கு ஜால்ரா தட்ட
ஒரு கூட்டம்.. //

இவ்வளவு பச்ச புள்ளையா இருங்கீங்க :-)

செங்கோவி said... | June 10, 2011 at 10:01 AM

செம நக்கலு..பின்னி பெடல் எடுத்திட்டீங்க.

Mk said... | June 27, 2013 at 8:22 AM

எல்லாம் சொன்ன நீங்க எப்படி காமெடி பண்ண ரஜினி ரசிகர்கள் உங்களை என்ன பண்ணுவாங்கனு கண்ணிசின்களா ......பத்து பாஸ்
நீங்க விளையாடுவது மலை கிட்ட இல்ல இமயமலை கிட்ட

Mk said... | June 27, 2013 at 8:22 AM

எல்லாம் சொன்ன நீங்க எப்படி காமெடி பண்ண ரஜினி ரசிகர்கள் உங்களை என்ன பண்ணுவாங்கனு கண்ணிசின்களா ......பத்து பாஸ்
நீங்க விளையாடுவது மலை கிட்ட இல்ல இமயமலை கிட்ட