கலைஞர் டிவியின் மேல் ஏன் இன்னும் வழக்கு தொடரவில்லை?

Monday, July 11, 2011
"சொல்லுங்கள் வெல்லுங்கள்" என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் பல அப்பாவி மக்கள் பணம் ஏமாற்றிப்பிடுங்கப்பட்டு வருவதை ஏன் தமிழக வழக்கறிஞர்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதை பார்க்கும்போது தமிழக மக்கள் மேல் வழக்கறிஞர்களுக்கு அக்கறையே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே லாட்டரி சீட்டு முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி நூதன முறையில் மக்கள் பணத்தை ஏமாற்றி பிடுங்கும் இந்த நிகழ்ச்சியை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://www.surrey.police.uk/images/gallery/Theft%20and%20handling/Pickpocket%20%5BiStock_2164432%5D.jpg நிகழ்ச்சி பற்றிய தகவல்: நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்த கேள்விதான் கேட்கப்படும். உ.த: 1. சிவாஜி படத்தின் இயக்குனர் யார்? A.கமல் B.பாரதிராஜா C.ஷங்கர் D.ரஜினி இவர்களின் நோக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பதில் தொரிந்திருக்கவேண்டும். தெரியவில்லை என்றாலும் இவர்களே மறைமுகமாக பதிலை சொல்லிவிடுவார்கள். ஒவ்வொருகேள்விக்கும் இடையே நேயர்கள் தொடர்புகொண்டு பேச, பதில் சொல்ல நிறைய இடைவேளை எடுத்துக்கொள்ள அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பெண்கள் பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டுவதுண்டு. நிகழ்ச்சிக்கு அழைப்பு கட்டணம். ஒரு நிமிடத்துக்கு பத்து ரூபாய்(10). நிச்சயம் ஒருவன் தொடர்பு கொண்டான் என்றால் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்(RS.50). ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் தொடர்புகொன்டாலும் இதே காத்திருப்பு நேரம் பொருந்தும். காத்திருப்பு நேரத்திற்கும் அழைப்பு கட்டணம் பொருந்தும். ஒருலட்சம் மக்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் ரூபாய் நிறுவனத்துக்கு செல்கிறது(100000*50=5000000). பரிசு தொகை இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே(25000). யாராவது ஒருவருக்கு தொடர்பு(லைன்) கிடைத்தாலும் பெரும்பாலும் தவறான பதிலைத்தான் கூறிவிட்டு செல்கிறான், இது இன்னும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை தொலைபேசியில் பேச தூண்டுவதற்காக(முட்டாப்பைய இந்த கேள்விக்கு கூட தப்பா பதில் சொல்றான் பாரு எடுடா போன நான் பதில் சொல்றேன்). இப்படி சுலபமான(மொக்கையான) கேள்விக்கு கூட தவறான பதிலை ஒருவன் கூறிவிட்டு செல்கிறான் என்றால் ஏன் பேசியவன் இவர்கள் ஆளாக இருக்க கூடாது? நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புதான் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது ? முழுக்க முழுக்க மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை(420). தமிழக வழக்கறிஞர்களே பதில் சொல்லுங்கள்?

29 comments:

எஸ்.பி.ஜெ.கேதரன் said... | July 11, 2011 at 11:26 PM

சொல்வதைப்பார்க்கும்போது கருத்து சரியாகத்தான் தெரிகிறது.ஆனால்... உண்மையான விடயம்- நான் கலைஞர் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. காரணம்-அந்தப்பெயரே எனக்கு பிடிப்பதில்லை.
நிகழ்ச்சியை பார்த்தால்தான் இனி, வேறு விளக்கமான பதில் சொல்லமுடியும்.

கந்தசாமி. said... | July 11, 2011 at 11:31 PM

நல்ல கேள்வி ...

தமிழ்வாசி - Prakash said... | July 12, 2011 at 12:17 AM

அதானே, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

செங்கோவி said... | July 12, 2011 at 12:41 AM

என்ன நிகழ்ச்சி அது? என்ன செய்றாங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லக்கூடாதா?

ஏன் தொப்பி, திடீர்னு இது நியாயமான்னா எங்களுக்கு என்ன புரியுது..

நிரூபன் said... | July 12, 2011 at 3:06 AM

காத்திரமான கேள்வியினை முன் வைத்திருக்கிறீங்க சகோ.

வக்கீல் சங்கத்தினை உங்களின் பதிவு எட்ட வேண்டும் என்பது தான் என் ஆசையும்.


மக்களை ஏமாற்றும் கூட்டத்தினருக்குத் தகுந்த பாடம் புகட்டி, இந்த நிகழ்ச்சியினைப் புறக்கணிப்பதற்குரிய நடவடிக்கையினை மக்கள் நலன் சார் அமைப்புக்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said... | July 12, 2011 at 7:21 AM

திரியை பற்ற வெச்சாச்சு இல்ல. ஹா ஹா

விக்கியுலகம் said... | July 12, 2011 at 8:40 AM

ஒருவேளை டிவி மூடுரத்துக்குள்ள அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிக்கராங்களோ என்னவோ!

கோவை நேரம் said... | July 12, 2011 at 8:56 AM

http://kovaineram.blogspot.com/2011/03/blog-post_2978.html
இதே மாதிரித்தான் ராஜ் டிவி யும் செய்கிறது .நாம்தான் விலகி போகணும் http://kovaineram.blogspot.com/2011/03/blog-post_23.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said... | July 12, 2011 at 9:27 AM

ada ippadiyellaam emaaththuvaangalaa?

THOPPITHOPPI said... | July 12, 2011 at 10:04 AM

@ கோவை நேரம்

//இதே மாதிரித்தான் ராஜ் டிவி யும் செய்கிறது .நாம்தான் விலகி போகணும்//

இதுப்போன்ற கொள்ளைகளை கண்டு நாம் விலகித்தான் போகவேண்டும் என்றால் எதற்கு நீதிமன்றம், காவல்துறை, வழக்கறிஞர் சங்கம்?

பாலா said... | July 12, 2011 at 10:07 AM

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ஊத்தி மூடப்படும். ஏனென்றால் வழக்கு தொடர்ந்தாலும், நாங்கள் விதிமுறைகளை ஏற்கனவே சொல்லி விட்டோமே என்று தப்பித்து விடுவார்கள்.

...αηαη∂.... said... | July 12, 2011 at 12:23 PM

கலைஞர் டீ.வி என்று இல்லை எல்லா டி.வீயிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் போட்டு மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள்...

தங்கம்பழனி said... | July 12, 2011 at 5:04 PM

ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படின், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தானாகவே அழிந்துவிடும்..ஆனால் முடியுமா?

பகிர்வுக்கு நன்றி..!

பலே பிரபு said... | July 12, 2011 at 6:20 PM

நண்பரே இது நேரடி ஒளிபரப்பு இல்லை. .... நாய்கள் ஏற்கனவே பதிவு செய்து ஓட்டுகிறார்கள். இது போல ராஜ் டிவியில் "சினிமா தெரியுமா?" நிகழ்ச்சி

Accountants Association said... | July 12, 2011 at 6:46 PM

You have put great news here, but there was an other channel doing this in tamil that is great "RAJ TV". better they can do the prostitute business instead, they cheat innocent people.

RAJ TV is the biggest cheater than Kalignar TV

goma said... | July 12, 2011 at 6:51 PM

raj tv யையும் இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பக்கம் ஜோதிகா ஒரு பக்கம் சூர்யா என்று போட்டு வறுத்தெடுக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டாமா

srinivasan said... | July 13, 2011 at 6:13 PM

appadiye intha koilkalil adikkum kollaiyai patriyum konjam sollungalen,
kurippaka parikara thalangalil.

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... | July 15, 2011 at 8:21 PM

சகோ.தொப்பி தொப்பி,

முன்பு எண்பதுகளின் இறுதியில், ஏதேனும் சஞ்சிகைகளில்
போட்டியில் கலந்து கொள்ளும் அஞ்சல் அட்டைக்கு மட்டும் அநியாயமாய் பல மடங்கு விலை ஏற்றியபோதே நான் உஷாராகிட்டேன். அப்போது முதல், எந்த போட்டியிலும் கலந்து கொள்வதில்லை.

இப்போது, அந்த அஞ்சல் அட்டை இடத்தை தொலைபேசி, sms இவை கைப்பற்றி இருக்கின்றன.

///இதுப்போன்ற கொள்ளைகளை கண்டு நாம் விலகித்தான் போகவேண்டும் என்றால் எதற்கு நீதிமன்றம், காவல்துறை, வழக்கறிஞர் சங்கம்?///

---நம்மிடம் இருந்து பணம் பறிக்கும் அடுத்த கூட்டம் இவர்கள்..!

இவர்களுக்கு அந்த மீடியா காரர்களே மேல்..!

நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ. தொப்பி தொப்பி.

மிக்க நன்றி.

ஆமினா said... | July 17, 2011 at 9:12 AM

நலமா அண்ணா?

நீங்க கலைஞர் டீவி,ராஜ் டீவி மட்டும் தான் பாப்பீங்க போல...

பெரும்பாலான சேனல்களில் இந்த மோசடி இரவு நேரத்தில் நடந்தேறிதான் வருகிறது. உடல் மண்ணுக்கு உயிர் கமலுக்கு என்றும், சூப்பர் ஸ்டார்க்கு முடியலன்னா உயிர கூட விட துணியும் தமிழனுக்கு கமலும்,ரஜினியும் உள்ள படத்தை கண்டிபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இவனுங்களா தில்லுமுல்லு செஞ்சு பணத்த பறிக்கிறானுங்க. ஒரு நிமிஷத்துக்கு 10 ரூபாய் எடுப்போம். லைனில் இருக்கும் போது பிஸி டோன் வந்தாலும் நீங்க வெயிட் பண்ணுங்க. உங்களூக்கு லைன் கிடைக்கும். வெயிட் பண்ணாலும் 10 ரூபாய் எடுப்போம்னு எந்த தைரியத்தில் சொல்றானுங்களோ தெரியல. முட்டாள் மக்களும் முட்டாளாகி கொண்டு தான் இருக்காங்க.

உங்க ஸ்டைலில் இன்னும் விரிவா கிழிச்சுருக்கலாம்...

நல்ல பதிவு...!!! வாழ்த்துக்கள்

ரிஷி said... | July 25, 2011 at 12:41 PM

கலைஞர் டிவி மட்டுமல்ல, ராஜ் மற்றும் SS மியூசிக்கிலும் இந்த 420 நிகழ்ச்சி உண்டு. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். அவர்களும் இதை நீண்ட நாள் நோக்கில் நடத்த மாட்டார்கள். இது 420 என்று தெரிந்து மக்கள் விலக ஆரம்பித்தவுடன் இதை நிறுத்தி விடுவார்கள். கிடைச்சவரை இலாபம்!!

பொல்லாத உலகத்திலே, பொல்லாங்கு பேசும் மனிதரிடையே நாம்தான் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

thalir said... | July 30, 2011 at 5:09 PM

இப்படித்தான் எல்லா சேனல்காரபயலுவலும் ஏமாத்தறானுங்க! சங்கை ஊதிட்டீங்க! ஆகறது ஆகட்டும்!

Naran said... | August 1, 2011 at 11:40 AM

போடா லூசு

Naran said... | August 1, 2011 at 11:41 AM

சாதி வெறி பிடிச்ச லூசுடா நீ!!

கூழாங் கற்கள் said... | August 6, 2011 at 10:15 AM

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

Prabu Krishna said... | November 24, 2011 at 12:34 PM

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

Boobala Arun Kumaran said... | December 21, 2011 at 5:34 PM

என்ன தொப்பி தொப்பி அவர்களே,

நீங்கள் பதிவு எழுதியே பல நாட்கள் ஆகிவிட்டதே.

உங்களின் எழுத்தை வரவேற்கும் என்னை போன்ற சிலருக்காகவாவது எழுதுங்கள்...

mohandivya said... | January 9, 2012 at 11:13 AM

super thala

ஆமினா said... | March 5, 2012 at 7:14 PM

அண்ணா

ரொம்ப நாளாவே உங்க பதிவை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறேன்

நீங்கள் பதிவுலகை விட்டு ஒதுங்கியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது

தயவு செய்து மீண்டும் வாங்க. உங்களை போல் எதிர்த்து கேள்வி கேட்க கூடிய எந்நாளும் நடுநிலையுடன் நடந்துக்கொள்பவர்கள் இல்லாது போவது பெரிய இழப்பு :'(

மீண்டும் வாங்க அண்ணா

உங்கள் தங்கை மற்றும் ரசிகை
ஆமினா முஹம்மத்

Anonymous said... | December 5, 2014 at 7:04 AM

Use remote and your brain to avoid nonsence

Seshan