கலைஞர் டிவியின் மேல் ஏன் இன்னும் வழக்கு தொடரவில்லை?

Monday, July 11, 2011
"சொல்லுங்கள் வெல்லுங்கள்" என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் பல அப்பாவி மக்கள் பணம் ஏமாற்றிப்பிடுங்கப்பட்டு வருவதை ஏன் தமிழக வழக்கறிஞர்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதை பார்க்கும்போது தமிழக மக்கள் மேல் வழக்கறிஞர்களுக்கு அக்கறையே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே லாட்டரி சீட்டு முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி நூதன முறையில் மக்கள் பணத்தை ஏமாற்றி பிடுங்கும் இந்த நிகழ்ச்சியை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://www.surrey.police.uk/images/gallery/Theft%20and%20handling/Pickpocket%20%5BiStock_2164432%5D.jpg நிகழ்ச்சி பற்றிய தகவல்: நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்த கேள்விதான் கேட்கப்படும். உ.த: 1. சிவாஜி படத்தின் இயக்குனர் யார்? A.கமல் B.பாரதிராஜா C.ஷங்கர் D.ரஜினி இவர்களின் நோக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பதில் தொரிந்திருக்கவேண்டும். தெரியவில்லை என்றாலும் இவர்களே மறைமுகமாக பதிலை சொல்லிவிடுவார்கள். ஒவ்வொருகேள்விக்கும் இடையே நேயர்கள் தொடர்புகொண்டு பேச, பதில் சொல்ல நிறைய இடைவேளை எடுத்துக்கொள்ள அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பெண்கள் பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டுவதுண்டு. நிகழ்ச்சிக்கு அழைப்பு கட்டணம். ஒரு நிமிடத்துக்கு பத்து ரூபாய்(10). நிச்சயம் ஒருவன் தொடர்பு கொண்டான் என்றால் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்(RS.50). ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் தொடர்புகொன்டாலும் இதே காத்திருப்பு நேரம் பொருந்தும். காத்திருப்பு நேரத்திற்கும் அழைப்பு கட்டணம் பொருந்தும். ஒருலட்சம் மக்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் ரூபாய் நிறுவனத்துக்கு செல்கிறது(100000*50=5000000). பரிசு தொகை இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே(25000). யாராவது ஒருவருக்கு தொடர்பு(லைன்) கிடைத்தாலும் பெரும்பாலும் தவறான பதிலைத்தான் கூறிவிட்டு செல்கிறான், இது இன்னும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை தொலைபேசியில் பேச தூண்டுவதற்காக(முட்டாப்பைய இந்த கேள்விக்கு கூட தப்பா பதில் சொல்றான் பாரு எடுடா போன நான் பதில் சொல்றேன்). இப்படி சுலபமான(மொக்கையான) கேள்விக்கு கூட தவறான பதிலை ஒருவன் கூறிவிட்டு செல்கிறான் என்றால் ஏன் பேசியவன் இவர்கள் ஆளாக இருக்க கூடாது? நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புதான் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது ? முழுக்க முழுக்க மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை(420). தமிழக வழக்கறிஞர்களே பதில் சொல்லுங்கள்?