சினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்

Thursday, December 4, 2014C2H is HIRING DEALERS !!!!!!

interested candidates can contact @+919715522222 / 9715533333
Salary: 2,25,000 - 3,00,000 P.A
Industry:Media / Entertainment / DVD
Functional Area:Sales , Retail , Business Development
Role Category:Retail Sales
Role:Sales Executive/Officer


பேருந்தில் பயணம் செய்யும்போது பல முறை இப்படி ஒரு விளம்பரம்  பார்த்ததுண்டு மாதம் இருபதாயிரம் ரூபாய் வருமானம் கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு என்று. ஏமாற்றும்  நிறுவணுங்கள் எத்துனை முறை மக்களை ஏமாற்றினாலும் அரசாங்கமும் வேடிக்கைபார்த்து கொண்டுதான் இருக்கிறது, அவர்களும் புதிது புதிதாக நிறுவனங்களை தொடங்கி ஏமாற்றிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

அதே போல் தான் சமீபத்தில் நான் பார்த்த ஒரு விளம்பரமும்  இருந்தது மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று . ஆனால் இது ஒரு சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவராக இருக்கும் ஒருவரால் ஆரம்பிக்க பட்ட நிறுவனம் என்பதால் எனக்கு அந்த விளம்பரத்தின் மீது இருந்த கோபம் நிறுவனத்தின் மீது வரவில்லை முதலில் விசாரிப்போம் என்று நினைத்தேன். பிறகு அவர்களுடைய இணையதளம், பேஸ்புக் போன்ற இடத்திலெல்லாம் தகவல்களை தேடியபோது தான் அதிர்ச்சியாய் இருந்தது.  இவர்களுடைய வியாபார விதிமுறைகளும்  MLM போன்றே இருந்தது. அவர்களிடம் கேள்வி கேட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது எந்த பதிலும் இல்லை, இனி என் கோபத்தையும், சந்தேகத்தையும்  மக்களிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.சினிமா டூ ஹோம் நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கம் என்னோமோ  குறைந்த விலைக்கு DVD விற்பனை செய்வது என்பது தான். ஆனால் உங்களின்   டீலர்களுக்கான விதிமுறைகள் தான் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை உங்களை நீங்களே  ஏமாற்றிக்கொள்ள போகிறீர்களா இல்லை டீலர்களை ஏமாற்ற போகிறார்களா?

//Dealers will be the representatives of C2H Network PVT LTD in delivering the original HD, 5.1 DVDs to the audiences at the door steps.
They will be responsible for the sales with a target of minimum 500 such DVDs per week in their local dealership point which contains 1500-2000 (Inside Chennai) 2500-3000 (Outside Chennai) households.//

என்னமாதிரியான நிபந்தனை இது?

இரண்டாயிரம் குடும்பம் உள்ள இடத்தில் எப்படி 500 DVD  விற்க முடியும்? இரண்டாயிரம் வீடுகள் உள்ள இடத்திற்கு ஒரு டீலர் என்பது எதை வைத்து வகுத்துக்கொள்ள போறீங்க? இங்கே தனி வீடு என்பது மிக குறைவு, ஒரு DVD வாங்கி வரிசையாக பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடுகளில் பார்த்துவிடுவார்கள். பிறகு எப்படி ஒரு டீலரால் 500 DVD  சாத்தியம் ஆகும் இரண்டாயிரத்தில்?  நீங்கள் ரூ.50 க்கு DVD என்று கொடுத்தாலாவது ஒரு சில எதிர்பார்ப்புள்ள நல்ல படங்களை விற்றுவிடலாம். ஆனால் சந்தா செலுத்தி மாதம் 4 படங்கள் வாங்க வேண்டும் என்பது ஏன்? மாதம் 200 ரூபாய் சந்தாவில்  500 குடும்பம் எப்படி  சேர்க்க முடியும்?  வருடம் 2400 ரூபாய் படத்திற்காக செலவு செய்யும் அளவிற்கா தமிழக மக்களின் சினிமா மோகம் உள்ளது?

சன் டிவியும், விஜய் டிவியும் பிரம்மாண்ட படங்களையே "திரைக்கு வந்து சிலநாட்களே ஆனா"  என்று  காட்டும்போது மாதம் 200 ரூபாய் கொடுத்து சிறு முதலீட்டு  படம் பார்க்க மக்களுக்கு எப்படி தோன்றும் என்று தெரியவில்லை.  சரி உங்கள் கூற்று படியே பார்த்தல் கூட எத்துனை சிறு முதலீட்டு படங்கள் தேறி இருக்கிறது கடந்த ஒரு  வருடத்திற்கு?  மாதம் நான்கு தேறிய  படங்களை எப்படி உங்களால் கொடுக்க முடியும்?

ஜே கே எனும் நண்பன் படத்தை வெளியிட முடியாமல் போனதின் காரணத்துக்காக நீங்கள் தொடங்கிய நிறுவனமே சினிமா டூ ஹோம்.  ஆனால் இதையே கருவாக வைத்துக்கொண்டு  டிஸ்ட்றீபியுடர், டீலர்  என்று டெப்பாசிட் வசூலிப்பது, டெபாசிட் பணத்திற்கு லாக்கிங் பீரியட் வைப்பது,  மாதம் 200 ரூபாய் சந்தா,  குறைந்தது 500 DVD ,  தமிழ்நாடு முழுக்க ஒருபடம் சரியாக விற்பனையாகவில்லை என்றால் மட்டுமே DVD திரும்பபெரப்படும் என்பதெல்லாம் வியாபார தந்திரம்,  உங்கள் முதலீடுக்கு  நீங்கள் போட்டுக்கொள்ளும் கவசம், உங்களை நம்பி தொழில் தொடங்கியவனுக்கும், சந்தா செலுத்துபவனுக்கும் என்ன உத்திரவாதம்?

மாதம் 200 ரூபாய் சந்தா செலுத்தியவனுக்கு   நீங்கள் கொடுத்த படம் பிடிக்கவில்லை என்றால் அவனது பணம் திரும்ப கிடைக்குமா?  பிறகு ஏன் சந்தா முறை?  சந்தா வசூலிப்பது தான் உங்கள் முதலீடுக்கு பாதுகாப்பு என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொரு மாதமும் சந்தா வசூலிப்பதற்கு முன்பே அந்த மாதம் என்னென்ன படம் வெளியிடபோகிரீர்கள் என்று விளம்பரம் செய்துவிட்டு சந்தா வசூலை நடத்துங்கள்,  நீங்கள் வெளியிடப்போகும் 4 படங்களில் பிடித்த படத்திற்கு மட்டும் சந்தா செலுத்தினால் போதும் என்று விளம்பரம் செய்யுங்கள்.

மாதம் குறைந்தது 500 DVD என்னும் டீலர் விதிமுறையை நீக்குங்கள் இல்லை விற்பனையாகாத DVD திரும்பபெறபடும் என்று விதிமுறையை மாற்றுங்கள்.
மாதம் 25000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி  விளம்பரத்தை உடனே நிறுத்துங்கள்  இல்லை 25000 ரூபாய் வருமானத்திற்கு உத்திரவாதம் கொடுங்கள்.கலைஞர் டிவியின் மேல் ஏன் இன்னும் வழக்கு தொடரவில்லை?

Monday, July 11, 2011
"சொல்லுங்கள் வெல்லுங்கள்" என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் பல அப்பாவி மக்கள் பணம் ஏமாற்றிப்பிடுங்கப்பட்டு வருவதை ஏன் தமிழக வழக்கறிஞர்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதை பார்க்கும்போது தமிழக மக்கள் மேல் வழக்கறிஞர்களுக்கு அக்கறையே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே லாட்டரி சீட்டு முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி நூதன முறையில் மக்கள் பணத்தை ஏமாற்றி பிடுங்கும் இந்த நிகழ்ச்சியை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://www.surrey.police.uk/images/gallery/Theft%20and%20handling/Pickpocket%20%5BiStock_2164432%5D.jpg நிகழ்ச்சி பற்றிய தகவல்: நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்த கேள்விதான் கேட்கப்படும். உ.த: 1. சிவாஜி படத்தின் இயக்குனர் யார்? A.கமல் B.பாரதிராஜா C.ஷங்கர் D.ரஜினி இவர்களின் நோக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பதில் தொரிந்திருக்கவேண்டும். தெரியவில்லை என்றாலும் இவர்களே மறைமுகமாக பதிலை சொல்லிவிடுவார்கள். ஒவ்வொருகேள்விக்கும் இடையே நேயர்கள் தொடர்புகொண்டு பேச, பதில் சொல்ல நிறைய இடைவேளை எடுத்துக்கொள்ள அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பெண்கள் பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டுவதுண்டு. நிகழ்ச்சிக்கு அழைப்பு கட்டணம். ஒரு நிமிடத்துக்கு பத்து ரூபாய்(10). நிச்சயம் ஒருவன் தொடர்பு கொண்டான் என்றால் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்(RS.50). ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் தொடர்புகொன்டாலும் இதே காத்திருப்பு நேரம் பொருந்தும். காத்திருப்பு நேரத்திற்கும் அழைப்பு கட்டணம் பொருந்தும். ஒருலட்சம் மக்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் ரூபாய் நிறுவனத்துக்கு செல்கிறது(100000*50=5000000). பரிசு தொகை இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே(25000). யாராவது ஒருவருக்கு தொடர்பு(லைன்) கிடைத்தாலும் பெரும்பாலும் தவறான பதிலைத்தான் கூறிவிட்டு செல்கிறான், இது இன்னும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை தொலைபேசியில் பேச தூண்டுவதற்காக(முட்டாப்பைய இந்த கேள்விக்கு கூட தப்பா பதில் சொல்றான் பாரு எடுடா போன நான் பதில் சொல்றேன்). இப்படி சுலபமான(மொக்கையான) கேள்விக்கு கூட தவறான பதிலை ஒருவன் கூறிவிட்டு செல்கிறான் என்றால் ஏன் பேசியவன் இவர்கள் ஆளாக இருக்க கூடாது? நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புதான் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது ? முழுக்க முழுக்க மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை(420). தமிழக வழக்கறிஞர்களே பதில் சொல்லுங்கள்?

தமிழின துரோகிகளே வாரீர் மெரீனா கடற்கரைக்கு!

Tuesday, June 7, 2011
 http://4.bp.blogspot.com/-XQHmfp7wEZE/TeyUO9TsYVI/AAAAAAAABXw/dLJNKNMCk5c/s1600/Light+a+Candle+2.JPG


சிங்கத்தமிழர்களே வாரீர்!
மெரீனா கடற்கரைக்கு என்று 
நம்மை அழைக்கிறார்கள்
இனப்படுகொலையை கண்டு
நொந்து நூலானவர்கள்!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
அவர்கள் அழைத்த  நாம்தான் 
தமிழின துரோகிகள் என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
IPL ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

போட்டியிட்ட  63  இடங்களை  கூட
தோற்கடிக்க முடியாத
தமிழின துரோகிகள் 
நாம்!

காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட
இனப்படுகொலையை மறந்து
சீமானை காரணம் சொன்ன
ஈனப்பிறவிகள் 
நாம்!

இந்த பாவமண்ணில்
வாழ பிடிக்காமல்தான்
போய் சேர்ந்துவிட்டான்
முத்துக்குமரன்!

இதோ நம்மை அழைக்கிறார்கள் 
செய்த பாவத்தை கழுவ 
மெரீனா கடற்கரைக்கு!

இரத்தாறு ஓடும்... காட்டாறு ஓடும்...
என்று சொன்னவர்களெல்லாம் 
ஓடிவிட்டார்கள்
தேர்தலில் கூட நிற்க
முடியாமல்!

அங்கே மிச்சமீதி உயிரை 
கையில் பிடித்துக்கொண்டு 
நிர்கதியாய் நிற்கும்
நம் இன உறவுகளுக்கு
ஆறுதல் கூறவாவது வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

கருணாவுக்கும், கருணாநிதிக்கும் 
தமிழின துரோகி
பட்டம் கொடுத்ததெல்லாம் போதும்
வந்து சேருங்கள்
இனியும் 
தமிழின துரோகியாக வாழாமல்
மெரீனா கடற்கரைக்கு!

இனத்தவன் சாகும்போதுதான்
குரல் கொடுக்கவில்லை
போஸ்ட் மாட்டம்
செய்ய சொல்லவாவது
குரல் கொடுப்போம் வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

அக்காவுக்கு பங்க்சன்
ஆயாவுக்கு தவசம் என்று
 காரணம் சொல்லாமல் 
இதற்காகவாவது வந்து சேருவோம் 
மெரீனா கடற்கரைக்கு!