கொக்கா மக்கா 30/12/2010

Thursday, December 30, 2010


நேற்றைய பதிவில் சீமானிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு எதிர்  பின்னூட்டம் போட்ட நண்பர்களுக்கு நன்றிகள். அந்த பதிவில் நான் எந்த ஒரு இடத்திலும் ஈழத்தமிழர்களை கொள்ள இந்தியா ஆயுதம் கொடுத்து உதவிவில்லை என்றோ, இந்தியா போரில் கலந்துகொள்ளவில்லை என்றோ  குறிப்பிடவில்லை ஆனால் பலர் எனக்கு எதிர் பின்னூட்டம், பதிவு போடுகிறேன் என்று நான் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பதிவு செய்துவிட்டேன்  என்பது போல் பதிவு செய்து இருந்தனர். எதற்க்காக இப்படி? ஒருவன் உங்களுக்கு உண்மையை சொன்னால் மனம் ஏற்க்க மறுப்பது ஏன்?.  ஆனால் அதில் ஒரு ஆறுதலான விஷயம் யாருமே சீமானுக்கு ஆதரவாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதுதான், தமிழன் விரைவில் விழித்துக்கொள்வான்  சீமான். நேற்றைய பதிவில் தேசிய உணர்வோடு பின்னூட்டம் செய்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
 ----------------------------------------------------------------------------
 ஈழத்தமிழர் மீது நலன் காட்டுவதாக கூறி பலர் நம்மை ஏமாற்றி விட்டனர். நாம் அப்படி நம்பி வாக்களித்தவர்களில் ஒருவர்தான் திருமாவளவனும் இன்று அவர் எந்த கட்ச்சியுடன் என்ன செய்கிறார்?  யாராவது ஒரு தமிழனாவது அவரை துணிந்து கேள்வி கேட்க்க முடியுமா?  MP ஆவதற்கு முன் ஈழத்தமிழர்களுக்காக  அவர்  பேசிய பேச்சுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது.  நாம் ஒருமுறை தான் ஏமார்ந்துவிட்டோம் இனியும் ஏமாற வேண்டுமா? அப்படி ஏமார்ந்து விடக்கூடாது என்றுதான் நான் சீமான் பற்றிய தகவல்களை திரட்டி கேள்வி கேட்பது போல் உங்களுக்கு உண்மையை பதிவு செய்திருந்தேன், அந்த பதிவில் இருந்த இரண்டு வீடியோக்களையும் தயவு செய்து பாருங்கள்.
 ----------------------------------------------------------------------------
இந்தியா தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என பக்கம் பக்கமாக பின்னூட்டம் செய்திருந்த நண்பர்களே கடந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்? ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்தது இந்தியாவா? தமிழனா?. நாப்பதுக்கு நாப்பது என தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறசெய்தவர்கள் தானே நீங்கள்.  சரி இந்தியா ஈழத்தமிழர்களுக்கு  துரோகம் செய்தது என்றே வைத்துக்கொள்வோம் அடுத்த தேர்தலிலாவது காங்கிரஸ் கூட்டணிக்கு நாப்பதுக்கு நாப்பது என தோல்வியை கொடுத்து இருக்கலாமே? இப்போது உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை  இந்தியாவை குறை கூற?. எப்போது "முள் என் காலில் குத்திவிட்டது"   என்று சொல்லாமல்   "முள் மீது கால் வைத்து விட்டேன்" என்று சொல்லப்போரிங்க?   ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்த முதல் துரோகி தமிழ்நாட்டுத்  தமிழன்தான். உங்களுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்தியாவை குறை கூற.
 ----------------------------------------------------------------------------
அன்று ஈழத்தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கம் அதற்க்கான அங்கிகாரம் கிடைத்தபோது ஈழ நாடு என்ற  தேவை இல்லாத ஒன்றை உருவாக்கி இன்று எலவு நாடாக  மாற்றிவிட்டது.   ஈழத்தில் அமைதியை விட ஈழத்தில் போர் புரிவதே அவர்களது நோக்கமாக இருந்தது. இன்று அவர்களால் எதுவும் முடியவில்லை என்றவுடம் அவர்களது பார்வை தமிழ்நாட்டின் மேல்  உள்ளது, அவர்களுடைய அடுத்தக்குறி  தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பி விட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இன்று தமிழர்களை இந்தியாவுக்கு எதிராக மாற்றி வருகின்றனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,  விடுதலை புலிகளும் ஒரு தமிழ் இயக்கம் தானே ஏன் ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொள்ள வேண்டும்?. ராஜீவ் காந்திக்கு உளவுத்துறை எச்சரித்தும் தமிழர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் தானே தமிழகம் வந்தார்? நம்பிக்கை துரோகம் செய்தது யார்? அன்று தமிழனுக்கு ஏற்ப்பட்ட பீடை இன்றும் இந்தியாவிற்கு எதிராகவே உள்ளது. அவர்களுடைய நோக்கமே தமிழக தமிழர்களை ஈழத்தமிழர்கள் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான். ராஜீவ் காந்தியை கொள்ள அவர்களுக்கு வேறு மாநிலமே கிடைக்கவில்லையா? தமிழனுக்கு அவப்பெயர் வர வேண்டும், இந்தியர்கள் தமிழனை துரோகியாக நினைக்கவேண்டும்  என்று அவர்கள் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அரங்கேற்றியதுதான் ராஜீவ் காந்தி கொலை.  ஏன் அவர்கள் பருப்பை டெல்லியில் வேக வைக்க வேண்டியது தானே?
 ----------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் இன்று இந்த நிலைக்கு வர  இந்தியா மட்டும்தான் காரணமா? அவர்கள் இந்த நிலைக்கு வர இந்திய, சீனா, சிங்களன் 25 % காரணம் என்றால் மீதம் உள்ள 75 % விடுதலைப்புலிகள்தான். சிறுவர்களை ராணுவத்தில் சேர்த்தது யார் குற்றம்?, ஈழத்தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார் குற்றம்?.   இலங்கை என்பது ஒரு குறுகிய நாடு, அந்த நாட்டிற்குள் தனி நாடு கேட்டால் ஆள்பவன் சுலபத்தில் கொடுத்து விடுவானா?.  பொருளாதார ரீதியில் ராணுவத்தை பலப்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழிக்க தேவைப்படும், இன்னும் பல இழப்புகள் ஒருநாட்டிர்க்குள் இன்னொரு நாடு உருவாகினால் உண்டாகும் அதையெல்லாம் யோசிக்காமல் தனி நாடு கேட்டு இன்று தனிக்குடித்தனம் கூட நடத்த முடியாத நிலைக்கு கொண்டுவந்ததற்கு யார் காரணம்? ஒற்றுமை என்றால் என்ன என்றே தெரியாத விடுதலைப்புலிகளின் தலைவனுக்கு அவர்கள் இனத்தின் மக்கள் நலனில்  கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் போனதற்கு யாரை துரோகி என்று  சொல்குரீர்கள்? 
 ----------------------------------------------------------------------------
 இன்று தமிழக மீனவர்களை சிங்கள மீனவன் தாக்குவது உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதை ஒரு இந்தியனாக இந்திய  அரசிடம் கேளுங்கள். அந்த பிரட்ச்ச்சனையில் சீனா, பாகிஸ்தான், சிங்களன் என பல முதலைகளின் தலையீடு உள்ளது இதையெல்லாம் புரிந்துக்கொண்டு ஒரு இந்தியனாக செயல்ப்படுங்கள். அதை விட்டுவிட்டு  ஏன் ஏதோ அண்டை நாட்டிடம் கேட்பது போல் இந்தியாவை எதிர்க்குரீர்கள். சோனியாவுக்கு தமிழர்கள் மேல்  எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும் அவருடைய  கணவரை இங்கே வைத்துத்தானே கொன்றார்கள்,  அவருடைய கையில் ஆட்ச்சியை கொடுத்தால் என்ன நடக்கும்?. தவறு நம் மீதுதான்.  நாம் ஒற்றுமையாக இதையெல்லாம் எதிர்கொண்டால் எழிதில் மீண்டுவிடுவோம்.  அதை விட்டுவிட்டு நமது தேசத்தை கூறுபோட நினைப்பவர்களுக்கு தயவு செய்து துணை போக வேண்டாம்
 ----------------------------------------------------------------------------

தமிழக  மீனவர்களை சிங்களன் தாக்கினான் என்றவுடன் ஏன் ஆந்திர, கர்நாடக, கேரளா மீனவர்கள் தமிழக மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை? காரணம் நம்மிடம் இருக்கும் பிளவுதான், இந்தியன் என்ற ஒற்றுமை இல்லாததுதான். ஊருக்கொரு கட்சி, ஊருக்கொரு இனத்தலைவன் இவர்கள் அரசியலில் பிரபலம் ஆகவேண்டும் என்றால் நம்மை பக்கத்து வீட்டுக்காரன் அடிச்சிட்டான், பக்கத்து ஊருக்காரன் அடிச்சிட்டான்னு ஏதாவது ஒரு பிரச்சனைய உண்டாக்கி விட்டுட்டு அவர்கள் நம் பிரட்ச்ச்சனைக்கு குரல் கொடுப்பதுபோல் பிரபலம்  ஆகிவிடுகின்றனர். இப்படியே அவர்களை வளரவிட்டு இன்று நாம் ஒற்றுமையாக இருக்கவே முடியாது என்பதுபோல் உருவாக்கிவிட்டனர்.
 ----------------------------------------------------------------------------
எதற்க்கெடுத்தாலும் சினிமாக்காரனை எதற்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்? அவனுங்க  நமக்கு என்ன செய்யப்போறாங்க? . சினிமாவில் வருவதுபோல் அவர்களுக்கு பஞ்ச டயலாக் மட்டும்தான் பேசத்தெரியும். தமிழகத்திலேயே ஒரு ஊருக்காரன் இன்னொரு ஊருக்காரனுக்கு தண்ணி கொடுக்கிறது இல்லை தீண்டாமை, நாட்டாமைன்னு பிளவு பட்டு இருக்கும்போது ஒரு மாநிலத்திடம் தண்ணீர் கேட்க்க வேண்டும் என்றால் எப்படி கேட்க்க வேண்டும்?. "தண்ணி தரலைனா உதைக்கணும் அவனுங்கள" இப்படித்தான் கேட்கணுமா? ரஜினி ஏதோ ஆவேசத்தில் கேட்டுவிட்டார். இன்று அவருடைய படம் அங்கே ஓட வேண்டும் என்றவுடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் ஆனால் இதனால் பிளவுப்பட்டது தமிழனும், கன்னடனும்தான்.  இப்படித்தான் அவர்கள் பிரபலம் ஆக நம்மை பிளவுப்படுத்தி புகழ் தேட நினைக்கின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாளியாகவும், கோமாளியாகவும் இருக்கப்போரிங்க?
 ----------------------------------------------------------------------------
 நேற்றைய பதிவில் இலங்கை தமிழ் பதிவர் ம.தி.சுதா அவர்களிடம் இருந்து வந்த ஆதரவு பின்னூட்டம், அது ஒன்றே போதும் எனக்கு. தமிழகத்தில் குருட்டுத்தனமாக சிலரை ஆதரிக்கும் முட்டாள்களே இலங்கை தமிழர்களிடம் யார் உண்மையான போராளி என்று கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
 ----------------------------------------------------------------------------
நேற்று எதிர் பின்னூட்டம் போட்ட நண்பர்களே உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்  அதில் எனக்கு துளி அளவும் தமிழ் பற்று தெரியவில்லை நீங்கள் இன்னும் முட்டாளாக இருப்பதுதான் தெரிகிறது.  உங்களது எதிர்ப்பதிவுகளையும், ஓட்டுக்களையும், பின்னூட்டங்களையும்,  மிரட்டல்களையும் கண்டு நான்  அஞ்சமாட்டேன்.   நான் இந்தியனாகவே வாழ்ந்து இந்தியனாகவே சாக விரும்புகிறேன். இந்த பிணம் திண்ணிகளையும் , கொள்ளை  கும்பல்களையும் பார்த்து பயந்து விட மாட்டேன். தொடர்ந்து எனது தேசத்துக்காகவும், என் நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன. என்னால் முடிந்த வரை இந்த நாட்டிற்காக பாடுபடுவேன்.  உயிர் இல்லையென்றால் இந்த உடல் குப்பைதான் அந்த குப்பையை காப்பாற்றிக்கொள்ள இவர்களை பார்த்து நான் அஞ்சப்போவதும் இல்லை, கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதும்  இல்லை.

 - வந்தே மாதரம்கொள்ளை கும்பல் "AMWAY"

Monday, December 27, 2010


http://www.annoncevous.com/adpics/job_opening_for_direct_sale233.jpg
                                                        
"AMWAY "  இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு  அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.  இந்த நிறுவனத்தில்  உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது  தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம்  முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை  சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.


ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம்  ஒன்று "இந்த தொழில்  செய்தால் நீ  செல்வந்தன்  ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக  கொள்ளையடிக்கும்  கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY"  இதுவரை தமிழ்நாட்டில் பல MLM  நிறுவனங்கள்  பலவிதமான வித்தைகளைக்காட்டி  கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY  நிறுவனம் கொஞ்சம்  வித்தியாசமானது,  சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.


ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து  பொருட்களை  இறக்குமதி  செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு  வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும்  அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன.  ஆனால்   நம் இந்தியா  அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு  வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம்.   இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும்   FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG  பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய  இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த  பொருட்களை விற்பனை செய்ய அந்நிய  நிறுவனத்துக்கு   அரசு  அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது  PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.  


பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:  
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள  அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள்  தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE  SECTOR) என்று சொல்வார்கள்.  அந்த DEFENCE  SECTOR  என்று சொல்லப்படும்  செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான்  இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL  செக்டோர்கள்.  இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த  AMWAY நிறுவனமும்.  ஆனால் இது  இந்திய  நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம்.   நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.  இப்படி இருக்கும்போது இந்த AMWAY  நிறுவனம் DIRECT SALE  என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால்  DEFENCE SECTOR என சொல்லப்படும்  இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில்  நமது நாட்டில்  பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்  பாதிப்பு  முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம்    நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள்,  இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.
ஏமாற்றும் வழிகள்: 
இந்த நிறுவனத்தில்  யாரும்  பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ  அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ  அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு  ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்  ஆம்வே நிறுவனத்தால்  சம்பாதிக்கிறார்  என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது,  இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று  சொல்லிதான்  இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று  ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது  நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை  ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது. 


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம்  எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன  பொருட்களின் விலைகள்.


TOOTHBRUSH(1)                   - 19 ரூபாய்
HAIR OIL(500 ML)                 - 95 ரூபாய்
SHAVING CREAM(70G)          - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE)             -400 ரூபாய்         
FACE WASH                           -229  ரூபாய்
PROTIEN POWDER(1KG)      - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு  நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE))  விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


 நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE.  ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய  நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு  4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்  இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
  
► ஆம்வே  நிறுவனத்தில் ஒருவர்  இணைய வேண்டும் என்றால்  995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே  நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட  3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது  கட்டிய தொகை 995 ரூபாய். 


►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .


►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே  உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


 ►ஒருவன்  ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர்  இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995  ரூபாய்)


                                     100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும்  இதை 100 PV என்று சொல்வார்கள்.


                                   3000  x 100 = 300000 ரூபாய்
                                
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே  நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய்.  நிறுவனத்துக்கு  ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு  கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE)  சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


 இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால்  இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள்  அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர்.  ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது.  அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய்  (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)


இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள்  வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


     லட்ச்சங்களையும்,   கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.  ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்)  கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை  உணரும் வரைதான்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
 தயவு செய்து இந்த பதிவை   உங்கள் நண்பருக்கோ அல்லது  உறவினருக்கோ இந்த  பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள்.  இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

         ----------------------------x---------------------------


நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் .  - வினையூக்கி

கொக்கா மக்கா 14/12/2010

Tuesday, December 14, 2010
"டாஸ்மாக்" எங்கள் எதிர்ப்பை மீறி எங்கள் ஊருக்குள் வந்த அழையா விருந்தாளி, நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் முன்பு இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய கிளையை எங்கள் ஊரில் தொடங்கி பணம் பண்ண ஆரம்பித்தனர்.  இறுதியில்  நாங்கள் வெறுத்துப்போய் உள்ளாட்சி தேர்தல் வந்தபோது எந்த ஒரு கட்சிக்கும் ஓட்டு போட முடியாது என்று ஒரு சுயேட்ச்சையை நிற்கவைத்து வெற்றிப்பெற செய்தோம், இன்று எங்கள் ஊரில் டாஸ்மாக் அகற்றப்பட்டுவிட்டது. நாம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்,  கோழைத்தனமாக  அரசுகளை குறைக்கூறியே காலம்  ஓட்டுவதை  நிறுத்தி எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தால் வெற்றி நமக்கே.
 ___________________________________________________
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக மழை வெள்ளம் என்றால் அரசு மக்களுக்கு செய்வது உணவு பொட்டலமும், இலவச  வேட்டி சேலைகளும் தான். ஆனால் சில ஆண்டுகாலமாக மக்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் காரணம் "டாஸ்மாக்".  பல ஏழை பெண்களின்  தாலியை அறுத்து அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசுகள்  இன்று மக்கள் நலப்பணி திட்டம்  அரங்கேற்றி வருகின்றன.  அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய திட்டமே மழைநிவாரனத்துக்காக கொடுக்கப்படும் பணம் எப்படியும் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்துவிடும் என்பதுதான். நமது அரசு அதிகாரிகளின் சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டியதே.
 ___________________________________________________
சில நாட்களுக்கு முன்பு  என்னிடம் என் நண்பர்  கூறினார் "இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே அவமானமாக உள்ளது என்று" இப்படித்தான் பலப்பேர் சொல்லிட்டு ஊர்ள்ள சுத்துறாங்க.  உங்களில் யாருக்காவது அப்படி சொல்லணும் என்று தோன்றினால் உங்களுக்கு சிறிய வேண்டுகோள்  அவமானத்தில் தூக்குபோட்டு சாவுங்க அதுதான் நாட்டுக்கு நல்லது.  நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு வருகிறேன் உங்களில் யாருக்காவது நாட்டுப்பற்று அக்கறை என்று ஏதாவது இருந்தால் வாங்க துணிந்து போராடுவோம் முடியலையா சேலைய கட்டிட்டு வீட்லயே இருங்க ஆட்டோ வருமோனு பயந்துகிட்டு.  ஊழல், கொலை, கொள்ளை,  நாட்ட யாருமே காப்பாத்த மாட்டாங்களா இப்படியே பேசிக்கிட்டு பதிவு போட்டுட்டு இருந்தா ஒன்னும் நடக்காது.  
 ___________________________________________________
முன்பெல்லாம் கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் நாம் MRP  கவனித்துதான் பணத்தை கடைக்காரரிடம் கொடுப்போம் MRP விலையை விட அதிக விலைக்கு விற்றது ஒருகாலம்,  ஆனால் இப்போது அப்படி இல்லை அவர்கள் முன்னேறி விட்டார்கள் பத்துரூபாய் பொருளுக்கு பதினைந்து ரூபாய் என்று போட்டுவிட்டு RS.13.50  சலுகைவிலை என்று  விற்க ஆரம்பித்து விட்டனர்(நிறுவனம் கடைக்காரர்களுக்காக கொடுக்கும் புதிய சேவை). ஆனால் அரசு அப்படி இல்லை ஒரு படி மேலே போய்    டாஸ்மாக் ஊழியர்களுக்கு  புது விதத்தில் ஊதியம் கொடுத்து வருகிறது.   ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் ஊதியத்தைவிட குடிகாரர்களிடம் மீதம் சில்லறை கொடுக்காமல் கொள்ளையடிப்பதே அதிக தொகையாம், இதற்கு ஆசைப்பட்டுதான் பலர் இன்று 2,500 ரூபாய்  சம்பளமாக   இருந்தாலும் பரவாயில்லை என்று டாஸ்மாக் வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர்.
 ___________________________________________________
ஆன்மிகத்தை பற்றிய எனது நீண்டநாள் சந்தேகத்தை ஒரு ஆண்மீகவாதியிடம் கேட்டபோது எனக்கு விளங்க வைக்க அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்:

எனது கையில் இருந்த பேனாவை காட்டி இது யாருடையது என்று கேட்டார்?
 பதில்: என்னுடையது

எனது கைவிரலில் இருந்த மோதிரத்தை காட்டி இது யாருடையது என்று கேட்டார்?
 பதில்: என்னுடையது

எனது கைவிரலை காட்டி இது யாருடையது என்று கேட்டார் ?
பதில்:: என்னுடையது

என் தலைமுடியை காட்டி இது யாருடையது என்று கேட்டார் ?
 பதில்: என்னுடையது

இப்படியே எனது கண்,காது,கால்   என ஒவ்வொன்றாக காட்டி கேட்க்கும்போதெல்லாம் நான் என்னுடையது என்று கூறினேன்.

கடைசியாக அவர் என்னிடம் கேட்ட கேள்வி "எல்லாமே உன்னுடையது என்றால்  நீ யார்?"

நான் பதில் தெரியாமல்  முழித்தபோது  அவர் சொன்னது அதை  அறிவது தான் "ஆன்மிகம்"

 
___________________________________________________
 சில நாட்களுக்கு முன் எங்கள் ஊர் சாலையில் நடந்த சம்பவம் :   ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் பயணம் செய்த போது திடிரென பின்புறம் அமர்ந்திருந்த பெண் கீழே தவறி விழுந்தார். வாகனம் வேகமாக சென்றதால் வண்டி பெண் விழுந்த  இடத்தில் இருந்து ஒரு பத்து மீட்டர் தூரம் சென்றுவிட்டது, அவளது சேலை வாகனத்தில் மாட்டி இருந்ததால் உடலில் சேலையே இல்லை முழவதையும் ரோட்டில் அந்த பெண்ணை உருட்டிவிட்டு  வாகனம் சேலையை  உருவிவிட்டது. நாங்கள் பதறிப்போய் உதவி செய்யலாம் என்று ஓடி அந்த சேலையை வாகனத்தில் இருந்து எடுக்க முயற்சித்த போது தான் தெரிந்தது அந்த பெண் கீழே விழ காரணமே அந்த இரண்டு சக்கர வாகனம்தான்  என்று, வாகனத்தின் பின்புற சக்கரத்தின் நடுவே அந்த பெண்ணின் சேலை மாட்டி இருந்தது. அவர்கள் பார்ப்பதற்கு  புதுமண தம்பதி போல் இருந்தனர் அந்த இடத்தில் பெண்ணின் காயத்தை விட அவமானம்தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது.  வாகனத்தில் பயணம் செய்யம்போது கவனம் தேவை.

 
___________________________________________________
பேருந்தில் இரண்டு  பள்ளிசிறுவர்கள் பேசிக்கொண்டது "டேய் இந்த வருஷமும் நியு யர் ஒன்னாந்தேதி  தாண்டா வருது".
  :)
 
___________________________________________________
 உங்கள் வலைத்தளத்தில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு இலவச SMS அனுப்ப:

கோடிங்:

DASHBOARD->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT

இலவசமாக உங்கள் தொலைப்பேசி என்னை கொடுத்து ஒருமுறை பதிவு செய்தால் போதும், உங்கள் தளத்தில் இருந்தே இலவசமாக SMS அனுப்பலாம். உங்கள் தளத்திற்கு வருபவர்களும் இந்த சேவையை பயன்படுத்தலாம். 
 ___________________________________________________
 கணினியை இசைக்கருவியாக  மாற்றலாம் வாங்க என்ற பதிவில் பலர் பிடித்திருந்தது என்று பின்னூட்டம் போட்டிருந்தனர். ஆனால் அவை இன்டர்நெட் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் உங்களுக்காக இதோ மியூசிக் மென்பொருள் பதிவிறக்கம்  செய்துக்கொள்ளுங்கள். அனைத்து இசைகளும் இதில் இசைக்கலாம்.

 ___________________________________________________
 ___________________________________________________


http://sirkapyaaz.files.wordpress.com/2010/01/meira-kumar-2009-6-3-6-20-27.jpg
இருபத்தி ரெண்டு நாளா ஒரு வேலையும் நடக்கல. இத்தன நாளா  சிரிச்சே காலத்த ஓட்டுன  இந்த பெண்ணுக்கு அல்லக்கை சம்பளம் வேற. என்ன  புடுங்குறதுக்கு  சபாநாயகர் பதவி இருக்குனு எனக்கு தெரியல.  இதுபோன்ற பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளமே வேஸ்ட்.
 ___________________________________________________
தங்கம் விலை ஏன் ஏறாது?
 ___________________________________________________
நகைச்சுவை:
 
 ___________________________________________________
அடுத்த இரண்டு பதிவில்  AMWAY, JESUS CALLS இரண்டு மாபெரும் கொள்ளை கும்பல்களை பற்றி...............

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது

Sunday, December 5, 2010
 http://www.treehugger.com/20090702-india-parliament.jpg
              

                         "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது..."   இந்த  பாடல்  வரிகள் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த  திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் . இந்த பாடல் வரிகளை இதுவரை நாம் கேட்க்கும்போதெல்லாம்  பசிக்காக திருடியவனுக்கான  அறிவுரை பாடல் என்றுதான் நினைத்திருப்போம் ஆனால் இது அவனுக்காக எழுதப்பட்ட பாடல் கிடையாது  அவர் சொன்ன திட்டம் வேறு நாம் புரிந்து கொண்ட திட்டம் வேறு. அவர் சொன்ன திட்டத்தை  உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் "சேது சமுத்திர திட்டம்",  "நூறு நாள் வேலை  திட்டம்", "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திட்டம்", " "கார்கில் வீடு திட்டம்", " டெல்லி காமன்வெல்த்  திட்டம்" இன்னும் பல மக்கள் நலப்பணி திட்டம் வர இருக்கின்றன. இப்படி இவர்கள்   மக்கள் நல  திட்டம் போடுவதெல்லாம் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக  கிடையாது, அரசியல் தர்மத்துக்காக.

இப்ப இந்த பாடல் வரிகளை படிச்சி பாருங்க உங்களுக்கே புரியும்.


திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது 

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம் 
கீழும் மேலும் புரளாது! 


                               சேது சமுத்திர திட்டம் -அவசர அவசவரமாக  ஆரம்பிக்கப்பட்டு மக்கள் வரிப்பணத்தை  கடலில் கொட்டி இப்போது எதுவும் நடக்காததுபோல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக சொல்கிறது கொள்ளை கும்பல் கூட்டம். பல ஆயிரம் கோடிரூபாய் முதலீட்டில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது என்றால் அதில் என்ன பிரட்ச்சனை உள்ளது இதனால் மக்களுக்கு என்ன பயன் உள்ளது என்று முதலில் ஆராய்ந்திருக்க வேண்டும். பல ஆண்டுகள் கோரிக்கை வைக்கப்பட்ட திட்டம் என்ற ஒன்றை மட்டும் வைத்து இவர்களுக்கு  கமிஷன்  கிடைக்க வேண்டும் என்பதற்காக  திட்டம் பற்றி ஆராயாமல் தடாலடியாக கோடிகளை கடலில் கொட்டயுள்ளனர். நம் கண்ணுக்கு தெரிந்த  காமன்வெல்த், ஸ்பெக்ட்ரமிலே  இவ்வளவு பெரிய ஊழல்  நடந்துள்ளது என்றால் நம் கண்ணுக்கு தெரியாத கடலுக்கடியில் எவ்வளவு பெரிய ஊழலால் நடந்திருக்கும்?.  சேது சமுத்திர திட்டம்  முழுமை அடைந்தால்  கடல் ஆழம் 12 மீட்டர் இருக்கும் என கூறப்படுகிறது இந்த ஆழத்தில் 30,000 டன் எடைக்கு மேல் உள்ள கப்பல்கள் போக முடியாது என கூறுகிறார்கள்  , அப்படிபார்த்தால் மிக எடை உள்ள கப்பல்கள் போக முடியாது.  இந்த வழியில் செல்ல சிறப்பு மாலுமிகள் வேறு  நியமிக்க வேண்டுமாம்  இதனால் கப்பல் நிறுவனங்களுக்கு லாபம் குறைவுதான்  போதாகுறைக்கு மிக வேகத்திலும் போக முடியாதாம் இப்படி பல இன்னல்கள் இருக்கும்போது  எப்படி போட்ட முதலை அரசு  எடுக்க முடியும்?. இதில்  ராமர் பாலம் பிரட்சனை வேறு பெரிய தடங்களை ஏற்ப்படுத்தி உள்ளது.  இவ்வளவு பிரச்சனைகளையும் முன்கூட்டியே  ஆராயாமல் இந்த திட்டத்தை  ஆரம்பித்து இப்போது கிடப்பில் போட்டுள்ளார்கள்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கும் என்று.
                                  
                                                        இப்படி எதில் தொட்டாலும் ஊழல் நடக்க காரணம் அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் இப்போது தேர்தலில் செய்யும் செலவை முதலீடாக பார்ப்பதுதான். அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் சேவை என்பது மாறி இப்போது கொல்லை கும்பலும், ரவுடிகலும்  விரைவில் பணம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது.  2008 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக ப.ஜ.க நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்த போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பிரதம்  மன்மோகன் முகேஷ் அம்பானியை பார்க்க செல்கிறார்,  வாக்குப்பதிவு நாளன்று  கத்தை கத்தையாக பணத்துடன் எதிர்க்கட்ச்சியின் நாடளுமன்றத்தில் பணத்தை காட்டுகிறார்கள் இவ்வளவும்  120 கோடி மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  இந்நிலையில்  கடந்த இரு வாரங்களாக  நாடாளுமன்றம் முடங்கி போய் உள்ளது, காரணம் ஒரு கொள்ளை கும்பல் கூட்டுக்குழு வேண்டும் என்கிறது இன்னொரு கொல்லைகும்பல் முடியாது என்கிறது இதில் எதிர்க்கட்ச்சியினர் எதிர்ப்பார்ப்பது கூட்டுக்குழுவா இல்லை கொள்ளையில் பங்கா என்பது தான் எனது சந்தேகம்.
                                
                                                      இப்படி இந்த கொள்ளை கும்பல்களுக்குகெல்லாம்   இன்னும் எத்தனை  நாட்களுக்கு தான்  ஓட்டு போட போகிறோம்.  தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக இருக்க தலித்  என்ற ஒரு தகுதி போதுமா? கப்பல் போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருக்க மூப்பனாரின் மகன் என்ற ஒரு தகுதி போதுமா?  ரசாயனத்துரைக்கு  அமைச்சராக இருக்க முதல்வரின் மகன் என்ற ஒரு  தகுதி போதும்? இப்படி இந்த தகுதிகள் போதும் என்றால் கல்லூரியில் கணக்கு பாடம் எடுக்க நாடார், அறிவியல் பாடம் எடுக்க வன்னியன், பொருளியல் பாடம் எடுக்க யாதவரை நியமிக்க வேண்டியது தானே?.  இனி அப்பன் செத்தால் மகனுக்கு பதவி, புருஷன் செத்தால் பொண்டாட்டிக்கு பதவி என்பதெல்லாம் மாறவேண்டும்.  கணக்கு வாத்தியார் செத்துட்டாருணா அவர் பொண்டாட்டி கணக்கு எடுக்க முடியுமா இல்லை அவர் மகன்தான் கணக்கு எடுக்க முடியுமா?  தகுதி வேண்டாம்.  
                                     
                                                      இனி வரும் தேர்தலிலாவது மாற்றம் வரவேண்டும் உள்த்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் IPS/IAS தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும், ராணுவ அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் ராணுவத்தில்  மேஜராக இருந்திருக்க வேண்டும், சட்டத்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்றால் வழக்கறிஞ்சராக  இருந்திருக்க வேண்டும்  இப்படி அந்தந்த துறைக்கு தகுதியானவனை நியமிக்கும் சட்டம் வந்தால் தான் ரவுடியும், செத்தவனின் மகனும் பொண்டாட்டியும்  அரசியலுக்கு வராமல் தடுக்க முடியும்., படித்த இந்திய மக்களே இதை முன்னிறுத்தியாவது  இனி வரும் காலங்களில் கோரிக்கை வையுங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துங்கள். 
                          

கொக்கா மக்கா 3/12/2010

Friday, December 3, 2010
கடந்த வாரம் சென்னை  பதிவர்களுக்காக இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் தன்னுடைய படத்தை சிறப்புக்காட்சியாக காண்பித்திருந்தார்,  இது பதிவர்களுக்கு கிடைத்த முதல் அங்கிகாரம்  என்றே சொல்லலாம்.   ஆனால் வெற்றி படங்களையே குறை சொல்லும் நமது பதிவுலக ஜாம்பாவான்கள் இந்த படத்தில் உள்ள குறைகளை நாசுக்காக சொல்லி தனது நன்றி உணர்ச்சியை காட்டிவிட்டனர், ஒருசிலர் வெற்றிப்படம் போல் விமர்சனம் செய்திருந்தனர்.   இதுபோன்றவற்றை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லதே, இல்லையென்றால் பதிவர்கள் மேல் இருக்கும் நம்பகத்தன்மையும் மக்களிடம் போய்விடும்.
 _________________________________________________

ஒரு தனியார் செய்தி இணையதளம் வலைப்பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பற்றி செய்தி போடுகிறேன் என்று பதிவர்களை தேவையில்லாமல் இழிவு படுத்தி இருக்கிறார்கள், நம்மை நம்பிதான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் போலும். அவர்கள் ஏதோ சேவைக்காக செய்தி தளம் நடத்துவது போல் நாம் விளம்பரம் செய்வதை  பற்றி கிண்டலாக  எழுதி இருக்கிறார்கள், இனி இதுப்போன்று எழுதுவதை அவர்கள் நிறுத்திக்கொள்வது நல்லதே. இல்லையென்றால் அவர்கள் வண்டவாளத்தை பற்றியும் எங்களால் எழுத முடியும்(PICTURE OF THE DAY, ரஜினிக்கு பூங்கொத்து அனுப்ப, குறைந்த விலையில் டொமைன், ஒரு ரூபாய்க்கு சினிமா டிக்கெட்  இத பத்திலாம் நமக்கு  எழுத தெரியாதுன்னு நெனச்சிட்டாங்க போல,  PICTURE OF THE DAY ல நீ என்ன சாமி படமா போடுற?, மாலைமலர்ள்ள நியூஸ் காப்பி அடிக்காம உன்னால நியூஸ் போட முடியுமா? இதெல்லாம் நாங்க எழுத ஆரம்பிச்சா உன் பொழப்பு நாறிடும் ) . 
 _________________________________________________

தமிழ் வலைப்பதிவர்களுக்கு  ஒரு வேண்டுகோள் என்ற  பதிவில் ஒருசிலர் பின்னூட்டம் போடும்போது பதிவர்களை கேவலம்மாக நினைத்து எழுதி இருந்தனர். இன்னும் ஒருசிலர் ஒரு படி மேலே போய் அதற்காக ஒரு பதிவே போட்டுவிட்டனர் பதிவர்களை நம்பி இவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார் என்று. எனக்கு தெரிந்து  நூறு வலைப்பதிவுகளில் ஒரு பத்து வலைத்தளம்தான் தேவை இல்லாத குப்பை  என்று நினைக்கிறேன் ஆனால் அந்த  பத்து தளத்தை வைத்து மீதம் உள்ள தொண்ணூறு பேரையும்  தவறாக நினைத்து விடக்கூடாது. இன்னொன்று அடுத்தவனை எதற்கு குறை சொல்லணும் உங்களுக்கு சம்மதம் என்றால் ஆதரவாக பின்னூட்டம் போடுங்கள், முடிந்தால் உங்கள் ஆதரவாளர்களையும் திரட்டுங்கள். தமிழன் அமைதியாக இருப்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,   நேதாஜி ஆங்கிலேயனை எதிர்த்து ராணுவம் தொடங்க  அழைத்த போது வந்தவர்களில் ஐம்பது சதவிகிதம்பேர் தமிழர்கள் தான் என்பதை மறந்துட்டீங்க  போல. மூன்று நாடுகளின் ராணுவத்தையும் எதிர்த்து கடைசி வரை போரிட்டவனும்  தமிழன் தான் என்பதை   மறந்து விட வேண்டாம்.  
 _________________________________________________

சில நாட்களாக பதிவுலகில் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற வார்த்தை பிரபலம்மாகிகொண்டு  வருகிறது, எனது தளத்தில் கூட ஒரு பதிவர் அரசியல்வாதிகளை எதிர்த்து பதிவு போட்டால் இந்த ஒரு வார்த்தைக்காக பயப்பட வேண்டி உள்ளது என்று சொல்லி இருந்தார். பயப்பட வேண்டியது தான் அதற்காக எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு இருந்தா அடிமையாத்தான் இருக்கணும்.  சுதந்திரத்துக்காக போரிட்டவனை தூக்கில் போடும்போதும் கடைசி நேரத்தில் வந்தேமாதரம் என்று சொல்லி இறந்தவர்கள் பலபேர் ஆனால் இப்போ  நம்மை ஆள்பவர்கள் ஒரு சாதாரண கைதுக்கே ஐயையோ கொல்றாங்க என்று அலறுபவர்கள்,  ஒப்பிட்டு பார்த்தால் நம்மை விட அவர்கள்  தான்  கோழை . சவுக்கு என்ன அலறிக்கிட்டா  இருந்தாரு? . வீட்டுக்கு ஆட்டோ வந்தா மீட்டருக்கு மேல பத்துரூபாய் போட்டு அனுப்புங்க.           
 _________________________________________________

எனது கல்லூரி வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத ஒரு நண்பர் இருக்கிறார் அவர் ஒரு சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு நகைச்சுவை செய்து விடுவார். அவர் செய்த சில நகைச்சுவைகள்.

► ஒரு நாள் எங்கள்  கணக்கு ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு கணக்கை முடித்து விட்டு சொன்னார் "இது யூனிவர்சிட்டி ப்ராப்ளம் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு போடுங்க"  என்று  அதற்கு என் நண்பர் கேட்டது  " சார் யூனிவர்சிட்டிக்கு ப்ராப்ளம்னா நாங்க எதுக்கு கஷ்ட்டப்படனும்".

► நாங்க எங்க  போனாலும்  அவன்  செலவு செய்யவே மாட்டான்,  நாங்களும் ஏதாவது சில்லறை இல்லைன்னு ஒரு அஞ்சி ரூபாய்  கேட்டா கூட ஏங்கிட்ட இருபது ரூபாய்  நோட்டா இருக்கு என்று சொல்லி தப்பித்து விடுவான். ஒரு முறை இப்படித்தான் நாங்க நோட்டா இருந்தாலும் பரவாயில்ல தாடா நாங்க சேன்ஜ்  மாத்திக்கிறோம் என்று சொல்லும்போது அவன் தனது பையில் இருந்து இருபது ரூபாய் அன் ரூல்டு நோட்ட எடுத்து காண்பித்தான். டேய் இதுதான் இருபது ரூபாய் நோட்டா என்று நாங்கள் அன்று   சிரித்தது இன்றும் என்னால்  மறக்க முடியாது.

                      நாங்கள்  கல்லூரி முடித்து இரண்டு வருடம் முடியப்போகுது  ஆனால் இன்னும் அவன் சரியான வேலை கிடைக்காமல் வீட்டு வாடகை, கடன், வட்டி என  தவிக்கிறான் போதா குறைக்கு அவனது பிரட்சனைக்கு உதவுவதாக ஒரு MLM  நண்பர் வேறு ஏமாற்றி விட்டார். எங்களை கல்லூரியில் சிரிக்கவைத்தவன் இன்று சிரிக்க முடியாமல் குடும்ப பிரட்சனையில்  இருக்கிறான். அது ஏன் என்று புரியவில்லை   படிக்கும்போது வராத கஷ்ட்டம், ஏமாற்றம்  முடித்தவுடனே அத்தனை சுமையும்  தலையில் விழுகிறது.
 _________________________________________________

இசைப்பிரியா கொடூரமாக  கொலையுண்ட செய்தியை கேட்டு ஒரு தமிழ் வாசகர் வேதனையுடன் எழுதியது:

"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு  மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்."


 _________________________________________________

ராஜபக்சே:
மவுஸ் வெச்சி அந்த நாய தூக்கிபோட்டு விளையாடுங்க
 _________________________________________________


http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1708792&g2_serialNumber=1

இதுக்கெல்லாம்  நீ  ஒரு நாள் எங்களுக்கு பதில் சொல்லுவடா மவனே......
 _________________________________________________