ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே

Tuesday, January 18, 2011  சில மாதங்களுக்கு  முன்பு அண்ணன் சவுக்கு அவர்கள்  "ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே !" என்ற பதிவின் மூலம் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த பதிவில் சில வரிகள் உங்களுக்காக:

"பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு. நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை. நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.  

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம். 

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!" பதிவர்களுக்கு இருக்கும் கடமையையும், வலிமையையும் உணர்த்தவே இந்தபதிவை சவுக்கு அவர்கள் எழுதி இருந்தார். ஆனால் பதிவர்கள் தங்கள் கடமையை இன்னும் உணர்ந்ததாக  தெரியவில்லை.  நான் வலைப்பதிவிற்கு  வரும் முன் வரை நினைத்துக்கொண்டு இருந்தது நம் ஆட்சியாளர்கள்தான் சரியில்லை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் வலையுலகம் வந்து  நாட்கள் போக போகத்தான் தெரிந்தது ஆட்சியாளர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் சரியில்லை என்று. வலைப்பதிவு  என்பது படித்தவர்கள் மட்டுமே கூடும் இடம், அப்படியென்றால் எவ்வளவு நாகரீகமாக இருக்கவேண்டும்? ஆனால் ஜாதி, மதம், இனம், ஆபாசம், சினிமா என்று இங்கே தான் பல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. படித்தவர்கள் கூடும் இடத்திலேயே இப்படியென்றால் படிக்காதவன் எப்படி இருப்பான்?  இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி சரியான ஆட்சியை கொடுக்க முடியும்?.முதலில் நம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும் பிறகு தான் அடுத்தவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்க  வேண்டும்.  இங்கே பதிவர்கள் என்ற பெயரில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அதிகமான வலைத்தளத்தில்  சினிமா, ஆபாசம்  சார்ந்த பதிவுகள்தான் குவிந்து கிடக்கின்றது.  கொஞ்சம் கூட நாட்டின் மீதும், மக்களின் மீதும் கவலை இல்லாமல் இப்படி இருந்துவிட்டு பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் பேசி என்ன பயன்?.ஒருசிலர் தன்னிடம் இருக்கும் வக்கிரங்களை  ஜோக் என்ற பெயரில்  எழுதிவிட்டு 18+ என்ற ஒரு வார்த்தை போட்டுவிட்டு பதிவிடுகின்றனர். இதனால் யாருக்கு என்ன பயன்? மற்றவர்களை மகிழ்விக்கவா? அப்படியென்றால் எதற்காக  விளம்பரம் செய்ய வேண்டும்?  விளம்பரம் செய்ய இங்கே அணுகவும் என்று போடவேண்டும்? ஏன் இரவு நேரங்களில்  படுக்கை  அறை   கதவை திறந்துவைத்துக்கொண்டு வாசலில்  18+ போட வேண்டியது தானே?  பணத்துக்காக சமுதாயம் சீரழிந்தாலும் பரவாயில்லை என்று இதுபோன்ற சுயநலவாதிகள் இருப்பதால்தான்  புதியவர்களும் இவர்களை பார்த்து சீரழிந்து வருகின்றனர்.நம் நாடு இப்போது  மிகவும் மோசமான  நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது, அண்டை நாட்டினர் நம் நாட்டில் நடக்கும் ஊழல்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் நாமோ எதைப்பற்றியும் கவலையில்லாம் சினிமா மட்டுமே வாழ்க்கை என்று எதில் தொட்டாலும் அதிலேயே மூழ்கி கிடக்கிறோம்.  என்று நம் நாட்டிற்காக சிந்திக்கப்போகிறோம்? யாராவது ஒருவர் துணிந்து முன் வந்து கேள்வி கேட்டாலும் அவனை கேள்வி கேட்கத்தான் இங்கே பலர் இருக்கிறார்கள், நீ அந்த ஜாதியா, அந்த மதமா, அந்த கட்சியா என்று? பிறகு யார்தான் முன்வந்து கேள்வி கேட்க முடியும்?நம்மிடம் நிறைய மாற்றங்கள் தேவை. பதிவர்கள் ஒன்றிணைந்து நாட்டுக்காக ஏதாவது  செய்யவேண்டும், முன் மாதிரியாக செய்யவேண்டும். அதற்கு முதலில் நாம் ஒற்றுமையாக செயல்படவேண்டும் நமக்குள்ளேயே பலர் ஜாதி, கட்சி என்று போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம்  ஒதுக்கிவைத்து மனிதன், தமிழன், இந்தியன்  என்ற ஒற்றை வார்த்தையில்  இணையவேண்டும்.    

இன்றிலிருந்து சிலவற்றை நீங்கள் தவிர்த்தாலே நிச்சயம் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்,
►மற்ற தளங்களில் இருந்து அனுமதி இன்றி எழுத்துக்களை திருடுவது:
ஒருவருடைய எழுத்துக்களை அவருடைய அனுமதி இன்றி வெளியிடுவது முற்றிலும் தவறான ஒன்று. அவருடைய கருத்து அல்லது கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால் அவருடைய தளத்துக்கு உங்கள் வலைத்தளத்தில் சில விளக்கங்களுடன்  லிங்க் கொடுக்கலாம். மொத்தமாக அவருடைய எழுத்துக்களை காபி செய்து பதிவிட்டு கடைசியில்  லிங்க் கொடுப்பது/கொடுக்காமல் இருப்பது  என்பது தவறான செயல். 
►சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம் போன்றவற்றை எழுதிவருவது:
 இன்று சினிமா துறையில் இல்லாதவர்கள் ஓட்டுக்காகவும், ஹிட்ஸ் போன்றவற்றிர்க்காவகும் முதல் நாளே படம் பார்த்து விமர்சினம் எழுதி வருகின்றனர்.  இது பதிவுலகில்  தவறான  போட்டியை உருவாக்கிவிடும். வலையுலகில் புதியவர்களுக்கு தவறான முன் உதாரணத்தை உருவாக்கிவிடும். உங்களுடைய இந்த விமரிசனம் திறமையை வேறு ஒரு துறையில் செலுத்தினால் நிச்சயம் உங்களுக்கும்  மற்றவர்களுக்கும் அது பயனாக  இருக்கும். ஆனால் நீங்கள் சினிமா விமர்சினம் போன்றவற்றை எழுதுவதால் உங்கள் நேரே விரயம் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் சினிமா பார்க்க ஊக்கவிக்கும். இதனால் பயன் என்பது  சினிமா துறையினருக்கு மட்டுமே.இன்று பதிவர்கள் என்றாலே சினிமா துறையை சார்ந்து செயல் படுபவர்கள் என்று மாறி வருகிறது. நம் சமுதாய சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணாமாக அமைந்துவிடும்.  தயவு செய்து இன்றிலிருந்து சினிமா பதிவுகள் எழுதுபவர்களை   ஊக்குவிப்பதை தவிர்த்திடுங்கள். ►ஆபாச ஜோக் பதிவுகளை ஊக்குவிப்பது :
நீங்கள் ஊக்குவிப்பதால்தான் ஆபாச பதிவுகளை  எழுதுகிறார்கள். அதுபோன்ற பதிவுகளுக்கு  ஒருமுறை  உங்கள் பின்னூட்டம், ஓட்டுக்களை தவிர்த்துப்பாருங்கள். நிச்சயம் மாற்றம் வரும்.முக்கியமாக இந்த மூன்றையும் தவிர்த்தாலே போதும் பதிவர்கள் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க செயல்படுவார்கள். 

நான் தமிழ்மணம் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளான், அவர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதும் வலைத்தளங்கள்மேல் நடவடிக்கை   எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  தயவு செய்து உங்கள் மகிழ்ச்சிக்கு நடுவே நாட்டைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.
 

 இன்றிலிருந்து பதிவுலகம் சினிமாவை விட்டு பிரிந்து செயல்பட  வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றிலிருந்து சினிமா துறையில் இல்லாதவர்கள் சினிமா விமர்சனம்  பதிவு எழுத மாட்டேன், சினிமா பதிவுகளுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று. நாம் சாதித்துக்காட்டுவோம்.  புதிய வரலாறு படைப்போம்.

JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்

Wednesday, January 12, 2011


இந்தியாவில்  இப்போது  கொள்ளை கும்பல்கள் ஒருபக்கம் போட்டி போட்டுக்கொண்டு  கொள்ளையடிக்கிறது என்றால் ஆன்மீகத்தை பரப்புகிறேன்  சுகம் அளிக்கிறேன் என்று இன்னொரு கும்பல் ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டு வருகிறது.   இவர்கள் கொட்டத்தை அடக்கவேண்டிய ஆட்சியாளர்களோ  இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று அனைத்து போலி  ஆன்மிகவாதிகளும் ஊர் ஊராக கிளைகள் வைத்து தங்கள் கொள்ளையை தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வேளி நாடுகளில் இருந்து  தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS  குடும்பத்தினரின்  வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கும் வளர்ந்துவிட்டனர்.


இவர்களுடைய நூதன கொள்ளை முறைகள்:

►தீர்க்கதரிசனம் சொல்வது
►ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
►பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
►பங்காளர், உறுப்பினர் திட்டம்.
►நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
►ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது
►கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது

தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும்  இவர்கள்  ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா  இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே?

ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
 உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம்  பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்கலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்ச்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைப்பேசி என்னை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின்தான்  அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செளுத்தியப்பிந்தான் அமருவார்கள்.

பங்காளர், உறுப்பினர் திட்டம்:
இவர்கள் அலுவலகத்துக்கு யாராவது குறை என்று வந்துவிட்டால் போதும் அவர்கள் முகவரியை வாங்கிவிட்டு அவர்கள் வீட்டுக்கு MONEY ORDER அனுப்புவதற்கான படிவத்தை அனுப்பிவிடுவார்கள் காணிக்கை அனுப்பச்சொல்லி. அதுமட்டும் இல்லாமல் பணம் கொடுத்தால் தான் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்பது போல் பல திட்டங்களை காட்டி பணம் பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இவர்கள் பணம் பிடுங்க பயன்படுத்தும் திட்ட விபரங்கள் உங்களுக்காக

►ஆசிர்வாத திட்டம்
►குடும்ப ஆசிர்வாத திட்டம்
►கட்டிட ஆசிர்வாத திட்டம்
►பிள்ளைகள் ஆசிர்வாத திட்டம்
► டிவி க்ளப்
►பிரார்த்தனை திருவிழா திட்டம்
►வணிக ஆசிர்வாத திட்டம்

இப்படி எதில் தொட்டாலும் கடவுளிடம் ஜெபம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட இவர்களிடம் பணம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் இவர்களிடம் வருபவர்களை பயமுறுத்தி பணம் பிடுங்கி வருகின்றனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து  சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது 

கும்பகோணம்  தீவிபத்தால் இறந்த  குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர்.  ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர்.  இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக  எடுத்து தொலைக்காட்ச்சியில் வெளியிடுகின்றனர்,   இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.


இப்படி இவர்கள் கொள்ளையையும், மோசடிகளையும் அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட இன்னொரு கொடுமை மக்களிடம் வாங்கப்படும் காணிக்கையை இவர்கள் செலவழிக்கும் விதம்தான். நீங்களே பாருங்கள்
மக்கள் பணத்தில் இருந்து கட்டப்பட்ட கல்லூரி:(சில உதாரணம் மட்டும்தான் இன்னும் நிறைய கட்டிடங்களும், வானகரம் போன்ற இடங்களும் கணக்கில் அடங்காதவை)
சென்னை பீச் ஸ்டேஷன்:


இந்த கட்டிடம் சென்னை பீச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் தொழில் முறையில் வணீக வளாகம் பிடிப்பதே பெரிய விஷயம் ஆனால் இவர்கள் மக்கள் பணத்தில் பெறப்பட்ட காணிக்கையை வைத்து இவ்வளவு விலை உயர்ந்த கட்டிடத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்புவதாக கூறிக்கொண்டு தொழில் நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றனர்.

மக்கள் காணிக்கை என்று இவர்களிடம் கொடுப்பது இறைப்பணிக்கு உதவும், ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றுத்தான் ஆனால் இவர்கள் அந்தப்பணத்தில் கல்லூரி கட்டவும், புதிதாக இடம் வாங்குவதிலுமே அதிகமாக செலவிடுகின்றனர்.

கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது

 கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும், தொலைக்காட்ச்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரட்ச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

JESUS CALLS நிறுவன இணையத்தளத்தின் சிலப்புகைப்படங்கள்:

இதில் ஒரு புகைப்படத்தில் கூட  கிறிஸ்த்துவத்தை குறிக்கும் சிலுவையையோ அல்லது கடவுளின் படமோ இல்லை இவர்கள் முழுக்க முழுக்க இவர்களது குடும்பத்தின் படத்தையும் இவர்கள் நிறுவனத்தின் லோகோவை குறிக்கும் கையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றுவதில் இவர்களும் ஒருவர் மட்டுமே, இன்னும் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன. அவர்களை பற்றிய விபரங்களுடன் அடுத்த பதிவில்.


பாவமும், குற்றமும் குறையும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்


கொள்ளை கும்பல் AMWAY NUTRILITE-2

Tuesday, January 11, 2011


ஆம்வே  நிறுவனத்தின் கொள்ளைகளை பற்றி நான் முன்பு எழுதியிருந்த பதிவுக்கு  பல  எதிர் பின்னூட்டங்கள் போடப்பட்டன அவர்கள் அனைவரும் ஆம்வே நிறுவனத்தில் இணைந்தவர்கள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது, ஏன் என்றால் நான் ஸ்பாம் செய்த பின்பும் மின்னஞ்சல் வழியாக பல கேள்விகள்,  உங்களுக்கு ஆம்வே நிறுவனம் பற்றி என்ன தெரியும்?, அவர்களுடைய தரம் பற்றி தெரியுமா? இப்படி   பல கேள்விகள். சரி இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று டெலிட் செய்துவிட்டேன். ஆனால் அந்த ஆம்வே பதிவில் கடைசியாக சிலர் பின்னூட்டம் போடும்போது எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள் நாங்கள் எங்கள் பொருட்களின் தரத்தை பற்றி விளக்குகிறோம் என்று பின்னூட்டம் செய்து இருந்தனர்.

எனக்கு அந்த பதிவில் சரியாக அவர்களுக்கு விளக்கவில்லையோ என்றுதான் தோன்றியது. சரி அந்தபதிவில்  அப்படி  என்ன  விடுப்பட்டது  என்று தேடியபோது மருத்துவம், தரம் போன்றவற்றை சரியாக  விமர்சிக்கவில்லை என்று தெரிந்தது, ஏன் என்றால் நான் அந்தபதிவில் பணம் இழப்பு பற்றித்தான் விளக்கி இருந்தேன.  அவர்களுடைய தரத்தையும், மருத்துவ பலன்களையும் பற்றி சரியாக விளக்கவில்லை. சரி அதைப்பற்றியும் விளக்கிவிடுவோம் இல்லையென்றால் எங்கள் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சிறந்தது என்று ஏமாற்றிவிடுவார்கள்.

இவர்கள்  ஒவ்வொரு பொருட்களையும் பரிந்துரைக்க  சொல்லும் வார்த்தை பக்கவிளைவுகள் இல்லை என்பதுதான், இன்னும் ஒரு சிலர் இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் நோய் வாய்  பட்டு  இறந்துவிடுவீர்கள் என்பது போல  பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்கள் அதிகமாக பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் NUTRILITE பொருட்கள்தான் அதிலும் இவர்கள்  பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ப்ரோட்டின் பவுடர்தான் இந்த ப்ரோடீன் பவுடரை இவர்கள் என்னென்ன சொல்லி விற்க முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி விற்று வருகின்றனர். எங்கள் உறவுக்கார் சில நாட்களுக்கு முன்பு  இனிப்பு வகையை உண்ணும்போது  உங்களுக்கு சுகர் இருக்கே  ஏன் இவ்வளவு  இனிப்பு எடுத்துக்குரிங்க என்று கேட்டபோது அவர் சொன்னபதில் "இல்ல நான் ஆம்வே ப்ரோடீன் பவுடர் சாப்பிடுறேன் அதனால எனக்கு சுகர் வராது" என்றார். இவருக்கு யார் இப்படி பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை, ப்ரோடீன் பவுடர் சாப்பிட்டால் சுகர் குறைந்துவிடும் என்று. இவர்களுக்கு மாதம் கிடைக்க வேண்டிய PV க்காக கண்ணா பின்னாவென வாயில் வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றி விற்று வருகின்றனர்.

இப்படி இவர்கள் கண்மூடித்தனமாக மருத்துவ பொருட்களை எடுத்துக்கொள்கிரார்களே, இப்படி  மருத்துவர் ஆலோசனை இல்லாமலே நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றிய சந்தேகத்தை  போக்கிக்கொள்ள இலங்கை மருத்துவர்   துமிழ் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்கள் உங்களுக்காக
புரோட்டின் என்றால என்ன ?
 
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவில் உள்ள போசனைப் பதார்த்தங்கள் பிரதானமாக கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), FAT, புரோட்டின, விட்டமின்கள், கனியுப்புக்கள் எனப் பிரிக்கப்படலாம்.இதிலே உடலின் அன்றாடத்  தேவைக்குரிய சக்தியை வழங்குவது பிரதானமாக கார்போ ஹைட்ரேட் அதைத் தொடர்ந்து கொழுப்புக்களும் (FAT)ஆகும். 

புரதமானது அன்றாட தேவைக்கான சக்தியை வழங்குவதை விட மிக முக்கியமாக உடலின் கட்டமைப்பை பேணுவதற்கு அவசியமாகும். குறிப்பாக உடலின் வளர்ச்சியின் போது இதன் அளவு   வழங்கப்படவேண்டும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து சுகமகிக் கொண்டிருக்கும் போதும் புரத தேவை சடுதியாக அதிகரிக்கும். அதாவது உடலின் கலங்கள் மீள் கட்டமைப்பதற்கும் சீர் செய்யப்படுவதற்கும் புரதம் இன்றி அமையாதது.அதுதவீர ஒருவர் போதியளவு மாப்பொருள் சத்தையும் ,கொழுப்புச் சத்தையும் உட்கொள்ளாவிட்டாலஅன்றாட தேவைகளின் சக்திக்காக உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதங்கள் பாவிக்கப் படும்.  இதனால் உடலின் கட்டமைப்புச் சீர் குழைந்து மெலிந்த தோற்றமுடையவர்களாக மாறுவார்கள். 


அதாவது ஒருவர் உண்ணும் உணவில் அனைத்துவிதமான போஷாக்குப் பதார்த்தங்களும் தேவையான அளவிலே இருக்க வேண்டும். மாறாக தனியே புரதத்தினை மட்டும் அதிகம் உட்கொள்ளுவதால் நன்மையில்லை .


புரோட்டின் பவுடர்கள் எனப்படுபவை யாவை?

இவை உடலுக்குத் தேவையான அமைனோ அமிலங்களை செறிவாக்கி உருவாக்கப் பட்டவை. இவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்களை இலகுவாகப் பெற்றுக்  கொள்ள முடியும் என்று சொல்லப் படுகிறது. இவற்றில் உள்ள அமைனோ அமிலங்களும் இலகுவாக உள்லேடுக்கப் படக் கூடியதென சொல்லப் படுகிறது.  இவற்றை உண்பதால் உண்மையில் நன்மைகள் ஏற்படுமா? ஏற்கனவே சொன்னது போல நமக்குத் தேவையான போஷாக்குகள் அனைத்தும் தேவையான அளவிலே கிடைத்தால் மட்டுமே நமது உடலின் தொழிற்பாடுகள் சரியாக நடைபெறும். அவ்வாறு நாமக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளையும் பெற்றுக்கொள்ள சிறந்த வழி போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதே. தனியே புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளுவதால் புரோட்டினும் சில கனியுப்பு,விட்டமின்களும் கிடைத்தாலும் நமது அன்றாடத் தேவைக்கான சக்தியை வழங்கும் மாப்பொருள் கொழுப்பு என்பவற்றிற்காக நாம் உண்ணும் உணவையே நம்பியிருக்கு  வேண்டும். இவ்வாறு உண்ணும் உணவில்  முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்த்து விட்டாலே போதும் தேவையான புரதத்தையும் சுவையான சாப்பாடுடன் பெற்று விடலாம். பிறகேன் தேவை இல்லாமல்புரட்டின் பவுடர்களுக்காக காசினைச் செலவு செய்ய வேண்டும்?உண்மையில் யாருக்கு புரோட்டின் பவுடர் தேவைப்படும்?

படுக்கையிலே இருக்கும் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ள  முடியாமல் குழாய் மூலம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு புரட்டின் பவுடர் வழங்குவது இலகுவாக இருக்கும். சில நோய்கள் ஏற்பட்டு சுகமாகும் காலத்தில் புரோட்டின் தேவை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது புரட்டின் பவுடர் உதவும் என்றாலும் அந்த நேரத்திலும் உணவின் மூலம் புரதத்தினைப் பெற்றுக் கொள்ள கூடியவர்கள் உணவில் புரதம் கூடிய உணவுகளை அதிகரிப்பது புரோட்டின் பவுடர் பாவிப்பதை விட சிறந்தது.

உடற் கட்டலகுக்காக தசைகளை புடைக்கச் செய்யும் நோக்கோடும் புரோட்டின் பவுடர்களை ஆண்கள் பாவிப்பதுண்டு.  இந்த நோக்கத்திற்காக பாவிக்கும் ஆண்கள் கட்டாயமாக மாப்பொருள் கொழுப்பு போன்றவற்றையும் சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டியதோடு போதிய உடற்பயிர்ச்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.

ஆக , சுகதேகியான ஒருவர் அல்லது உணவுகளை உட்கொள்ளக் கூடிய ஒருவர் தனக்குத் தேவையான புரத்தைத்தினை உணவின் மூலம் பெருக் கொள்ள முடியும் போது அனாவசியமாக எதற்காக புரோட்டின் பவுடர்களை நம்பி காசை செலவழிக்க வேண்டும். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் அனைத்துமே  ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்டவை.அந்த காசிற்கு நல்லஉணவினை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடலாமே.

அதற்கும் மேலாக சந்தையில் இப்போது ஏராளமான புரோட்டின் பவுடர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அதிக விளம்பரம் உள்ள புரோட்டின் பவுடர் நல்ல தரமானது என்ற பெயருடன் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆகவே புரோட்டின் பவுடர் பாவிக்கத்தான் போகிறேன் என்று அடம் பிடிப்பவர்கள் விளம்பரத்தில் ஏமாறாமல் மற்றைய புரோட்டின் பவுடர்களின் விலைகளை பார்த்து நியாயமான விலையில் இருப்பதை தெரிவு செய்யுங்கள். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்களின் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். முக்கியமாக நாட்பட்ட நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் வைத்தியரின் அனுமதி இன்றி புரோட்டின் பவுடர்களை பாவிக்க வேண்டாம்.
                                                                                                     

நான் ப்ரோடீன் பவுடரை மட்டும் குறிப்பிட்டு சந்தேகங்களை கேட்க்க காரணம் ஆம்வே நிறுவனம் NUTRILIRE என சொல்லப்படும் மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் இதை தான் முன்னிறுத்தி விற்பனை செய்துவருகின்றனர். 

இன்னொரு விஷயத்தில் ஆம்வே நிறுவனத்தில் கவனிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய பொருட்களை வாங்குபவர்கள் எப்படியாவது முதல் முறை ஏமாற்றப்பட்டு வாங்கிவிடுகின்றனர், பின்பு அந்த பொருளை பயன்படுத்தும்போது  விலை உயர்ந்த பொருள் என்று மனதில் நினைத்துக்கொண்டே பயன்படுத்துவதால் இதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்(உளவியல் ரீதியில் இதுதான் நடந்து வருகிறது).

சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவுக்காரர் ஊரில் இருந்து ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர் எப்போதும் ஹமாம் சோப்புதான் பயன்படுத்துவார், நாங்கள் வேறு ஏதேனும் ஒரு சோப்பை கொடுத்தால் வேண்டாம் எனக்கு ஹமாம் பழகிவிட்டது என்று சொல்வார். ஆனால் இந்த முறை அவருக்கு ஹமாம் சோப்பு கொடுக்கும்போது அவர் சொன்ன பதில்  "ஆம்வே சோப்பு தவிர வேறு சோப்பு போட்டால் உடல் அரிக்கிறது" என்று. எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை பல ஆண்டுகளாக ஹமாம் சோப்பு பயன்படுத்தியவர் இப்போது இந்த விலை உயர்ந்த சோப்பை பயன்படுத்தவில்லை என்றால் உடல் அரிக்கிறது என்று கூறுகிறார் என்றால் பாருங்கள் இவர் எந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனம் மாறிவிட்டார் என்று. 

அதேப்போல்தான் இவர்கள் விற்பனை செய்யும் முகத்தை அழகுப்படுத்தும் க்ரீமும் , யாராவது ஒருவர் தன் கண் முன் கருப்பாக தெரிந்துவிடக்கூடாது உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று ஏதாவது ஒரு க்ரீமை பரிந்துரைத்து பணத்தை கரந்து  விடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால்  இதுவரை ஒருநாளைக்கு ஒருமுறை முகம் கழுவியவன் இந்த க்ரீம் தடவுவதர்க்காகவே மூன்று நான்கு முறை தன் முகத்தை கழுவுகிறான். இதனால் முகம் கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தாலும் க்ரீம் மூலம் தான் வெள்ளை கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு  மற்றவர்களிடமும் பரிந்துரைக்கின்றார்.  சாதாரணமாக  எந்த ஒரு க்ரீமும் போடாமல் ஒருநாளைக்கு காலையும் மாலையும் முகத்தை கழுவினாலே முகம் பளிச்சிடும்.  ஆனால்  ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முகம் கழுவும்  நபர்களை    இப்படி விலைஉயர்ந்த பொருட்களை வாங்கவைத்து  தனக்குள்ளேயே இவர்கள் பொருட்கள்தான் குணப்படுத்துகிறது என்று நினைக்கவைத்து  மேலும் மேலும் ஏமாற்றி  வருகின்றனர்.

அதே போல் இவர்கள்  விற்பனை செய்யும் பேஸ்ட், பிரஷ்  போன்றவற்றுக்கும் இவர்களைவிட விலைகுறைந்த தரமான இந்தியபொருட்க்கள் பலவற்றை  கூறலாம்.  ஆனால் பரிந்துரைப்பவர் உறவினர் நண்பர் என்பதால் முகத்தாட்ச்சனைக்காக  வாங்கிவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருள் என்பதால் தனது மனதுக்குள்ளேயே தான் இதற்க்கு முன் பயன்படுத்திய பொருளை விட நன்றாக உள்ளது என்று தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர். விழித்துக்கொள்ளுங்கள்:
நம் நாட்டின் மீது மறைமுகமாக பல நாடுகள் போர் தொடுத்து  வருகின்றன, போர் என்பது ஆயுதம் ஏந்தி போரிடுவதுதான் என்று இல்லை. பொருளாதார ரீதியில் 120 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நமது பொருட்களை நாம் தயார்க்கமுடியாமல், பயன்படுத்த முடியாத அளவுக்கு   பல அயல்நாட்டுப் போருட்களை வாங்கி நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் சீரழித்து, அழித்து வருகிறோம். இதனால்  நமக்கு எந்த பாதிப்பும் வராது என்ற மனக்கணக்கை போட வேண்டாம், நாம் என்னத்தான் கோடி கோடியாக  பணம் சம்பாதித்தாலும் சாப்பிட  உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்று உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியாலும், வறுமையாலும் தற்கொலை செய்துக்கொள்ளும் அவல நிலையை உருவாக்கி வருகிறோம். இந்த தற்கொலைகள் நாளை மிகப்பெரிய  ஒரு அழிவை உண்டாக்குவதர்கான அறிகுறி மட்டுமே. பறவைகளின் அழிவு எப்படி இயற்க்கை சீரழிவை காட்டுகிறதோ அதே போல்  தான் இந்த உழவர்களின் தற்கொலை நாளை நம் நாட்டின் பேரழிவை எச்சரிக்கிறது. இந்த அழிவை தவிர்க்கவேண்டிய கடமை மக்களாகிய நம்மிடம்தான் உள்ளது.  ஆட்சியாளர்களை  குறைக்கூறி அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாம். நம் நாட்டின் வளத்தை சுரண்டி வெளி நாட்டில் பதுக்கவும், வசிக்கவும் தயாராகி வருகின்றனர்.  இலங்கையை  போல் நாளை நாமும் இழப்பு என்று வரும்போது வசதி படைத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற அவள நிலையை நம்மை அறியாமலே நாம் உருவாக்கி வருகிறோம்.

நம் நாட்டின் அருமை பெருமை தெரியாத இத்தாலிய பெண்ணும், ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நம் நாட்டை அண்டை நாடுகளிடம் அடகு வைத்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கப்போவது   நாம்  தான். தயவு செய்து அண்டைநாட்டு பொருட்களையும், உணவுகளையும் தவிர்த்து நம் நாட்டின் உழவர்களையும், தொழிலாளர்களையும் பாற்றி சிந்தித்து செயல்படுங்கள்.  எதிலுமே சுயநலமாக சிந்தித்து இன்று நமக்கு நாமே குழிபறித்து வரும் செயல் தான் இந்த அண்டை நாட்டு பொருட்களை பயன்படுத்துவது. விழித்துக்கொள்ளுங்கள்....

 பதிவை எழுத  ஊக்கமும், உதவியும் செய்த இலங்கை பதிவர்கள்  நண்பர் துமிழின் பக்கங்கள் மற்றும் தோழி  சித்தர்கள் இராச்சியம்  அவர்களுக்கு எனது நன்றிகள்.கொள்ளை கும்பல் AMWAY முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்

பகுதி நேரத்தில் சம்பாதிக்க- தொழில்-1

Monday, January 10, 2011

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  


இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 


சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)

1. TICKET BOOKING 
டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.

TRAIN : ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:
1 . IRCTC - www.irctc.co.in
IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.

இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS
பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள் TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

3.CINEMA TICKET
சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள் 1.WWW.TICKETNEW.COM

2.BILL PAYMENT
இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:
►INSURANCE
►TELEPHONE BILL
►ELECTRICITY BILL

இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. அரசு இணையதள  முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.


அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL  போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை


►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN
►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM
►ITZCASH               - WWW.ITZCASH.COM
►ICASHCARD          -WWW.ICASHCARD.IN
►BEAM                    -WWW.BEAM.CO.IN

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.

பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:

►TICKET GOOSE  - WWW.TICKETGOOSE.COM
►REDBUS             - WWW.REDBUS.IN

TRAIN, FLIGHT இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:
1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்) 
  
3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.

இன்னும் ஒரு சிறந்த தொழிலுடம் அடுத்த பதிவில்.........பங்குச்சந்தை ஓர் அறிமுகம் (புதியவர்களுக்கு A-Z)

Friday, January 7, 2011பங்குச்சந்தை பற்றி அறியவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு.

புதியவர்களுக்கு பங்குச்சந்தை என்பது   இன்னும் ஒரு மாயையாகத்தான் உள்ளது. அதில் பணம் பண்ண முடியுமா  முடியாதா  என்பதே பலரின் கேள்வி. இந்த  சந்தேகம் புதியவர்களிடம் மட்டும் இல்லாமல் பங்குச்சந்தையில் உள்ள பலரது சந்தேகமும்  இதுதான். ஏன் என்றால் லாபம் வந்தாலும் ஏதோ ஒரு வழியில் மீண்டும் பணத்தை இழப்பவர்கள் தான் பலப்பேர். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் புதியவர்கள் பங்குச்சந்தையை அணுகும் முறைதான். சரி பங்குச்சந்தையை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழிகள்:
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூன்று வழிகளில் முதலீடு செய்யலாம் 1 . MUTUAL FUND வழியாக முதலீடு செய்வது,  2 . ULIP என்று சொல்லப்புடும்  இன்சூரன்ஸ் திட்டங்கள் வழியாக அல்லது  3 . புரோக்கர் உதவியுடன் நாமே நேரடியாக முதலீடு செய்வது .

1 . MUTUAL FUND :
 MUTUAL FUND வழியாக  முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஓரளவு பங்குச்சந்தை பற்றிய அறிதல் இருந்தாலே  போதுமானது.  இதில் சிறப்பம்சம் என்று பார்த்தல்  ULIP திட்டத்தை விட முதலீட்டின்  வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்,  அதேப்போல் ULIP திட்டத்தை விட இதில்  முதலீட்டின் நிறுவன  கமிஷனும்  குறைவுதான். ஆனால் முதலீடு ரிஸ்க் முழுவதும் முதலீட்டாளரையே சாரும். ULIP திட்டங்களை விட கொஞ்சம் ஆபயகரமானது என்பதால் தினமும் முதலீட்டின் வளர்ச்சியை கவனிக்கக்கூடியவர்கள் மட்டும் MUTUAL FUND ல் முதலீடு செய்தால் நல்லது.


2 . யூலிப் திட்டங்கள்(ULIP)
யூலிப்  திட்டங்கள்  பற்றி  சொல்லவே தேவையில்லை என்று  நினைக்கிறேன்,  ஏற்க்கனவே பலர் இந்த திட்டத்தால்  ஏமாற்றப்பட்டு விட்டனர்.  தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், இன்சூரன்ஸ் நிறுவனங்களால் நடத்தப்படுவது தான்  யூலிப் திட்டங்கள். நண்பர்களோ அல்லது உறவினர்கள் மூலமாக நீங்கள் இந்தத்திட்டத்தை இனி  அறியப்படலாம். அவர்கள் உங்களை  அணுகும்போது உங்களிடம் சொல்லும் வார்த்தை வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதம் ஒரு முறை   குறிப்பிட்டத் தொகையை தொடர்ந்து  மூன்று வருடங்களுக்கு கட்டினால் போதும்,  அதற்குப்பின் உங்கள் முதலீடு கன்னாப்பின்னாவென்று ஏறிவிடும் இப்படித்தான் ஆசைவார்த்தை கூறி உங்களை இணைக்க முயற்சி செய்வார்கள். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கீழே உள்ளதை படித்து விழித்துக்கொள்ளுங்கள்.

யூலிப்-  இதில் சிறப்பம்சம் என்று சொன்னால் நாம்  முதலீடு செய்யும்  தொகையில்  பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும், முதலீடு செய்பவருக்கு இன்சுரன்ஸ் போன்றவையும் ஒரே திட்டத்தால் கிடைப்பதுத்தான். ஆனால் இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் திட்டம் என்றே சொல்லலாம். யூலிப் திட்டத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் வங்கியில் நாம் முதலீடு செய்யும் நிரந்தர வைப்புத்தொகையை (FIXED DEPOSIT) விட குறைவுத்தான், ஏதாவது ஒருதிட்டம் நிரந்தர வைப்புத்தொகையை விட  வளர்ச்சி அதிகமாக இருக்கலாம் அது ஏமாற்றுபவர்களை  பொறுத்து.   ஆனால் இதில்  முதலீட்டின் ரிஸ்க் முழுக்க முதலீட்டாளரையே சாரும். அதேப்போல் நாம் முதலீடு செய்யும் தொகையில் அதிகப்படியான வளர்ச்சித்தொகை நாம் முதலீடு செய்த  நிறுவனங்கள் சுரண்டவே  சரியாக இருக்கும்.  என்னைக்கேட்டால் இதுப்போன்ற திட்டத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்றுத்தான் சொல்வேன், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பயன்படுத்தும் திட்டம் தான் இந்த யூலிப் திட்டம் என்பது என்கருத்து, லாக்கிங் பீரியட்  கூட இதில் ஒரு பாதகமான அம்சம்தான்.  இன்சுரன்ஸ் நிறுவனங்களை கண்காணிக்கும் IRDA இவர்கள் சுரண்டலை கண்டும் காணாமல் இருப்பது வருத்தமே. கேரண்டி தொகை சிறப்பம்சம் உள்ளது  என்று கூட  உங்களிடம் யாராவது இந்த திட்டத்தை பரிந்துரைத்தால் ஆங்கில படிப்பறிவு இல்லாதவர்கள்   முடிந்தவரை ULIP திட்டத்தை தவிர்க்கவே  பாருங்கள் அல்லது இந்த திட்டத்தை பற்றி இணையும் ஒப்பந்தத்தில் சரியாக படித்துவிட்டு இந்த திட்டத்தால்  நமக்கு நன்மை உண்டா என்று அறிந்து விட்டு இணையப்பாருங்கள். இல்லையென்றால் வங்கியில் செய்யப்படும் நிரந்தர வைப்புத்தொகையே யூலிப் திட்டத்தை விட  சிறந்தது, அபாயகரம் இல்லாதது.

3 . பங்குச்சந்தையில் நேரடி முதலீடு:
நேரடியாக நாமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும். தகுதியே தேவையில்லை கணினி பயன்படுத்த தெரிந்தால் போதும்  என்று சிலர் தொலைக்காட்ச்சியில் கதை அளப்பார்கள் நம்பிவிட வேண்டாம்.

தகுதி:
படிப்பறிவு நிச்சயம் தேவை(பங்குச்சந்தை பற்றிய செய்திகளை உள்வாங்கும் அளவுக்கு), பொறுமையாக எதையும் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும், பதட்டப்படுபவராக இருக்ககூடாது,  மாதவருமானம் பெறக்கூடியவர் அல்லது செலவுக்கு மீறி கையில் பணம் வைத்திருப்பவர்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே பங்குச்சந்தையை நாடினால் நல்லது இந்த  தகுதிகளில்  ஏதேனும் ஒன்று இல்லை  என்றால் கூட  அவர்கள் பங்குச்சந்தை பக்கமே வரவேண்டாம், உங்களுக்கு வங்கி நிரந்தர வைப்புத்தொகையே சிறந்தது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க. 

முதலீடு தொகை:   
எக்காரணத்தைக்கொண்டும் புதியவர்கள் முதல் முறை முதலீடு செய்யும்போது   5000 (ஐந்தாயிரம்) ரூபாய்க்கு  மேல் முதலீடு செய்ய வேண்டாம். ஐம்பதாயிரம்/ஒருலட்ச்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் தரகு தொகையில் சலுகை கொடுக்கிறேன் என்று தரகு நிறுவனங்கள் ஆசைக்காட்டினாலும் அடம்பிடிக்கவும் வேண்டாம் என்று.  ஆரம்பத்தில் 2500 ரூபாய் முதலீடு செய்தாலும் நல்லதே. முதலீடு செய்து சில மாதங்களுக்குப்பின் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தகுதியானவர்தான் என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே மேலும் முதலீடு செய்யவும்,தொடரவும்  இல்லையென்றால் கணக்கை மூடிவிட்டு பொழப்பை பார்க்கவும்.

பங்குச்சந்தையில் கணக்கு தொடங்க தேவையானவை:
            பான் கார்ட்(PAN CARD),  வங்கி கணக்கு( கண்டிப்பாக  வாடிக்கையாளர்  பெயரில்), ரேஷன் கார்ட், புகைப்படம், படிப்புச்சான்றிதல்.

தரகர்:
பங்குச்சந்தையில் நாம் இணைய வேண்டும் என்றால் முதலில் அணுகவேண்டிய நபர் பங்கு தரகர்/தரகு நிறுவனம். பங்கு கணக்கை தொடங்கும்போது அதை சரியான இடத்தில் தொடங்கினாலே பாதி கிணறு  தாண்டிய  மாதிரித்தான். ஏன் என்றால் இன்று பல நிறுவனங்கள் தரகர் தகுதி இல்லாமலே தரகு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், ஏமாற்றி வருகின்றனர்.  எப்படியாவது பணம் சம்பாதித்துவிடலாம் என்றுத்தான்.

சில முன்னணி பங்கு நிறுவனங்கள்:

1. ANGEL BROKING
2. INDIA INFOLINE
3. ICICI DIRECT
4. RELIGARE
5. RELIANCE MONEY

இன்னும் பல பெரிய, சிரிய நிறுவனங்கள் உலா வருகின்றன. இவற்றில் சிறந்தது எது என்று கண்டுப்பிடிப்பது கடினமே. சில தகுதிகளை சொல்கிறேன் இணையும்போது கவனித்துக்கொள்ளுங்கள்: நீங்கள் இணையும் முன் அந்த நிறுவனத்தில் ஒருவாரம்மாவது தினமும்  சென்று பங்குச்சந்தையை கவனிக்கவும். கவனிக்கும் சாக்கில் அங்கே வந்து செல்பவர்கள், நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் அணுகும் முறை, அவர்களின் வணிக உத்திகள் போன்றவற்றை கவனித்துக்கொள்ளவும்.  ஒருவாரம் கழித்து உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அங்கே பங்கு கணக்கை தொடங்கவும். இல்லையென்றால் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அவர்களை கட் செய்யவும்.

அதேப்போல் நீங்கள் இணையும்போதே தரகு தொகையை கேட்க்கும் நிறுவனத்தில் இணையவேண்டாம். பங்குகணக்கை தொடங்கும்போது 750 முதல்  1000  ரூபாய்  வரை மட்டுமே கேட்கும் நிறுவனத்தில் மட்டும் கணக்கை தொடரவும். ஏதாவது பிளான் என்று சொல்லி வருடம் 2000, 3000 என்று சொன்னால் இவர்களையும் கட் செய்யவும்.

பங்குச்சந்தையில் லாபம் பார்க்க முடியுமா?
நான் மேலே   தகுதி என்று கூறியது பங்குச்சந்தையில் ஈடுப்படுவதர்க்கு மட்டுமே ஆனால் பங்குச்சந்தையில் லாபம் பெறவேண்டும் என்றால் சிலவற்றை  கற்றிருக்க வேண்டும். அவற்றை கற்காமல்  எக்காரணத்தை கொண்டும் பங்கு கணக்கை தொடங்க வேண்டாம். பங்கு கணக்கை தொடங்கியப்பின் கற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஆர்வக்கோளாரில் பணத்தை இழந்துவிடுவீர்கள். நீங்கள்  கறக்கவேண்டியதில்  முதன்மையானது தொழில்நுட்பப பகுப்பாய்வு(TECHNICAL ANALYSIS). தொழில்நுட்ப  பகுப்பாய்வில் பல வகைகள் உள்ளது  அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது சிறந்த முறையில் கற்றிருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக புகைப்படத்துடன் விளக்கத்துடன் பதிவிடுகிறேன் அதற்குள் ஆர்வத்தில் யாரிடமாவது பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறேன்  என்று பணத்தை இழந்து விட வேண்டாம்.                    

புதியவர்களின் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்கள்:
புதிதாக  பங்குச்சந்தைக்கு வருபவர்களின் சந்தேகம் என்று பார்த்தால் ►பங்கு என்றால் என்ன?  ►ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது? ►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்? ►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது? ►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?   என்பதுததான்.

பங்கு என்றால் என்ன?
ஒரு நிறுவனம்/கம்பனி தொடங்கும்போது முதலீட்டின் தொகை நிறவனத்தின் முதலாளியிடம் குறைவாக இருந்தால் அதனை மக்களிடம் இருந்து   வசூலிக்க  பயன்படுவதுதான் பங்கு(SHARE ). அதாவது ஒரு நிறுவனத்துக்கு மக்கள் மூலம் 100000 (ஒருலட்சம்) ரூபாய் தேவைப்படுகிறது என்றால் அதை பங்கு என்று வெளியிடும்போது சிறு விலைக்கு பிரித்து  வெளியிடுவார்கள். உதாரணத்துக்கு ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்றால் (100000/100) ஆயிரம் பங்குகளை வெளியிடுவார்கள் 1000X100=100000 ரூபாய். அதை வெளியிட சில வழிமுறைகள் உள்ளது  அதைப்பற்றி பின் வரும் நாட்களில் விளக்கமாக பதிவிடுகிறேன்.

ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது?
பங்குகள் மக்களிடம் வெளியிட்டப்பின் பங்கை வெளியிட்ட நிறுவனத்தின்  செயல்பாட்டை பொறுத்து பங்கின் விலை நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு  அந்த நிறுவனம் புதிதாக ஏதாவது அரசு டெண்டர் எடுத்தால் அல்லது புது ஆர்டர் பெற்றால் அதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கில் கொண்டு  அந்த நிறுவனத்தின்  பங்கு(SHARE ) விலை பங்குச்சந்தையில் ஏற்றம் அடையும்.  ஒரு வேலை அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒருவழியில் இழப்போ அல்லது நட்டமோ அடைந்தால் பங்குச்சந்தையில் அதன் பங்கு விலை குறையும். இதை கருத்தில் கொண்டுத்தான் பங்கின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்?
சரி நிறுவனம் தான் லாபத்தில் போகிறதே பிறகு  ஏன் பழைய ஆட்கள்(பங்குதாரர்கள்) பங்கை(SHARE ) விற்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்க்கு காரணம் நூறு ரூபாய்க்கு வாங்கியவன் கொஞ்சம் லாபம் வந்தவுடன் லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் தன் கையில் இருந்த பங்கை விற்க முயலுவான். அந்த பங்கை வாங்குபவன் அந்த நிறுவனம் இன்னும் லாபம் அடைந்து பங்கின் விலை இன்னும்  மேலே போகும் என்ற நம்பிக்கையில் அந்த பங்கை வாங்குகிறான். அதேப்போல் அந்த நிறுவனம் நஷ்ட்டம் அடைந்தால் அந்த பங்கின் விலை சரியும், அப்படி சரியும்போது மேலும் நஷ்ட்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக பழைய பங்குதாரர்கள் பங்கை விற்று நஷ்ட்டத்தை தவிர்க்க பங்கை விற்ப்பார்கள். அந்த பங்கை வாங்குபவர்கள் அந்த நிறுவனம் நஷ்ட்டத்தில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கையில் வாங்குவார்கள்.

►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது?
 பங்கை(SHARE ) வாங்குபவன் பங்கின் விலை சரியும்போது வாங்கினால் எப்படியும் மீண்டும் பங்கின் விலை உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறான். ஆனால் அவன் வாங்கியப்பின்பும் பங்கின் விலை மேலும் சரிந்தால் பங்கின் விலை ஏறும் என்று நம்பி வாங்கியவனுக்கு நஷ்ட்டத்தை ஏற்ப்படுத்திவிடும், இதனால்தான் பங்குச்சந்தையில் நஷ்ட்டம் ஏற்ப்படுகிறது. இது உதாரணம் மட்டும்தான் மேலும் நஷ்ட்டம் அடைய பல வழிகள் உள்ளன அதனை பின்வரும் நாளில் பதிவிடுகிறேன்.

►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?
ஆரம்ப நாட்களில் பங்கை விற்பனை/வாங்க  வேண்டும் என்றால் பத்திரம் மூலம் தான் வாங்க முடியும் அதுவம் நாம் வாங்கியப்பங்கு கைக்கு வரவேண்டும் என்றால் பலநாட்கள் பிடிக்கும்.  பிறகு கணினி, இணையத்தளம்  பயன்ப்பாடு அதிகரித்தப்பின் DEMAT என்னும் முறையில் கணினி வழியாகவே பங்குகளை வாங்கிவிடலாம் என்று  இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை அறிமுகப்படுத்தியது. இப்போது பங்குகளை வாங்கவேண்டும் என்றால் இணையத்தளம் வழியே ஒரு நிமிடத்தில் வாங்கி விடலாம். பணம் பரிமாற்றம், பங்கு பரிமாற்றம் எல்லாமே சில வினாடியில் கணினி வழியே நடந்து விடும்.


தயவு செய்து யாரும் ஆர்வக்கோளாரில் பங்குச்சந்தையில் இணைந்துவிட வேண்டாம். மேலே நான் சொன்ன தகுதிகள் இருக்க வேண்டும், இன்னும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவரை பொறுமை காக்கவும்.

அடுத்தப்பதிவில் பங்கு பரிமாற்றம், பணம் பரிமாற்றம் எப்படி நடக்கிறது. DEMAT என்றால் என்ன என்று விளக்குகிறேன்.


கொக்கா மக்கா 6/1/2011

Thursday, January 6, 2011

தேர்தல் நெருங்குவதால்  வலைப்பதிவர்கள் தங்களை இப்போதே தயார் படுத்திக்கொண்டால் நமக்கு அங்கிகாரம் கிடைக்க  சரியான வாய்ப்பாக இருக்கும். எப்படியும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு ஊதியம் கொடுக்கும் கட்சியினருக்குத்தான் சாதகமாக செய்திகளை வெளியிடுவார்கள் என்று மக்களுக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது.  இப்போதைய சூழ்நிலையில்  நடுநிலையோடு செய்திகள், விமர்சனங்கள் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பது வலைப்பதிவர்களைத்தான்.  அதனால் இப்போதே   அரசியல் கட்சிகளை நடுநிலையோடு விமரிசிக்க பதிவர்கள்  தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தால்  நன்றாக இருக்கும்.
 __________________________________________________
அதேப்போல் தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் வலைப்பதிவர்களிடம் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.  வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களிடம் இந்த கருத்துக்கணிப்புகளை நடத்த ஒரு விட்கேட் தயாரிக்க முயற்சி செய்து வருகிறேன்.  அதனால் சரியான கேள்விகளை தயார்ப்படுத்திக்கொண்டு  அந்த கருத்துகணிப்புகள் நடத்துவதற்கு இப்போதே தயார்ப்படுத்திக்கொண்டால் சரியாக இருக்கும்.   கருத்துக்கணிப்புகளை அனைத்து வலைத்தளங்களிலும் நடத்தாமல் அண்ணண்கள் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், KRP செந்தில் ,சித்ரா அக்கா, CLASSROOM 2007 போன்ற வலையுலக  ஜாம்பவான்கள் தளங்களில் மட்டும் நடத்தினால் கருத்துக்கணிப்புக்கள் நடத்தவும், வெளியிடவும் கவுரவமாக இருக்கும். கருத்துக்கணிப்பும், ஓட்டுக்கள் எண்ணிக்கை, முடிவு எல்லாம் ஒரே நாளில் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.  உங்கள் முடிவை சொல்லுங்கள்.
 __________________________________________________
 சில நாட்களுக்கு முன் செங்கோவி என்ற வலைத்தளத்தை பார்த்தேன்.  தேர்தல் ஸ்பெஷல் என்ற தலைப்பில் அரசியல்  பதிவுகளை  நண்பர் எழுதி வருகிறார், வலைப்பதிவர்கள் அவரை  ஊக்குவித்தால் அவர் இன்னும் சிறந்த பதிவுகள் எழுத ஏதுவாய் இருக்கும். அரசியல் பதிவுகள் எழுதுவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் திரட்டி அருமையாக    எழுதி  வருகிறார். ஆனால் அதற்கேற்ற வரவேற்ப்பு எனக்கு குறைவாகத்தான் தெரிந்தது.  அவருடைய வலைத்தளத்தை பார்க்க செங்கோவி , வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)
 __________________________________________________
சில நாட்களாக உஜிலா தேவி என்ற வலைப்பதிவை விளம்பரம்படுத்தும் நோக்கில் ஒரு மனிதர் வலையுலகில்  உலா வருகிறார். அவர் எதற்க்காக இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அண்ணன் "உண்மைத்தமிழன்"  பெயரில் ஒரு பிரச்னையை உருவாக்கியவரும் இவர்தான்.  எல்லாம்  வலைத்தளத்திலும்  பின்னூட்டம் போட்டுவிட்டு உஜிலாதேவி வலைத்தளத்துக்கு லிங்கும் கொடுக்கிறார். அவருடைய PROFILE பார்த்தல் "எனக்கு பிடித்த தளம் உஜிலா தேவி அதை படித்துவிட்டுத்தான் வேறு தளத்தை பார்ப்பேன்" என்று எழுதி உள்ளது.   இன்று ஒரு தனியார் செய்தி தளத்திலும் அவர்களுடைய பின்னூட்ட விளம்பரம் பார்த்தேன். உஜிலா தேவி வலைத்தளம்   ஆன்மிகம் சார்ந்த  வலைத்தளம் என்பதால்  உரியவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் வலைப்பதிவர்கள் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
 __________________________________________________
 நான் எழுதிய "கொள்ளை கும்பல் ஆம்வே" என்ற பதிவை பல தளங்களிலும், வலைத்தளங்களிலும் பார்த்தேன் நான் பதிவிட்ட மறு நாளே பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்களாலும்  விழிப்புணர்வு ஏற்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால்  கடைசி வரியில் எனக்கு ஒரு லிங்க்காவது  கொடுத்து இருக்கலாம. ஏன் என்றால் அந்த பதிவை எழுதவும், அதில் உள்ள தகவல்களை திரட்டவுமே எனக்கு  பல நாட்கள் பிடித்தது. அதனால் அந்த பதிவுக்கு முன்பு பத்து நாட்களுக்கு வேறு பதிவு எழுத, பதிவிட  முடியாமல் போனது வேறுகதை. அந்த சிறு வருத்தத்தால் எனது வலைத்தளத்தில் யாரும் காபி(COPY) செய்ய முடியாமல் செய்துவிட்டேன். ஆனால் இது  பின்னூட்டம் இடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் மன்னிக்கவும்.
 __________________________________________________
 2011 ஆம் ஆண்டு தமிழ் வலையுலகுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. பதிவுலகுக்கான அங்கிகாரமும், கவுரவமும் கிடைக்கும் நோக்கில் பதிவர்கள் பதிவுகளை தேர்வு செய்து எழுதினால் கொஞ்சம்  நன்றாக  இருக்கும். அதேப்போல் தரம் கெட்ட வார்த்தைகளையோ அல்லது மதம், ஜாதி, ஆபாசம், வன்முறை  போன்றவற்றை ஆதரித்து, எதிர்த்து பதிவுகள் எழுதாமல் இருந்தால் இன்னும்  நன்றாக இருக்கும். அண்ணன் சவுக்கு, வினவு போன்று இன்னும் பலர் துணிந்து எழுதினால் மக்கள் போலி வார இதழ்களை குப்பையில் போட்டுவிடுவார்கள்.   2011க்கான உங்கள் சபதத்தில் வலைப்பதிவை ஊக்குவிப்பேன், கவுரவிப்பேன் என்றும் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் கட்சிகளின் பலம் பணம் என்றால் மக்களின் பலம் வலைத்தளம் என்று மாறவேண்டும். அது நம் கையில்தான் உள்ளது.
 __________________________________________________
 இலங்கையில் இருந்து எழுதும் தமிழ்  வலைப்பதிவர்கள் கொஞ்சம் அங்கே உள்ள சூழ்நிலையையும், அவர்களுடைய  இப்போதைய நிலையையும் குறித்து  எழுதினால் இங்கே உள்ள உண்மையான  தமிழர்களுக்கு உதவியாய் இருக்கும். கையில் ஆயுதம் ஏந்தி போராடுவதுதான் போராட்டம் என்று அர்த்தம் இல்லை எழுத்து,  பேச்சு போன்றவற்றால் கூட அநீதிகளை எதிர்த்து போராடலாம். பதிவர் ம.தி.சுதா அவர்கள் எழுதிய ஒரு பதிவில் அங்கே உள்ள விலைவாசியும்,  அவர்களுடைய அவல நிலையம்  இங்கு உள்ளவர்களுக்கு தெரியவைத்தது.  அதே போல் "எப்பூடி" என்ற வலைத்தளத்தில் எழுதும் "ஜீவதர்ஷன்" அவர்கள் கூட ஈழம் பற்றி  எழுதினால் நன்றாக இருக்கும். நான் பார்த்த இலங்கைத்தமிழர்களில்  எழுத்தால் என்னை கவர்ந்தவர். அவர் சொல்லவந்ததை படிப்பவர்களுக்கு சுலபமாக புரியவைக்கும் சக்தி அவரிடம் உள்ளதை நான் சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன்(ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்). முயற்சி திருவினையாக்கும்.
 __________________________________________________
செல்போன் சர்வீஸ் கொடுப்பவர்கள் அதற்கு முன்  என்னென்ன உங்களால் சரி  செய்ய முடியுமோ அவற்றை முயர்ச்சித்துவிட்டு முடியவில்லை என்றால் மட்டும்  சர்வீஸ் சென்டரில்  கொடுக்கவும். ஏன் என்றால் இப்போது சில சர்வீஸ் சென்டர்கள் பட்டன்கள்(KEYS) அடியில்  தூசி தட்டி கொடுக்க கூட நூறு  ரூபாய் சார்ஜ் செய்கிறார்கள். அதே போல் முன்னணி  நிறுவன  சர்வீஸ் சென்டர்களில் மட்டும் சர்விஸ்க்காக ` கொடுக்கவும், பயபுள்ளைங்க நல்ல பொருளை திருடி பழைய பொருளை போட்டு விடுகிறார்கள். என் நண்பர் அப்படி செய்ததை நேரில் பார்த்ததால் தான்  சொல்கிறேன்.
 __________________________________________________
கண்டிப்பா சிரிப்பிங்க:


 __________________________________________________

  வாழ்த்துக்கள்: மீண்டும் ஒரு காதல் கதை

கேபிள் ஷங்கர் அண்ணனின் இந்த படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்


பங்குச்சந்தை என்றால் என்ன? ( A முதல் Z வரை)

Monday, January 3, 2011


 http://4.bp.blogspot.com/_Mi7AIQ22soI/SMj4j_CagPI/AAAAAAAACNU/saJdYqptZP0/s400/bombay_stock_exchange_dalal_street.JPG
பங்குச்சந்தை  என்றால் என்ன,  அதை  எங்கே  போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.  ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி  ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.

நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள். அதனால்தான் ஒரே ஒரு பங்குசந்தை பற்றிய எதிர்ப்பதிவு மட்டும் பதிவிட்டு விலகியே இருப்போம் என்று அதுபோன்ற பதிவுகளை தவிர்த்து விட்டேன்.

ஆனால் இன்று பண ஆசையை காட்டி பலர் மக்களுக்கு சேவை  வழங்குவது  போல் தொலைக்காட்ச்சியில் வர ஆரம்பித்து விட்டனர், அப்படி வருபவர்களில் முதன்மையானவர்கள் மக்கள் தொலைக்காட்ச்சியில் வருபவர்கள் தான். அவர்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் ஏதோ சேவை மனப்பான்மையுடன்தான் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது போல் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால் தொட்டதர்க்கெல்லாம் பணம் கேட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். எனக்கு  தொலைக்காட்ச்சியில் இவர்களை பார்த்தால் இவர்களுக்கு யாருமே முடிவு கட்ட மாட்டார்களா என்று  தான் தோன்றும். ஆனால் இப்போது இவர்களுக்குத்தானே காலம், யார் தட்டிக்கேட்ப்பார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்று சொல்லித்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். சரி நாம் ஏதேனும் முயற்சி செய்வோமே என்று நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு.

இணையதளத்தில் கூட  பலர் பங்குசந்தை பற்றி உதவுவதாக கூறிக்கொண்டு உலா வருகின்றனர். ஆனால் அவர்களும் பங்குசந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறோம், சிடி விற்பனை செய்கிறோம் என்று பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.  உண்மை என்னவென்றால் அவர்களுக்கே பங்குசந்தை பற்றிய முழுமையான அறிவு இருக்காது இல்லை பங்கு சந்தையில் பணம் விட்டு இருப்பார்கள். விட்ட பணத்தை எடுத்துவிட உங்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சி டி யை வாங்கி நூறு பிரின்ட் போட்டு உங்களிடம் ஒரு சி டி ஆயிரம் ரூபாய் என்று விற்று விடுவார்கள். ஆனால் அந்த சி டி யில் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

எனக்கு  பங்குசந்தையில் தெரிந்தவரை உங்களுக்கு கூறுகிறேன் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.

பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.

1 . பொறுமை காத்தல்
இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று,  எந்த ஒரு நேரத்திலும்  அவசரப்பட்டு முடிவுகளை  எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இன்று சில பங்குசந்தை தரகர்களே புதியவர்களுக்கு  உதவுவதாக கூறி  தினவர்த்தகத்தில் ஈடுப்பட வைப்பதே நிஜம். காரணம் அவர்களுக்கு கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இது தெரியாத வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் போல என்று நினைத்து அவர்கள் சொல்லுவதர்க்கேல்லாம் தலையாட்டிவிட்டு பணம் போனப்பின் தனது தவறை நினைத்து வருந்துவார்கள். பங்குசந்தையில் பணம் ஈட்டுவதை விட தனது கையில் உள்ள பணத்தை பாதுக்காப்பதே சிறந்தது அதற்க்கு மிக முக்கியமான ஒன்று பொறுமை.

 2 . கற்றல் அறிவு
 ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று.   பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள். 

3 .  அதிர்ஷ்ட்டம் 
என்னதான் தொழில்நுட்ப பகுப்பாய்வை கறைத்து குடித்திருந்தாலும்  அதிர்ஷ்ட்டம் பங்குசந்தையில் கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும்.  அதுவும் தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 99 சதவிகிதம் இது கட்டாயம் தேவை. ஏன் என்றால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரே நிமிடத்தில் நாம் வாங்கிய பங்கு படு வீழ்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளது அதற்க்கான காரணத்தை ஆராய்ந்தால் 75 %  புரளியாகத்தான் இருக்கும். அதையும் மீறி வேறு ஒரு காரணம் இருக்கும் என்றால் வெளிநாட்டில் ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவார்கள். இதனால் கண்டிப்பாக பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.

பங்குசந்தையில் ஈடுப்ப்படும்முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:

► பங்கு தரகர் 
►தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு

பங்கு தரகர்
இன்று பங்குசந்தையில் ஈடுப்படும் பலர் பணத்தை இழப்பது இவர்களிடம் தான் காரணம் பங்குசந்தையில் ஏற்ப்படும் நட்டம் ஒருபக்கம் என்றால் இவர்கள் புதிதாக இனைபவர்களிடம் கமிஷன் என்ற பெயரில் கறக்கும் பணமே அதிகம். அதிலும் இப்போது உதித்திருக்கும் பல தரகு நிறுவனங்கள் ஒருவர் இணையும்போதே தரகு தொகையை செலுத்திவிட வேண்டும் என்று  ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து விடுகின்றனர். இது புதிதாக இணைபவர்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்ப்படுத்திவிடும் பங்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கியே தீர வேண்டும் என்று. அதனால் புதிதாக பங்கு சந்தையில் இணைபவர்கள் தயவு செய்து முன் கூட்டியே தரகு தொகையை செலுத்த வேண்டாம்.  நீங்கள் இணைந்தபின் யார் உங்களிடம் பங்குகளை  வாங்கும் நேரத்தில் தரகு தொகையை பிடித்துக்கொள்கிரார்களோ அவர்களிடம் இணைந்தால் உங்களுக்கு எந்த நிர்பந்தமும் இருக்காது. இதை முன்கூட்டியே நன்கு விசாரித்துவிட்டு அவர் சரியான அனுபவம் வாய்ந்த தரகர் தான என்று முடிவு செய்த பின்  தரகரிடம்  இணையவும்.

தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு 
இனி வரும் நாட்களில் என்னால் முடிந்த வரை உங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப்ப பகுப்பாய்வை பற்றி விளக்கி விடுகிறேன். தயவு செய்து யாரும் ஆரம்பித்திலேயே பயன் படுத்தி விட வேண்டாம். பங்குசந்தையில் ஈடுபட போதிய அனுபவம் கட்டாயம்  இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் பங்குச் சந்தையில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள், பங்குசந்தையில் ஈடுபட என்ன தகுதி வேண்டும்,  பங்கு கணக்கை   ஏமாறாமல் யாரிடம் எப்படி தொடங்குவது என்று விளக்குகிறேன்.


நன்றி

Saturday, January 1, 2011

வலையுலக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


http://4.bp.blogspot.com/_QHLXPfQ2yNo/TRzqQRqM5CI/AAAAAAAAA5I/wAZw1Q_PGTs/s1600/QARUPPAN+BLOG+AWARD+.jpg

-நன்றி www.qaruppan.blogspot.com

________________________________________________

http://4.bp.blogspot.com/_32ucUhTXAw4/TRtQrfgznnI/AAAAAAAAAMo/qEJD4UwwHxw/s1600/FINAL.jpg

-நன்றி  www.kuttisuvarkkam.blogspot.com

________________________________________________

வலைச்சரம்

வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்த ரமேஷ் அண்ணனுக்கு நன்றி.

________________________________________________

 
2011 ஆம் ஆண்டில் இந்தியா பல சாதனைகள் புரியவும்,  .நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக இடம் பெறவும் எனது வாழ்த்துக்கள்.