பிரபல மாயாஜால ஜாம்பவான் சாய்பாபா மரணம்

Sunday, April 24, 2011


நேற்று   DGS தினகரன் இன்று புட்டபர்த்தி சாய்பாபா நாளை...............?
************************************************************


அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதாகச் சொல்வது அறியாமையே. "தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார்" அதனால் மக்கள் அவரை கடவுளாக வழிபடுகிறார்களாம். கிண்டலுக்காக இல்லை.... பட்டினியால் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற தானியங்களை வரவழைத்து தந்து இருக்கலாம். எத்தனையோ மக்கள் பசியாறி இருப்பார்கள். லிங்கம், மோதிரம், கடிகாரம் போன்றவை பசியை தீர்த்து விடுமா என்ன..! இதை எத்தனையோ தந்திர வித்தை தெரிந்தவர்கள் செய்து காட்டியுள்ளார்களே...! தாஜமஹாலை பெருந்திரளான மக்கள் பார்த்திருக்கும்போதே மறையவைத்தும், அந்தரந்தத்தில் மனிதனை மிதக்க வைத்தும், உடலை வெட்டி பிறகு ஓட்டவைததுமான எத்தனையோ ஆச்சரியங்களை தந்திர வித்தகர்கள் செய்து காட்டியுள்ளார்கள். அப்படித்தான் இவர் அந்தரத்தில் வரவழித்ததாக சொல்வது. இவருக்கு மட்டும் கடவுள் அந்தஸ்தத்து எப்படி கொடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. டாக்டர் கோவூர் என்பவர் கடவுள் சக்தியை நிரூபித்துக் காட்டினால் ஒரு கோடி ரூபாய் தருவதாக சவால் விட்டார்,  அதற்கு தனது மௌனத்தை மட்டுமே பதிலாகத்தந்தார். ஆனால் கண்மூடித்தனமாக நம்புவர்களுக்கு மட்டும் தாம் அவதாரமாகக் காட்டிகொண்டார். "நான் 96 வயதில் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று சொன்னவர் 86 வயதிலேயே இறந்து விட்டார். ஒருவேளை 96 வயதிற்கு மேல் வாழ்ந்து, சுய நினைவில் இருந்திருந்தால் இவரே தானாகவே தனது உயிரை முடித்துக்கொண்டு இருப்பார்... தான் சொன்னது போலவே நடந்து விட்டது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக. இவரும் மற்றவர்களைப்போல, சதையும் எழும்பும் கொண்ட ஒரு உயிர். பிறப்பையும், இறப்பையும் நாம் முடிவு செய்வதல்ல. ஆனால் தான் அவதாரம் என்று மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இறப்பு ஆண்டை சொல்லி உள்ளார். இயற்கை இவரை முந்திக்கொண்டது. அவ்வளவே. உண்மையிலேயே இவருக்கு அற்புத சக்தி இருந்து இருக்குமேயானால் எதற்க்காக இவ்வளவு பெரிய மருத்துவமனைகள் அமைத்துள்ளார். கடைசியில் இவருக்கும் மருத்துவர்கள்தான் மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தது. இவரது இறப்பு கூட சாதரணமாக இருக்கவில்லை. கல்லீரல் கெட்டு, சிறு நீரகம் செயலிழந்து, இதயத் துடிப்பு நின்று, நினைவிழந்து - இப்படி சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஏற்ப்படுகிற  அவஸ்தைக்குப் பிறகு இறந்துள்ளார். ஒரு மனிதர் இறந்துள்ளார். அது இயற்க்கை.  சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அவரை வைத்து பலர் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்.- ராமராசு