தமிழின துரோகிகளே வாரீர் மெரீனா கடற்கரைக்கு!

Tuesday, June 7, 2011
 http://4.bp.blogspot.com/-XQHmfp7wEZE/TeyUO9TsYVI/AAAAAAAABXw/dLJNKNMCk5c/s1600/Light+a+Candle+2.JPG


சிங்கத்தமிழர்களே வாரீர்!
மெரீனா கடற்கரைக்கு என்று 
நம்மை அழைக்கிறார்கள்
இனப்படுகொலையை கண்டு
நொந்து நூலானவர்கள்!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
அவர்கள் அழைத்த  நாம்தான் 
தமிழின துரோகிகள் என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
IPL ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

போட்டியிட்ட  63  இடங்களை  கூட
தோற்கடிக்க முடியாத
தமிழின துரோகிகள் 
நாம்!

காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட
இனப்படுகொலையை மறந்து
சீமானை காரணம் சொன்ன
ஈனப்பிறவிகள் 
நாம்!

இந்த பாவமண்ணில்
வாழ பிடிக்காமல்தான்
போய் சேர்ந்துவிட்டான்
முத்துக்குமரன்!

இதோ நம்மை அழைக்கிறார்கள் 
செய்த பாவத்தை கழுவ 
மெரீனா கடற்கரைக்கு!

இரத்தாறு ஓடும்... காட்டாறு ஓடும்...
என்று சொன்னவர்களெல்லாம் 
ஓடிவிட்டார்கள்
தேர்தலில் கூட நிற்க
முடியாமல்!

அங்கே மிச்சமீதி உயிரை 
கையில் பிடித்துக்கொண்டு 
நிர்கதியாய் நிற்கும்
நம் இன உறவுகளுக்கு
ஆறுதல் கூறவாவது வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

கருணாவுக்கும், கருணாநிதிக்கும் 
தமிழின துரோகி
பட்டம் கொடுத்ததெல்லாம் போதும்
வந்து சேருங்கள்
இனியும் 
தமிழின துரோகியாக வாழாமல்
மெரீனா கடற்கரைக்கு!

இனத்தவன் சாகும்போதுதான்
குரல் கொடுக்கவில்லை
போஸ்ட் மாட்டம்
செய்ய சொல்லவாவது
குரல் கொடுப்போம் வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

அக்காவுக்கு பங்க்சன்
ஆயாவுக்கு தவசம் என்று
 காரணம் சொல்லாமல் 
இதற்காகவாவது வந்து சேருவோம் 
மெரீனா கடற்கரைக்கு! 

ரஜினி ஜாதகம் ஒரு நகைச்சுவை அலசல்

Friday, June 3, 2011
ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இந்த பதிவில் ரஜினியின் ஜாதகத்தை கணித்து அவரைப்பற்றிய பல  ரகசியங்களை வெளியிட்டு உள்ளேன். இந்த பதிவை படித்து அவருடைய ரசிகர்கள்  யாரும் கடுப்பாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

http://2.bp.blogspot.com/-8-uevZihfbk/TeEpsW5loFI/AAAAAAAAGHw/rBEXj1Wx7ss/s1600/rajini-hospital1-300x300.jpg

ரஜினி ஜாதகம்;

தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

►இந்த ஜாதகத்துக்கு உரியவர் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில்  பிறந்தவர் என்பதால்  சிறந்த நடிகராக  வந்திருப்பார்.

►இரவு பதினொரு மணிக்கு பிறந்தவர் என்பதால் இரண்டு பெண்குழந்தைகள் உண்டு.

►முதல் பெண்குழந்தை நடிகரையே திருமணம் செய்துகொள்வார் என்று ஜாதகம் சொல்கிறது.

► எட்டாம் வீட்டில் சனி இருப்பதால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பார், பக்கத்து வீட்டில் செவ்வாய் இருப்பதால் புகைப்பழக்கம் உண்டு. 

பழைய ஓலைச்சுவடி பாட்டு:

ஒமாக சீயா ஓமாக சீயா
நாக்கு மூக்க நாக்கா ஓ சக்கலாக்க
ஓ ரண்டாக்கா.......
டைலமோ டைலமோ பல்லேலக்கா.........

கி.பி. 1400 ஆம் ஆண்டு சாமியாடி சித்தர் எழுதிய இந்த ஓலைச்சுவடி பாடல் என்ன சொல்கிறது என்றால்.....

►ரஜினியின் ஜாதகத்தில் குறு உச்சம் பெற்று இருப்பதால் இந்நேரம் வெளிநாடுகளில் இருப்பார். 

►இவருடைய மனைவியின் பெயர் எல் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து ஏ என்ற ஆங்கில எழுத்தில் முடியும்.

►இவருக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

►இவருக்கு எழுபது வயது முடிவதற்குள் இவருடைய இரண்டு  மகளுக்கும் திருமணம் முடிந்திருக்கும்.


அரசியலுக்கு வருவாரா:                                                                                 


இவருடைய ஜாதகத்தில்  சனியும், புதனும் எதிர் எதிர் வீட்டின் ஜன்னல் வழியாக சந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜாதகத்தை கொண்டிருப்பவர்கள் அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் அரசியலுக்கு வருவார். ஆக ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அடித்து சொல்லலாம். அரசியல் கட்சி தொடங்கிய பின்பும் அரசியலுக்கு  வரவில்லை என்றால் நான் ஜோசியம் பார்ப்பதையே நிறுத்தி விடுகிறேன்.


ரானா படம் வெளியாகுமா?                                                                         

லக்கினத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால்,  படப்பிடிப்பு நூறுசதவிதம் முடியும்போது நிச்சயம் படம் வெளியாகும். 

உடல் நிலை, ஆயுள்:                                                                                        

► ஜாதகத்தில் கேது சாதுவாக இருப்பதால் இந்த ஜாதகத்துக்கு உரியவர் சேது போல் காணப்படுவார்.

►சுக்கிரனும், சந்திரனும் போன மாதமே சந்தித்து பேசிவிட்டார்கள் என்பதால் இப்போது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்.

►எட்டாம் கட்டத்தில் சனியும் பக்கத்து கட்டத்தில் குருவும் இருப்பதால் தலையில் முடி கொட்டிக்கொண்டே இருக்கும். ஏன் என்றால் குறு என்பவர் சூரியன். சூடு தாங்காமல் முடி கொட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.  இந்த ஜாதகத்துக்கு உரியவர் வழுக்கைத்தலையுடன்  காணப்படுவார்.  முடி கொட்டுவதை தடுக்கவேண்டும் என்றால் குருவையும் சனியையும் சற்று தள்ளி வைக்கவேண்டும்.

ஆயுள்: 2040 ஆம் ஆண்டை கடந்துவிட்டால் தொண்ணூறு வயது வரை உயிரோடு இருப்பார்.

உடல் நலம் சுகம் பெற என்ன செய்யவேண்டும்:                              

http://3.bp.blogspot.com/-5o19O1vSySM/TdTuVBj7GrI/AAAAAAAACAM/NcmfL2O5jFc/s1600/rajini2.bmp 


 செவ்வாயும், புதனும் வீக்காக இருப்பதால் அருகில் உள்ள  ரிலைன்ஸ் அல்லது ஏர்டெல் ஷோரூம்களுக்கு சென்று  செவ்வாயையும், புதனையும்  ஆக்டிவேட் செய்துக்கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து மூன்ற சனிக்கிழமை ஏர்செல் ஷோரூமை சுற்றிவர வேண்டும். 

பரிகாரம்: டோக்கொமோ ஷோரூம் படிக்கட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.